Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 22, 2013 [GMT]

  • Welcome
  • Welcome
மே 18 - போர்க்குற்ற நாளா ? துக்கநாளா? : பதவிகளுக்கும் , பட்டங்களுக்கும் அப்பாற்பட்டதென்பதை போட்டிக்குழுக்கள் உணர்ந்திருப்பார்களா!
[Saturday, 2012-05-12 22:29:42]

உலகத் தமிழருகளுக்கு எல்லா நாளுமே துக்கநாள் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆகவே மே 18 மட்டும் துக்கநாள் என்பதை முழுமையாக நிராகரித்து , தமிழினப் படுகொலை புரிந்த அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற சர்வதேசம் எடுக்கும் நடவடிக்கைக்கு பங்களிக்கும் போர்க்குற்ற நாளாக உளத்துணிவுடன் எடுத்துக்காட்டுவோம்.


  

மே 18 தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள்.

முன்னணித் தளபதிகள் உட்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாள். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்.

பல பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நாள். பல்லாயிரம் சிறுவர்கள் அநாதைகளாக்கப்பட்ட நாள். பல்லாயிரம் மக்கள் அங்கவீனர்களாக்கப்பட்ட நாள். மூன்று இலட்சம் மகக்ள் சொந்த மண்ணிலே அகதிகளாக்கப்பட்ட நாள். ஒட்டுமொத்தமாக தமிழ் தேசிய இயக்கமான தமிழ் தேசிய ஆன்மாவின் எழுச்சி மௌனிக்கப்பட்ட நாள். தமிழ் தேசிய ஆன்மா மீண்டும் எழுச்சிகொள்ள வேண்டாமா?

வெறும் துக்கநாள் என அழுதுவிட்டுப் போவதா?

இத்தனைக்கும் காரணம் சிறிலங்கா அரசாங்கம் மட்டுமா? இல்லை. வல்லரசுகள் உட்பட 22 நாடுகள் உதவி செய்தன. அந்த நயவஞ்சகப் போர் முள்ளிவாய்க்காலில் நினைத்ததை முடித்தது.

தற்போது அதே வல்லரசுகளும் அதே நாடுகளுமே சிறிலங்கா அரசு போர்க்குற்றம் செய்துள்ளதாக கூறுகின்றன. அதே வல்லரசுகளே சிறிலங்கா போர்க்குற்றம் செய்துவிட்டதாக கர்ஜிக்கின்றன. போர்க்காலத்தில் சிறிலங்கா அரசினால் துரத்தியடிக்கப்பட்ட மனித உரிமை அமைப்புகளான சர்வதேச மன்னிப்புச்சபை , மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றன சிறிலங்கா போர்க்குற்றம் செய்ததாக ஆதாரத்துடன் கூறுகின்றன.

சர்வதேச ஊடகங்களான 'சனல் 4' 'அல்ஜசீரா' போன்றவை சிறிலங்காவின் போர்க்குற்றத்தை ஆதாரத்துடன் வெளியிடுகின்றன. புலம்பெயர் தமிழ்ச் சமூகம், சிறிலங்கா சனாதிபதியோ, அமைச்சர்களோ தமிழர் வாழும் நாடுகளுக்கு விஜயம் செய்தால் போர்க்குற்றவாளியை வெளியேற்று என கவனயிர்ப்புச் செய்கின்றது. இவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறன. சிறிலங்கா தூதர்களாக வரும் இராணுவத்தினரை போர்க்குற்றவாளிகள் எனக் கூறி திருப்பி அனுப்புகின்றது மேற்கத்தைய நாடுகள்.

இதேநேரம் ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையே சிறிலங்கா அரசு போர்க்குற்றம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காக , பிரித்தானியா, பிரான்ஸ், தென் ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் இந்த அறிக்கையை வரவேற்றுள்ளதுடன், பகிரங்க விசாரணைகளை நடத்தப்பட வேண்டுமெனக் கோருகின்றன. சிறிலங்கா அரசு இதனால் கலக்கமடைந்துள்ளது.

ஈழத்தமிழனைப் பொறுத்தவரை தமிழீழம் கிடைக்கும்வரை ஒவ்வொரு நாளும் 'துக்கநாள்'தான் துக்கமென விக்கிவிக்கி அழுவதற்கான நாள் அல்ல மே 18. தனித்துவப்படுத்தி , அடையாளப்படுத்தி யூதர்களுக்கு ஒரு 'ஹொலக்கோஸ்ட்' ர்ழடழஉயரளவ போல ஈழத்தமிழர்களுக்கு 'மே 18 போர்க்குற்றநாள்', முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது வெறும் கொலை அல்ல: 'இனவழிப்பு' என ஐ.நா. பிரகடனப்படுத்தி மகிந்தவின் பரிவாரங்களை குற்றக்கூண்டில் ஏற்றவேண்டும்.

அப்போதுதான் எம் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் வீரச்சாவடைந்த போராளிகளையும் , மக்களையும் ஈழத்தமிழினம் மாத்திரமன்றி உலகம் இருக்கும் வரை 'ஹொலக்கோஸ்ட்'டை நினைவுகொள்வது போல் மே 18 போர்குற்றநாளில் நினைவுகொள்வர்.

நான்கு திசையிலும் போர்க்குற்றம் என்பதே பேச்சாக உள்ளது.

இந்நிலையில் மே 18 என்பதனை தமிழினத்தின் மீள் எழுச்சிக்காக 'போர்க்குற்றநாள்' எனப் பிரகடனப்படுத்தி அந்நாளிலிருந்து எழுச்சி பெறவேண்டும். இந்நாளையே புலம்பெயர் சமூகம் கடந்த இரு வருடங்களாக போர்க்குற்றநாளாக அனுஷ்டித்தது. இந்நிலையில் , நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்நாளை 'துக்கநாளாக' அறிவித்துள்ளது ஏன்?

வீரத்தளபதிகள் , போராளிகள் வீரச்சாவடைந்த நாளை நினைவுகூர்வதற்கான நாளே மாவீரர் நாளாகும். அந்நாள் எழுச்சி நாளாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேட்டிலும் மாவீரர் நாளை மாவீரர் எழுச்சிநாள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக உத்தியோகபூர்வ வெளியிடு உள்ளது.

வீரத்தளபதிகள் , போராளிகள், பல்லாயிரம் மக்கள் அழிக்கப்பட்ட, ஓர் இன அழிப்பு நடைபெற்ற நாளை அடையாளமாக வைத்து எழுச்சி பெறுவதனை விடுத்து, ஏன் துக்கம் என அழுதுவிட்டுப் போக வேண்டும்? தேசியத்தலைவர் கூறியிருக்கிறார்:

"வலியைத் தந்தவனுக்கே வலியைக் கொடு" என எம் இனத்தை அழித்த எதிரிக்கு வலியைக் கொடுப்பதாயின் ஒரே வழி ஐ.நா. மூலமாக மகிந்தவையும் அவரது பரிவாரங்களையும் போர்க்குற்றவாளிக் கூண்டில் ஏற்றி ஐ.நா. மூலமாக அரசியல் தீர்வுகாண்பதே.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால்' என்று சொல்லப்படுகின்ற காலம் தாயக உறவுகளுக்கு மட்டுமன்றி புலம்பெயர் தமிழர்களுக்கும் அவலம் நிறைந்ததாக மாற்றம் பெற்றுள்ளது.

தாயக விடுதலைப் போருக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றுபட்டு வழங்கிய ஆதரவு தொடர்பாக தேசியத் தலைவரின் மாவீரர்தின உரைகளில் குறிப்பிட்டு வந்ததை மறந்துவிட முடியாது. அதனால் 2009 மே 18 என்பதை 'எல்லாமே முடிந்துவிட்டது''என்ற கருத்துப்பட பரப்புரை செய்து உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்களைக் குழப்பியடிக்க 2010ஆம் ஆண்டிலிருந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக தமக்குத் தாமே வௌ;வேறு பெயர்களைப் சூட்டக்கொண்டு புற்றீசல்போல புறப்பட்ட இவர்கள் தாயகப் பற்றுள்ள மக்களால் இலகுவாக அடையாளம் காணப்பட்டனர்.

தமிழ்த் தேசாபிமானம் என்பது பதவிகளுக்கும் , பட்டங்களுக்கும் அப்பாற்பட்டதென்பதை போட்டிக்குழுக்களை உருவாக்கியவர்கள் உணாந்திருப்பார்கள் என நம்புகிறோம். கடந்த ஆண்டுகளில் மேற்குலக நாடுகளில் போட்டி அடிப்படையில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்த முனைந்த அவர்கள் தேசிய உணர்வாளர்களால் இனங்காணப்பட்டதால் அவர்களது முயற்சி கைகூடவில்லை. கனடாவை மையப்படுத்தி, போட்டியாளர்கள் மேற்கொண்ட முயற்சி இங்குள்ள தமிழ் உறவுகளால் நிராகரிக்கப்பட்டது.

இவ்வருட மார்ச் மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை அரசின் மீதான தீர்மானம் காலக்கிரமத்தில் அவர்களை இனப்படுகொலை புரிந்த பேர்ர்க்குற்ற விசாரணைக்கு வழிவகுக்கும் தன்மை வாய்ந்தது. இதனை முற்கூட்டியே தெரிந்துகொண்ட தமிழ் உணர்வாளர்களும் , தமிழ் தேசப்பற்றாளர்களும் அவர்கள் சார்ந்த அமைப்புகளும் மே 18ஐ போர்க்குற்ற நாளாக பிரகடனம் செய்தன.

கனடியத் தமிழர்களால் சனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்ட கனடியத் தமிழர் தேசிய அவையினர் முதலாவது போர்க்குற்ற நிகழ்வை 2010 மே 18ம் திகதி ரொறன்ரோ குயின்ஸ் பார்க் திடலில் ஏற்பாடு செய்தனர். இங்குள்ள பல்வேறு தமிழர் சங்கங்களும், மன்றங்களும் ஒன்றிணைந்து ஒருமித்த குரலில் அனைத்து மக்களையும் இணைத்து இலங்கை அரசின் போர்க்குற்றத்தை உலகறியச் செய்தனர்.

கடந்த ஆண்டிலும் இரண்டாவது ஆண்டு போர்க்குற்ற நிகழ்வை அதே குயின்ஸ் பார்க் திடலில் தேசிய அவையினர் உணர்வுபூர்வுமான நிகழ்ச்சிகளோடு ஏற்பாடு செய்து சர்வதேசத்தக்கு இலங்கை அரசின் இன அழிப்பு போர்க்குற்றத்தை மீண்டும் உறுதிப்பட எடுத்துக்கூறினர். கடந்த ஆண்டிலேயே , போர்க்குற்ற நிகழ்வை இல்லாமல் செய்து அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏட்டிக்குப் போட்டியாக போர்க்குற்ற நாளை துக்க நாள் என்று அறிவித்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதே நாளில் துக்கநாள் நிகழ்வை நடத்தப்போவதாக அறிவித்தது.

கனடியத் தமிழ் மக்கள் மத்தியில் பலமான எதிர்ப்பு துக்க நாளுக்கு கிளம்பியதால் அதனை அமெரிக்காவில் உள்ள ஐ.நா. முன்றலில் நடத்தப்போவதாக இடத்தை மாற்றினர்.

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் முள்ளிவாய்க்கால் பின்னடைவுக்குப் பின்னர் வருடத்தின் 365 நாட்களுமே துக்க நாட்களாக அமைந்துவிட்டன. பல்லாயிரம் மக்களை படுகொலை செய்து இலட்சக்கணக்கான மக்களை அவாகளின் சொந்த இடத்திலிருந்து தூக்கியெறிந்து , வதை முகாம்களில் போட்டு, சித்திரவதை புரிந்துவரும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கொடுங்கோல் ஆட்சி என்பது, இனப்படுகொலை, போர்க்குற்றம் நிரம்பியது. இதன் காரணமாகவே மே 18ஐ போர்க்குற்ற நாளாக தமிழர்கள் பிரகடனம் செய்ய நேர்ந்தது.

ஆனால் , இதனை துக்கநாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றத்திலிருந்தும், இனப்படுகொலையிலிருந்தும் காப்பாற்றுவதற்கான ஒரு சூழ்ச்சித் திட்டம் என்பது எல்லோரதும் கருத்து.

கடந்த ஆண்டிலேயே போர்க்குற்ற நாளுக்கும் போட்டியாக குயின்ஸ் பார்க் திடலில் துக்கநாள் நிகழ்வை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதேசமயம் போர்க்குற்ற நாளை அங்கு நடத்தவிடாமல் தடுப்பதற்கான கபட முயற்சியும் அடையாளம் காணப்பட்ட சிலரால் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோன்று இம்முறையும் கடந்த வருடம் மேற்கொண்ட அதே சூழ்ச்சியை மேற்கொண்டு குயின்ஸ் பார்க் திடலை பதிவு செய்து போர்க்குற்றநாளை அங்கு நடத்த முடியாமல் செய்துள்ளனர் .

அதுமட்டுமன்றி கடந்த இரண்டாண்டுகளாக இங்கு நடத்த முடியாமல் போன துக்க நாளை மே 18 என்று நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர். போர்க்குற்றம் புரிந்த இலங்கை அரசை தண்டனைக்கு உட்படுத்துவதற்கான வாயிற் கதவைத் திறக்கும் ஜெனிவாவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில வாரங்களுக்குள்ளேயே அதன் முக்கியத்துவங்களை பலமிழக்கச் செய்து அதனை நிறைவேற்றிய நாடுகளின் முகத்தில் கரிபூசிவதற்கே துக்கநாள் நிகழ்வு உதவும் என்பதை நாடுகடந்த அரசாங்கத்தின் குறிப்பிட்ட சில உறுப்பினர்களே புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

ஜெனிவாத் தீர்மானத்துக்கும் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமையை சிதறடிக்கவும் அவர்களைக் கூறுபோட்டு, எதிர்காலச் செயற்பாடுகளை இல்லாதொழிக்கவும், துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது என்று ராஜபக்ச ஆட்சித் தரப்பு பகிரங்கமாக விடுத்த சவாலை இவ்வேளை நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

போர்க்குற்ற நாளுக்கு எதிராக துக்க நாளை நடத்த முனைபவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் ஏவலர்களாக செயற்படுகின்றார்களோ என்கின்ற சந்தேகம் புகலிடத் தேசப்பற்றாளர் மத்தியில் ஏற்பட்டுள்ளது தவிர்க்க முடியாதது.

மறுபுறத்தில் , தேசிய செயற்பாட்டாளர்களுக்கு அண்மைய நாட்களில் விடுக்கப்பட்டுவரும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் இந்தப் பின்னணியிலேயே பார்க்க வேண்டியுள்ளது. இங்கு நடைபெறும் சில நிகழ்வுகளை குழப்ப எத்தனிப்பது, தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும் அச்சுறுத்தல் வழங்குவது, தாக்குதல் நடத்துவது, வாகனங்களை சேதப்படுத்துவது, பொது இடங்களில் தகாத வார்த்தைகளால் தூசிப்பது, அவமானப்படுத்தும் சுவரொட்டிகளை ஒட்டுவது என்று தொடர்ந்து அச்சுறுத்தல் செயற்பாடுகள் ஊடகவியலாளர்கள் வாகன எரிப்புடன் இப்போது வந்துநிற்பதை பார்க்கும்போது இவர்களின் பின்னணியிலும் சிறிலங்கா அரசின் வன்கரங்கள் இருக்கலாம் என்றும் பலத்த சந்தேகத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்கொண்ட நிலையில் வழமையான போர்க்குற்றநாள் நிகழ்வு இம்முறை ஸ்காபரோ சிவிக் சென்டர் முன்றலில் அமைந்துள்ள அல்பேர்ட் காம்பல் திறந்தவெளி அரங்கில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

உலகத் தமிழருகளுக்கு எல்லா நாளுமே துக்கநாள் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆகவே மே 18 மட்டும் துக்கநாள் என்பதை முழுமையாக நிராகரித்து , தமிழினப் படுகொலை புரிந்த அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற சர்வதேசம் எடுக்கும் நடவடிக்கைக்கு பங்களிக்கும் போர்க்குற்ற நாளாக உளத்துணிவுடன் எடுத்துக்காட்டுவோம். இதனை நாம் செய்யவிடில் , எமக்காக வேறு எவரும் செய்யமுடியாது. மே 18ஐ மட்டும் துக்க நாள் அல்ல! மே 18 என்பது இனப்படுகொலை புரிந்த போர்க்குற்றநாள்.

போர்க்குற்றநாள் என்பது ஒருபோதும் துக்கநாளாக முடியாது!

-நெற்றிக்கண்-

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
நாங்கள் நடக்கிற பாதை தந்தை செல்வாவின் பாதை என்று சொல்லிலும் செய்கையிலும் காட்டினால் சர்வதேசம் நாங்கள் சொல்லுவதை நம்பும்!
[Wednesday, 2013-05-15 20:46:54]

தமிழரசுக்கட்சியின் தொடக்கநரும் தமிழ்மக்களின் தந்தை எனவும் வாஞ்சையோடு போற்றப்படும் தந்தை செல்வாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் விழா தமிழரசுக் கட்சியால் அனுட்டிக்கப்பட்டது. வந்தாறுமூலை சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நடந்த இந்த விழாவுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம் தலைமை வகித்தார்.

முள்ளிவாய்க்கால் ஒரு தொடர்கதை
[Sunday, 2013-05-12 18:31:15]

முள்ளிவாய்க்கால் அது தமிழினத்தால் மறக்க முடியாத துயரங்களும் துன்பங்களும் நிகழ்ந்தேறிய நாள்.அது உரிமைக்காக போராட ஆயுதம் ஏந்தியவர்களின் உடைகள் உருவப்பட்ட நாள்.கழுத்தில் நகைகள் மட்டும் மல்ல நாங்கள் குப்பிகளும் அணிவோம் என இந்த உலகுக்கு எடுத்து காட்டிய வீரத்தமிழிச்சிகளின் உடல்கள் சிதைக்கப்ட்டநாள்.பிள்ளை தந்தையை இழந்த நாள்,தாய் பிள்ளையை இழந்த நாள்,மனைவி கணவனை இழந்த நாள்.மொத்தமாக தமிழன் தன் மண்ணை முற்றாக இழந்த நாள்.

தேர்தல்களில் விற்று வாங்க தேசியம் நுகர்வுப் பொருளல்ல - பனங்காட்டன்
[Saturday, 2013-05-11 11:28:07]

தேர்தல்கள் வரும், போகும். தேர்தல்களில் விற்கவும் வாங்கவும் தமிழ் தேசியம் ஒரு நுகர்வுப்பொருள் அல்ல என்பதை கூட்டமைப்பின் தலைமை புரிந்து நிதானமாக செயற்பட வேண்டும். சர்வதேச அரங்கில் இப்பொழுது அதிகளவில் பேசப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம், தமிழினப் படுகொலை, பொறுப்புக் கூறுல் மறுப்பு என்று இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.

தமிழ்நாட்டில் வேலைக்காரியோடு பேசுமொழி எந்த மொழி? - நக்கீரன்
[Monday, 2013-05-06 21:30:34]

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட நாள்களாக பட்டிமன்றத்துக்கு உரிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
இதற்குக் காரணம் இருக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் கூலித் தொழிலாளர்களாக வேற்று நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் தங்களது தாய்மொழியான தமிழை இழந்து தங்கள் அடையாளத்தைத் தொலைத்து விட்டார்கள். அவர்களது பெயர்கள் கூட சிதைந்துவிட்டன. இந்த நிலைமை பியூஜி, மொறேஷியஸ், தென் ஆபிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், மடகஸ்கார், றீயூனியன் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. பியூஜி தீவில் வாழும் தமிழர்கள் தாய்மொழி தமிழுக்குப் பதில் இந்தி படிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள். இந்த முயற்சியில் இந்திய நடுவண் அரசு மும்மரமாக ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? - இதயச்சந்திரன்
[Sunday, 2013-05-05 21:07:06]

ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் , 80 களின் முற்பகுதியைவிட அக்டோபர் 1997 இலிருந்து பார்ப்பது பொருத்தமாகவிருக்கும். 97 இல், வெளிநாட்டு பயங்கவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடை செய்த ஒருதுருவ நாயகன் அமெரிக்கா ( உலக நாயகன் என்று இப்போது சொல்ல முடியாது), 2001 நவம்பரில் பூகோளப் பயங்கரவாதிகள் என்கிற பெயரை அவர்களுக்குச் சூட்டியது. அது மட்டுமல்லாது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் வெண்புறா போன்ற தொண்டர் நிறுவனங்களைத் தடை செய்தது. அன்றைய அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரிச்சார்ட் ஆமிரெஜ் தொடக்கம் இன்றைய மேற்குலக இராஜதந்திர கருத்துருவாக்கிகளின் மையமான அனைத்துலக நெருக்கடிக்குழு வரை, 'ஆயுதப்போராட்டத்தைக் கைவிடுங்கள்',' வெளியக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை மறந்திடுங்கள் 'என்றுதான் விடுதலைப்புலிகளின் காதுகளில் ஓதிக்கொண்டிருந்தார்கள்.

பூநகரான் பார்வையில் - தமிழரின் நம்பிக்கை நட்சத்திரம் ராதிகா சிற்சபைஈசனுடன் ஒரு உரையாடல்:
[Saturday, 2013-05-04 07:31:23]

"ராதிகா" - கனடாப் புலம் பெயர் தமிழரின் சமகால நம்பிக்கை நம்பிக்கை நட்சத்திரம் அரசியல் அங்கீகாரம். குறிப்பாக தலைவர் பிரபாகரனின் வன்னி யுகத்தின் முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பின், மேற்குலகில் மின்னும் ஜனநாயக விடிவெள்ளி ராதிகா. புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திலிருந்து வெளிநாடொன்றின் , தேசியப் பாராளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது ஈழத் தமிழ் நங்கை நம் தங்கை ராதிகா.

கூட்டைக் கலைப்பது சுலபம் அதனைக் கட்டுவது சிரமம் - பனங்காட்டன்
[Friday, 2013-05-03 22:33:31]

கூட்டைக் கட்டியவர்களுக்குத்தான் அதன் அருமை பெருமை தெரியும். அவர்களுக்குத்தான் அதன் அத்தியவசியமும் புரியும். அதன் ஆழமும் அகலமும் அறியாமல் வெறும் பதவிகளுக்காக அதற்குள் குடியேறியவர்களுக்கு அது வெறும் கூடாகத் தெரிவதால்தான் இன்னொரு கூட்டைக் கட்டலாமென நினைக்கிறார்கள் போலும்.

வடக்கில் தீவிரமடையும் நில அபகரிப்பு! - இதயச்சந்திரன்
[Tuesday, 2013-04-30 23:28:47]

மே 2009 இற்குப் பின்னர் வட -கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஏறத்தாள 2500 சைவக் கோவில்களும் 400 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்ட அதேவேளை ,அவற்றை மறுபடியும் நிர்மாணிப்பதற்கு படைத்தரப்பு அனுமதியளிக்க மறுப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனாலும் வடக்கில் வீசும் வசந்தம் ,புத்தர் சிலைகளையும், பௌத்த கோபுரங்களையும் அரசின் அனுமதியோடு அழைத்து வருகிறது. கனகராயன் குளத்தில் பௌத்த தூபிகளும், கிளிநொச்சியில் தியானத்தில் ஆழ்ந்துள்ள பிரமாண்டமான புத்தர் சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் மகாதோட்ட ரஜ மகா விகாரையும் தோன்றியுள்ளன. மூதூரில் காளிக்கும் இடமில்லை. கோணேசர் கோட்டை வாசலில் காவலுக்கு இருந்த பிள்ளையாரை கடலில் வீசிய பழைய நினைவுகள்தான் மீண்டெழுந்து வருகின்றது.

எல்லைகளும் சுதந்திமும் கொசோவோ மற்றும் தென் சூடான் இரண்டினதும் பட்டறிவு: - எச். காஸ்நோபிஸ்
[Saturday, 2013-04-27 22:01:41]

(கொசோவோ மற்றும் தென் சூடான் இரண்டினது சுதந்திரம் குடியேற்ற நாடுகள் வரைந்த எல்லைக் கோடுகள் புதினதத்தன்மை வாய்ந்தவை அல்லவென்பதைக் காட்டுகின்றது. இது தமிழீழத்துக்கும் பொருந்தும். சிங்களத்துக்கும் தமிழீழகத்துக்கும் இடையில் இருந்த எல்லைக்கோடுகளைப் பிரித்தானிய ஒருதலைப் பட்சமாக அழித்ததே இன்றைய இனச் சிக்கலுக்கும் அமைதியின்மைக்கும் காரணியாகும். கொசோவோ மற்றும் தென் சூடானில் நடைபெற்றது போல் தமிழ்மக்களுக்கும் சுயநிருணய அடிப்படையின் கீழ் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த அய்யன்னா முன்வர வேண்டும்)

நிலத்தைப் பறிகொடுத்த பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வு யாருக்கு? - பனங்காட்டன்
[Friday, 2013-04-26 22:40:06]

ஒரு வேலிக்காகவும் ஓர் அங்குல காணிக்காவும் எத்தனை குடும்பச் சண்டைகளும் எத்தனை கொலைகளும் நடைபெற்றன என்பதை ஒரு தடவை எண்ணிப் பார்க்கையில், இப்போது ஒட்டுமொத்த அடிப்படையில் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் பறிபோகும்போது சமூகம் ஒட்டுமொத்தமாக என்ன செய்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.

Ramans2011
Suresh-remax-2013-01-01
NIRO-DANCE-100213
Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
Canada Kanthasamy Kovil
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
INNSYS-20120930
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com