Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 19, 2013 [GMT]

  • Welcome
  • Welcome
யாழ்.போதனா வைத்தியசாலையின் செய்ந்நன்றியை மறவற்க!
[Thursday, 2012-06-28 22:17:12]

யாழ்ப்பாணப் போதனா வைத்திய சாலை தொடர்பில் யாழ்ப்பாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்படுகின்ற அறிக்கைகள், ஊடகங்களில் வெளிவருகின்ற செய் திகள் தொடர்பில் ஒரு சுமுகமான நிலைமையை ஏற்படுத்துகின்ற தார் மீகப் பொறுப்பு யாழ்ப்பாணப் புத்தி ஜீவிகளுக்கும், சமூக அமைப்புகளுக் கும் உண்டு.


  

யாழ்ப்பாணப் போதனா வைத்திய சாலை என்பது வடபகுதி தமிழ் மக் களின் உயிர்காக்கும் உயர் நிலையம் என்பதை யாரும் மறுத்துவிட முடி யாது.அதேநேரம் தற்போது யாழ்ப்பா ணப் போதனா வைத்தியசாலை தொடர்பில் அச்சு ஊடகங்கள் முதல் இணையத்தளங்கள் வரை பொறுப் பற்ற முறையில் தகவல்களை வெளியிடுகின்றன என்ற குற்றச் சாட் டுக்களிலும் நியாயங்கள் இல்லாமல் இல்லை.

முப்பது ஆண்டு கால உரிமைப் போராட்டம் என்று கூறுகின்ற வேளையில், தமிழ் மக்களின் உயிர் களைக் காப்பாற்றுவதில் யாழ். போத னா வைத்தியசாலை செய்த தியாக ங்கள், அர்ப்பணிப்புக்கள் மனித மொழிகளில் விபரிக்கக் கூடியவை அல்ல.யுத்தகாலத்தில் தங்கள் உயி ரை, தங்கள் குடும்பங்களைப் பாரா மல் வைத்தியசாலையில் இருந்து உயிர்காக்கும் பணியைச் செய்த வைத்திய நிபுணர்கள், மருத்துவர் கள், தாதியர்கள், சுகாதார இணைச் சேவை உத்தியோகத்தர்கள், நிர்வா கப் பணியாளர்கள், சிற்றூழியர்கள் என அனைவரும் தமிழ்த் தாயின் நன் றிக்கும் போற்றுதலுக்கும் உரியவர் கள்.

இந்நிலையில்,யாழ் போதனா வைத் தியசாலை தொடர்பில் மருத்துவ சங்கம், ஊடகங்களில் வெளியிடுகி ன்ற தகவல்கள் யாழ். போதனா வைத்தியசாலையின் உள்ளக மட்டத் தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சி னைகளை பூதாகாரப்படுத்துவது போல் உள்ளது.இஃது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் எதிர் கால அபிவிருத்திக்கும் ஒழுங்கான இயங்கு நிலைக்கும் ஆரோக்கியமான தல்ல.அதேநேரம் பிரச்சினைகள் தீர் க்கப்பட வேண்டும் என்பதிலும் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.

எதுவாயினும் எங்கள் மண்ணிலிரு ந்து மருத்துவப் பணியை ஆற்றுகி ன்ற மருத்துவ நிபுணர்கள், மருத்துவ ர்கள் மனம் நோவார்களாயின் அதன் விளைவு மிகப் பாரதூரமாக இருக் கும் என்பது நிச்சயம். யாழ்ப்பாணத் தில் படித்துவிட்டு நாங்கள் வெளி நாடுகளில்தான் பணியாற்றுவோம் என்று வேரறுத்து வெளிக்கிட்ட மருத் துவர்கள் மத்தியில் எங்களோடிரு ந்து எங்களுக்காகப் பணியாற்றும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் மரு த்துவர்களின் சேவைக்கு முன்னால் எதுவும் பெரிதாகி விடமுடியாது. எங்கள் மண்ணிலிருந்து எங்களுக்கா கப் பணி யாற்றுகின்ற உயர்ந்த எண் ணம் கொண்டவர்கள் நிறையவே இருக்கின்றனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்திய நிபுணர் உமாபதி அவர்கள் தென்னாசியாவி லேயே முதன்மை நிலையில் இரு க்கக் கூடிய வைத்திய நிபுணர் என்ற செய்தியில் ஒவ்வொரு தமிழனும் பெருமை அடைய முடியும். அத்த கையவர் யாழ் .மண்ணில் இருந்து கடமை யாற்றுகிறார் எனில் அவரி டம் இருக்கக் கூடிய எங்கள் மீதான பற்றை யாரும் மறந்து விடக் கூடாது.அதேபோல் வைத்திய நிபு ணர் பேரானந்தராஜா அவர்களின் எளிமையான வாழ்க்கை முறை எங் கள் மாணவர்கள் கற்கக் கூடிய பாட மாகும்.

இப்படியாக எங்கள் மத்தியில் இருக் கக்கூடிய வைத்திய நிபுணர்கள் மற் றும் மருத்துவர்களை பட்டியல்படு த்தி பெருமைப்பட முடியும்.எனவே யாழ்.போதனா வைத்தியசாலையில் எழுந்துள்ள நிலைமைகளை சுமுகப் படுத்த யாழ்ப் பாணப் புத்திஜீவிகள் முன்வரவேண்டும்.இது காலத்தின் கட்டாய தேவையாகும்.

-வலம்புரி-

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
NIRO-DANCE-100213
INNSYS-20120930
TDE_Computers2011
Canada Kanthasamy Kovil
RoyaShades-l2011(04-12-11)
Mahesan supramaniyam 031109
Ramans2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com