Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 20, 2013 [GMT]

  • Welcome
  • Welcome
ஈழத் தமிழினத்தை நரகத்தில் தள்ளும் முயற்சியில் தந்தையின் வழியில் புதல்வன் நாமல் ராஜபக்சாவுமா?? கதிர்வீச்சு
[Friday, 2012-06-29 11:57:12]

நாமல் ராஜபக்சா. இந்த நாமத்திற்குரியவர் யார்?. தற்போதைய இலங்கையின் ஜனாதிபதியும் ஈழத்தமிழினத்தை நரகத்தில் தள்ளும் முயற்சியில் இறங்கி தனது நோக்கத்தை நிஜமாக்கும் வகையில் உலக நாடுகளோடு கைகோர்த்துக் கொண்டு திரியும் மகிந்தா ராஜபக்சாவின் புதல்வன். வயதில் குறைவானவராக இருந்தாலும் வாலிப வயதில் அடைய வேண்டிய அனைத்தையும் அளவிற்கு மேலாக பெற்று மகிழும் ஒரு இளைஞன்.


  

இந்த நாமல் ராஜபக்சா தொடர்பாக அண்மையில் இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகள் மேலும் விரிவான பல விபரங்கள் சிறிது சிறிதாக தற்போது கசிந்தவண்ணம் உள்ளன. அதுவும் அவுஸ்த்திரேலிய நாட்டுக்கு இலங்கையிலிருந்து அனுப்பப்படும் நமது தாயக உறவுகள் சிலரின் வாக்குமூலங்களாக வெளியாகி பல உண்மைகளை அவை கக்கத் தொட்ஙகியுள்ளன.

ஆமாம் உறவுகளே! வாசகர்களே! நமது ஈழத் தமிழினத்தின் இராணுவப் பலத்தை சதி செய்து அழித்து விட்டு தற்போது தொடர்ச்சியாக நமது இனத்தை நரகத்தில் தள்ளும் வகையில் பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டிய வண்ணம் செயற்பட்டு வரும் மகிந்த ராஜபக்சாவின் ஆலோசனையின்படியோ அன்றி அவரது சகோதரர் கயவன் கோதபாயா இராஜபக்சாவின் கபடத்தனமான வழி காட்டலின்படியோ இந்த நாமல் ராஜபக்ச நமது இனத்தை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் முயற்சியில் இறங்கியுள்ள செய்திகளும் அதன் விபரங்களும் நமக்கு மிகுந்த அச்சத்தை ஊட்டும் வகையில் அமைந்துள்ளன.

அடிக்கடி யாழ்ப்பாணத்திற்கும் கிளிநொச்சிக்கும் சென்று அங்கு சில நாட்கள் முகாமிட்டு நிற்கும் இந்த "நாமல்" என்னும் நச்சுப்பாம்பு நமது தாயக மண்ணில் உள்ள வயதில் குறைந்த ஆண்களுக்கு வெளிநாட்டு ஆசைகளை ஊட்டி பத்து இலட்சம் இலங்கை ரூபாக்களுக்கு குறையாத தொகையை அவர்களிடம்pருந்து பெற்று ஆபத்துக்கள் நிறைந்த கப்பல் பயணங்கள் மூலம் அவுஸ்த்திரேலியாவிற்கு அனுப்புவதாகக் கூறி கடலில் இறக்கி விடுகின்றாராம். இந்த விடயத்தில் நாமலுக்கு உதவியாளாகவும் கைக்கூலியாகவும் செயற்படுகின்றவர் தற்போது யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளராக தனக்கு பட்டம் சூட்டிக் கொண்ட அங்கயன் என்னும் அடுத்த கோடரிக் காம்பு என்று கூறப்படுகின்றது.

எங்கிருந்து வந்தாரோ இந்த அங்கயன் என்னும் அநியாயக்காரர்? அவரது தவறான வழி நடத்தில் நமது தமிழ் இளைஞர்கள் பலர் தங்கள் சொந்த இனத்திற்கே துரோகம் இழைக்கும் விடயத்தில் இந்த அங்கயனின் தீய சொற் கேட்டு நடக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பதும் ஒரு அபாய அறிவிப்பு என்றே நாம் கருதுகின்றோம்.

இவ்வாறு இந்த இரண்டு பேரும் செய்து வரும் இந்த இன அழிப்பின் கொடுமையை சற்றும் உணராதவர்களாகவும் அங்கு தங்களுக்கு தாங்களே குழி தோண்டுகின்றவர்களாக உள்ளதை அறியாதவர்களாகவும் நமது தாயக உறவுகள் உள்ளதை நினைக்க நமக்கு உள்ளம் பதைக்கின்றது. இந்த விடயம் தொடர்பாக விழித்தெழ வேண்டிய ஒரு தேவை எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை நாம் அக்கறையுடன் கவனிக்க வேண்டும் அன்பர்களே!. இந்த விடயத்தை நாம் ஒரு எச்சரிக்கையாகவே இங்கு பதிவு செய்கின்றோம்.

முதலாவதாக நமது தாயக மண்ணிலிருந்து ஏற்பாடு செய்யப்படுகின்ற நாற்பத்தைந்து வயதுக்கு குறைவான ஆண்களை அவுஸ்த்திரேலியாவிற்கு அனுப்புவதாக கூறி ஆபத்துக்குள் எறியும் இந்த கயவர்கள் இரண்டு பேரும் அவர்கள் நடுக்கடலில் இறந்தாலும் கவலைப் படமாட்டார்கள். கப்பல் கடலில் மூழ்கி நமது உறவுகளின் உடல்களை மீன்கள் தின்று சிதைத்தாலும் இவர்கள் கவலைப்படப்போவதில்லை.

காரணம் அவர்கள் ஏற்கெனவே பணத்தை முழுமையாகப் பெற்றுக் கொண்டுள்ளார்கள். கப்பல்களில் பயணம் செய்பவர்கள் செத்தாலும் அவர்களுக்கு நஸ்டமில்லை. அவர்கள் எப்படியோ அவுஸ்த்திரேலியா நாட்டில் கால் பதித்தாலும் அங்குள்ள குடிவரவுச் சட்டங்களை சமாளித்து அவுஸ்த்திரேலியாவி;ல் குடியேறுவது என்பது நாமலினதும் அங்கயனினதும் பிரச்சனையல்ல.

இந்த நஞ்சான திட்டத்தின் மூலம் மகிந்தாவும் அவரது புதல்வரும் தங்கள் பெரும்பான்மையினத்திற்கு நன்மை செய்வதை நாம் கவனிக்;க வேண்டும். தாயக மண்ணிலிருந்து மறைமுகமாக வெளியேற்றப்படும் நமது ஆண் உறவுகளின் பிரிவு என்பது நிச்சயமாக அந்த மண்ணில் பலவகைகளில் பாதிப்பை ஏற்படுத்துவுள்ளன.

இவ்வாறு அவுஸ்த்திரேலியா நோக்கி பயணிக்கும் ஆபத்துக்கள் நிறைந்த கப்பல் பயணங்களுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை வரையிலும் இலங்கைக் கடற்படையினர் பாதுகாப்பு அளிப்பதாகவும் அவுஸ்த்திரேலியாவிற்கு இந்தக் கயவர்களால் அனுப்பப்பட்ட நம்மூர் உறவுகள் தெரிவித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறன கபடத்தனம் நிறைந்த நாமல்-அங்கயன் கூட்டுச் சதியால் நமது இனம் எதிர்காலத்தில் பல இன்னல்களை அனுபவிக்கப் போகின்றது என்பதை நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் கூறி வைக்க விரும்புகின்றோம்.

தற்போது மகிந்தாவின் ஏவலின் படி யாழ்குடா நாட்டில் இராணுவம் மற்றும் பொலிஸ் கும்பலினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்பு திட்டம் கூட நமது மண்ணிலிருந்து ஆயிரக் கணக்கானவர்கள் வெளியேறுகின்றபோது அங்கு நிதர்சனமாகப் போகின்றது.அரசாங்கம் திட்டமிட்டுள்ள நமது தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டம் கூட மேற்படி மக்கள் வெளியேற்றங்களால் அரசின் எண்ணத்தை நிஜமாக்கப்போகின்றன. இவ்வாறு பல ஆபத்துக்கள் நிறைந்த நமது தாயக மண்ணின் தற்போதைய நிலைமை குறித்து அனைவரும் முன் வந்து நம்மை சூழ்ந்துள்ள ஆபத்துக்களை களையும் வண்ணம் பணியாற்ற வேண்டும்.

கனடா உதயன் - கதிர்வீச்சு

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
INNSYS-20120930
Canada Kanthasamy Kovil
Mahesan supramaniyam 031109
Ramans2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com