Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 23, 2013 [GMT]

  • Welcome
  • Welcome
முத்துவேல் கருணாநிதியின் வழியில் முஸ்லிம் மக்களை ஏமாற்றும் ரவூப் ஹக்கீம்:
[Friday, 2012-07-20 09:42:19]

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் "அறியாத" அரசியல் செய்கின்றார். இலங்கையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அசிங்கமான அரசியல் செய்கின்றார் தமிழகத்தில் முதல்வராக பிரகாசித்த காலத்தில்ää ஈழத்தமிழர்களின் விலை மதிக்க முடியாத அரசியல் பலத்தையும் இராணுவ பலத்தையும் தகர்த்து எறிவதற்கு இந்தியாவின் மத்திய அரசோடு விலை பேசிய கருணாநிதியும் இலங்கையின் மகிந்தா அரசாங்கத்தின் நீதி அமைச்சராக விளங்கும் ரவூப் ஹக்கீமையும் நாம் இணைத்துப் பார்ப்பதற்கு காரணங்கள் பல இருக்கின்றன.


  

இருவருமே தாங்கள் ஈடுபடுகின்ற அரசியல் சார்ந்த காரியங்களில் முழு விசுவாசமில்லாமல் மக்களை ஏமாற்றுகின்றவர்கள். அரசியல் நடவடிக்கைகளிலோ அன்றி தாம் சார்ந்த மக்கள் மீதோ போதிய விசுவாசமில்லாமல் இல்லாவிடினும் தங்களின் நலன்களையும் தங்கள் குடும்ப நலன்களையும் நன்கு கவனித்துக்கொள்கின்ற இந்த இரண்டு தலைவர்களின் அரசியல் செயற்பாடுகளையும் நகர்வுகளையும் நன்கு கவனித்துப் பார்த்தால் "முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் புதைத்து வைத்த" கதைதான் ஞாபகத்திற்கு வரும் இலங்கையில் முன்னாள் அமைச்சர் அஸ்ராப் அவர்களினால் ஒரு தனித்துவமான சிந்தனையோடு ஆரம்பித்து வைக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸை அவரது மறைவுக்குப் பின்னர் சிதைத்தும் முஸ்லிம்களை காட்டிக்கொடுக்கும் நோக்கோடு நகர்வுகளை மேற்கொண்டும் செல்லுகின்ற இந்த ஹக்கீமின் அரசியல் கருத்துக்களும் நகர்வுகளும் கபடத்தனம் மிகுந்தவை.

இலங்கையில் ஆண்டாண்டு காலமாக முஸ்லிம் மக்கள்pன் அரசியல் தலைமைத்துவத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு அதிக எண்ணிக்கையில் வாழும் கிழக்கு முஸ்லிம்களை ஏமாற்றிவந்த "முஸ்லிம்களின் கொழும்புத் தலைமைகளை" ஒரு புறத்தே தள்ளி விட்டு கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தனித்துவத்தை பேணுவதே நோக்கம் என்று புறப்பட்ட அமரர் அஸ்ரப்பின் நோக்கத்தை தகர்த்துவிட்டு தற்போது கொழும்புத் தலைமைகளை போன்று முஸ்லிம் மக்களை பெரும்பான்மை அரசுக்கு அடைவு வைத்துவிட்ட ஹக்கீமின் அண்மைக்;கால அரசியல் நகர்வுகள் நகைப்பிற்கிடமாக உள்ளன.

குறிப்பாக நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அவர் முன்னர் வெளியிட்ட அறிக்கைகளும் நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அவரது வாயிலிருந்து வெளிவரும் கருத்துக்களும் முஸ்லிம் மக்களை மட்டுமலல தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் ஏமாற்றுகின்ற "விஷமான" வார்த்தைகளாகவே நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது;.

தற்போது இலங்கை அரசின் அமைச்சர் பதவியை தனது கைகளில் வைத்துக்கொண்டு தன்னை ஒரு அந்தஸ்த்து உள்ள ஒரு அரசியல்வாதியாக வெளியுலகிற்கு காட்டிக்கொண்டு (இவரது அமைச்சர் பதவியினால் இலங்கை முஸ்லிம்களுக்கு என்ன பிரயோசனம்) தனியாக போட்டியிடுகின்றாராம். அது மட்டுமல்லாமல் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர்தான் அவர் முடிவு எடுப்பாராம் யாரோடு சேர்ந்து ஆட்சி அமைப்பது என்று. கிழக்கில் முஸ்லிம்கள் பலமிகுந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்காகவே தனது கட்சி தனியாகப் போட்டியிடுகின்றதாம்.

ஆனால் தமிழ்த் தேசியத்தை ஏற்றுக்கொண்டுள்ள முஸ்லிம் மக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக வாக்களியுங்கள் என்று மறைமுகமாக பிரச்சாரம் செய்வதை அவர் மறந்து விட்டு மறுபக்கத்தில் அரசாங்கத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலும் தனது அமைச்சர் பதவியை தொடர்ந்து தக்க வைக்கும் முயற்சியிலும் அவர் தடுமாறுகின்றார்.

இதைப்போலவே நமது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் தனது சுயநலப் போக்கை தமிழ் மக்கள் அறியாதவர்களாக உள்ளார்கள் என்ற எண்ணத்தில் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர் போல தற்போது நாடகமாடுகின்றார். இந்தக் கருணாநிதி கூறுவதை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்பதை அறிந்தும் கூட அவர் தொடர்ந்தும் ஏமாற்று வேலையில் தான் கவனமாகவுள்ளார் கருணாநிதி எதிர்கட்சியாக இருக்கும் போது ஈழத்தமிழர்கள் பற்றி நீலிக்கண்ணீர் வடிப்பதை தவறவிடமாட்டார்.

ஆட்சியில் இருக்கின்றபோது மத்திய அரசிற்கு தலையையும் தமிழக மக்களுக்கு வாலையும் காட்டிக்கொண்டு பொய்யான அரசியல் செய்தவர்தான் இந்தக் கருணாநிதி. பொய்யான அரசியலை அவர் வெளியே செய்தபடி தனது குடும்பம் சார்ந்த நலன்களை கருத்திற்; கொண்டு அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதில் வித்தகர்தான் இந்து முத்துவேல் கருணாநிதி.

தமிழகத்திலிருந்து திருவாளர்கள் நெடுமாறன் மற்றும் ராமதாஸ் போன்றவர்கள் தொடர்ச்சியாக அறிக்கைகளை விடுத்து வருகின்றனர். கருணாநிதி அவர்களே! நீங்கள் உங்கள் பொய்யான வார்த்தைகளை வாய்களுக்குள் மூடி வைத்துக்கொள்ளுங்கள்! நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்த துரோகம் போதும் எங்களுக்கு! வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருந்தால் போதும்" என்று தற்போது நடத்துகின்றாராம் டெசோ மாநாடு.

இதை கருணாநிதி நடத்துவதால் ஈழத்தமிழர்களுக்கு எந்த வித பயனும் ஏற்பட போவதில்லை. அது பயனற்றதாக தான் முடியும். என்றும் திரு ராமதாஸ் கூறியுள்ளார்.. லட்சக்கணக்கில் தமிழ் மக்கள் நமது மண்ணில் கொல்லப்பட்ட போது வடிக்காத கண்ணீர் இப்போது கருணாநிதிக்கு எங்கேயிருந்து வருகின்றது? என்ற கேள்விதான் உலகத் தமிழர்களின் மனங்களில் எழுந்து நிற்கின்றது.

இவ்வாறு இலங்கையில் அமைச்சர் ஹக்கீமும் தமிழகத்தில் கருணாநிதியும் இவ்வாறு ஏமாற்று அரசியல் செய்வதற்கு "ஆமாம்" என்று உச்சரிக்கின்றர்களும் இரண்டு இடங்களிலும் உள்ளார்கள். ஆனால் காலமும் நியாயவிரும்பிகளான மக்களும் சொல்லப்போகும் பதில்தான் இந்த இரண்டு ஏமாற்றுக்காரர்களையும் அரசியல் களத்திலிருந்து தூக்கி எறியும் காலம் ஒன்று காத்த்pருக்கின்றது என்று நம்பியபடி நாம் நகர்ந்து செல்வோம்.

உதயன் - கதிரோட்டம் (20-07-12)

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
TamilsGuid-191012-2013
Ramans2011
Canada Kanthasamy Kovil
RoyaShades-l2011(04-12-11)
NIRO-DANCE-100213
INNSYS-20120930
TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
AJRwindows22.05.13
Mahesan supramaniyam 031109
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com