Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 24, 2013 [GMT]

  • Welcome
  • Welcome
பிரித்தாளும் பொறிகளுக்குள் சிக்காதிருப்பது அவசியம்: -இதயச்சந்திரன்
[Saturday, 2012-07-21 22:05:21]

வெளிநாட்டு கடன் வழங்குனர்களுக்கு 15 பில்லியன் டொலர்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது இலங்கை அரசு. 1997 ஆம் ஆண்டிலிருந்து வாங்கிய மொத்த கடனே இத் தொகையாகும். இக்கால இடைவெளியில் சீனாவிடமிருந்து வாங்கிய 2.96 பில்லியன் டொலருக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகையோடு ,மொத்தமாக 4.9 பில்லியன்களை கொடுக்க வேண்டியுள்ளது.


  

ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு 4.64 பில்லியன் டொலர்கள் கடன். வாங்கிய கடனை சீனாவிற்கு மீளச்செலுத்தும் காலம் 12 வருடங்கள். ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு (ADB) 21 வருடங்கள்.

இவை தவிர அமெரிக்கா, இந்தியா அனைத்துலக நாணய நிதியம், உலக வங்கி, சர்வதேச ஒத்துழைப்பிற்கான ஜப்பானிய வங்கி (JBIC) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்தும் இலங்கை கடன் பெற்றுள்ளது.

கடன் பெற்ற நெஞ்சம் கலங்கினாலும், வாங்கிய கடனை திரும்பிச் செலுத்த ஆரம்பித்துவிட்டதா? என்கிற கேள்வி எழுகிறது.

மொத்த உள்ளூர் உற்பத்தி 59 பில்லியன் டொலர்களாகவிருக்கும், குறைந்த வருவாய் உள்ள நாடாக உலக வங்கியால் கணிப்பிடப்படும் இலங்கையானது, 2009 மே மாதத்திலிருந்து நாட்டின் உட்கட்டுமான அபிவிருத்திக்கான முதலீடாக, சீனாவிடமிருந்து 6 பில்லியன் டொலர்களை கடனடிப் படையில் பெற்றுள்ளது. இத்தகவல்களை அமைச்சர் சரத் அமுனுகம வெளியிட்டுள்ளார். இவை தவிர சர்வதேச சந்தையில் அரச முறிகளை விற்று 4 பில்லியன்களை இலங்கை பெற்றுள்ளது.

அந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை மக்களுக்குக் காட்டி அதிகாரத்தை நீடிக்க முயலும் ஆட்சியாளர்கள், தாம்பட்ட பெருங்கடன்களை மக்களுக்குச் சொல்வதில்லை.

மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் மதவுரிமை மற்றும் நிலவுரிமையை அச்சுறுத்தல் என்பதன் ஊடாக, அடிப்படைப் பிரச்சினைகளில் மக்கள் தமது கவனத்தைக் குவிக்காதவாறு திசை திருப்புதல் போன்ற நகர்வுகளில் அரசு ஈடுபடுகிறது.

இருப்பினும் பெருந்தேசிய இனவாதத்தின் தொடர்ச்சியான அடக்குமுறைக்கு உள்ளாகும் தமிழ் பேசும் மக்கள், தமது வாழ்வுரிமையைத் தக்கவைக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

நில அபகரிப்பிற்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நிகழ்த்திய மக்களை, திணிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைத் தேர்தல் திசை திருப்பிவிட்டது.

பொறுப்புடைமைமிக்க பிரதிநிதித்துவமில்லாத மாகாண சபைக் கட்டமைப்பினூடாக, அதிகாரப் பகிர்வு சாத்தியமில்லை என்பதனை இலங்கை அரசியலமைப்பே தெளிவுபடுத்துகின்றது. இந்நிலையில் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக திணிக்கப்பட்ட அதிகாரமற்ற மாகாண சபை முறைமை, தேசிய இன முரண்பாட்டிற்கு தீர்வாக அமையுமென்று எதிர்பார்க்க முடியாது.

தேர்தல் நடத்தக்கூடாதென மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றினாலும், ஜனாதிபதியால் வழி நடத்தப்படும் மாகாண ஆளுனரால் அச்சபை கலைக்கப்படும் என்பதிலிருந்து மாகாண சபைகளின் அதிகார வரம்பினைப் புரிந்து கொள்ளலாம்.

சிற்றூழியர் ஒருவரை நியமிக்க முடியாத மாகாண சபையில், யார் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதற்கான போட்டி நடைபெறு கிறது. கிழக்கில் பூர்வீகமாக வாழும், இறைமையுள்ள தமிழ்ப்பேசும் மக்களின் அரசியல் இருப்பைத் தக்க வைக்கும் களம் என்பதைத் தவிர இத் தேர்தலில் வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

தேசிய இனங்கள் மீது பெருந்தேசிய இனவாதத்தின் ஒடுக்குமுறை அதிகரிக்கும் இவ்வேளையில் தமிழ், முஸ்லிம் சிவில் சமூகங்களும் அம் மக்களை நாடாளுமன்றில் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளும் இணைந்து பொதுவான வேலைத் திட்டமொன்றினை உருவாக்கிச் செயற்பட வேண்டிய காலமிது.

அதேவேளை, அரசோடு இணையாமல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது. இதில் அரசோடு இணையக்கூடாது என்கிற மக்களின் எதிர்ப்பு, அதனைச் சரியாக உள்வாங்கிக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி அவர்களின் நிலைப்பாடு, என்பன கவனிக்கத்தக்கது.

தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் கூட்டமைப்போடு இணைந்து ஆட்சியமைக்க வேண்டுமா? அல்லது மத்தியில் உள்ளது போன்று மாகாணத்திலும் அரசோடு சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டுமா? என்பதற்கப்பால் அரசியல் கோட்பாட்டு ரீதியில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையே சரியானதொரு இணக்கம் ஏற்பட வேண்டும்.

இருதரப்பிலும் ஏற்பட்ட கடந்த கால கசப்பான அனுபவங்கள் குறித்து பேசித் தீர்த்து, பெருந்தேசிய ஒடுக்கு முறைக்கு எதிரான புதிய நல்லிணக்கத்தளமொன்றை உருவாக்க முன்வர வேண்டும்.

இதற்கு ஹசன் அலி போன்றவர்களின் வகிபாகம் முக்கியமானது என்பது எனது கருத்து. வட கிழக்கு என்பது தமிழ் முஸ்லிம் மக்களின் இறைமையுள்ள தாயகம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மாறிவரும் சர்வதேச அரசியல், சிறுபான்மைத் தேசிய இனங்களின் நலன்களை கவனத்தில் எடுக்காது.

அம் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டாலும் தமது முதலீடுகளையும் பிராந்திய ஆதிக்கத்தையுமே அவை முன்னிலைப்படுத்தும். மத்திய கிழக்கில் தமது எண்ணெய் வள ஆதிக்கத்திற்காக ஈரானைத் தனிமைப்படுத்த எடுக்கும் நகர்வுகளை கூர்ந்து அவதானித்தால் இந்த உண்மை புலப்படும்.

பலஸ்தீன மக்களின் பூர்வீக மண் அபகரிக்கப்படுவது குறித்து அக்கறை கொள்ளாமல், ஹமாஸை பயங்கரவாத இயக்கமாக சித்தரிப்பதிலேயே அர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆகவே வடக்கில் தேர்தலை நடாத்த வேண்டுமா? இல்லையேல் கிழக்கில் நடாத்த வேண்டுமா என அவர்கள் பட்டிமன்றம் நடத்துவர்கள்.

ஆனால் அடிப்படைப் பிரச்சினை அதுவல்ல. மத்திய அரசு வழங்கும் சலுகைகள், அடித்தட்டு மக்களுக்கு விடிவினை ஏற்படுத்தாது. தொடர்ந்தும் பெருந்தேசிய இனவாதத்தின் பிரித்தாளும் பொறிக்குள் வீழ்ந்தால் மீதமுள்ள உரிமைகளும் பறிபோகும்.

-வீரகேசரி வார இதழ்-

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
முள்ளிவாய்க்காலின் மூச்சாகி வலியை விஞ்சி எழும் வலிமை: - பனங்காட்டன்
[Thursday, 2013-05-16 21:29:38]

நெஞ்சுக்குள் குவிந்திருக்கும் வலியை விஞ்சியதாக புலம்பெயர் தமிழர் சமூகம் இன்று வலிமை பெற்று உயிர்ப்புடன் செயற்படுவதால், சர்வதேசத்தின் கண்களை கொஞ்சமாவது திறக்கக்கூடியதாக இருந்தது என்பதே நிதர்சனம்.

நாங்கள் நடக்கிற பாதை தந்தை செல்வாவின் பாதை என்று சொல்லிலும் செய்கையிலும் காட்டினால் சர்வதேசம் நாங்கள் சொல்லுவதை நம்பும்!
[Wednesday, 2013-05-15 20:46:54]

தமிழரசுக்கட்சியின் தொடக்கநரும் தமிழ்மக்களின் தந்தை எனவும் வாஞ்சையோடு போற்றப்படும் தந்தை செல்வாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் விழா தமிழரசுக் கட்சியால் அனுட்டிக்கப்பட்டது. வந்தாறுமூலை சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நடந்த இந்த விழாவுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம் தலைமை வகித்தார்.

முள்ளிவாய்க்கால் ஒரு தொடர்கதை
[Sunday, 2013-05-12 18:31:15]

முள்ளிவாய்க்கால் அது தமிழினத்தால் மறக்க முடியாத துயரங்களும் துன்பங்களும் நிகழ்ந்தேறிய நாள்.அது உரிமைக்காக போராட ஆயுதம் ஏந்தியவர்களின் உடைகள் உருவப்பட்ட நாள்.கழுத்தில் நகைகள் மட்டும் மல்ல நாங்கள் குப்பிகளும் அணிவோம் என இந்த உலகுக்கு எடுத்து காட்டிய வீரத்தமிழிச்சிகளின் உடல்கள் சிதைக்கப்ட்டநாள்.பிள்ளை தந்தையை இழந்த நாள்,தாய் பிள்ளையை இழந்த நாள்,மனைவி கணவனை இழந்த நாள்.மொத்தமாக தமிழன் தன் மண்ணை முற்றாக இழந்த நாள்.

தேர்தல்களில் விற்று வாங்க தேசியம் நுகர்வுப் பொருளல்ல - பனங்காட்டன்
[Saturday, 2013-05-11 11:28:07]

தேர்தல்கள் வரும், போகும். தேர்தல்களில் விற்கவும் வாங்கவும் தமிழ் தேசியம் ஒரு நுகர்வுப்பொருள் அல்ல என்பதை கூட்டமைப்பின் தலைமை புரிந்து நிதானமாக செயற்பட வேண்டும். சர்வதேச அரங்கில் இப்பொழுது அதிகளவில் பேசப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம், தமிழினப் படுகொலை, பொறுப்புக் கூறுல் மறுப்பு என்று இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.

தமிழ்நாட்டில் வேலைக்காரியோடு பேசுமொழி எந்த மொழி? - நக்கீரன்
[Monday, 2013-05-06 21:30:34]

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட நாள்களாக பட்டிமன்றத்துக்கு உரிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
இதற்குக் காரணம் இருக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் கூலித் தொழிலாளர்களாக வேற்று நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் தங்களது தாய்மொழியான தமிழை இழந்து தங்கள் அடையாளத்தைத் தொலைத்து விட்டார்கள். அவர்களது பெயர்கள் கூட சிதைந்துவிட்டன. இந்த நிலைமை பியூஜி, மொறேஷியஸ், தென் ஆபிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், மடகஸ்கார், றீயூனியன் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. பியூஜி தீவில் வாழும் தமிழர்கள் தாய்மொழி தமிழுக்குப் பதில் இந்தி படிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள். இந்த முயற்சியில் இந்திய நடுவண் அரசு மும்மரமாக ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? - இதயச்சந்திரன்
[Sunday, 2013-05-05 21:07:06]

ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் , 80 களின் முற்பகுதியைவிட அக்டோபர் 1997 இலிருந்து பார்ப்பது பொருத்தமாகவிருக்கும். 97 இல், வெளிநாட்டு பயங்கவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடை செய்த ஒருதுருவ நாயகன் அமெரிக்கா ( உலக நாயகன் என்று இப்போது சொல்ல முடியாது), 2001 நவம்பரில் பூகோளப் பயங்கரவாதிகள் என்கிற பெயரை அவர்களுக்குச் சூட்டியது. அது மட்டுமல்லாது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் வெண்புறா போன்ற தொண்டர் நிறுவனங்களைத் தடை செய்தது. அன்றைய அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரிச்சார்ட் ஆமிரெஜ் தொடக்கம் இன்றைய மேற்குலக இராஜதந்திர கருத்துருவாக்கிகளின் மையமான அனைத்துலக நெருக்கடிக்குழு வரை, 'ஆயுதப்போராட்டத்தைக் கைவிடுங்கள்',' வெளியக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை மறந்திடுங்கள் 'என்றுதான் விடுதலைப்புலிகளின் காதுகளில் ஓதிக்கொண்டிருந்தார்கள்.

பூநகரான் பார்வையில் - தமிழரின் நம்பிக்கை நட்சத்திரம் ராதிகா சிற்சபைஈசனுடன் ஒரு உரையாடல்:
[Saturday, 2013-05-04 07:31:23]

"ராதிகா" - கனடாப் புலம் பெயர் தமிழரின் சமகால நம்பிக்கை நம்பிக்கை நட்சத்திரம் அரசியல் அங்கீகாரம். குறிப்பாக தலைவர் பிரபாகரனின் வன்னி யுகத்தின் முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பின், மேற்குலகில் மின்னும் ஜனநாயக விடிவெள்ளி ராதிகா. புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திலிருந்து வெளிநாடொன்றின் , தேசியப் பாராளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது ஈழத் தமிழ் நங்கை நம் தங்கை ராதிகா.

கூட்டைக் கலைப்பது சுலபம் அதனைக் கட்டுவது சிரமம் - பனங்காட்டன்
[Friday, 2013-05-03 22:33:31]

கூட்டைக் கட்டியவர்களுக்குத்தான் அதன் அருமை பெருமை தெரியும். அவர்களுக்குத்தான் அதன் அத்தியவசியமும் புரியும். அதன் ஆழமும் அகலமும் அறியாமல் வெறும் பதவிகளுக்காக அதற்குள் குடியேறியவர்களுக்கு அது வெறும் கூடாகத் தெரிவதால்தான் இன்னொரு கூட்டைக் கட்டலாமென நினைக்கிறார்கள் போலும்.

வடக்கில் தீவிரமடையும் நில அபகரிப்பு! - இதயச்சந்திரன்
[Tuesday, 2013-04-30 23:28:47]

மே 2009 இற்குப் பின்னர் வட -கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஏறத்தாள 2500 சைவக் கோவில்களும் 400 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்ட அதேவேளை ,அவற்றை மறுபடியும் நிர்மாணிப்பதற்கு படைத்தரப்பு அனுமதியளிக்க மறுப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனாலும் வடக்கில் வீசும் வசந்தம் ,புத்தர் சிலைகளையும், பௌத்த கோபுரங்களையும் அரசின் அனுமதியோடு அழைத்து வருகிறது. கனகராயன் குளத்தில் பௌத்த தூபிகளும், கிளிநொச்சியில் தியானத்தில் ஆழ்ந்துள்ள பிரமாண்டமான புத்தர் சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் மகாதோட்ட ரஜ மகா விகாரையும் தோன்றியுள்ளன. மூதூரில் காளிக்கும் இடமில்லை. கோணேசர் கோட்டை வாசலில் காவலுக்கு இருந்த பிள்ளையாரை கடலில் வீசிய பழைய நினைவுகள்தான் மீண்டெழுந்து வருகின்றது.

எல்லைகளும் சுதந்திமும் கொசோவோ மற்றும் தென் சூடான் இரண்டினதும் பட்டறிவு: - எச். காஸ்நோபிஸ்
[Saturday, 2013-04-27 22:01:41]

(கொசோவோ மற்றும் தென் சூடான் இரண்டினது சுதந்திரம் குடியேற்ற நாடுகள் வரைந்த எல்லைக் கோடுகள் புதினதத்தன்மை வாய்ந்தவை அல்லவென்பதைக் காட்டுகின்றது. இது தமிழீழத்துக்கும் பொருந்தும். சிங்களத்துக்கும் தமிழீழகத்துக்கும் இடையில் இருந்த எல்லைக்கோடுகளைப் பிரித்தானிய ஒருதலைப் பட்சமாக அழித்ததே இன்றைய இனச் சிக்கலுக்கும் அமைதியின்மைக்கும் காரணியாகும். கொசோவோ மற்றும் தென் சூடானில் நடைபெற்றது போல் தமிழ்மக்களுக்கும் சுயநிருணய அடிப்படையின் கீழ் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த அய்யன்னா முன்வர வேண்டும்)

Suresh-remax-2013-01-01
INNSYS-20120930
Ramans2011
Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
TDE_Computers2011
Canada Kanthasamy Kovil
NIRO-DANCE-100213
AJRwindows22.05.13
RoyaShades-l2011(04-12-11)
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com