Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 23, 2013 [GMT]

  • Welcome
  • Welcome
சரிந்து விழும் இளையோர் உடல்களும்....
கதறியழும் அவர்தம் உறவுகளும்....

[Friday, 2012-07-27 14:21:25]

நமது தமிழர் சமூகத்தின் இளையோர் என்னும் பிரிவினரின் முக்கியத்துவத்தை நாம் அன்றும் இன்றும் என்றும் உணர்ந்து செயற்பட்டு வந்துள்ளோம். இந்த இளையோர் என்னும் பிரிவிற்குள் நமது ஆண் பெண் பிள்ளைகள் என்ற இருபாலாரும் அடங்குகின்றார்கள். அவர்களின் பங்களிப்பினால் நமது இனத்தினதும் சமூகத்தினதும் வளர்ச்சி என்பது உயரத்தை எட்டும் வகையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பதை தவறு என்று தட்டிக்கழித்துவிட முடியாது.


  

இந்த இளையோர்தான் நமது மண்ணில் "ஈழத்தமிழ் இனம் கல்வியில் சிறந்தது" என்ற பெருமையை ஈட்டிததந்தனர். கல்வியில் வெற்றிகள் பல பெற்று ஈழத்திலும் வெளிநாடுகளில் உயர் பதவிகளில் அமர்ந்து கம்பீரமாக நமது இனத்தின் பலத்தை கட்டிக்; காத்ததுவந்தார்கள். அகில இலங்கை ரீதியில் நடைபெறும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிக்கொடி நாட்டி இனத்தின் மகிமைக்கு மெருகூட்டியவர்கள் இவர்கள்தான்.

இவ்வாறான சிறந்த பங்களிப்புக்களை வழங்கிய வண்ணம் தம்மைப் பெற்றெடுத்து பெற்றோருக்கு மிகுந்த மரியாதை செலுத்தி வளர்ந்த இந்த இளையோர் சமூகம் குழப்பங்;கள் அற்றதும் நிம்மதி பெற்றதுமான வாழ்வை அந்த மண்ணில் மேற்கொண்டார்கள்.

நடுத்தர வசதிகள் உள்ள குடும்பமோ அன்றி ஏழ்மையில் வாடும் குடும்பமோ அன்றி செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்த குடும்பமோ.. எந்தக் குடும்பத்திலிருந்து வந்தாலும் நமது இளையோர் அனைவரும் தங்கள் கல்வியிலும் பழக்க வழக்கங்களிலும் மேன்மையுள்ளவர்களாக சிறந்து விளங்கினார்கள்.

பின்னாளில் நமது இனத்தின் விடிவிற்காக ஆரம்பிக்கப்பட்ட விடுதலை இயக்கங்களில் வயதில் கூடிய வளர்ந்தவர்களோ அன்றி திருமணமானவர்களோ இணைந்து கொள்ளவில்லை.

நமது இனத்திற்கு புதிதான ஒரு விடயமாக தென்பட்ட விடுதலைப் போராட்டத்தில் தமது பிள்ளைகள் இணைந்து கொள்வதை பெரும்பாலான பெற்றோர்கள் விரும்பவில்;லை. இதேபோல் வயது கூடியோர் எவரும் அரசுக்கெதிரான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க விரும்பாதவர்களாக இருந்தார்கள்.

ஆனால் நமது விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாக திகழ்ந்து பிற்காலத்தில் அந்த இயக்கங்களை வழி நடத்திய தலைவர்களாகவும் தளபதிகளாவும் பிரகாசித்த அனைத்து போராளிகளுக்கும் ஆரம்பத்தில் கைகொடுத்து உதவியவர்கள் நமது இளையோர்கள்தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.. இவ்வாறான நமது தாயகத்தின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இருந்த இளையோர்களின் பங்களிப்பினாலும் அவர்கள் பெற்ற தீவிர பயிற்சிகளினாலும் இலங்கை அரசு கலக்கமடைந்து வெளிநாடுகளில் உதவிகளை நாடியமை பற்றி நாம் இங்கு விபரமாக எடுத்துச் சொல்லத் தேவையில்லை.

இந்த வாரம் நாம் கனடாவில் வாழும் நமது இளையோர் பற்றிய சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவேண்டிய தேவை நமக்கு மீண்டும் வந்துள்ளது. முன்னர் பல தடவைகள் இந்த பக்கத்தில் நமது இளையோரின் சில தவறான செயற்பாடுகள் பற்றி குறிப்பிட்ட போதெல்லாம் அதிகளவு பாராட்டுக்கள் குவிந்தாலும் நம்மவர்களை நாமே குற்றம் சொல்லலாமா? என்றெல்லாம் கேள்விகள் எம்மைக் குடைந்து நின்றன.

நமது கனடிய இளையோர் பற்றி நாம் இங்கு குறிப்பிட்டாலும் பொதுவாகவே நமது மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகள் அனைத்திலும் இவ்வகையான பிரச்சனைகள் உள்ளதை நாம் செய்திகள் வாயிலாகவும் நடைபெறும் சம்பவங்கள் வாயிலாகவும் அறிந்து கொள்கின்றோம்.

இந்த வாரத்தில் கனடாவில் சில இளையோர் உயிர்களை நாம் இழந்தவர்களாக கண்ணீர் வடிக்கின்றோம். அந்த இளையோர் உடல் சரிந்தமைக்குரிய காரணங்களை நாம் இந்தப் பக்கத்தில் ஆழமாக ஆராய்வதற்கு விரும்பவில்லை. ஆனாலும் அநியாயமாக நாம் இழந்து போயுள்ள இந்த இளையோரின் முக்கியத்துவம் என்பதும் நம்மை விடடுப் பிரிந்து போய்விட்டது. நாம் அவர்களை மட்டும் இழக்கவில்லை.

அவர்களது தனித்துவத்தை இழந்து விட்டோம். அவர்களது ஆற்றலையும் அறிவையும் நமது சமூகம் இழந்து விட்டது. அவர்கள் மனங்களில் எழுந்து நின்ற எதிர்காலக் கனவுகளும் கரைந்து போய்விட்டன. ஒரு பக்கத்தில் நமது இளையோர் சமூகத்தின் விழுதுகள் பல நமது சமூகத்தினதும் அவர்தம் குடும்பத்தினதும் இருப்பைத் தாங்கும் பலமிக்கவையாக இருக்கையில் நூற்றுக் கணக்கில் நமது சமூகத்தில் காணப்படும் சில கறுப்புப் பக்கங்கள் நம்மை மேலும் இருட்டுக்குள் தள்ளிவிடுமோ என்ற அச்சத்தை அனைவரும் உணரத்தான் வேண்டும்..

இவ்வாறான ஒரு இருண்ட காலத்தை தவிர்ப்பதற்காக நமது சமூகத்தின் தலைமைகள் முன்வந்து உழைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை இவ்வாரக் கதிரோட்டத்தின் மூலம் விடுக்கின்றோம்.

(கதிரோட்டம் 27-07-12)

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
Mahesan supramaniyam 031109
AJRwindows22.05.13
NIRO-DANCE-100213
Canada Kanthasamy Kovil
Ramans2011
INNSYS-20120930
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
TDE_Computers2011
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com