Untitled Document
April 23, 2024 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



ஈரானின் பலம் கண்டு அதிர்ச்சியடைந்த அமெரிக்க கட்டளை மையம்!
[Tuesday 2024-04-23 18:00]

இஸ்ரேலை பொறுத்த வரை ஈரான் விடயத்திலும், ஈரான் உருவாக்கி வைத்துள்ள துணை படைகளை பொறுத்தளவிலும் இரண்டு தெரிவுகள் தான் இருகின்றது. ஈரான் உருவாக்கி வைத்துள்ள பிரச்சினையை இஸ்ரேல் முடிக்கப் போகிறதா அல்லது சமாளித்துக்கொண்டு இருக்க போகிறதா? ஈரான் பிரச்சினையை நிரந்தரமான முடித்து வைக்கும் முடிவை நோக்கி தான் இஸ்ரேல் சென்றுக் கொண்டு இருக்கிறது என்பது களநகர்வுகளை பார்க்கும் போதும் ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.



சீனாவுக்காக உளவு பார்த்ததாக ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் கைது!
[Tuesday 2024-04-23 18:00]

சீனாவுக்காக உளவு பார்த்ததாக, ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் வலதுசாரிக் கட்சியான Alternative for Deutschland (AfD) கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், Maximilian Krah. இவரது உதவியாளரான Jian G என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ள Jian Guo என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.



இஸ்ரேல் ராணுவ தலைமையகம் மீது ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல்!
[Tuesday 2024-04-23 18:00]

லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அடிக்கடி இஸ்ரேலைத் தாக்குகிற நிலையில் இஸ்ரேலும் பதிலடி கொடுத்த வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ தலைமையகம் மீது ராக்கெட்டுகளை வீசியதாக ஹிஸ்புல்லா கூறினார்.



கனேடிய நகரமொன்றில் பற்றியெரிந்தபடி பயணித்த ரயில்!
[Tuesday 2024-04-23 18:00]

கனேடிய நகரமொன்றில், பற்றியெரிந்தபடி ரயில் ஒன்று பயணிக்கும் காட்சிகள் வெளியாகி மனதை பதைபதைக்கச் செய்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு, 10.49 மணியளவில், கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள லண்டனில், பற்றியெரிந்தபடி பயணித்த ரயில் ஒன்றைக் கண்ட பலர் அவசர உதவியை அழைத்தனர்.



பலவீனமாக உள்ள நாணயம்: தங்கத்தை வாங்கி குவிக்கும் சீன மக்கள்!
[Tuesday 2024-04-23 06:00]

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் சீன மக்கள் தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான சீனா, தற்போது அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. சீனாவும் இந்தியாவும் பொதுவாக உலகின் மிகப்பெரிய தங்கம் வாங்கும் நாடுகள் என்றே அறியப்படுகிறது.



லண்டனில் உயிருடன் தீயில் கருகிய இருவர்!
[Tuesday 2024-04-23 06:00]

வடக்கு லண்டனில் Walthamstow பகுதியில் குடியிருப்பு ஒன்று தீக்கிரையான சம்பவத்தில், அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டதாகவும், பலியான இருவரும் உயிருடன் எரிந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. தொடர்புடைய கோர சம்பவம் ஞாயிறன்று இரவு சுமார் 10.25 மணியளவில் நடந்துள்ளது. தகவலையடுத்து 6 தீயணைக்கும் வாகனங்கள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளது.



எபோலா தொற்று உருவான குகை குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை!
[Tuesday 2024-04-23 06:00]

கென்யாவில் உள்ள மவுண்ட் எல்கான் தேசிய பூங்காவில் அமைந்துள்ள உலகின் மிக ஆபத்தான கிடும் குகை உலகின் அடுத்த தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறித்த குகையானது மனித வரலாற்றில் மிகவும் கொடிய வைரஸ்களின் இருப்பிடமாக மாறியுள்ளது என்றே நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். உயிர் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள எபோலா மற்றும் மார்பர்க் கிருமிகள் அங்கு தொடங்கியதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.



கனடாவில் அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம்!
[Monday 2024-04-22 18:00]

கனடாவின் பொதுப் போக்குவரத்துத்துறை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ரி.ரீ.சீ போக்குவரத்து சேவையின் தொடர்பாடல், இலத்திரனியல் மற்றும் சமிக்ஞை பணியாளர்கள் இவ்வாறு தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.



புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பியே தீருவோம்: பிரித்தானிய பிரதமர் சூளுரை!
[Monday 2024-04-22 18:00]

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பியே தீருவோம் என மீண்டும் சூளுரைத்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக். நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளாக ருவாண்டா திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்துவந்துள்ளார்கள் என்று கூறிய ரிஷி, இதுவரை நடந்ததெல்லாம் போதும், இனி தாமதிக்கமுடியாது, இன்று இரவு நாடாளுமன்றம் கூடும், ருவாண்டா திட்டம் தொடர்பில் வாக்கெடுப்பு நடந்தே தீரும் என்று கூறியுள்ளார் அவர்.



வெளியுலக மக்களைக் கண்டாலே கடுமையாக தாக்கும் ஆதிவாசிகள்!
[Monday 2024-04-22 18:00]

வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் ஒன்று வட சென்டினல் தீவு. அங்கு, Sentinelese என்னும் ஒரு கூட்டம் ஆதிவாசிகள் வாழ்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட அந்த பகுதிக்குச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. 2006ஆம் ஆண்டு, இந்திய மீனவர்கள் சிலர் அந்த தீவின் அருகில் சட்ட விரோதமாக நண்டு பிடிக்கச் சென்றுள்ளார்கள். அவர்களில் சுந்தர் ராஜ் (48) மற்றும் பண்டித் திவாரி (52) என்னும் இருவர் இரவில் படகில் நங்கூரம் பாய்ச்சிவிட்டு தங்கள் படகுகளிலேயே தூங்கிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் தூங்கும்போது, படகு மெல்ல நகர்ந்து சென்டினல் தீவின் அருகே சென்றுவிட்டிருக்கிறது.



வீகன் டயட்: குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தந்தை!
[Monday 2024-04-22 18:00]

ரஷ்யாவில் வீகன் உணவுமுறையை பின்பற்றும் ஒருவர் தன் குழந்தைக்கு உணவு அளிக்காமல் பட்டினி போட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் சமூக வலைதள இன்புளூயன்சராக இருப்பவர் மாக்சிம் லியுட்டி. இவர் வீகன் டயட் முறை குறித்து வீடியோ பதிவுகள் இட்டு பிரபலமாக இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு வயது நிரம்பாத பச்சிளம் குழந்தை உள்ளது.



சிரியாவில் அமெரிக்க இராணுவ தளம் மீது ட்ரோன் தாக்குதல்!
[Monday 2024-04-22 06:00]

சிரியாவில் அமெரிக்க இராணுவ தளம் மீது திடீரென்று ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், உயிர் அபாயம் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. சும்மர் நகரை நோக்கி ஐந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இரண்டு ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து ஈராக்கில் உள்ள ஈரானிய ஆதரவு குழுக்கள் அமெரிக்க துருப்புகளுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தியுள்ள நிலையில்,



அரிசி இறக்குமதி: ஆசிய நாடொன்றிற்கு தடை விதிப்பு மிரட்டல் விடுத்த ரஷ்யா!
[Monday 2024-04-22 06:00]

ரஷ்யா முன்வைக்கும் சர்வதேச தரத்தை சரக்குகளில் கவனிக்கப்படாவிட்டால், அரிசி இறக்குமதியை மீண்டும் தடை செய்யப்போவதாக பாகிஸ்தானை ரஷ்யா எச்சரித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில் சர்வதேச மற்றும் ரஷ்ய தாவரவியல் விதிகள் மீறப்பட்டுள்ளதை கண்டறிந்த நிலையிலேயே ரஷ்யாவின் FSVPS என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.



பிரித்தானிய உணவகத்தில் நூதன மோசடி!
[Monday 2024-04-22 06:00]

பிரித்தானியாவில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டு விட்டு 8 பேர்கள் கொண்ட குடும்பம் ஒன்று சுமார் ரூ 34,000 கட்டணம் செலுத்தாமல் மாயமாகியுள்ளது. குறித்த உணவ உரிமையாளர் தொடர்புடைய சம்பவத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்து, வெட்கமில்லையா எனவும் கேள்வி எழுப்பிய நிலையிலேயே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.



இஸ்ரேல்- ஹமாஸ் போர்: அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்!
[Sunday 2024-04-21 18:00]

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன. இந்நிலையில், பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். பாலஸ்தீன சுகாதாரத் துறை இதனைத் தெரிவித்துள்ளது. ஆனால் பத்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.



பிரான்ஸ் பள்ளிக்கு வெளியில் நடந்த கத்திக்குத்து!
[Sunday 2024-04-21 18:00]

பிரான்ஸ் பள்ளிக்கூடத்தின் அருகே நடந்த கத்திக் குத்து சம்பவத்திற்கு பிறகு, பிரான்ஸ் பள்ளி சிறுமி ஒருவர் இதய செயலிழப்பால் உயிரிழந்துள்ளார். கிழக்கு பிரான்சில் உள்ள Souffelweyersheim கிராமத்திற்கு அருகில் இந்த வாரம் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்தது. அந்த பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு வெளியே 7 மற்றும் 11 வயதான இரு சிறுமிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஒரு மணி நேரத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பாகிஸ்தான் பெண்!
[Sunday 2024-04-21 18:00]

பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு மணி நேரத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஜீனத் வாஹித் (Zeenat Waheed) என்ற 27 வயது பெண் 4 ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளிட்ட 6 குழந்தைகளை பெற்றெடுத்தார். ஏப்ரல் 19 அன்று, ஜீனத் வாஹித், ஒரு மணி நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.



கிறிப்டோ மோசடியில் சிக்கிய கனடிய பெண்!
[Sunday 2024-04-21 18:00]

கிறிப்டோ கரன்சி மோசடியில் சிக்கிய கனடிய பெண் ஒருவர் 25000 டொலர்களை இழந்துள்ளார். பிரபல வர்த்தகர் எலோன் மஸ்கினால் நிறுவப்பட்ட கிறிப்டோ கரன்சி மென்பொருள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மொன்றியலைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு மோசடியில் சிக்கியுள்ளார்.



பிரித்தானிய தெருக்களில் ஊடுருவியிருக்கும் ஈரானின் கூலிப்படைகள்!
[Sunday 2024-04-21 08:00]

பிரித்தானிய தெருக்களில் ஊடிருவியிருக்கும் ஈரானிய கூலிப்படைகள் தொடர்பில் 15க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல் அல்லது கடத்தல் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானுக்கு எதிராக எவர் குரல் எழுப்பினாலும், அவர்களுக்கு எதிராக இந்த கூலிப்படை நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். இதுபோன்ற அச்சுறுத்தலின் மையமாக லண்டன் மாறியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர்.



ஒரே நகரில் மிக ஆபத்தான நிலையில் 800,000 மக்கள்: எச்சரிக்கும் ஐ.நா மன்றம்!
[Sunday 2024-04-21 08:00]

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன்முறையால் சூடான் நகரம் ஒன்றில் 800,000 மக்கள் மிக மிக ஆபத்தான நிலையில் சிக்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சூடானில் ஒரு வருடத்திற்கு முன்பு சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கு இடையே போர் வெடித்தது. இதனால் உலகின் மிகப்பெரிய இடம்பெயர்தல் உருவானது.


Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா