Untitled Document
June 27, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பங்களாதேஷில் வினோதமான நோயை குணப்படுத்தி உலக சாதனை படைத்த மருத்துவர்கள்!
[Sunday 2017-01-08 17:00]

பங்களாதேஷ் நாட்டில் வினோதமான நோயால் அவதியுற்று வந்த நபருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து அந்நோயை மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பங்களாதேஷ் நாட்டில் உள்ள Khulna மாகாணத்தில் Abul Bajandar என்ற ரிக்ஷா ஓட்டுனர் வசித்து வருகிறார்.சிறிய வயதில் ஆரோக்கியமாக வளர்ந்து வந்த அவர் காதல் வயப்பட்டு ஒரு பெண்ணையும் திருமணம் செய்துக்கொண்டார்.ஆனால், நாட்கள் செல்ல அவரது உடலில் வினோதமான மாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது.

பங்களாதேஷ் நாட்டில் வினோதமான நோயால் அவதியுற்று வந்த நபருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து அந்நோயை மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் நாட்டில் உள்ள Khulna மாகாணத்தில் Abul Bajandar என்ற ரிக்ஷா ஓட்டுனர் வசித்து வருகிறார்.சிறிய வயதில் ஆரோக்கியமாக வளர்ந்து வந்த அவர் காதல் வயப்பட்டு ஒரு பெண்ணையும் திருமணம் செய்துக்கொண்டார்.ஆனால், நாட்கள் செல்ல அவரது உடலில் வினோதமான மாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது.

  

உடலின் பல பகுதிகளில் எண்ணற்ற மருக்கள்(warts) வளரத் தொடங்கின. கைகள் இரண்டிலும் மருக்கள் நீளமாக வளர்ந்து சென்றதால் அவரால் அன்றாட வேலைகளை செய்ய முடியவில்லை.இதனால் வேலை பறிப்போனது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இந்நபரின் நோய் தொடர்பான தகவல் உலகம் முழுவதும் பரவியதை தொடர்ந்து, அவரை ‘மரம் மனிதர்(tree man) என அனைவரும் அழைக்க தொடங்கினர்.இந்நிலையில், இவருடைய நோய் தொடர்பாக தகவல் அறிந்த Dhaka Medical College மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் அவருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க முன் வந்தனர்.இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அவர் ஒரு வருடக் காலமாக தங்கி வந்துள்ளார். இக்காலத்தில் அவருக்கு வெவ்வேறு விதமான 16 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது.

ச்சிகிச்சைகளுக்கு பிறகு தற்போது அவரது உடலில் வளர்ந்து வந்த 90 சதவிகித மருக்கள் மறைந்துள்ளது.இது குறித்து மருத்துவர்கள் பேசியபோது, ‘இனிவரும் காலத்தில் மருக்கள் மீண்டும் வளராமல் இருந்தால், உலகளவில் இந்நோயால் முதன் முதலில் குணமானவர் என்ற பெயரும் இவருக்கு கிடைக்கும்’ எனத் தெரிவித்துள்ளனர்.சிகிச்சைக்கு பின்னர் அப்துல் பேசியபோது, ‘இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உள்ளேன். இப்போது தான் முதன் முதலாக எனது மகளை கட்டி அணைத்து கொஞ்ச முடிகிறது.மருத்துவர்களின் இந்த உதவியை எப்போதும் மறக்க மாட்டேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



வேற்று கிரகவாசிகள் பூமியில் இறங்கியதற்கான ஆதாரங்கள்..! அமெரிக்க உளவுத்துறை வெளியீடு..!
[Tuesday 2017-06-27 18:00]

அறிவியல் புனைகதைகளை மையமாக கொண்டு எடுக்கப்படும் சினிமாக்களை உண்மை என கூறுவதாக இருக்கலாம் அல்லது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசாங்கத்தால் வெளியிடப்படும் ஒரு ஆவணமாக கூட இருக்கலாம். இந்த அறிகை மற்றும் ஆவணங்களின் படி நமது பூமிக்கு எண்ணற்ற வேற்று கிரக உயிரினங்கள் விஜயம் செய்கின்றன. மற்ற கிரகங்களில் இருந்து மட்டுமல்ல இதில் சில வகை பரிணாம வளர்ச்சியுடனும் இருந்து உள்ளன. இதில் சில நுட்பமான விமானங்கள் மூலம் வந்து உள்ளன என கூறுகிறது.



ஆல்ப்ஸ் சிகரத்தில் யோகா
[Tuesday 2017-06-27 08:00]

சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆல்ப்ஸ் மலைசிகரத்தில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. 11 ஆயிரத்து 371 அடி உயரத்தில் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து ஆர்வமுடன் யோகா செய்தனர். பாரதிய ஜனதாவின் முக்கிய நிர்வாகியான ராம் மாதவ்வும் இதில் பங்கேற்றார். ஸ்விட்சர்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் முயற்சியால் உலகின் மிக உயரமான இடத்தில் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.



மணிக்கு 400 கி.மீ. வேகம்... அசத்தும் சீன ரயில்
[Tuesday 2017-06-27 08:00]

சீனாவில் அதிகபட்சமாக மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் புல்லெட் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஃப்யூக்சிங் (Fuxing) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புல்லெட் ரயில், பயணிகள் நெரிசல் மிகுந்த பெய்ஜிங்-ஷாங்காய் வழித்தடத்தில் இன்று முதல் பயணத்தைத் தொடங்கியது. சுமார் 1,318 கி.மீ. கொண்ட இந்த வழித்தடத்தை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புல்லெட் ரயில் 5 மணி நேரம் 45 நிமிடங்களில் கடந்ததாக சீன ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது. இந்த ரயில் மணிக்கு அதிகபட்சமாக 400 கி.மீ. வேகத்திலும், சராசரியாக மணிக்கு 350 கி.மீ. வேகத்திலும் பயணிக்கும் திறன் பெற்றதாக சீனா தெரிவித்துள்ளது.



ஹிஸ்புல் தலைவர் சர்வதேச பயங்கரவாதி: அமெரிக்கா
[Tuesday 2017-06-27 08:00]

பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டது. காஷ்மீரைச் சேர்ந்த சலாவுதீன், காஷ்மீர் பிரச்னையில் அமைதியான தீர்வை எதிர்க்க உறுதி பூண்டிருப்பதாலும், மேலும் பல தற்கொலை படையினருக்கு பயிற்சியளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்ததாலும் இந்த முடிவை அமெரிக்க அரசு எடுத்துள்ளது.



விடுதியில் பெண் தனியாக தங்கக்கூடாதா..?
[Monday 2017-06-26 07:00]

சிங்கப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு விடுதியில் தனியாக தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்தவர் நுபூர் சரஸ்வத். பாடகி, கவிதாயினி என பன்முகத்திறமைக் கொண்ட இவர் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இந்தியாவிற்கு அடிக்கடி வருவதுண்டு. பொதுவாக தனியாக வரும் அவர், இங்குள்ள விடுதிகளில் தங்கி நிகழ்ச்சிகளை முடித்துக்கொடுத்து விட்டு பின்னர் சிங்கப்பூருக்கு திரும்புவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த அவர், பிரபலமான இணையதளம் மூலமாக ஐதராபாத் விடுதியில் அறை ஒன்றை முன்பதிவு செய்திருந்தார்.



மரம் நடும் ட்ரோன்.. அசத்தல் கண்டுபிடிப்பு
[Monday 2017-06-26 07:00]

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பொறியாளர் சூசன் கிரஹாம் என்பவர் மரங்களை நடும் ட்ரோன்களை வடிவமைத்து அசத்தியுள்ளார். இந்த புதிய ட்ரோன் மரங்கள் வளர்வதற்கேற்ற சூழலைத் தேர்ந்தெடுப்பதிலும், பின்னர் அந்த பகுதிகளில் விதைகளைத் தூவவும் உதவும் என்று சூசன் நம்பிக்கை தெரிவிக்கிறார். இந்த ட்ரோன்கள் மூலம் ஆண்டுக்கு நூறு கோடிக்கும் அதிகமான மரங்களை நட முடியும் என்று கூறும் சூசன், பருவநிலை மாறுபாட்டில் காடுகள் அழிப்பு முக்கிய பங்கு வகிப்பதாகவும் கவலை தெரிவிக்கிறார். மனித நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் மரம் வளர ஏற்ற சூழல் இருந்தால், அதையும் இந்த ட்ரோன்கள் மூலம் கண்டறியலாம் என்பது கூடுதல் சிறப்பு என்கிறார் சூசன்.



’மரணம் கூட எனக்கு ஆதரவாகவே இருந்தது’: நெகிழ்ந்த மலாலா
[Monday 2017-06-26 06:00]

தாலிபான்களால் சுடப்பட்ட போது மரணம் கூட, தமக்கு ஆதரவாக இருப்பதை உணர்ந்ததாக நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய் தெரிவித்தார். மலாலாவை ஃபேஸ்புக் தலைமை இயக்குனர் ஷெரில் சேண்ட்பேர்க் நேர்காணல் செய்தார். இதுதொடர்பான வீடியோ பதிவினைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஷெரில், மலாலாவை நேர்காணல் செய்தது கவுரவம் என்று குறிப்பிட்டுள்ளார். பெண் குழந்தைகள் கல்வி குறித்து குரல் எழுப்பியதற்காக தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட மலாலா யூசுப்சாய், தற்போது லண்டனில் வசித்து வருகிறார். தாலிபான்களால் சுடப்பட்ட நிகழ்வு குறித்து பேசிய மலாலா, எனது குரலை ஒடுக்க அவர்கள் நினைத்தனர். ஆனால், நான் உயிர்பிழைத்து விட்டேன். அந்த தருணத்திலேயே மரணம் கூட எனக்கு ஆதரவாகவே இருப்பதை நான் உணர்ந்தேன் என்று நெகிழ்ந்திருக்கிறார்.



அமெரிக்க நிறுவன அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை
[Monday 2017-06-26 06:00]

சுந்தர் பிச்சை, டிம் குக் உள்ளிட்ட அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி வாஷிங்டனில் ஆலோசனை நடத்தினார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் முதல்முறை அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி அந்நாட்டுக்கு சென்றுள்ளார். போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் இருந்து விமானம் மூலம் வாஷிங்டன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அந்நாட்டின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை, ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக், அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.



ட்ரெண்ட் ஆகும் புது பேஷன் ‘தோல் மேல் தையல்’
[Sunday 2017-06-25 07:00]

சீனாவில் இன்றைய இளசுகள் பேஷன் என்ற பெயரில் தோல் மீது விதவிதமான வடிவங்களில் தையல் போட்டுக்கொள்ளும் விநோத பழக்கம் ட்ரெண்ட் ஆகி வருகிறதுசமீப காலமாக ஆண், பெண் என இருவரும் காது, மூக்கு மட்டுமின்றி புருவங்களிலும் தோடு குத்திக்கொள்ளும் பேஷன் நடைமுறையில் உள்ளது. அதுமட்டுமின்றி வலித்தாலும் பரவாயில்லை என டாட்டூ போன்ற விபரீத பேஷன்களும் இளைஞர்கள் உலா வருவது உண்டு. அந்த வகையில் தோல் மீது விதவிதமான வடிவங்களில் தையல் போட்டுக்கொள்வது தற்போதைய பேஷனாக சீனாவில் வலம் வருகிறது. சமீப வாரங்களாக சீனாவில் உள்ள இணைய பயன்பாட்டாளர்கள் சமூக ஊடகங்களில், தங்களுடைய தோலிற்குள் போடப்பட்ட தையல் வடிவங்களை புகைப்படங்களாக பகிர்ந்து வருகின்றனர்.



நாயை சுடுவதற்கு பதில் மாணவியைச் சுட்ட போலீஸ்
[Sunday 2017-06-25 07:00]

அமெரிக்காவில் நாயை சுடுவதற்கு பதில் காவல்துறையினர் மாணவியை சுட்டுக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நகர போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள குடியிருப்பு வாசி தான் வளர்க்கும் நாயை சாலையில் அழைத்து வந்துள்ளார். திடீரென, நாய் போலீசார் மீது பாய்ந்து ஒரு போலீசின் காலை கடித்து குதறியது. நாயை கூட்டிவந்தவர் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துள்ளார். இதனால், செய்வதறியாது திகைத்த போலீசார் சட்டென தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் நாயை குறிவைத்து சுட்டனர். ஆனால், குறிதவறி அவ்வழியாக வந்த பள்ளி மாணவி மீது குண்டு பாய்ந்தது.



பிரிட்டன் எம்பிக்களின் இ-மெயில் கணக்குகளை முடக்கிய ஹேக்கர்கள்
[Sunday 2017-06-25 06:00]

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இ-மெயில் கணக்குகளை ஹேக்கர்கள் முடக்கினர். ஹேக்கர்களின் தாக்குதலை முதலில் கண்டுகொண்ட லிபரல் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஸ் ரென்னார்ட், நாடாளுமன்ற இ-மெயில் கணக்குகளை திறக்க முடியவில்லை. இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை தேவை என்று ட்விட்டரில் பதிவிட்டார். ஹேக்கர்கள் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர், இந்த விவகாரம் தொடர்பாக சைபர் பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.



ஓட்டுனர் இல்லாமல் ஓடிய மோட்டார் சைக்கிள்... தெரிந்தது காரணம்
[Saturday 2017-06-24 06:00]

ஓட்டுனர் இல்லாமல் பிரான்ஸ் நெடுஞ்சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் எப்படி ஓடியது என்ற காரணத்தை பிரான்ஸைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று ஒரு மாதத்திற்கு பின்னர் கண்டறிந்துள்ளது. பிரான்ஸில் இருந்து வெளிவரும் லா பரீசியன் (Le Parisien), சமூக வலைதளங்களில் கடந்த மாதம் பதிவிட்ட வீடியோ ஒன்று நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்படி என்ன அந்த வீடியோவில் இருந்தது என கேட்கிறீர்களா? ஓட்டுனர் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஒன்று பிரான்ஸ் நெடுஞ்சாலையில் சீரான வேகத்தில் பயணித்ததே நெட்டிசன்கள் அதிர்ந்ததற்கு காரணம்.



தேசிய கீதத்தை மாற்றியமைக்கும் பாகிஸ்தான்
[Saturday 2017-06-24 06:00]

கலாச்சார வேறுபாடுகளை பிரதிபலிக்கும் வகையில் தனது நாட்டு தேசிய கீதத்தை மாற்றியமைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உலகத்தரத்திலான ஆர்கெஸ்ட்ரா இசையுடன் புதிய தேசிய கீதத்தை இசைத்து பதிவு செய்யுமாறு, பாகிஸ்தான் தேசிய கலைக்கழகத்தை அரசு பணித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த முடிவு அந்நாட்டு தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் மரியம் ஔரங்கசீப் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.



மிருகம் பாதி.. மனிதன் பாதி.
[Saturday 2017-06-24 06:00]

தென் ஆப்ரிக்காவில், ஆடு ஒன்று பாதி மனித உருவத்துடனும், பாதி மிருக உருவத்துடனும் குட்டி போட்டிருப்பது காண்போரை அதிர்ச்சியில் உள்ளாக்கி இருக்கிறது.தென் ஆப்ரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் உள்ளது லேடி ஃப்ரெர். கிட்டத்தட்ட 4000-க்கும் அதிகமானோர் இங்கு வசித்து வருகின்றனர். இவர்களில் ஏராளமானோர் விவசாயிகள். இங்குள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் உள்ள ஆடு ஒன்று குட்டி போட்டது. ஆனால் அது வழக்கமான ஆட்டுக்குட்டி போன்று இல்லை. பாதி மிருகம் போன்றும் பாதி மனிதன் போன்றும் உடல்வாகை கொண்டிருந்தது. இதனை பார்த்த விவசாயி அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதனை அறிந்த அக்கம்பக்கத்தினரும் அந்த ஆட்டுக் குட்டியை சென்று பார்த்ததுடன் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர்.



குல்பூஷன் ஜாதவ் கருணை மனு
[Saturday 2017-06-24 06:00]

பாகிஸ்தானில் மரண தண்டனை பெற்றிருக்கும் இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவ், தனது தண்டனையை ரத்து செய்யக் கோரி பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது கருணை மனுவில் பாகிஸ்தானில் உளவு, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக ஜாதவ் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



வட கொரியா புதிய ஏவுகணை எஞ்ஜின் சோதனை: - அமெரிக்க அதிகாரிகள் தகவல்!
[Friday 2017-06-23 18:00]

அமெரிக்க பெருநிலப் பகுதியை தாக்கும் சக்தியுடைய ஏவுகணையை உருவாக்குகின்ற தன்னுடைய முயற்சியின் ஒரு பகுதியாக, வட கொரியா புதியதொரு ராக்கெட்டை எஞ்ஜினை சோதனை செய்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். வட கொரியாவின் அணுசக்தி அபிலாஷைகள் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் அதிகரித்து வருகின்ற பதட்டங்களுக்கு மத்தியில் இந்த செய்தி வந்துள்ளது. இதனை தங்களுடைய முதன்மை பிரச்சனைகளில் ஒன்றாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் கையாண்டு வருகிறது.



அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சூரிய ஒளி மின்சாரம் தகடுகள் பதிக்க டிரம்ப் ஆலோசனை:
[Friday 2017-06-23 09:00]

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் புதிதாக கட்டப்படும் சுவரில் சூரிய ஒளி மின்சாரம் தகடுகள் பதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆலோசனை செய்கிறார். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டப்படும் என டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதன் மூலம் மெக்சிகோ நாட்டினர் அமெரிக்காவில் நுழைந்து குடியேறுவதை தடுக்க முடியும். போதை பொருள் கடத்தலுக்கு முடிவு கட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானதும் மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதில் தீவிரமாக இருக்கிறார்.



பிரித்தானிய மகாராணியின் வருடாந்த உரை: - முக்கிய அம்சங்கள்
[Thursday 2017-06-22 18:00]

பிரித்தானிய மகாராணியின் வருடாந்த உரையில் பல முக்கிய அம்சங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் மொத்தமாக 27 மசோதாக்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து சுமூகமாக பிரித்தானியா வெளியேறுவது குறித்த மசோதாவில் பொதுமக்களுக்கும், தொழில்துறைக்கும் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வது முக்கிய விடயமாக இந்த Great Repeal Bill மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



அல்-நூரி பள்ளிவாசலைத் தகர்த்த ஐ எஸ்
[Thursday 2017-06-22 09:00]

மொசூலில் உள்ள பெரிய பள்ளிவாசல் ஒன்றை இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பினர் வெடிவைத்து தகர்த்துவிட்டதாக இராக் படைகள் கூறுகின்றன.சாயும் தோற்றம் கொண்ட கோள் வடிவ கோபுரங்களைக் கொண்ட அந்த பிரபலமான இடத்தில்தான், ஐ.எஸ் . அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி 2014ல் தனது இஸ்லாமிய ராஜ்யத்தை (கலிஃபாட்) அறிவித்தார்.ஆனால், இந்த வளாகத்தை அமெரிக்க விமானம் சேதப்படுத்தியது என ஐ எஸ் அமைப்பு தனது செய்தி நிறுவனமான அமாக் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இந்த பள்ளிவாசலை வெடிக்கவைத்த நடவடிக்கை, ஐ ஸ் அமைப்பு தனது ''தோல்வியை அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்ட அறிவிப்பு'' என்று இராக் பிரதமர் ஹைதர் அல் அபடி தெரிவித்தார்.



இங்கிலாந்து அரசி எலிசபத்தின் கணவர் பிலிப் மருத்துவமனையில்
[Thursday 2017-06-22 08:00]

இங்கிலாந்து அரசி எலிசபத்தின் கணவர் பிலிப்(96) முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அரசி ராணி எலிசபத்தின் கணவரும் இளவரசருமான பிலிப், இந்த ஆண்டு கோடை காலத்துக்கு பிறகு அரச பணிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என பக்கிங்ஹாம் அரண்மனை கடந்த மே மாதம் அறிவித்தது.இந்நிலையில், இளவரசர் பிலிப் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை இன்று வெளியிட்டுள்ள செய்தி வெளியிட்டுள்ளது.


Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா