Untitled Document
May 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ட்ரம்பின் வெற்றிக்கு உதவிய ரஷ்யா: - அறிக்கையை வெளியிட்ட ஒபாமா அரசு
[Sunday 2017-01-08 18:00]
 


 
கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோற்கடித்தார்.ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி டொனால்ட் ட்ரம்பை வெற்றி பெற செய்ய ரஷ்யா தேர்தல் நடந்த சமயத்தில் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.இந்த குற்றசாட்டை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் மறுத்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அரசு ரகசிய விசாரணைக்கு புலனாய்வுத் துறையிடம் உத்தரவிட்டது. அதன் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோற்கடித்தார்.ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி டொனால்ட் ட்ரம்பை வெற்றி பெற செய்ய ரஷ்யா தேர்தல் நடந்த சமயத்தில் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.இந்த குற்றசாட்டை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் மறுத்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அரசு ரகசிய விசாரணைக்கு புலனாய்வுத் துறையிடம் உத்தரவிட்டது. அதன் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

  

அதன்படி, அமெரிக்க தேர்தல் வாக்குப்பதிவின் போது தேர்தல் ஆணைய இணையதளத்தை ரஷ்ய உளவு துறை ஹேக் செய்து ட்ரம்ப் வெற்றிக்கு உதவியுள்ளது.இந்த விடயத்தை ரஷ்யாவின் ஜனாதிபதி புதின் உத்தரவின் பேரில் தான் அவரின் உளவுதுறை செய்துள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களில் இதை டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



பிரித்தானியாவில் குண்டுவெடிப்பு: - 19 பேர் பலி - 50 பேர் படுகாயம்
[Tuesday 2017-05-23 08:00]

பிரித்தானியாவில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியின் போது திடீரென்று குண்டு வெடித்ததால் 19-பேர் உயிரிழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena என்ற உள்விளையாட்டு அரங்கில் பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.



பிராந்திய பாதுகாப்பிற்கு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் வடகொரியா: - ஐ.நா செய்தி தொடர்பாளர் கண்டனம்
[Tuesday 2017-05-23 08:00]

உலக நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வரும் நிலையில், இது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என ஐ.நா சபையின் செய்தி தொடர்பாளார் தெரிவித்துள்ளார்.ஐ.நா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக பல்வேறு கட்ட ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.



அவுஸ்திரேலியாவில் தனது மகளை விட 20-வயது மூத்த நபருக்கு திருமணம் செய்து வைத்த தாய்!
[Tuesday 2017-05-23 08:00]

அவுஸ்திரேலியாவில் பெற்ற தாயே தனது மகளை விட 20-வயது மூத்த நபருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு சம்மதம் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ஆம் திகதி திருமணம் ஒன்று நடந்துள்ளது.அதில் திருமணப் பெண்ணாக 14-வயது சிறுமியும், அச்சிறுமியை திருமணம் செய்துகொள்பவர் சிறுமியை விட 20-வயது மூத்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.



தென் சீனக் கடலுக்கு அடியில் இருந்து எரியும் பனி கண்டுபிடிப்பு: - சீனா தகவல்
[Monday 2017-05-22 18:00]

முதன்முறையாக தென் சீனக் கடலுக்கு அடியில் இருந்து ஐஸ் கட்டி போன்ற பொருளிலிருந்து எரிவாயுவை பிரித்தெடுத்திருப்பதாக சீனா கூறியுள்ளது., எதிர்காலத்தின் உலக எரிபொருள் தேவைக்கான முக்கிய ஆதார மையமாக இது விளங்கும் என்று கருதப்படுகிறது..இந்த வெற்றியை ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு என சீன அதிகாரிகள் விவரித்துள்ளனர். "எரியும் ஐஸ்" என்று அழைக்கப்படும் மீத்தேன் ஹைடிரேட் பெருமளவு இயற்கை எரிவாயு கொண்ட ஆதாரமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகள் அந்த படிமங்களை எப்படி தோண்டுவது மற்றும் பிரித்தெடுப்பது என்ற ஆய்வில் ஈடுபட்டுள்ளன.



அவுஸ்திரேலியாவில் பிரம்மாண்டமான முறையில் அரங்கேறிய இந்திய திருமணம்!
[Monday 2017-05-22 18:00]

அவுஸ்திரேலியாவில் வாழும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜோடிக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் அரங்கேறியுள்ளது.அவுஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் வசித்து வருபவர் Divya Dhingra. இவருக்கும் இந்தியாவில் நிதித்துறையில் வேலை பார்க்கும் Gurjab Sigh Kohli என்னும் நபருக்கும் நாடே திரும்பி பார்க்கும் வகையில் அவுஸ்திரேலியாவில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.



நூறாவது பிறந்த நாள் கொண்டாடும் இரட்டை சகோதரிகள்!
[Monday 2017-05-22 18:00]

பிரேசில் நாட்டில் கரியா சியா பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மரியா பிக்னேடன் பான்டின், பவுலினா பிக்னேடன் பான்டின்.இவர்களுக்கு 100 வயது ஆகிறது. அதையொட்டி வருகிற 24-ந்தேதி (நாளை மறுதினம்) விழாவை மிக சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.அதற்கு முன்பு இருவரும் ஒன்றாக இருப்பது போன்று போட்டோக்கள் எடுத்துக் கொண்டனர். கமீலா லீமா என்ற போட்டோ கிராபர் இருவரையும் பலவித கோணங்களில் படம் எடுத்தார்.



115-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 115-ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து அசத்திய பல்கலைகழகம்!
[Monday 2017-05-22 07:00]

சீனாவில் பல்கலைகழகம் ஒன்று தனது 115-வது ஆண்டு விழாவை முன்னிட்டி 115-ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து அசத்தியுள்ளது.சீனாவின் Nanjing பகுதியில் உள்ளது, Nanjing பல்கலைகழகம். இது கடந்த 1902-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சீனாவில் உள்ள பழமைவாய்ந்த பல்கலைகழகம்களில் இதுவும் ஒன்று.இந்நிலையில் இந்த பல்கலைகழக்த்தின் 115-வது ஆண்டு விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை மேலும் சிறப்பூட்டும் வகையில் 115-ஜோடிகளுக்கு திருமணம் செய்து அசரவைத்துள்ளது நிர்வாகம்.



லண்டன் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக பெண்!
[Monday 2017-05-22 07:00]

பிரித்தானியாவில் உள்ள லண்டன் மாநகராட்சி கவுன்சிலராக தமிழகத்தில் பிறந்து வளர்ந்த தொழில் அதிபர் ரெஹானா அமீர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.பிரித்தானியா நாட்டின் லண்டன் மாநகரில் உள்ள 25 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.இதில் வின்ட்ரை வார்டின் கவுன்சிலர் பதவிக்கு இந்தியாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் ரெஹானா அமீர் (43) போட்டியிட்டார். இவர் தமிழகத்தின் சென்னையில் பிறந்து, வளர்ந்தவர்.



மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை: - தென் கொரியா தகவல்
[Sunday 2017-05-21 16:00]

சர்வதேச அமைப்புகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக பல்வேறு கட்ட ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா, ஐ.நா., ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதிக்கும் முயற்சியில் தொடர்ந்து வருகின்றன.இந்நிலையில், வடகொரியா அடையாளம் தெரியாத ஏவுகணை சோதனை செய்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளார்.



நேபாளத்தில் கடவுளை திருமணம் செய்யும் பெண் குழந்தைகள்!
[Sunday 2017-05-21 16:00]

நேபாளத்தில் பெண் குழந்தைகளுக்கு இந்து கடவுள் விஷ்ணுவுடன் திருமணம் செய்து வைக்கும் சடங்கு நடத்தப்படுகிறது. காத்மண்டுவைச் சேர்ந்த நேவார் சமூகத்தினர், வயதுக்கு வராத பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு இந்த திருமணத்தை செய்து வைக்கின்றனர்.இந்து மதம் மற்றும் புத்த மதம் ஆகிய இரண்டிலும் உள்ள சடங்குகளை இணைத்து செய்யும் இந்த சமூகத்தினர், இந்த திருமண விழாவை 2 நாட்கள் நடத்துகின்றனர்.



சிரியாவில் 19 பேரை சுட்டுக்கொன்று உடல்களையும் எரித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரம்!
[Sunday 2017-05-21 09:00]

உள்நாட்டுப்போர் போர் நடந்துவரும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வெறிச்செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கடந்த இருதினங்களில் 19 பேரைக் கொன்று அவர்களின் உடலை எரித்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்தக் கொடூரச் செயலை மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு உறுதிசெய்து தெரிவித்துள்ளது.



இங்கிலாந்து நாட்டின் பெரிய குடும்பம்: 20-வது குழந்தைக்கு பெற்றோர் தயார்
[Sunday 2017-05-21 09:00]

பிரித்தானிய நாட்டின் மிகப்பெரிய குடும்பத்திற்கு தலைவியான தாயார் தற்போது 20-வது பிள்ளையை பெற்றெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.இங்கிலாந்தில் உள்ள லான்கேஷிர் நகரில் Sue மற்றும் Noel Radford என்ற தம்பதி வசித்து வருகின்றனர்.நாடே வியக்கும் வகையில் தாயாருக்கு இதுவரை 19 பிள்ளைகள் பிறந்துள்ளன.



சுவிஸில் சிறுவர்களை பாலியல் சித்ரவதை செய்த நபர்: - 10 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்
[Sunday 2017-05-21 09:00]

சுவிட்சர்லாந்து நாட்டில் சிறுவர்களை பாலியல் சித்ரவதை செய்த நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சுமார் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.சுவிஸில் உள்ள சூரிச் மாகாணத்தில் Roland W(51) என்ற நபருக்கு நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது.நண்பர்களுடன் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த இவர் சிறுவர்களுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.



ஐரோப்பிய அகதிகள் பிரச்னைக்கு காரணமே ஏஞ்சலா மெர்க்கல்தான்: - குற்றஞ்சாட்டிய போலந்து தலைவர்
[Sunday 2017-05-21 09:00]

ஐரோப்பிய அகதிகள் பிரச்னைக்கு முக்கிய காரணமே ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கல் தான் என போலந்தின் பழைமைவாத ஆளுங்கட்சியின் தலைவர் காசியின்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.அகதிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பகிர்ந்து கொள்வது குறித்த விடயத்திலேயே காசியின்ஸ்கி இவ்வாறு கூறியுள்ளார்.இதற்கு முன் அகதிகள் போலந்து நாட்டிற்கு நோய்களையும், கிருமிகளையும் கொண்டு வந்து விடுவர் என்ற அவர் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியிருந்தது.



ரேன்சம் வைரஸை உருவாக்கியது நாங்கள் இல்லை: - வடகொரியா திட்டவட்டமாக மறுப்பு
[Saturday 2017-05-20 18:00]

உலக நாடுகளை கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கும் ‘Wannacry ransomware' எனப்படும் இணைய வைரஸ் வடகொரியாவின் மூலம் உருவாக்கப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்தது. இதை வடகொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஏறத்தாழ 150 நாடுகளுக்கு மேல் இணையத்தின் மூலம் பரவி சைபர் தாக்குதலை நடத்திவருகிறது ‘WannaCry ransomware’ எனப்படும் இணைய வைரஸ். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை’ குறிவைத்து தாக்கும் இந்த வைரஸ், இதுவரை 3 லட்சம் கணினிகளுக்கு மேல் ஊடுருவி, அவைகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.



வைரஸ் தாக்காமல் இருக்க கம்யூட்டர்கள் மீது பாதிரியாரை வைத்து புனித நீர் தெளித்த ரஷ்யா:
[Saturday 2017-05-20 18:00]

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல்களை நடத்துகிற ஆற்றல் வாய்ந்த டூல்களை (கருவிகளை) கொண்டு, இந்தியா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ஊடுருவி ‘வான்னா கிரை’ என்ற வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இ-மெயில் மூலம் பரவுவதாகக் கூறப்படும் இந்த வைரஸ், உலகமெங்கும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகளை தாக்கியுள்ளது.



பதவி விலகி புதிய சரித்திரம் படைக்கும் ஜப்பான் மன்னர்: - சோகத்தில் மூழ்கிய மக்கள்
[Saturday 2017-05-20 07:00]

ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுவது தொடர்பான மசோதாவுக்கு, அந்த நாட்டு அமைச்சரவை தமது ஒப்புதலை வழங்கியுள்ளது.ஜப்பான் நாட்டின் 125வது மன்னராக 83 வயது அகிஹிட்டோ இருந்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார்.



ஆஸ்திரியாவில் பாலியல் வன்கொடுமைக்கு இரையான 15 வயது சிறுமி: - அகதிகளுக்கு தடை விதித்த நகரம்
[Saturday 2017-05-20 07:00]

ஆஸ்திரியாவில் 15 வயதேயான சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு இரையான சம்பவத்தை அடுத்து அங்குள்ள Tulln நகரம் அகதிகளுக்கு அதிரடி தடை விதித்துள்ளது.Tulln நகர மேயர் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மறு உத்தரவு வெளியாகும் வரை அகதிகளுக்கும் புகலிட கோரிக்கையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.புகலிட கோரிக்கையாளர்களின் குற்றச்செயல்களை ஒருக்காலும் பொறுக்க முடியாது என கூறியுள்ள அவர், விருந்தினர்களாக வருகை தந்துள்ள அவர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள உரிமையை தவறாக பயன்படுத்த கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



சர்வதேச அளவில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் முன்னணி நாடுகளின் பட்டியல் வெளியீடு!
[Friday 2017-05-19 18:00]

சர்வதேச அளவில் தரமான மருத்துவ சிகிச்சை அளித்து இறப்பு சதவிகிதத்தை குறைக்கும் முன்னணி நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Healthcare Access and Quality Index (HAQ) என்ற மருத்துவ துறையை சார்ந்த நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.



விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிரான விசாரணையை கைவிடப்போவதாக சுவீடன் வழக்கறிஞர்கள் அறிவிப்பு!
[Friday 2017-05-19 18:00]

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை கைவிடப்போவதாக சுவீடன் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு பேசிய சுவீடன் அரசு வழக்கறிஞர்கள் குழு இயக்குனர் Marianne Ny இவ்வாறு அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பின் மூலம் 7 ஆண்டுகால சட்ட இழுபறி நிலை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b>06-05-2017 அன்று கனடா- ரொரன்டோவில் அபிநயாலயா நாடியாலயம் நடாத்திய 20வது ஆண்டுவிழா நிகழ்வின் படத்தொகுப்பு. </b> படங்கள் - குணா
<b>30-04-2017 அன்று கனடா- ரொரன்டோவில்  நடைபெற்ற சங்கீத சங்கமம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா