Untitled Document
March 25, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
இளம்பெண்ணை வன்புணர்வுக்கு இரையாக்கி காதை வெட்டி வீசிய காமுகர்கள்!
[Monday 2017-01-09 06:00]


 
இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று இளம்பெண்ணை கடத்தி சென்று கூட்ட வன்புணர்வுக்கு இரையாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தின் பாக்பட் மாவட்டத்தில் குறித்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் அத்துமீறி நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல் குறித்த பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளது.பின்னர் அப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தினுள் இளம்பெண்ணை கடத்தி சென்ற அந்த கும்பல் அங்கு கூட்ட வன்புணர்வுக்கு இரையாக்கியுள்ளது.

இதில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அந்த பெண்ணை கொடூரமாக தாக்கியதுடன் அவரது காதையும் கத்தியால் வெட்டி வீசியுள்ளனர் அந்த கொடூர காமுகர்கள்.இதனிடையே தமது மகளின் அழுகுரல் சத்தம் கேட்டு பதட்டமடைந்து ஓடிச்சென்று தடுக்க முயன்ற தாயாரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது.

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று இளம்பெண்ணை கடத்தி சென்று கூட்ட வன்புணர்வுக்கு இரையாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தின் பாக்பட் மாவட்டத்தில் குறித்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் அத்துமீறி நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல் குறித்த பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளது.பின்னர் அப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தினுள் இளம்பெண்ணை கடத்தி சென்ற அந்த கும்பல் அங்கு கூட்ட வன்புணர்வுக்கு இரையாக்கியுள்ளது. இதில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அந்த பெண்ணை கொடூரமாக தாக்கியதுடன் அவரது காதையும் கத்தியால் வெட்டி வீசியுள்ளனர் அந்த கொடூர காமுகர்கள்.இதனிடையே தமது மகளின் அழுகுரல் சத்தம் கேட்டு பதட்டமடைந்து ஓடிச்சென்று தடுக்க முயன்ற தாயாரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது.

  

மட்டுமின்றி சம்பவம் நடந்த பின்னர் அதே நாள் அந்த கும்பல் திரும்ப வந்து இளம்பெண்ணையும் தாயாரையும் மிரட்டி விட்டு சென்றுள்ளது. இதனால் பயந்த அவர் கடந்த 4 ஆம் திகதி நடந்த சம்பவத்தை எவரிடமும் தெரிவிக்கவோ பொலிசில் புகார் அளிக்கவோ துணிவின்றி பயத்துடன் இருந்துள்ளார்.இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலர் துணையுடன் நேற்று பொலிசில் புகார் தெரிவித்ததை அடுத்து தாயாரையும் அந்த இளம்பெண்ணையும் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிசார், இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்பது மட்டுமல்ல, விசாரணை நடைபெற்று வருவதாக மழுப்பல் பதிலை அளித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



பகத்சிங் இறப்பு - 86 வருடங்கள் கழித்து கேட்கப்படும் நீதி!
[Saturday 2017-03-25 08:00]

1931-ம் ஆண்டு மார்ச் 23, சாண்டர்ஸ் என்கிற வெள்ளைக்கார துரையை சுட்டுக் கொன்றதற்காகவும், தன் நண்பர்கள் சுக்தேவ், ராஜகுரு ஆகியோருடன் சேர்ந்து குண்டுகள் வீசியதற்காகவும் பகத்சிங், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்ட தினம். பகத்சிங் தூக்கிலிடப்பட்டு 86 வருடங்கள் கடந்துவிட்டன. அவரைத் தூக்கிலிடுவதா, வேண்டாமா என்று மகாத்மா காந்தி மற்றும் பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரி இர்வின் ஆகியோரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது, இறுதியில் பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாததை அடுத்து, பகத்சிங் விவகாரத்தில் பிரிடிஷ் அரசாங்கம் என்ன நினைக்கிறதோ அதையே செய்யட்டும் என்று ஒப்புதல் அளித்தார் காந்தி.



ரஜினி இலங்கை செல்வதற்கு சுப்பரமணியன் சுவாமி ஆதரவு:
[Saturday 2017-03-25 08:00]

ரஜினி இலங்கை செல்வதற்கு, பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் சுப்பரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார். லைக்கா நிறுவனத்தின், ஞானம் அறக்கட்டளை சார்பில், இலங்கை வவுனியா, யாழ்ப்பாணத்தில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை, அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சிக்காக ரஜினிகாந்த் இலங்கை செல்ல உள்ளார். இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ரஜினி இலங்கை செல்வது இதுதான் முதன்முறை என்று லைக்கா நிறுவனம் கூறி வருகிறது.



லைகா நிறுவன வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கக் கூடாது: திருமாவளவன்வே ண்டுகோள்
[Saturday 2017-03-25 08:00]

லைகா நிறுவனம் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகத்தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகவேண்டாம் எனக் கூறியுள்ளார்.



ஷாரூக்கானுக்கு அமலாக்கத்துறையிடமிருந்து நோட்டீஸ்..
[Friday 2017-03-24 20:00]

பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், ஐ.பி.எல். கிரிக்கெட்டின் கோல்கட்டா அணி உரிமையாளராக உள்ளார். இவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஷாரூக்கான், இவரது மனைவி கெளரி, மற்றும் பாலிவுட் நடிகை ஜூலி சாவ்லா ஆகியோர் மீது அன்னிய செலாவாணி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறை ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் மூவரும் 15 தினங்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.



'ஏர் - இந்தியா ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்,பி.,மீது வழக்கு பதிவு
[Friday 2017-03-24 20:00]

ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் சிவசேனா எம்,பி., ரவீந்திரா கெய்க்வாட் மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இருக்கை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையில், வாக்குவாதம் முற்றியதால், 'ஏர் - இந்தியா விமான நிறுவன ஊழியரை, சிவசேனா, எம்.பி., ரவீந்திர கெய்க்வாட் செருப்பால் அடித்த சம்பவம்,பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்த எம்.பி , ரவீந்திரா கெய்க்வாட் ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்பதற்கு தடை விதித்தது. மேலும் ஏர்இந்தியா விமான நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ரவீந்திரா கெய்க்வாட் மீது டில்லிபோலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



தினகரன், கங்கை அமரன், தீபா, மதுசூதனன், மருதுகணேஷ் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்பு
[Friday 2017-03-24 20:00]

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள டிடிவி தினகரன், மதுசூதனன், மருது கணேஷ், தீபா மற்றும் கங்கை அமரன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், 127 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள் அளித்திருந்தனர். இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில், முக்கிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.



தி.மு.க. மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு
[Friday 2017-03-24 20:00]

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்தபின்னர், காவிரி மேலாண்மை வாரியம் தாமதம் ஆனதற்கு தி.மு.க. ஆட்சிதான் காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.



இரட்டை இலை சின்னம் கிடைக்காதது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது' : பன்னீர்
[Friday 2017-03-24 06:00]

'இரட்டை இலை சின்னம், எங்களுக்கு கிடைக்காமல் போனது, மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். எம்.ஜி.ஆர்., உருவாக்கிய, ஜெயலலிதாவின் வெற்றி சின்னமான, இரட்டை இலையை, தேர்தல் கமிஷன் முடக்கி உள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வலுவான ஆதாரங்களை, தேர்தல் கமிஷனிடம் முன்வைத்தும், இரட்டை இலை சின்னம், எங்களுக்கு கிடைக்காமல் போனது, மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இரட்டை இலை சின்னத்தை, சட்டப்படி எப்பாடுபட்டாவது, மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.



முஸ்லீம்கள் ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி
[Thursday 2017-03-23 20:00]

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லீம்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லீம்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.



தமிழகத்திற்கு வறட்சி நிதி 'ரூ.1748.28 கோடி' வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு..
[Thursday 2017-03-23 19:00]

தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.39,565 கோடி வேண்டும் என தமிழக அரசு கேட்டுள்ள நிலையில், ரூ.1748.28 கோடி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை வட கிழக்கு பருவமழை காலமாகும். இந்த பருவமழை காலத்தில் சராசரியாக 440 மில்லிமீட்டர் மழை கிடைக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவ மழை பொய்த்தது. 168.03 மில்லி மீட்டர் மழைதான் பெய்தது.140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான மழை பெய்ததால் கடும் வறட்சி ஏற்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவியது. அணைகள் வறண்டு விட்டன. விவசாயம் பொய்த்து விட்டது.



'ஓபிஸ்'ற்கு மின்கம்பம் , 'சசிகலா'விற்கு 'தொப்பி'
[Thursday 2017-03-23 19:00]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஸ் அணிக்கு மின்கம்பம் , சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அணிக்கு மின்கம்பம் , சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னம் ஒதுக்கீடு. ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு, சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் இரு அணியினரும் பலப்பரீட்சை நடத்த தயாராகியுள்ளனர்.



சிறுத்தை மீது பாய்ந்து விரட்டி அடித்த பெண்: தன் மகனை விடுவித்தார்
[Thursday 2017-03-23 17:00]

மும்பையின் வடபகுதியில், சஞ்சய் காந்தி தேசிய உயிரியல் பூங்கா உள்ளது. அதையொட்டிய குடியிருப்பு பகுதிக்குள், ஒரு சிறுத்தைப்புலி நுழைந்து விட்டது. அப்பகுதியில் வசித்து வரும் பிரமிளா ரிஞ்சத் (வயது 23) என்ற இளம்பெண், சிறுத்தையை பார்த்து விட்டு ஓட்டம் பிடித்தார். அவரை பின்தொடர்ந்து, அவருடைய 3 வயது மகன் பிரணாயும் ஓடிவந்தான். முதலில், பிரமிளாவுக்கு அது தெரியாது.



12 வயது சிறுவன் - தந்தையானான்: - ஆச்சர்யத்தை தரும் சம்பவம்
[Thursday 2017-03-23 17:00]

இந்தியாவின், கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத 12 வயது சிறுவன் தந்தையாகியுள்ளான். 17 வயது சிறுமியுடன் ஏற்பட்ட தொடர்பால் பெண் குழந்தை பிறந்து உள்ளது. இவர்கள் இருவருமே உறவினர்கள் ஆவார்கள். இந்தியாவிலேயே இளம் வயது தந்தையாக இச்சிறுவன் கருதப்படுகிறான். இதுகுறித்து திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்து கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் பி.கே. ஜப்பார் கூறியதாவது, இச்சிறுவன் இந்த வயதிலேயே தந்தையாகுவதற்கு ப்ரீகோசியஸ் பருவமடைதல் காரணமாகும்.



உலக கோடீஸ்வரர் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த தமிழன்:
[Thursday 2017-03-23 07:00]

2017ஆம் ஆண்டுக்கான உலக அளவில் இருக்கும் கோடீஸ்வரர்களின் பெயர் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே ஒரு தமிழர் இடம்பெற்றுள்ளார். அவர்தான் 102ஆவது இடத்தைப் பிடித்த ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் சிவ நாடார். இவரது சொத்து மதிப்பு 12.3 பில்லியன் டொலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. சிவ நாடார் தனது பள்ளிப்படிப்பு முழுக்க முழுக்க தமிழிலேயே படித்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் உயர் படிப்பை மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் முடித்தார்.



ஒவ்வொரு துளி தண்ணீரையும் சேமிக்க உறுதி ஏற்க வேண்டும்: - உலக தண்ணீர் தினத்தில் மோடி வேண்டுகோள்
[Wednesday 2017-03-22 17:00]

ஒவ்வொரு துளி தண்ணீரையும் சேமிக்க உறுதி ஏற்போம்: உலக தண்ணீர் தினத்தில் மோடி வேண்டுகோள் புதுடெல்லி:மனித குலத்திற்கு ஆதாரமாக விளங்கும் நீர்வளங்களை பாதுகாப்பதுடன், தண்ணீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு வறட்சிக்கு மத்தியில் உலக தண்ணீர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அரசியல் தலைவர்களும் தங்களின் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.



மகளைக் கொன்று பிணத்தை காதலன் வீட்டு வாசலில் வீசிய தந்தை!
[Wednesday 2017-03-22 17:00]

உத்தர பிரதேச மாநிலம் சர்தாவல் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது மகளைக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் போலீசார் தந்தையைக் கைது செய்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயரதிகாரி ஷிவ்ராஜ் சிங் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட பெண் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை 15 வயது சிறுமி என்றும் பாராமல், தனது மகளின் கழுத்தை அறுத்து அவரைக் கொலை செய்துள்ளார். பின்னர் பிரேதத்தை எடுத்து சென்று அவளது காதலனின் வீட்டுக்கதவு முன்னால் போட்டுவிட்டு வந்துள்ளார்.தற்போது அந்த பெண்ணின் தந்தையைக் கைது செய்துள்ளோம். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டார். பிரேதத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்றார்.



நடிகர் ரஜினிகாந்துக்கு சுற்றுலாத்துறை தூதர் பதவி: - மலேசியா அரசு முடிவு
[Wednesday 2017-03-22 17:00]

மலேசிய அரசு நடிகர் ரஜினிகாந்துக்கு மலேசியா சுற்றுலாத்துறை தூதர் பதவியை தரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மலேசியாவின் மலாக்கா சுற்றுலா துறை தூதராக பிரபல நடிகர் ஷாருக்கான் செயல்ப்பட்டு வருகிறார்.அவர் இந்திய சுற்றுலா பயணிகளை அதிகளவில் மலேசியாவுக்கு கொண்டு வர தவறிவிட்டதாக மலேசியா சுற்றுலா துறை நினைக்கிறது.இது தொடர்பாக மலேசியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று சுற்றுலா துறை அமைச்சர் டத்தோஷி மொகமட் நஸ்ரி அப்துல் தலைமையில் விவாதம் நடைப்பெற்றுள்ளது.



வேலை பறிபோகக் காரணமான இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞன்: - அதிர்ச்சி சம்பவம்
[Wednesday 2017-03-22 16:00]

வேலை பறிபோகக் காரணம் எனக் கூறி இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிய இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.சென்னை தியாகராய நகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பொறி‌யாளராக சுசி ஸ்மித்தா என்பவர் பணியாற்றி வருகிறார்.இன்று காலை பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தபோது, ரகுநாத் என்ற இளைஞர் அவரைக் கத்தியால் 3 முறை குத்தியுள்ளார்.



இடைத்தேர்தலிருந்து விலகும் டி.டி.வி தினகரன்?
[Wednesday 2017-03-22 16:00]

இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றால் ஆர்.கே நகர் போட்டியிலிருந்து டிடிவி தினகரன் விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12ஆம் திகதி நடைப்பெறவுள்ளது.அதிமுக சார்பில் அதன் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷ்ம் களத்தில் உள்ளனர்.



தீபாவை சில தீய சக்திகள் இயக்குகின்றனர்: - தீபாவின் கணவர் மாதவன் பரபரப்பு குற்றசாட்டு
[Wednesday 2017-03-22 16:00]

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை சில தீய சக்திகள் சூழ்ந்துகொண்டு இயக்குவதாக அவரின் கணவர் மாதவன் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மாதவன் கூறியதாவது, தீபா பேரவையில் தற்போது ஒருவர்கூட இல்லை. காரணம் நிர்வாகம் சரியில்லை.தீபா பேரவை ஆரம்பிக்கும் முன்பும், ஆரம்பித்த பின்பும் தீபாவை முதலமைச்சராக்கி பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசை.

<

Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
<b>05-03-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ninaivakal-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா