Untitled Document
February 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
கஜகஸ்தானில் கட்டுப்படுத்த முடியாத அளவில் தூங்கும் வினோத நோய்: - மர்ம நோயின் காரணம் என்ன?
[Monday 2017-01-09 08:00]

கஜகஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த சிலருக்கு, கட்டுப்படுத்த முடியாத அளவில் தூங்கும் வினோத நோய் ஒன்று தாக்கியுள்ளது.Kalachi என்ற கிராமத்தில் கடந்த மார்ச் 2013 முதல் 2015 வரை இந்த வினோதம் தொடர்ந்துள்ளது.இங்கு வசிக்கும் நபர்கள் தங்களுக்கே தெரியாமல் திடீரென தூங்க தொடங்கி விடுகின்றனர்.அவ்வாறு தூங்குபவர்கள் சில சமயங்களில் 2 நாட்கள் கழித்து தூக்கத்தில் இருந்து விழித்த கதையும் நடந்துள்ளது.

கஜகஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த சிலருக்கு, கட்டுப்படுத்த முடியாத அளவில் தூங்கும் வினோத நோய் ஒன்று தாக்கியுள்ளது.Kalachi என்ற கிராமத்தில் கடந்த மார்ச் 2013 முதல் 2015 வரை இந்த வினோதம் தொடர்ந்துள்ளது.இங்கு வசிக்கும் நபர்கள் தங்களுக்கே தெரியாமல் திடீரென தூங்க தொடங்கி விடுகின்றனர்.அவ்வாறு தூங்குபவர்கள் சில சமயங்களில் 2 நாட்கள் கழித்து தூக்கத்தில் இருந்து விழித்த கதையும் நடந்துள்ளது.

  

மேலும், இவ்வாறு நீண்ட நேரம் தூங்கி எழும் அவர்களுக்கு ஞாபக மறதி நோயும் ஏற்பட்டுள்ளது.பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வினோத நிகழ்வுகளின் காரணங்களை கண்டறிய அறிவியலாளர்கள் பல சோதனைகளை மேற்கொண்டனர்.பல மருத்துவர்கள் அங்கு வாழும் நபர்களின் ரத்த மாதிரிகளை சோதித்து பார்த்த நிலையில், அறிவியலாளர்கள் சுமார் 7,000 முறை அங்குள்ள மண், நீர், காற்று, என சோதித்து பார்த்துள்ளனர்.முதலில் பலராலும் இதற்கான காரணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.இதனால் அந்த கிராமவாசிகள் பெருமளவில் தொடர்ந்து தூக்க நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்த மண்ணிலும் நீரிலும் அதிகளவில் கன உலோகங்கள் இருந்ததால், நீரில் எண்ணற்ற வைரஸ்கள், பக்டீரியாக்காள் இருப்பது காரணமாக இருக்குமோ என்று ஆராயப்பட்டது.அந்த பகுதியில் கதிரியக்கம் அதிகம் இருந்ததால் அது காரணமாக இருக்கலாம் என கருதப்பட்டது.ஆனால் இவற்றில் எதையுமே அறிவியலாளர்களால் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாததால் காரணம் பற்றிய மர்மம் விலகாமலே இருந்துள்ளது. இந்நிலையில், அங்கு முன்பு செயல்பட்ட யுரேனியம் சுரங்கம் அருகே இருந்தது கண்டறியப்பட்டது.அதிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைட் எனப்படும் விஷ வாயுவின் தாக்கத்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது.முன்பு 6500 என மக்கள் தொகை கொண்டு விளங்கிய அந்த கிராமத்தில், இன்று சுமார் 700 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர்.இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், அந்த பழைய யுரேனிய சுரங்கம் தான் காரணம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.அதில் இருந்து அதிகளவில் வெளியான கார்பன் மோனாக்ஸைட் மற்றும் ஹைட்ரோ கார்பனின் அதிகரிப்பால் ஆக்ஸிஜனின் அளவு காற்றில் பெருமளவில் குறைந்துள்ளது.இதையடுத்து அங்கு வசித்து வந்த கிராம மக்களை வெளியேற்ற திட்டமிடப்பட்டு அவர்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.comநிகழ்வுகளை மிக நீளமாக பேசுவது அல்சைமரின் தொடக்கமாக இருக்கலாம்: - அமெரிக்க விஞ்ஞானிகள்
[Tuesday 2017-02-21 18:00]

பொருளின்றி பேசுவதும், நிகழ்வுகளை மிக நீளமாக விவரிப்பதும் முதுமையில் நினைவிழப்பை ஏற்படுத்துகிற அல்சைமர் நோயின் தொடக்கத்தை காட்டும் அறிகுறியாக இருக்கலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.ஆரோக்கியமானோரிடமும், முதுமையில் ஏற்படும் நினைவிழப்பை முன்னரே சுட்டிக்காட்டுகின்ற, அறிவுதிறனில் லோசன குறைபாடு உடையோரிடமும் நடத்தப்பட்ட சிறியதொரு ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு வந்துள்ளது.முதுமையை கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிஇந்த ஆய்வின்போது, மூன்று குறிப்பிட்ட சொற்களோடு சுருக்கமான வாக்கியத்தை உருவாக்க அறிவுதிறனில் லோசன குறைபாடு உடையோர் தடுமாறினர்.அமெரிக்காவில் அழகிய இளம் பெண்ணை கடத்திய விபச்சார கும்பல்: - அதிர்ச்சி சம்பவம்
[Tuesday 2017-02-21 17:00]

அமெரிக்காவில் விபச்சார கும்பலால் கடத்தப்பட்ட இளம் பெண்ணை பொலிசார் சாமர்த்தியமாக மீட்டுள்ளனர்.அமெரிக்காவின் Logan நகரை சேர்ந்தவர் Sarah Dunsey (17), இவர் தாய் மற்றும் வளர்ப்பு தந்தையுடன் வசித்து வந்தார். ஒரு மாதத்துக்கு முன்னர் Sarah அங்குள்ள உணவகத்துக்கு சாப்பிட சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.Sarahவை பல இடங்களில் அவர் குடும்பத்தினர் தேடியும் அவர் கிடைக்கவில்லை, இதுகுறித்து அவர்கள் பொலிசில் புகார் அளித்தனர்.இதனிடையில் ஒரு மாதத்துக்கு பின்னர் California மாநிலத்தில் Sarah இருப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.ஜேர்மனியில் வெள்ள பெருக்கு மற்றும் கடுமையான புயல்: - வானிலை மையம் எச்சரிக்கை
[Tuesday 2017-02-21 17:00]

ஜேர்மனியில் வெள்ள பெருக்கு மற்றும் கடுமையான புயல் ஏற்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜேர்மனியின் வானிலை மையம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி குறிப்பில், வரும் வாரங்களில் ஜேர்மனியின் பல பகுதிகளில் பலத்த புயல் காற்றுடன் மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.ஜேர்மனியின் வடக்கே இருக்கும் மாநிலங்களில் ஒரு மணி நேரத்துக்கு 60 கிலோ மீட்டர் அளவு பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Harz Mountains பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு 110 கிலோ மீட்டர் அளவு பலத்த சூறாவளி காற்று வீசும் எனவும், பொதுமக்கள் மரங்கள், கட்டிடங்கள் அருகில் நிற்க வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட பெண்: - மனதை உருக்கும் கொடுமை
[Tuesday 2017-02-21 13:00]

விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட 38 கிலோ எடை மட்டுமே கொண்ட இளம்பெண் தன் இறப்பை நோக்கி காத்திருக்கிறார். Claire Connolly (25) என்னும் இளம்பெண் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார், மூன்று வருடங்களுக்கு முன்னர் இவர் 114 கிலோ எடை இருந்துள்ளார்.சந்தோஷமாக இருந்த அவர் வாழ்க்கையில் ஒரு பிரச்சனை வந்தது, அதாவது Gastroparesis என்னும் விசித்திர நோய் Claireஐ தாக்கியது.அவர் சாப்பிடும் சாப்பாடு அவருக்கு ஜீரணமாகமல் இருந்து வந்தது, தொடர் வாந்தியும் அவர் எடுத்து வந்தார், இதனால் திடீரென அவர் 30 கிலோ எடை குறைந்தார்.பின்னர் அவர் என்ன சாப்பிட்டாலும் அவர் வயிற்றில் அது தங்காமலும், ஜீரணமாகலும் இருந்து வந்தது.அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க புதிய யுக்தி: - பிரான்சில் பொலிசாரின் அதிரடி திட்டம்
[Tuesday 2017-02-21 13:00]

பிரான்சில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க புதிய யுக்தியை கையாள அரசு முடிவு செய்துள்ளது.அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுவதால் அதிகளவு விபத்துக்கள் நடக்கிறது, இதனை தடுக்க பிரான்ஸ் பொலிஸ் தனியார் நிறுவனங்களுடன் கை கோர்த்து ஒரு விடயத்தை மேற்கொள்ளவுள்ளது.அதன்ப்படி, கார் வேகங்களை அளவிட 383 கார்களில் பொருத்தப்பட்ட கமெராக்களை வைத்து நாடு முழுவதும் ரோந்து செல்வதின் மூலம் வருடத்துக்கு 1.5 மில்லியன் கார்களை கண்காணித்து வருகிறது.இந்த 383 என்பது அடுத்த வருடத்தில் 450 ஆக உயர உள்ளது.இதை செய்ய ஆட்கள் பற்றாகுறையாக உள்ளதால் தனியார் நிறுவனங்களை பொலிசார் நாடியுள்ளனர். அவர்களும் இனி இந்த கண்காணிப்பு பணியில் ஈடுப்படுவார்கள் என தெரிகிறது.அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஐவர் உயிரிழப்பு!
[Tuesday 2017-02-21 13:00]

அவுஸ்திரேலியாவில் இன்று இடம்பெற்ற விமான விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.மெர்போர்ன் விமான நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை விமானம் ஒன்று விபத்திக்குள்ளாகியுள்ளது.சிறிய ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.மெல்போர்னில் உள்ள வர்த்தக தொகுதியின் மீது இந்த விமானம் விழுந்து நொருங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.தெற்கு சூடானில் பஞ்சம் தாக்கியுள்ளதாக ஐ.நா பிரகடனம்!
[Tuesday 2017-02-21 07:00]

உலகில் கடந்த 6 வருடங்களில் முதல் தடவையாக தெற்கு சூடானில் பஞ்சம் தாக்கியுள்ளதாக பிரகடனம் செய்ய்யப்பட்டுள்ளது.பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பஞ்சத்தால் பிடிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லட்சம் பேர்வரை பட்டினியில் வாடுவதாகவும் அந்த நாட்டு அரசாங்கமும் ஐநாவும் கூறியுள்ளன.உள்நாட்டுப் போரும் பொருளாதார வீழ்ச்சியும் இந்த பஞ்சத்துக்கு காரணமாக கூறப்படுகின்றது.ஏமன், சோமாலியா மற்றும் வடகிழக்கு நைஜீரியாவில் நிலவரம் பஞ்ச நிலையை எட்டியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ள போதிலும், தெற்கு சுடானில்தான் பஞ்சம் முதல் தடவையாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.இளம் பெண் பாலியல் பலாத்காரம்: - சந்தேக நபருக்கு பொலிஸ் வலை
[Tuesday 2017-02-21 07:00]

கனடாவில் கடந்த ஆண்டு 16வயது நிரம்பிய இளம் பெண் ஒருவர் ஸ்காபுரோ ரவுன் சென்ரரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.இச் சம்பவத்தின் தொடர்பாக சந்தேக நபரின் படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் 2016 டிசம்பர் 6 ஆம் திகதி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இச்செயல் மோலிற்குள் நடந்ததா என்பதை பொலிசார் தெரிவிக்கவில்லை. குறிப்பிட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் இருந்து பெறப்பட்ட படத்தை பொலிசார் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர் 5.8 முதல் ஆறு அடிகள் வரையிலான உயரம், மெல்லிய தோற்றம் கட்டையான கறுப்பு முடி மற்றும் கிரே நிற தாடியுடன் கொண்ட தோற்றமுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரான்சில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்!
[Monday 2017-02-20 17:00]

பிரான்சில் ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் கன்சர்வெடிவ் கட்சி வேட்பாளர் பிரான்சியஸ் பிலனுக்கும் மற்றும் வலது சாரி வேட்பாளரான மெரைன் லிபென்னுக்கு எதிராக பாரிசில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பிரான்சில் வரும் ஏப்ரல் மாதம் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.இதில் வேட்பாளர்களாக இருக்கும் பிரான்சியஸ் பிலன் மற்றும் மெரின் லிபென் ஆகியோரை ஊழல்வாதிகள் என்று கூறி பிரான்சின் பாரிஸ் மற்றும் சில பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதில் போராட்டக்காரர்கள் பலரும் இருவருக்கும் எதிராக குரல் கொடுத்தனர்.மனிதர்களின் வேலைகளை திருடும் ரோபோக்கள் வரி செலுத்த வேண்டும்: - பில்கேட்ஸ்
[Monday 2017-02-20 14:00]

ரோபோ’ எனப்படும் எந்திர மனிதன் தற்போது அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மனிதர்கள் செய்யும் வேலைகள் ‘ரோபோ’க்களால் திருடப்படுகிறது. மனிதர்களை வைத்து வேலை வாங்கும் போது அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதை தவிர்க்கவே நிறுவன உரிமையாளர்கள் ‘ரோபோ’க்களை பயன்படுத்துகின்றன. இதனால் மனிதர்களின் பணிகள் பறிக்கப்படுகின்றன.எனவே, பணியில் அமர்த்தப்படும் ‘ரோபோ’க்களுக்கு வரிகள் வசூலிக்கப்பட வேண்டும் என மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவன அதிபரும், உலகிலேயே நம்பர் ஒன் பணக்காரருமான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி 2 லட்சத்து 43 ஆயிரம் விலைக்கு ஏலம்!
[Monday 2017-02-20 14:00]

அமெரிக்காவில் நடைபெற்றுள்ள ஒரு ஏலத்தில் இரண்டாம் உலகப்போரின்போது, அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஒன்று, 2 லட்சத்து 43 ஆயிரம் டாலருக்கு விலைக்கு ஏலம் போயிருக்கிறது.இந்த தொலைபேசியை வாங்கியவரின் அடையாளம் எதுவும் வெளியிடப்படவில்லை.நாஜிக்களின் தலைவரான அடோல்ஃப் ஹிட்லரின் பெயர், ஒரு ஸ்வஸ்திகை அடையாளம் மற்றும் நாஜிக்களின் அடையாளமான பருந்து ஆகியவை பொறிக்கப்பட்டுள்ள சிவப்பு நிற தொலைபேசி 1945 ஆம் ஆண்டு பெர்லினின் பதுங்கு குழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.அதிகரிக்கும் சர்வதேச ஆயுத விற்பனை: - எட்டு சதவீதத்தால் அதிகரிப்பு
[Monday 2017-02-20 14:00]

பனிப்போர் காலம் முடிவுற்ற பின்னர் நடைபெற்றிருக்கும் சர்வதேச ஆயுத விற்பனையில், எப்போதும் இல்லாததை விட இப்போது ஆயுத விற்பனை அதிகரித்து காணப்படுவதாக புதியதொரு அறிக்கை தெரிவிக்கிறது.2012 முதல் 2016 வரையான முக்கிய ஆயுதங்களின் உலக அளவிலான மொத்த இறக்குமதியை, இந்த காலத்திற்கு முந்தைய 5 ஆண்டு காலத்தோடு ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் கூறியிருக்கிறது.இந்த ஒட்டு மொத்த ஆயுத கொள்முதலில் மூன்றில் ஒரு பகுதியை மத்திய கிழக்கு நாடுகளும், வளைகுடா நாடுகளும் செய்துள்ளன. இந்தியாவுக்கு அடுத்ததாக உலகிலேயே ஆயுதங்கள் அதிகமாக இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடாக சௌதி அரேபியா மாறியுள்ளது.கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: - தென்சீனக்கடலில் அமெரிக்க கடற்படை ரோந்து
[Monday 2017-02-20 11:00]

சீன நாட்டின் தென்பகுதியில் உள்ள தென்சீனக்கடல் வழியே உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த தென் சீனக்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு செயற்கை தீவுகளையும் உருவாக்கி உள்ளது.இந்த தென்சீனக்கடலில் எங்களுக்கும் உரிமை உண்டு என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், புருனை, தைவான், மலேசியா, கம்போடியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகள் கூறி வருகின்றன.சீனாவின் மேலாதிக்க நிலைக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.அதே நேரத்தில், தென்சீனக்கடல் விவகாரத்தில் தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா செயல்படுவதாகக்கூறி, அந்த நாட்டுக்கு கடந்த 15-ந் தேதி சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.வலிமையின் மூலமாக அமைதியை பின்தொடர்வோம்: - டிரம்ப்
[Monday 2017-02-20 07:00]

புளோரிடாவில் நடந்த கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகளை அடியோடு ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.புளோரிடாவில் மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் போன்ற பிரமாண்ட கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், ஒரு மாத காலத்தில் தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை நியாயப்படுத்தி தனக்கே உரித்தான பாணியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் குட்டி டிரம்ப் மீம்கள்!
[Monday 2017-02-20 07:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கைகளின் அளவு குறித்து எழுந்த கருத்துகளுக்கு அவரே அளித்த பதில் அவருடைய எதிர்ப்பாளர்கள் அறிந்திருப்பார்கள்.தற்போது, சில இணையதள பயன்பாட்டாளர்கள் டிரம்பின் புகைப்படங்களில் திருத்தங்களை செய்து அவரது உடல் சிறியதாக தோன்றும்படி செய்துள்ளனர். அவரை மிகவும் குட்டியாக காட்ட வேண்டும் என்பதால் டிரம்பின் பெரும்பாலான படங்கள் திருத்தப்பட்டுள்ளன. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றன.விளையாட்டு பயிலும் மாணவியிடம் பாலியல் உறவு கொண்ட இளம் ஆசிரியை: - நேர்ந்த விபரீதம்
[Monday 2017-02-20 07:00]

அமெரிக்காவில் தன்னிடம் விளையாட்டு பயிலும் மாணவியிடம் பாலியல் உறவு வைத்து கொண்ட ஆசிரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவின் Alabama மாநிலத்தை சேர்ந்தவர் Willyncia Joy Harper (22) இவர் கைப்பந்து கற்று தரும் விளையாட்டு ஆசிரியையாக அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவர் பணிபுரியும் பள்ளிக்கூடத்தில் 15 வயதுடைய மாணவி ஒருவர் படித்து வருகிறார். அந்த மாணவி Willynciaவிடம் கைப்பந்து விளையாட்டு பயிற்சி பெற்று வருகிறார்.Willyncia அடிக்கடி அந்த மாணவியின் வீட்டுக்கு வருவது வழக்கம்.தகவல் தொடர்பை இழந்த ஜெட் ஏர்வேஸ் விமானம்: - நடந்தது என்ன?
[Monday 2017-02-20 07:00]

கடந்த வியாழனன்று, மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்த ஜெட் ஏர்வேஸ் விமானம், ஜெர்மனி வான்வெளியில் பயணித்துக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென ஜெர்மனி நாட்டு விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின. பொதுவான நடைமுறையில், ஒரு விமானம், ஒவ்வொரு நாட்டின் வான்வெளி பகுதியை கடந்து செல்லும் போது, சம்பந்தப்பட்ட நாட்டின் விமான கட்டுப்பட்டு அறைக்கு தகவல் அளிக்கவேண்டும். இந்த சம்பவத்தில், 330 பயணிகளை கொண்ட ஜெட் ஏர்வேஸ் விமான சேவையின் பயணிகள் விமானம், சுமார் 30 நிமிடங்களுக்கு தகவல் தொடர்பற்று இருந்தது என்று செய்திகள் கூறுகின்றன. சந்தேகம் நேர்ந்ததும், ஜெர்மனியின் விமானப்படையை சேர்ந்த இரண்டு விமானங்கள் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை பின் தொடர்ந்து சென்றன என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.ஒரு நாளில் 27 தடவை மாரடைப்பு ஏற்பட்டும் உயிர் பிழைத்த மனிதர்!
[Sunday 2017-02-19 18:00]

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ரேவுட் ஹால் (54). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே அவருக்கு தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. எனவே, அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இருந்தும் அவருக்கு தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. 24 மணி நேரத்தில் அதாவது ஒரு நாளில் 27 தடவை மாரடைப்பு தாக்கியது. இருந்தும் அவர் உயிர் பிழைத்தார். இது ஒரு அதிசய நிகழ்வு என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நான் உயிர் பிழைப்பேன் என கருதவில்லை.விண்வெளி ஆய்வகத்தில் முதன் முறையாக முட்டை கோஸ் அறுவடை!
[Sunday 2017-02-19 18:00]

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் கட்டி வருகின்றன. அங்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் 3 வீரர்கள் சென்று தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.அங்கு தங்கியிருக்கும் வீரர்களின் உணவுக்காக சில காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. புவியீர்ப்பு சக்தி எதுவும் இல்லாத விண்வெளியில் நவீன தொழில்நுட்ப முறையில் இவை பயிரிடப்பட்டுள்ளன.கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கி விட்சன் என்பவர் தொக்யோ பெகானா என அழைக்கப்படும் சீன முட்டை கோசை பயிரிட்டார். தற்போது அது சிறந்த முறையில் விளைந்துள்ளது.பிரித்தானியாவில் காதலியின் சடலத்தை 15 மாதங்களாக பீரோவில் மறைத்து வைத்திருந்த நபர்!
[Sunday 2017-02-19 18:00]

பிரித்தானியாவில் காதலியின் சடலத்தை 15 மாதங்களாக வீட்டு அலமாரி பீரோவில் மறைத்து வைத்திருந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.பிரித்தானியாவின் Bolton நகரில் வசித்து வருபவர் Victoria Cherry (44) இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திடீரென காணாமல் போய் விட்டார். அவர் வீட்டார் பொலிசிடம் புகார் அளித்தும் Victoria பற்றிய விவரங்கள் தெரியாமலே இருந்து வந்தது.இந்நிலையில் போன மாதம் ஒரு வீட்டில் பயங்கர துர்நாற்றம் வாடை வருவதாகவும் உடனே வருமாறும் பொலிசாருக்கு தகவல் வந்தது.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
AIRCOMPLUS2014-02-10-14
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<b>02-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ideal Entertainment நிறுவன அறிமுக விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>29-01-2017 அன்று ரொரன்டோவில் தமிழ்நாடு சமூக மன்றம்  நடாத்திய தைப்பொங்கல் விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>28-01-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற கனடா தமிழர் மரபு மாநாட்டு விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா