Untitled Document
March 26, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தொடர்ந்து பாலியல் பலாத்காரம்...சிதைந்து போன முகம்: - வலிகளை தாங்கிய அந்த நாட்கள்
[Monday 2017-01-09 08:00]
 
ஐஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி தனது வாழ்க்கையின் இறுதிகட்டம் வரை சென்று திரும்பி வந்தாலும், நான் சந்தித்த கொடுமைகளே எனது வாழ்வில் நான் வெற்றிநடை போட வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளித்துள்ளது என இளம்பெண் கூறியுள்ளது நெழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனி ஒரு இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் நோக்கில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபடும் தீவிரவாதிகள், குறிப்பாக பெண்களை ஒரு உயிரினமாக கூட மதிக்காமல் அவர்களை கொடுமையான சித்ரவதைக்கு உட்படுத்தி வருகிறார்கள்.இவர்களிடம் தப்பித்து வரும் சில பெண்கள், தாங்கள் சந்தித்த கொடுமைகள் குறித்து கூறுகையில் கேட்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.ஐஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்து வந்த லாமியா(20) என்ற இளம்பெண் தான் சந்தித்த கொடுமைகள் குறித்து மனித உரிமை ஆணையத்திடம் விவரித்துள்ளார்.

ஐஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி தனது வாழ்க்கையின் இறுதிகட்டம் வரை சென்று திரும்பி வந்தாலும், நான் சந்தித்த கொடுமைகளே எனது வாழ்வில் நான் வெற்றிநடை போட வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளித்துள்ளது என இளம்பெண் கூறியுள்ளது நெழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனி ஒரு இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் நோக்கில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபடும் தீவிரவாதிகள், குறிப்பாக பெண்களை ஒரு உயிரினமாக கூட மதிக்காமல் அவர்களை கொடுமையான சித்ரவதைக்கு உட்படுத்தி வருகிறார்கள்.இவர்களிடம் தப்பித்து வரும் சில பெண்கள், தாங்கள் சந்தித்த கொடுமைகள் குறித்து கூறுகையில் கேட்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.ஐஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்து வந்த லாமியா(20) என்ற இளம்பெண் தான் சந்தித்த கொடுமைகள் குறித்து மனித உரிமை ஆணையத்திடம் விவரித்துள்ளார்.

  

கடந்த 2014 ஆம் ஆண்டு ஐஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டேன். நான் கடத்தப்பட்டபோது தீவிரவாதிகள் எனது பெற்றோரை சுட்டுக்கொலை செய்தனர். தீவிராதிகளின் பிடியில் இருந்து 2 முறை தப்பிக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர்களிடம் சிக்கிக்கொண்டதால் என்னை கொடுமையாக அடித்ததோடு மட்டுமல்லாமல் பலாத்காரம் செய்தனர். அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து மொசூல் நகர சந்தையில், தீவிரவாதி ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டேன். அவர் என்னை இரண்டு மாதம் வைத்திருந்து பலாத்காரம் செய்தார், அதன் பின்னர் மற்றொரு நபருக்கு விற்பனை செய்யப்பட்டேன். அந்த தீவிரவாதி என்னை தற்கொலை படை தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிட்டார். இதனால் அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தேன். ஆனால் அவரோ ஐஎஸ் மருத்துவர் ஒருவரிடம் என்னை விற்பனை செய்தார்.

அந்த மருத்துவர் என்னை பலமுறை பலாத்காரம் செய்தார். நான் தப்பிக்க முயற்சி செய்யும்போதெல்லாம், இவர்களி என்னை கொடுமையாக தாக்குவார்கள். இதனால் எனது இடது கண்பார்வை பறிபோனதோடு மட்டுமல்லால் முகமே சிதைந்து போனது. நான் சந்தித்த கொடுமைகளால் எனது உடலில் வலி ஏற்பட்டாலும், எனது மனதில் வலிமை அதிகரித்து, நான் அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நோக்கமே என்னுள் மேலோங்கியது. இறுதியில் கடந்த மார்ச் மாதம் எனது உறவினர்களின் உதவியோடு அங்கிருந்து தப்பித்து ஜேர்மனிக்கு வந்தேன். தீவிரவாதிகளின் பிடியில் நான் சிக்கியிருந்தபோது, அனுபவித்த கொடுமைகளே இந்த உலகில் நான் தொடர்ந்து வாழ வேண்டும் என் எண்ணத்தை எனக்கு கொடுத்துள்ளது என கூறியுள்ளார். லாமியா மற்றும் இவருடன் சேர்நது தப்பித்த நாடிய ஆகிய இருவருக்கும் மனித உரிமை ஆணையத்தின் சார்பில் வழங்கப்படும் Freedom Of Thought என்ற அடிப்படையில் வழங்கப்படும் Sakharov பரிசில் வழங்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!
[Sunday 2017-03-26 17:00]

அமெரிக்காவில் ஓஹியோ மாநிலம், சின்சினாட்டியின் இரவு விடுதி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 14 பேர் காயமடைந்தனர் என போலிஸார் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு கேமியோ இரவு விடுதியில் நடைபெற்றதாக சின்சினாட்டி போலிஸ் துறை டிவிட்டரில் தெரிவித்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் காயமடைந்துள்ளனர் என துணை போலிஸ் அதிகாரி ஒருவர் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.



வல்லுறவின் போது பெண் கூக்குரல் எழுப்பவில்லை என்பதற்காக சந்தேக நபர் விடுவிக்கப்பட்டது குறித்து விசாரணை!
[Sunday 2017-03-26 17:00]

பாலியல் வல்லுறவு சம்பவத்தின்போது, பாதிக்கப்பட்ட பெண் கூக்குரல் எழுப்பவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றம் விடுதலை செய்ததையடுத்து இது குறித்து விசாரிக்கப் போவதாக இத்தாலியின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



சீனாவில் தங்கச் சுரங்கங்களில் வாயுக்கசிவு - 10 பேர் பலி!
[Sunday 2017-03-26 17:00]

சீனாவில் இரு தங்கச்சுரங்கங்களில் ஏற்பட்ட வாயு கசிவால் 10 தொழிலாளர்கள் பலியாகினர். சீனா ஹெனான் மாகாணம் லிங்காபோ நகரில் இயங்கி வந்த குயின்லிங் தங்கச் சுரங்கத்தில், நேற்றிரவு திடீரென கார்பன் மோனாக்சைட் விஷவாயு கசிந்தது. இந்த விஷவாயு தாக்கியதில் சிக்கி மூச்சுத் திணறிய 8 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர். இதேபோல், அருகே அமைந்துள்ள மற்றொரு சுரங்கத்திலும் நேற்று ஏற்பட்ட விஷவாயுக் கசிவில் மேலும் இரு தொழிலாளிகள் பலியாகினர்.



அடுத்த அணுகுண்டு சோதனைக்குத் தயாராகிறது வடகொரியா!
[Sunday 2017-03-26 09:00]

நிலத்துக் கடியில் தனது 6-வது அணுகுண்டு சோதனையை நடத்த வடகொரியா தயாராக உள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக சி.என்.என் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் வடகொரியா, நிலத்துக் கடியில் தனது 6-வது புதிய அணுகுண்டு சோதனையை நடத்தத் தயாராக இருப்பதற்கான அடையாளங்களைக் காட்டுகின்றன" எனக் கூறப்பட்டுள்ளது.



விமானங்களில் லேப்டாப் மற்றும் டேப்லெட்களை எடுத்துச் செல்லத் தடை அமுலுக்கு வந்தது!
[Sunday 2017-03-26 09:00]

துருக்கி மற்றும் சில மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் செல்லும் விமானங்களில் லேப்டாப் மற்றும் டேப்லெட்களை பயணிகள், தங்களுடன் விமானத்தில் எடுத்துச் செல்வதற்கான தடை நேற்று அமலுக்கு வந்துள்ளது. ஸ்மார்ட் ஃபோன்களைவிட பெரிய அளவில் இருந்தால் அவற்றைக் கையில் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. ஏனெனில், அவற்றில் வெடிபொருள்களை எடுத்துச் செல்லக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே தாக்குதலை நடத்தியவர் சவுதி அரேபியாவில் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தவர்!
[Sunday 2017-03-26 09:00]

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே தீவிரவாதத் தாக்குதலை நடத்திய காலித் மசூத் என்ற நபர் சவுதி அரேபியாவில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக இருந்துள்ளார். நவம்பர் 2005 முதல் நவம்பர் 2006 வரையிலும் பிறகு ஏப்ரல் 2008 முதல் ஏப்ரல் 2009 வரையிலும் சவுதி அரேபியாவில் ஆங்கிலம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார் என்று சவுதி அரேபியா தூதரகம் தெரிவித்துள்ளது.



ஐ.நா அமைதிப்படையில் இந்திய வீரர்களின் பங்களிப்பு அபாரமானது - ஹெர்வ் லாட்சவுஸ்
[Saturday 2017-03-25 21:00]

ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இந்திய வீரர்களின் பங்களிப்பு அபாரமானது எனவும், திறமையான வீரர்களை இந்தியா கொண்டுள்ளதாகவும் அமைதிப்படை தலைவர் ஹெர்வ் லாட்சவுஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா அமைதிப்படையில் இந்திய வீரர்களின் பங்களிப்பு அபாரமானது - தலைவர் புகழாரம்ஐக்கிய நாடுகளின் சபையில் உள்ள அமைதிப்படை அமைப்பானது, உள்நாட்டு போர் நிலவும் நாடுகளில் அமைதி ஏற்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மேலும், அப்பகுதியில் உள்ள பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனது.



ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் பேரணி
[Saturday 2017-03-25 21:00]

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் இன்று நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 52 சதவீத பிரிட்டிஷ் மக்கள், வெளியேற ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். 48 சதவீதம் பேர் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டாம் என்று வாக்களித்தனர்.



போலீஸ் அதிகாரியின் உயிரை காப்பாற்ற போராடிய மந்திரி ராணி எலிசபத்தினால் கௌரவிப்பு
[Saturday 2017-03-25 21:00]

இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றம் மீது சமீபத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது காயமடைந்த போலீஸ் அதிகாரியின் உயிரை காப்பாற்ற போராடிய மந்திரியை உயர் பதவி அளித்து இங்கிலாந்து ராணி எலிசபத் கவுரவித்துள்ளார். இங்கிலாந்து பாராளுமன்ற கட்டிடம் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பாலம் அருகே உள்ளது. கடந்த 22-ம் தேதி இந்த கட்டிடத்தின் வழியாக காரை வேகமாக ஓட்டி வந்த ஒரு தீவிரவாதி அங்கிருந்த மக்கள் கூட்டத்தின்மீது மோதினான்.



ரஷ்யாவில் 6 கிளர்ச்சியாளர்கள், 6 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
[Saturday 2017-03-25 21:00]

ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பகுதியில் கிளர்ச்சியாளர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 6 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். 6 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக அரசுக்கு எதிரான புரட்சி நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இதேபோல் செசன்யாவிலும் வன்முறை மோதல்கள் ஏற்படுகின்றன. கிளர்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர் ஆயுதம் ஏந்தி ரஷ்ய படையினரை தாக்கி வருகின்றனர். எனவே, வடக்கு காகசஸ் மற்றும் செசன்யா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக செசன்யாவில் கடந்த ஆண்டு தேசிய பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது.



அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் ஆந்திரப் பெண் மகனுடன் கொலை:
[Saturday 2017-03-25 08:00]

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணும், அவரது ஆறு வயது மகனும் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர், நாரா அனுமந்தராவ். அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த 9 ஆண்டுகளாக அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார்.



சிரியாவில் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு ஐ.நாவில் அழைப்பு..!
[Saturday 2017-03-25 08:00]

சிரியாவில் இடம்பெற்றுவரும் வன்முறைகளை ரஷ்யா, ஈரான், அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டுமென, ஜெனீவா பேரவையில் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிரியதூதுவர் ஸ்டாப்பென் டீ மிஸ்டூர அழைப்புவிடுத்துள்ளார். ஐ.நாவின் கோரிக்கையை ஏற்று சிரிய வன்முறை நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்ப்பதாகவும், ஜெனீவாவில் பல்வேறு அரசியல் மட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம், சிரிய வன்முறைகளை குறைக்கும் பணிகளில் சர்வதேச பங்களிப்பை சிரிய தூதுவர் வேண்டுகோளாகவிடுத்துள்ளார்.



அகதிகளாக பயணித்த சுமார் 200 பேர் மத்திய தரைக்கடலில் மூழ்கி பலி..!
[Saturday 2017-03-25 08:00]

மத்திய தரைக்கடல் வழியாக பயணித்த சுமார் 200 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க நாடுகளிலிருந்து, ஐரோப்பாவிற்கு இரண்டு படகுகள் மூலம் அகதிகளாக பயணித்த சுமார் 200 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இத்தாலிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் படகு கவிழ்ந்த விடயம் கேள்வியுற்று விபத்து பகுதிக்கு வந்துள்ள இத்தாலிய கடலோர பாதுகாப்புப்படையினர் இதுவரை உயிரிழந்துள்ள 5 பேரின் உடல்களை மட்டுமே மீட்டுள்ளதாகவும், ஏனையவர்களை தேடும் பணிகள் இடம்பெறுவதாகவும் அறிவித்துள்ளனர்.



இந்திய குடிமகன் அந்தஸ்து பெற்ற ஆஸி வீரர், இந்திய அணியில் விளையாடு
[Saturday 2017-03-25 06:00]

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஷான் டெய்ட் இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன் அந்தஸ்தை பெற்றுள்ளார். இதனால் இவர் இந்திய அணியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷான் டெயிட் வெளிநாட்டு வாழ் இந்திய குடிமகன் (Overseas Citizen of India - OCI) என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இதனை அவரே தனது ட்விட்டரின் மூலம் உறுதி செய்துள்ளார். வெளிநாட்டு வாழ் இந்திய குடிமகன் அட்டையின் புகைப்படத்தை ஷான் டெயிட் சமீபத்தில் ட்விட்டரில் பதிவு செய்ததை தொடர்ந்து அவர் இந்திய அணியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.



பாகிஸ்தான் தேசிய தினத்தில் சீன, சவுதி படைகளின் சிறப்பு அணிவகுப்பு
[Friday 2017-03-24 21:00]

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டத்தில் சீனா மற்றும் சவுதி படைகளின் சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது. முஸ்லிம்களுக்கு தனி நாடு கேட்டு 1940-ம் ஆண்டு லாகூரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை குறிக்கும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் 23-ந்தேதி தேசிய தினமாக பாகிஸ்தான் கொண்டாடுகிறது. அவ்வகையில் பாகிஸ்தானில் நேற்று தேசிய தினம் கொண்டாடப்பட்டது.. தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த தேசிய தின ராணுவ அணிவகுப்பில், முதல் முறையாக சீன ராணுவம் அதாவது சீனாவின் மக்கள் விடுதலைப் படை கலந்துகொண்டது. இதேபோல் சவுதி மற்றும் துருக்கி படைகளும் இந்த அணிவகுப்பில் இணைந்தது. இந்த அணி வகுப்பில் பாகிஸ்தான் ராணுவம் தனது ஆயுதங்களை காட்சிப்படுத்தியது.



எகிப்து முன்னாள் அதிபர் 6 ஆண்டுகளுக்கு பின் வீடு திரும்பினார்
[Friday 2017-03-24 21:00]

கைது செய்யப்பட்டு சிறைவாசத்துடன் ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக் ஆறாண்டுகளுக்கு பின்னர் இன்று வீடு திரும்பினார். அராபிய வசந்தம் என்ற பெயரில் வளைகுடா நாடுகளில் நிகழ்ந்த மக்கள் புரட்சி, அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எகிப்தில் அந்நாட்டின் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தெழுந்தபோது ராணுவம் கையாண்ட அடக்குமுறை நடவடிக்கையில் போராட்டக்காரர்களில் சுமார் 900 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் முபாரக்கிற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.



லண்டன் தாக்குதலுக்கு வடகொரியா இரங்கல்..!!
[Friday 2017-03-24 20:00]

லண்டன் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் தெரசா மேவுக்கு வடகொரியா இரங்கல் செய்தி அனுப்பியுள்ளது. பிரிட்டன் பாராளுமன்றம் அருகே நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், லண்டன் தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்து பிரிட்டனுக்கு வடகொரியா செய்தி அனுப்பியுள்ளது. வடகொரியா பிரதமர் பக் பாங்-ஜு, பிரிட்டன் பிரதமர் தெரசா மேவுக்கு இந்த இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார். இந்த செய்தியில், அனைத்துவிதமான தீவிரவாத செயல்பாடுகளையும் வடகொரியா அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.



ஆப்கானிஸ்தானில் சங்கின் மாவட்டம் தீவிரவாதிகள் வசம்..
[Friday 2017-03-24 20:00]

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுடன் கடும் சண்டையிட்டு வரும் தீவிரவாதிகள் முக்கிமான மாவட்டத்தை கைப்பற்றி உள்ளனர். தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் இருந்த ஆப்கானிஸ்தானை அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ படைகள் மீட்டனர். தற்போது அங்கு ஜனநாயக ஆட்சி அமைக்கப்பட்டு மக்களாட்சி நடக்கிறது. தற்போது நேட்டோ படைகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் தலிபான் தீவரவாதிகள் கை ஓங்கியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் ராணுவத்துக்கும், தலிபான்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அதில் வெற்றி பெற்ற தீவிரவாதிகள் தென் ஹெல்மண்டில் உள்ள முக்கியமான மாவட்டமான சங்கின் மாவட்டத்தை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.



எந்த நேரத்திலும் அல் பாக்தாதி கொல்லப்படுவார்:அமெரிக்க மந்திரி ரெக்ஸ் டில்லர்சன்
[Friday 2017-03-24 07:00]

ஐ.எஸ். துணைத்தளபதிகள் அனைவரும் பலியான நிலையில் ‘எந்த நேரத்திலும் அல் பாக்தாதி கொல்லப்படுவார்’ என அமெரிக்க மந்திரி திட்டவட்டமாக கூறினார். உலகையே அச்சுறுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை முழுமையாக தோற்கடிப்பது குறித்த 68 உலக நாடுகள் கொண்ட கூட்டணி பேரவை கூட்டம், வாஷிங்டனில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் பேசும்போது, “ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் துணைத்தளபதிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். குறிப்பாக பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டவரும் சாகடிக்கப்பட்டு விட்டார். எந்த நேரத்திலும் அந்த அமைப்பின் தலைவனான அல் பாக்தாதி கொல்லப்பட்டு விடுவார்” என உறுதிபடகூறினார்.



அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பலி
[Friday 2017-03-24 06:00]

அமெரிக்காவில் அடையாளம் தெரியாத மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலிஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அடையாளம் தெரியாத மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலிஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் வடக்கு பகுதியில் இருக்கும் விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள வங்கி ஒன்றில் நேற்று நுழைந்த மர்மநபர் ஒருவர் தான் கொண்டுவந்த கைத்துப்பாக்கியால் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சரமாரியாக சுட ஆரம்பித்தார்.


Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
<b>05-03-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ninaivakal-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா