Untitled Document
May 28, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
17 ஆம் திகதி என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பம்: - அதிரடியாக அறிவித்த தீபா
[Monday 2017-01-09 08:00]

 
எம்ஜிஆர் நூற்றாண்டு தொடங்கும் 17 ஆம் திகதி என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பம் என தீபா அதிரடியாக அறிவித்துள்ளார்.
நேற்று மாலை 5 மணியளவில் தனது வீட்டு பால்கனியில் நின்றவாறு தொண்டர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் மீது வைத்திருந்த அன்பின் காரணமாகவே நீங்கள் அனைவரும் என்னை பார்க்க வந்துள்ளீர்கள்.இதனால், ஜெயலலிதாவின் புகழையும், பெயரையும் நிலைநாட்ட நாம் முழுமையாக செயல்படுவோம்.என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்.

எம்ஜிஆர் நூற்றாண்டு தொடங்கும் 17 ஆம் திகதி என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பம் என தீபா அதிரடியாக அறிவித்துள்ளார். நேற்று மாலை 5 மணியளவில் தனது வீட்டு பால்கனியில் நின்றவாறு தொண்டர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் மீது வைத்திருந்த அன்பின் காரணமாகவே நீங்கள் அனைவரும் என்னை பார்க்க வந்துள்ளீர்கள்.இதனால், ஜெயலலிதாவின் புகழையும், பெயரையும் நிலைநாட்ட நாம் முழுமையாக செயல்படுவோம்.என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்.

  

எம்.ஜி.ஆருடைய ஆசியும், ஜெயலலிதாவின் ஆசியும் நமக்கு தேவை. இதனால் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டான வரும் 17–ந்தேதி முதல் என்னுடைய அரசியல் பயணம் தொடங்கும். நல்ல எதிர்காலத்திற்காக நம் பயணம் தொடரும் என கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்!
[Saturday 2017-05-27 18:00]

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எழுதி வெளியிட்ட புத்தகத்தில் இந்துக்களின் மனம் புண்படும்படியான கருத்துகள் இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்ற ஆண்டு 'Turbulent Years 1980 - 1996' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நிகழ்ந்த சில சம்பவங்களை முகர்ஜி அவர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.



தந்தையின் மரண கிரியைக்கு லஞ்சம் கேட்ட அரச அதிகாரிகள்: - அதிரடி முடிவெடுத்த இளம்பெண்
[Saturday 2017-05-27 17:00]

தந்தையின் ஈமச்சடங்கு நிதியை கொடுக்க அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால் மாவட்ட கலெக்டருக்கு ரூ.2000 லஞ்ச பணத்தை மணியார்டர் மூலம் அனுப்பியுள்ள பெண்ணின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவலூரை சேர்ந்தவர் தொப்பையன்(55), இவர் மனைவி குப்பம்மாள், இவர்களின் மகள் சுதா.இந்நிலையில் கடந்த 30.8.2016 ஆன்று தொப்பையன் இறந்துவிட்டார். இதையடுத்து அவர் இறந்ததற்கான இறப்பு சான்றிதழ் மற்றும் ஈமச்சடங்குக்கான நிதி உதவி கேட்டு குப்பம்மாள் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.



டெல்லியில் பார்ட்டிக்கு அழைத்து அமெரிக்க மாணவியை பாலியல் பலாத்காரம் நபர்!
[Saturday 2017-05-27 17:00]

இந்திய தலைநகர் டெல்லியில் பார்ட்டிக்கு அழைத்து அமெரிக்க மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது நண்பரை பொலிசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவைச் சேர்ந்த 25-வயதான இளம்பெண் ஒருவர் படிப்பு விசா மூலம் இந்தியா சென்றுள்ளார். அங்கு மூன்று பேர் அவருக்கு அறிமுகமாகியுள்ளனர்.அவர்களுடன் நண்பராகி இருக்கிறார். ஹோட்டலில், பார்ட்டி தருகிறோம் என நண்பர்கள் அழைப்பு விடுக்க அந்தப் பெண்ணும் நம்பி ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.



குண்டர்களை ஏவி மிரட்டிய மறைந்த முன்னாள் முதலமைச்சர்!
[Saturday 2017-05-27 17:00]

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குண்டர்களை ஏவி மிரட்டியதால்தான் கொடநாடு எஸ்டேட்டை மிக குறைந்த விலையில் விற்கும் நிலை ஏற்பட்டதாக அதன் முன்னாள் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.நீலகிரியில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளர்களில் ஒருவரான பீற்றர் ஜான்ஸ் தற்போது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.பிரித்தானிய தலைநகர் லண்டனை பிறப்பிடமாகக் கொண்ட வில்லியம் ஜான்ஸ் என்பவர் 1975 ஆம் ஆண்டு குறித்த எஸ்டேட்டை விலைக்கு வாங்கியுள்ளார்.



மக்கள் மன்றத்தில் மதிப்பிழந்தவர்கள் சட்டமன்ற மாண்பு பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும்: - பன்னீர் செல்வம்
[Saturday 2017-05-27 17:00]

தமிழக சட்டசபை மண்டபத்தில் மறைந்த ஜெயலலிதாவின் உருவப்படத்தை ஜூலை மாதம் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறக்கப்படுவதற்கு தமிழக எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, மக்கள் மன்றத்தில் மதிப்பிழந்தவர்கள் சட்டமன்ற மாண்பு பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும் என பன்னீர் செல்வம் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா படம் திறக்கப்படுவதால் சட்டமன்றம் மட்டும் அல்ல தமிழ்நாட்டுக்கே பெருமை.



சொகுசு ரயிலில் எல்சிடி திரைகளை உடைத்துச் சேதப்படுத்திய பயணிகள்!
[Friday 2017-05-26 14:00]

மும்பை - கோவா இடையே புதிதாக இயக்கப்படும் தேஜாஸ் சொகுசு ரயிலில் பயணிகள் எல்சிடி திரைகளை உடைத்துச் சேதப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பை சிஎஸ்டி மற்றும் கோவாவின் கர்மாலி ஆகிய நிலையங்கள் இடையே நாட்டிலேயே முதன்முறையாகப் புதிய வசதிகள் கொண்ட தேஜஸ் சொகுசு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரயில் போக்குவரத்தைக் கடந்த 22ம் திகதி மும்பையில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடக்கி வைத்தார்.



பாலாஜி- நித்யா ஜோடிக்கு அறிவுரை வழங்கிய பொலிஸ் அதிகாரி!
[Friday 2017-05-26 14:00]

காதலித்து திருமணம் செய்து கொண்ட நீங்கள் இந்த சமுதாயத்தின் முன்னிலையில் நல்லபடியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என பாலாஜி- நித்யா ஜோடிக்கு உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் அறிவுரை வழங்கியுள்ளார்.தனது கணவர் தன்னை சாதிப்பெயர் சொல்லி கொடுமைப்படுத்துவதாக நித்யா அளித்த புகாரின் பேரில் பொலிசார் பாலாஜியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.



கட்சிப்பணி குறித்து கேட்டால் பதில் அளிக்கிறேன்: - பத்திரிகையாளர்களை கடுப்பேற்றிய ஜெ.தீபா
[Friday 2017-05-26 14:00]

பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் ஜெ.தீபா தெளிவில்லாத பதில்களையே அளித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.பத்திரிகையாளர்கள் சந்திப்பு உள்ளது என பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் தீபா, சரியான நேரத்திற்கு வராமல் அவர்களை வெகுநேரம் காக்கவைக்கிறார்.இது ஒருமுறை அல்ல, பலமுறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



மதுபான விற்பனை கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்: - வலுக்கும் மக்கள் போராட்டம்
[Friday 2017-05-26 08:00]

தமிழ்நாடு முழுவதும் அரசு டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை புழல், லட்சுமிபுரம் பகுதியில் டாஸ்மாக் விற்பனை நேரத்துக்கு முன்னரும், பின்னரும் கூட மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு ஆட்கள் வருவதைக் கண்ட பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர் . ஆனால் போலீசார், புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது.



சுவாதி கொலையில் தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பா? - தொடரும் மர்மம்
[Friday 2017-05-26 08:00]

கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26-ஆம் திகதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மென்பொருள் பொறியாளரான சுவாதி, பட்டப்பகலில் பலரது முன்னிலையில், படுகொலை செய்யப்பட்டார்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், குற்றவாளி என்று முடிவுசெய்யப்பட்ட ராம்குமாரை ஜூலை 1-ஆம் தேதி பொலிசார் கைது செய்தனர்பின்னர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ராம்குமார் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.



கணவரின் இரண்டாவது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: - முதல் மனைவி பொலிசில் புகார்
[Friday 2017-05-26 07:00]

தமிழகத்தில் தனது கணவரின் இரண்டாவது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவரது முதல் மனைவி பொலிசில் புகார் அளித்துள்ளார்.சென்னை, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த தம்பதி வெங்கடேசன்(40), சசிகலா (33). இவர்கள் இருவருக்கும் கடந்த 1998-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இதைத் தொடர்ந்து இவர்களுக்கு 19-வயதில் மகனும்,8-வயதில் மகளும் உள்ளனர். இருவருக்கும் கடந்த 3-மாதங்களுக்கு முன்னர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.



இரு சிறுமிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்!
[Thursday 2017-05-25 18:00]

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ளது நவாலா கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் அருகில் உள்ள ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளனர். அப்போது ரேசன் டீலரின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அந்த சிறுமிகளை ஒதுக்குப்புறமான இடத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர். பின்னர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, சிறுமிகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 22ம் தேதி நடந்துள்ளது.



தேசிய நெடுஞ்சாலையில் கூட்டு வண்புணர்வுக்கு இரையான பெண்கள்: - தொடரும் கொடூரம்
[Thursday 2017-05-25 18:00]

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்களை வழிப்பறி கும்பல் ஒன்று தாக்கி கூட்டு வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வியாழக்கிழமை அன்று அதிகாலை 1:30 மணியளவில் நொய்டா பகுதியிலிருந்து புலேந்தஷர் பகுதிக்கு 4 பெண்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.



முதலமைச்சர் பயணித்த ஹெலிகாப்டர் வானிலிருந்து கீழே விழுந்து விபத்து!
[Thursday 2017-05-25 18:00]

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் பயணம் செய்த ஹெலிகொப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மும்பையிலிருந்து ஹெலிகொப்டரில் பயணம் மேற்கொண்டார்.ஹெலிகொப்டர் கிளம்பிய சில நிமிடங்களில் காற்றின் வேகம் மற்றும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.



ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படுகிறது: - விஜயகாந்த் குற்றச்சாட்டு
[Thursday 2017-05-25 07:00]

ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதிலும், உட்கட்சி பிரச்சனையை தீர்த்து கொள்வதிலுமே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறியாக உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் கடுமையான வறட்சியால் பொதுமக்களும், விவசாயிகளும், கால்நடைகளும் தண்ணீரின்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். குடிநீரின்றி பொதுமக்கள் நாள்தோறும் காலிங்குடங்களுடன் தெருவில் போராடுவதாக விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.



ரஜினிக்கு தெரிந்த சினிமா தொழில் இருப்பதே அவருக்கு நல்லது : - சுப்ரமணியன் சுவாமி
[Thursday 2017-05-25 07:00]

ரசிகர்களுடன் நடத்திய சந்திப்பில் ரஜினி உற்சாகமாக இருக்கிறார். அவரது பேச்சு, அரசியல் கட்சிகள் மத்தியில் வரவேற்பையும், எதிர்ப்பையும் கலந்து பெற்றுள்ளது. ரஜினியை வரவேற்க பா.ஜ.க கதவு திறந்தே இருக்கிறது என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்து இருந்தார். பா.ஜ.கவுக்கு போகக் கூடாது என்று திருமாவளவன உள்ளிட்ட சில தமிழக தலைவர்கள் ரஜினிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.



கள்ளக்காதலால் கணவனின் மர்ம உறுப்பை வெட்டிய மனைவி!
[Thursday 2017-05-25 07:00]

இந்தியாவில் கள்ளக்காதல் பிரச்னை காரணமாக கணவனின் மர்ம உறுப்பை வெட்டிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்குவங்க மாநிலம் அசன்சோல் பகுதியை சேர்ந்த முகம்மது நவுசத்திற்கும், பிகார் மாநிலம் லக்ஷ்மிசராய் பகுதியை சேர்ந்த ருக்பானுவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.திருமணமான ஒரு மாதத்திலே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.



சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்த நளினி!
[Wednesday 2017-05-24 18:00]

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார். "25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.



பிடிவாரன்டை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்த நடிகர்கள்!
[Wednesday 2017-05-24 18:00]

பிடிவாரன்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உட்பட எட்டு பேர் தரப்பில் உதகை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க கூட்டத்தில் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், சரத்குமார், விவேக், விஜயகுமார், சேரன், அருண் விஜய், நடிகை ஶ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது.



அரசுக்கு தேவையில்லாத செலவு ஆவதால் வைகோவை ஜாமீனில் விட்ட நீதிமன்றம்!
[Wednesday 2017-05-24 18:00]

தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 3ம் திகதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வைகோ சரண் அடைந்தார்.


Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b>06-05-2017 அன்று கனடா- ரொரன்டோவில் அபிநயாலயா நாடியாலயம் நடாத்திய 20வது ஆண்டுவிழா நிகழ்வின் படத்தொகுப்பு. </b> படங்கள் - குணா
<b>30-04-2017 அன்று கனடா- ரொரன்டோவில்  நடைபெற்ற சங்கீத சங்கமம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா