Untitled Document
January 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ஓய்வு பெற விரும்பும் நடிகர் மோகன்லால்: - ரசிகர்கள் அதிர்ச்சி
[Monday 2017-01-09 14:00]

மலையாள பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். 56 வயதாகும் மோகன்லால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கோலோச்சி வருகிறார். நடிப்பிற்காக பாரத் விருதும் பெற்றுள்ளார். இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் பொது நலன் சார்ந்த வி‌ஷயங்களில் கருத்துக்கள் சொல்வதிலும் முதன்மையான இடத்தை பிடித்துள்ளார்.  சமீபத்தில் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது, அதற்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் கருத்து  வெளியிட்டார்.இதுபோல சினிமாவில் இருந்து விலக விரும்புவதாக மோகன்லால் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தெரிவித்தார். மோகன்லாலுக்கு மலையாளம் மட்டுமின்றி தமிழ் திரையுலகிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியிட்ட தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். 56 வயதாகும் மோகன்லால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கோலோச்சி வருகிறார். நடிப்பிற்காக பாரத் விருதும் பெற்றுள்ளார். இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் பொது நலன் சார்ந்த வி‌ஷயங்களில் கருத்துக்கள் சொல்வதிலும் முதன்மையான இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது, அதற்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டார்.இதுபோல சினிமாவில் இருந்து விலக விரும்புவதாக மோகன்லால் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தெரிவித்தார். மோகன்லாலுக்கு மலையாளம் மட்டுமின்றி தமிழ் திரையுலகிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியிட்ட தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  

மலையாள முன்னணி கதாசிரியர் வாசுதேவன் நாயரின் ‘ரண்டமூலம்’ படத்தில் நடிக்க நடிகர் மோகன்லால் ஆர்வமாக உள்ளார். இது தனது கனவு திட்டம் என்றும் கூறியுள்ளார். இந்த படத்தை தயாரிக்க ரூ.600 கோடி செலவாகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்திற்கு பிறகு மோகன்லால் சினிமாவில் இருந்து விலகுவார் என தெரிகிறது.

  
   Bookmark and Share Seithy.com



இலியானாவின் நிர்வாண புகைப்படம் வெளியீடு
[Tuesday 2017-01-24 22:00]

இலியானா பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இலியானா. இவர் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில், இலியானாவுக்கு கடந்த சில வருடங்களாக எந்த சினிமா வாய்ப்பும் இல்லை. எனவே, தனது காதலருடன் நாடு நாடாக பயணம் சென்று பொழுதை கழித்து வருகிறார்.



என்னை பற்றி தவறான தகவல்கள் வருவது வருத்தம் அளிக்கிறது -விஷால்
[Tuesday 2017-01-24 21:00]

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு போராடி உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியிருந்தது. இதனால், தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது. ஆனால், இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடைபெற முடியாத சூழ்நிலை எழுந்தபோது மாணவர்களும், இளைஞர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் களமிறங்கினர்.



மீண்டும் நடிக்க வருகிறார் குஷ்பு
[Tuesday 2017-01-24 09:00]

நடிப்பிற்கு கொஞ்சம் ப்ரேக் கொடுத்துவிட்டு தீவிர அரசியலில் இறங்கிய நடிகை குஷ்பு, மீண்டும் நடிக்க வருகிறார். ஆனால், இவர் நடிக்கப்போவது தமிழ் படத்தில் அல்ல. த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் தெலுங்கு படத்தில் நடிக்க போகிறார் குஷ்பு. இந்த அறிவிப்பை அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டிருக்கிறார்.



ஜல்லிக்கட்டு பேராட்டத்தால் 'பைரவா' க்கு நடந்தது என்ன?
[Tuesday 2017-01-24 09:00]

ஜல்லிக்கட்டு போராட்டத்தால் விஜய்யின் `பைரவா' படத்தின் வசூல் சற்றே குறைந்துள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம். பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பைரவா’ படம் பொங்கல் வெளியீடாக கடந்த 12-ந் தேதி வெளியானது. கிட்டத்தட்ட 55 நாடுகளில் பிரம்மாண்டமாக வெளிவந்த இப்படம் ரிலீசான தேதியில் மட்டும் ரூ.16 கோடிக்கும் மேல் வசூலித்தாக கூறப்பட்டது. அன்றைய தேதியில் சென்னையில் மட்டும் ரூ.92 லட்சம் வரை வசூல் செய்தததாகவும் கூறப்பட்டது.



மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் லட்சுமிமேனன்
[Tuesday 2017-01-24 09:00]

ஏ.எம்.ரத்னத்தின் சூர்யா மூவீஸ் தயாரித்து வரும் படம் கருப்பன். ரேனிகுண்டா படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கும் இந்த படத்தில் விஜயசேதுபதி நாயகனாக நடித்து வருகிறார். றெக்கை படத்தை அடுத்து இந்த படத்திலும் விஜய சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமிமேனன் கமிட்டாகியிருந்தார். இந்த படத்திற்காக தனது உடம்பையும் ஓரளவு ஸ்லிம் பண்ணி வந்தார். தற்போது, கருப்பன் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.ஆனால், விஜயசேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டு வரும் நிலையில், லட்சுமிமேனன் அப்படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறுகிறார்கள்.



'ஆமா நான் பொறுக்கிதான்' ஜெய் ஆகாஷ் இன் புதிய படத்தின் பெயர்
[Tuesday 2017-01-24 08:00]

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராடி வரும் மாணவர்களை பொறுக்கிகள் என்று விமர்சித்தார் பா.ஜ.க. பிரமுகரான சுப்பிரமணிய சுவாமி. அவரது கருத்து ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் சந்தித்து வருகிறது. இந்த சூழலில் சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை உள்ளடக்கி ஆமா நான் பொறுக்கிதான் என்று தன்னுடைய படத்துக்கு டைட்டில் வைத்துள்ளார் ஜெய் ஆகாஷ் என்ற நடிகர். இந்த படத்திற்கு இப்படியொரு தலைப்பு ஏன்? சினிமாவில் நெகட்டீவ் வைபரேஷன் எப்போதும் பாசிட்டிவ் ரிசல்ட் தந்துள்ளது.



மாணவர்கள் தங்களது அறவழிப்போராட்டத்தை அமைதியாக முடிவுக்குக்கொண்டு வரவேண்டும்: - ரஜினி வேண்டுகோள்
[Monday 2017-01-23 18:00]

மெரினா கடற்கரையை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மறுத்து வருவதால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு என போலீசார் இன்று எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில் மெரினாவில் உள்ள ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னைவாசிகளும் இன்று போராட்டக் களத்தில் குதித்தனர். இதனால் சென்னையில் பேருந்து மற்றும் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நடிகர் ராகவா லாரன்ஸ் மெரினா போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்து, போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.



இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்த விஜய் ஆண்டனி!
[Monday 2017-01-23 18:00]

விஜய் ஆண்டனி எப்போதும் சமூக அக்கறையுடன் தான் செயல்படுவார். இவர் ஆரம்பத்திலிருந்து இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.இந்த போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் வன்முறையாக மாறியுள்ளது. இதற்கு பலரும் தங்கள் வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர். விஜய் ஆண்டனி ’மாணவ மணிகளே, வலையில் சிக்காதே...பொறுமையுடன் இரு...’ என்று கூறியுள்ளார்.



மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதலுக்கு கமல் கண்டனம்!
[Monday 2017-01-23 18:00]

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் கடலை நோக்கி படையெடுத்தனர். போலீசார் எங்களை வெளியேற்ற நினைத்தால் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்வதாகவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் கடற்கரைக்கு வந்தவண்ணம் இருந்தனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசாரின் வலுக்கட்டாய நடவடிக்கை தவறானது. மேலும் மாணவர்களின் மீதான இத்தகைய ஆக்ரோஷமான தாக்குதல் நல்ல முடிவை தராது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.



போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை: - நடிகர் சித்தார்த்
[Monday 2017-01-23 18:00]

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாக தீர்வு வேண்டும், பீட்டாவை தடை செய்யவேண்டும் என தொடர் போராட்டம் நடந்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் இருந்தவர்களை போலிசார் தடியடி நடத்தி களைத்ததாக புகார் எழுந்துவருகிறது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகிறது. சிலர் செய்த அசம்பாவித நடவடிக்கைகளை நடிகர்கள் சிலர் கண்டித்துள்ளனர்.தற்போது நடிகர் சித்தார்த் அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை என தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.



நிஜ அம்மாவாக மாறிய நயன்தாரா
[Monday 2017-01-23 12:00]

மாயா படத்தை அடுத்து இமைக்கா நொடிகள் படத்திலும் குழந்தைக்கு அம்மாவாக நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படத்தில் முதன்முதலாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் அவருக்கு தனது 4 வயது மகளுடன் பாச உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் செண்டிமென்ட் காட்சிகளும் நிறைய உள்ளதாம். அந்த வகையில், தனது மகளாக நடிக்கும் மானஸ்வியுடன் நிஜ அம்மாவாகவே மாறி நடித்திருக்கிறாராம் நயன்தாரா.மேலும், இந்த படத்தில் மானஸ்வியின் நடிப்பில் இயல்புத்தன்மை வெளிப்பட வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பில் அவருடன் அன்போடு பழகினாராம் நயன்தாரா.



அப்பாவின் வரிகளிற்கு மெட்டுப் போட்ட கவின் சிவா
[Monday 2017-01-23 12:00]

தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். இவரது மகன் கவின் சிவா, மெய்மறந்தேன், ஜெயிக்கிற குதிரை ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில், ஜெயிக்கிற குதிரை படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்க ஜீவன் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது இந்த இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன. இந்த படங்கள் குறித்து கவின் சிவா கூறுகையில், மெய்மறந்தேன் படத்தில்தான் நான் இசையமைப்பாளராக அறிமுகமானேன். அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. அதையடுத்து ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள ஜெயிக்கிற குதிரை படத்திற்கு தற்போது இசையமைத்துக்கொண்டிருக்கிறேன்.



எல்லோரும் என்னிடம் இதைத் தான் கேட்கின்றனர் - கவலையில் சுனைனா
[Monday 2017-01-23 12:00]

மும்பை நடிகையான சுனைனா காதலில் விழுந்தேன், மாசிலாமணி, பாண்டி ஒலிபெருக்கி நிலையம் போன்ற படங்களில் கிளாமராக நடித்தபோதும், வம்சம், நீர்ப்பறவை உள்பட பல படங்களில் ஹோம்லியான வேடங்களிலும் நடித்திருந்தார்.

ஆனால் ஸ்ரீகாந்துடன் அவர் நடித்த நம்பியார் படம் வெளியாக தாமத மானதால் அதன்பிறகு சரியான படவாய்ப்பு இல்லாமல், சில வருடங்களுக்குப்பிறகு ஜீவா நடித்த கவலை வேண்டாம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித் தார் சுனைனா. அதையடுத்து இப்போது சமுத்திரகனி இயக்கி நடித்து வரும் தொண்டன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.



போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள்
[Monday 2017-01-23 11:00]

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக மெரீனாவில் மக்களுடன் இரவு பகலாக தங்கியிருந்து ஜல்லிக்கட்டு போராட்டக்காரரர்களுக்கு லாரன்ஸ் ஆதரவு தெரிவித்து வந்தார். கழுத்தில் பெல்ட் கட்டியபடி வந்த லாரன்ஸ், மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டததோடு, அவர்களுடன் இணைந்து மவுன போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தார். மெரினாவில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் லாரன்சுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஒருவாரம் சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். ஆனால் “போராட்ட களத்தில் நானும் இருக்க வேண்டும். அந்த மக்கள் முகங்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். உணவு மற்றும் குடிநீர், பெண்களுக்காக கழிப்பறை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். போராட்டம் வெற்றி பெற்ற பிறகு வந்து ஒரு வாரம் சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறி மருத்துவமனையில் இருந்து மீண்டும் மெரீனாவுக்கு ராகவா லாரன்ஸ் சென்றார். அதன் பின்னர் 6-ம் நாளான நேற்று மீண்டும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் நேற்று இரவு மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார்.



காதலுக்காக கூடிய கூட்டம் இன்று வீரத்திற்காக கூடுகிறது - சிம்பு
[Monday 2017-01-23 09:00]

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்திற்கு வந்த நடிகர் சிம்பு போராட்டக்காரர்கள் மத்தியில் ஆவேசமாக பேசியுள்ளார். இது குறித்த செய்தியை விரிவாக கீழே பார்க்கலாம். சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடக்கும் இடத்துக்கு நடிகர் சிம்பு வந்தார். போராட்டக்காரர்கள் மத்தியில் நடிகர் சிம்பு ஆவேசமாக பேசியதாவது:-



'பீட்டா’ அமைப்பே அமெரிக்காவில் நடக்கும் காளை விளையாட்டை தடை செய் - கமல்ஹாசன்
[Monday 2017-01-23 09:00]

'நான் தமிழ் பொறுக்கிதான், டெல்லியில் பொறுக்க மாட்டேன். எனக்கு தன்மானம் இருக்கிறது” என்று நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம். ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை பொறுக்கிகள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின. போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் நேற்று நடந்த தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசும்போது தன்னை 'தமிழ் பொறுக்கி' என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது:-



இளைஞர்கள் நிறைய விஷயங்களுக்காக போராடவேண்டும்: - ஹிப் ஹாப் தமிழா
[Sunday 2017-01-22 18:00]

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஹிப் ஹாப் ஆதியை தெரிந்திருக்கும். கடந்த வருடமே அவர் இதற்கான அச்சாரத்தை தனது டக்கரு டக்கரு பாடல் மூலம் போட்டுவிட்டார்.அப்பாடல் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் இந்த வருடம் களத்திலேயே மக்களோடு போராட்டத்தில் குதித்துவிட்டார். தொடர்ந்து தனது தனது ஆதரவை தெரிவித்து வரும் இன்னும் நிறைய விஷயங்களுக்காக போராடவேண்டும் என கூறினார்.



சின்னத்திரையில் இனி நடிக்கவே மாட்டேன்: - நடிகை சாயாசிங் திடீர் முடிவு
[Sunday 2017-01-22 18:00]

தனுஷ் நடித்த திருடா திருடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயா சிங். அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து வந்தவர் கன்னடம், போஜ்புரி மொழிப்படங்களிலும் நடித்தார்.பின் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போக கன்னடம், தெலுங்கு சிரீயல்களில் சின்னத்திரையில் நடித்து வந்தார். தமிழில் நாகம்மா என்னும் தொடரில் நடித்து வந்தார்.பின் இது கதிர்வேலன் காதல் என்னும் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரீ கொடுத்தார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் இப்போது சின்னத்திரையே வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம்.



த்ரிஷா எங்கள் விளம்பர தூதரே கிடையாது: - பீட்டா அமைப்பு
[Sunday 2017-01-22 18:00]

த்ரிஷா ஆரம்பத்திலிருந்தே தெரு நாய்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். அதன் காரணமாகவே அனிமல் லவ்வர் என்று இவரை அழைத்து வந்தனர்.பிறகு இவர் பீட்டா அமைப்பிலும் உறுப்பினரானார், ஆனால், இந்த ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக இளைஞர்கள் இவரை ஒரு வழி செய்துவிட்டனர். இதை தொடர்ந்து இவரே முன்வந்து ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தன் ஆதரவை தந்தார்.மக்கள் தான் திட்டுகிறார்கள் என்று பார்த்தால், தற்போது பீட்டா அமைப்பும் த்ரிஷாவை திட்டியுள்ளது.



ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மறைமுக அரசியல் கும்பல்: - ஜி.வி.பிரகாஷ் எச்சரிக்கை
[Sunday 2017-01-22 18:00]

தொடர்ந்து நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தால் அவசர சட்டம் என்ற ஒன்று வந்தாலும் மக்கள் பலர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் பல இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு தடையில்லாத நிரந்தர சட்டம் கேட்டு போராட்டம் நிற்காமல் நடந்துகொண்டிருக்கிறது.ராகவா லாரன்ஸ், ஹிப் ஹாப் ஆதி, ஜி.வி.பிரகஷ் என சில நடிகர்கள் சிலர் மக்களோடு கைகோர்த்து தொடர்ந்து அமைதியனான முரையில் போராடி வருகின்றனர்.ஆங்காங்கே நடக்கும் கூட்டங்களில் சிலர் மக்களை திசை திருப்பும் வகையில் அரசுக்கு ஆதரவாக பேசச்சொல்லி கையில் பணம் கொடுப்பதாக சில தகவல்கள் சமூகவலைதளங்களில் வந்துள்ளது.


Tharsi-home-15-10-2016
AIRCOMPLUS2014-02-10-14
NIRO-DANCE-100213
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
<b> 15-01-2017 அன்று ஃபான் ஃஅம் மையத்தில்  நடைபெற்ற முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களது பொதுக் கூட்ட  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 15-01-2017 அன்று மார்க்கம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா(Puthinamphotos.com)
<b> 14-01-2017 அன்று ரொரன்டோவில் கனேடிய தமிழர் பேரவை (CTC) நடாத்திய பொங்கல் விழா விருந்து நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா (Puthinamphotos.com)