Untitled Document
March 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பத்து வயது ஊடகவியலாளரை பார்த்து நடுங்கும் இஸ்ரேல்: ஏன் தெரியுமா?
[Monday 2017-01-09 14:00]

'போரும், போராட்டமும் இறுதியில் அநாதைகள் ஆக்குவது என்னவோ குழந்தைகளைத்தான்' என்பார்கள். ஆனால், பல யுகங்களாகத் தொடரும் இஸ்ரேல்-பாலஸ்தீனியப் போர், பத்து வயதாகும் ஜன்னா ஜிகாதை ஊடகவியலாளராக்கி இருக்கிறது. உலகின் மிகச்சிறிய பத்திரிகையாளர் ஜன்னாவாகத்தான் இருக்க முடியும். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நிகழ்த்திவரும் தொடர் தாக்குதல்களை உலகத்திற்கு, தான் எடுக்கும் காணொளிகள் வழியாக வெளிச்சம் போட்டுக்காட்டுகிறாள் ஜன்னா. இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதியான நபி சலேதான் ஜன்னா ஜிகாத் இருப்பிடம். இத்தனைக்கும் அவளது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் பத்திரிகையாளர்கள் கிடையாது. பிறகு அவளுக்குள் எப்படி இப்படியொரு ஆர்வம் எழுந்தது?

'போரும், போராட்டமும் இறுதியில் அநாதைகள் ஆக்குவது என்னவோ குழந்தைகளைத்தான்' என்பார்கள். ஆனால், பல யுகங்களாகத் தொடரும் இஸ்ரேல்-பாலஸ்தீனியப் போர், பத்து வயதாகும் ஜன்னா ஜிகாதை ஊடகவியலாளராக்கி இருக்கிறது. உலகின் மிகச்சிறிய பத்திரிகையாளர் ஜன்னாவாகத்தான் இருக்க முடியும். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நிகழ்த்திவரும் தொடர் தாக்குதல்களை உலகத்திற்கு, தான் எடுக்கும் காணொளிகள் வழியாக வெளிச்சம் போட்டுக்காட்டுகிறாள் ஜன்னா. இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதியான நபி சலேதான் ஜன்னா ஜிகாத் இருப்பிடம். இத்தனைக்கும் அவளது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் பத்திரிகையாளர்கள் கிடையாது. பிறகு அவளுக்குள் எப்படி இப்படியொரு ஆர்வம் எழுந்தது?

  

"இஸ்ரேலியத் தாக்குதல்கள் பற்றி ஊடகவியலாளர்கள் தொடர்ந்து எழுதி வந்தாலும், அவர்கள் எப்போதும் உண்மையை எழுதுவதில்லை" என்கிறாள் ஜன்னா. அவளது உறவுமுறைத் தங்கை ஒருத்தியும், அவளது மாமாவும் இஸ்ரேல் தாக்குதலில் பலியானது, ஜன்னாவை மிகவும் பாதித்தது. இருவருமே எரிவாயு குண்டு வெடித்தும், துப்பாக்கியால் சுடப்பட்டும் பலியானார்கள். அதுவரை பட்டாம்பூச்சிகளை மட்டுமே தன் அம்மாவின் ஐ-போன் வழியாகப் படம் பிடித்துவந்த ஜின்னா, தனது பகுதியில் இஸ்ரேலியர்களுக்கு எதிராக நிகழும் போராட்டம், தங்களுடைய மக்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள், கைது, தனி மனிதத் தாக்குதல், பெண்கள் மீதான வன்முறைத் தாக்குதல் என ஒவ்வொன்றாக வீடியோ பதிவு செய்யத் தொடங்கினாள். அவளது உறவினர் ஒருவர் பத்திரிகை புகைப்படக்காரராக இருப்பதும் ஒருவகையில் அவளுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. தற்போது, இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஜோர்டான், ஜெருசலேம் ஆகிய பகுதிகளுக்கு தன் தாயுடன் படையெடுக்கிறாள் ஜன்னா. அவரது ஐ.போன்தான் இவளது ஆயுதம். ’கேமராதான் என் துப்பாக்கி’ என்கிறாள் ஜன்னா. சிறுமி என்பதால் அவளால் அப்படியென்ன செய்து விடமுடியும்? என்று நினைத்து அவளது கேமராவை இஸ்ரேலியர்கள் பறிப்பதில்லை. சில நேரங்களில் இவள் கேமிராவுடன் நெருங்கினால் வேகமாக அந்த இடத்தைவிட்டு நகருகின்றனர் இஸ்ரேலியர்கள். உருவத்தைக் கண்டு யாரையும் எடைபோட்டு விடக்கூடாது என்பதுதான் ஜன்னாவின் விஷயத்தில் எவ்வளவு நிதர்சனம்?

ஜன்னா தன்னைச் சுற்றி நிகழ்வதைப் பற்றி, தனதுபோக்கில் உலகத்துக்கு தெரியப்படுத்துவது ஒருவகையில் தனக்கு மகிழ்ச்சி என்றாலும், மற்றொருபக்கம் இஸ்ரேல் இராணுவம் அவளை என்ன செய்யுமோ? என்கிற பயம் இருப்பதாகக் கூறுகிறார் ஜன்னாவின் தாய். ஜன்னாவின் முகநூல் பக்கத்தில், தான் கலந்துகொள்ளும் போராட்டம், இஸ்ரேல் இராணுவம் என எல்லாவற்றையும் அரேபிய மற்றும் ஆங்கில மொழியில் பகிர்கிறாள். ஜன்னாவின் புகைப்படக்கார உறவினர் கூறுகையில்,”இந்த வயதில் பிள்ளைகள் துப்பாக்கியும், ரத்தத்தையும் பார்ப்பதே தவறு என்கின்றன பல நாடுகள், துரதிர்ஷ்டவசமாக நாங்களும் எங்கள் பிள்ளைகளும் பிறந்ததே துப்பாக்கிகளின் சத்ததிற்கு நடுவேதான். பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டு பள்ளியில் படிக்க வேண்டிய வயதில், ஜன்னா கேமிராவுடன் சுற்றித் திரிவதை ஒருபக்கம் ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான். ஆனால் போர்சூழ்ந்த பூமியில், கண் முன்னே ஒருவர் துப்பாக்கியால் சுடப்படும்போது, உண்மைகளை மட்டுமே நாம் பேச வேண்டும் என பிள்ளைகளிடம் அறிவுறுத்தி விட்டு பொய்யாக எப்படி அமைதியைப் பற்றி எப்படிப் பேசமுடியும்? அவர்களுக்குத் தேவை அமைதி அல்ல, சுதந்திரம். பலருக்கு துப்பாக்கி வழியாகக் கிடைக்கிறது. ஜன்னாவிற்கு கேமரா வழியாக கிடைக்கிறது” என்கிறார்."நீ வளர்ந்ததும் என்னவாக ஆசைப்படுகிறாய்" என்று ஜன்னாவிடம் கேட்டால்,"பத்திரிக்கையாளராக ஆசைப்படுகிறேன்” என கண்கள் மினுமினுக்கக் கூறுகிறாள்.ஜன்னா எனும் இந்தச் சிறு பட்டாம்பூச்சியின் கனவு நிறைவேறிடவேணும் அமைதிக்கென விடியட்டுமே இந்த பூமி!

  
   Bookmark and Share Seithy.comஎந்த நேரத்திலும் அல் பாக்தாதி கொல்லப்படுவார்:அமெரிக்க மந்திரி ரெக்ஸ் டில்லர்சன்
[Friday 2017-03-24 07:00]

ஐ.எஸ். துணைத்தளபதிகள் அனைவரும் பலியான நிலையில் ‘எந்த நேரத்திலும் அல் பாக்தாதி கொல்லப்படுவார்’ என அமெரிக்க மந்திரி திட்டவட்டமாக கூறினார். உலகையே அச்சுறுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை முழுமையாக தோற்கடிப்பது குறித்த 68 உலக நாடுகள் கொண்ட கூட்டணி பேரவை கூட்டம், வாஷிங்டனில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் பேசும்போது, “ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் துணைத்தளபதிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். குறிப்பாக பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டவரும் சாகடிக்கப்பட்டு விட்டார். எந்த நேரத்திலும் அந்த அமைப்பின் தலைவனான அல் பாக்தாதி கொல்லப்பட்டு விடுவார்” என உறுதிபடகூறினார்.அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பலி
[Friday 2017-03-24 06:00]

அமெரிக்காவில் அடையாளம் தெரியாத மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலிஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அடையாளம் தெரியாத மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலிஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் வடக்கு பகுதியில் இருக்கும் விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள வங்கி ஒன்றில் நேற்று நுழைந்த மர்மநபர் ஒருவர் தான் கொண்டுவந்த கைத்துப்பாக்கியால் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சரமாரியாக சுட ஆரம்பித்தார்.கனடாவின் பிரபல ஸ்டார்பக்ஸ் நிறுவனம் 1000 அகதிகளுக்கு வேலை வழங்க திட்டம்:
[Thursday 2017-03-23 21:00]

கனடாவின் பிரபல ஸ்டார்பக்ஸ் கோப்பி நிறுவனம், எதிர்வரும் ஐந்து வருடங்களில் சுமார் 1000 அகதிகளுக்கு வேலை வழங்க தீர்மானித்துள்ளது. மீள் குடியேற்ற முகவர் வலையமைப்புடன் இணைந்து செயற்படும் தேசிய அமைப்புக்கள், ஆகியனவற்றின் ஊடாக இந்த வேலை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.பிரித்தானியாவிற்கு முழு ஒத்துழைப்பை நல்குவோம்: - அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.
[Thursday 2017-03-23 21:00]

பிரித்தானியாவில் நான்கு பேரின் உயிரை காவுகொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத் தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்னிறுத்துவதற்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதலை அடுத்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-ஐ தொலைபேசியில் தொடர்புகொண்ட ட்ரம்ப் இவ்வாறு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். தீவிரவாத செயற்பாடுகள் எம்மை துயரில் ஆழ்த்தியுள்ளன. பிரித்தானிய மக்கள் இன்று அனுபவிக்கும் வேதனையை எம்மால் நன்கு உணர முடியும் என பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலண்ட் தெரிவித்துள்ளார்.லண்டன் தாக்குதல் தொடர்பாக 7 பேர் கைது
[Thursday 2017-03-23 20:00]

பிரிட்டனில் பாராளுமன்ற வளாகம் அருகில் நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் லண்டன் போலீசார் 7 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து பாராளுமன்ற கூட்டம் நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, பாராளுமன்ற வளாகம் அருகே உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில், ஒரு கார் அதிவேகத்தில் வந்து பொதுமக்கள் மீது மோதியது. இதில், 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து கீழே விழுந்தனர். ஒரு பெண் பலியானார். பீதியில், பொதுமக்கள் சுமார் 50 பேர், பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி ஓடினர்.லண்டன் தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு
[Thursday 2017-03-23 19:00]

லண்டன் பாராளுமன்றம் அருகே நேற்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பாராளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தீவிரவாதி ஒருவன் பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது காரை மோதிவிட்டு, போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி பாராளுமன்றத்திற்குள் நுழைய முயன்றான். அந்த தீவிரவாதியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.தடைகளை கண்டு அஞ்சப் போவதில்லை: வடகொரியா அமெரிக்காவுக்கு பதில்!
[Thursday 2017-03-23 17:00]

வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை முடக்கும் வகையில் அமெரிக்காவினால் சுமத்தப்படும் எவ்வித பொருளாதார தடைகளுக்கும் அஞ்சப் போவதில்லை என பியோங்யாங் தூதுவர் ஒருவர் தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியா தொடர்ந்தும் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்நிலையில், வடகொரியா மீது புதிய கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்தே வடகொரியா தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.304 பேருடன் மூழ்கிய தென்கொரியக் கப்பலை அப்புறப்படுத்தும் முயற்சியில் மீட்புக் குழுவினர்:
[Thursday 2017-03-23 07:00]

மூன்று வருடங்களுக்கு முன் 304 பேருடன் மூழ்கிய தென்கொரியக் கப்பலை அப்புறப்படுத்தும் முயற்சியில் மீட்புக் குழுவினர் இறங்கியுள்ளனர். ‘செவோல்’ என்ற இந்தக் கப்பல் மூன்று வருடங்களுக்கு முன், நூற்றுக்கணக்கான உயர் வகுப்பு பாடசாலை மாணவர்களுடன் தென்மேற்குக் கடலில் மூழ்கியது. அளவுக்கதிகமானோரை ஏற்றியமையாலும், வேகமாகப் பயணித்தபடியே திரும்ப முயற்சித்ததாலுமே இந்த விபத்து நிகழ்ந்தது என்று கூறப்படுகிறது. இதில் 304 பேர் கொல்லப்பட்டதுடன் ஒன்பது பேர் காணாமல் போயினர்.கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட் அவுட்கள் வைக்க அதிரடி தடை!
[Thursday 2017-03-23 07:00]

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட் அவுட்கள் வைக்க அதிரடி தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. கனடாவில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால், அவரின் கட் அவுட் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் பிரம்மாண்டமாக வைக்கப்படும். இதற்கு கனடாவின் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இது குறித்து நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.பிரித்தானிய பாராளுமன்ற வளாத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்: - ஒருவர் கொல்லப்பட்டு பலர் காயம் Top News
[Wednesday 2017-03-22 18:00]

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் சிலர் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும் இதனை ஒரு பயங்கரவாத தாக்குதலாக கருதுவதாகவும் பிரித்தானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குலாளி ஒருவர் பிரித்தானிய பாராளுமன்ற வளாத்தில் வைத்து காவற்துறை அதிகாரியை கத்தியால் குத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து காவற்துறையினர் அவர்மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில் காயமடைந்த தாக்குதலாளி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பதவியை ராஜினாமா செய்கிறாரா டொனால்ட் டிரம்ப்?
[Wednesday 2017-03-22 17:00]

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் விரைவில் தனது பதவியை அவரே ராஜினாமா செய்வார் என எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தலைவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அந்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.நேற்று லாஸ் ஏஞ்சல்ஸில் இதுபோன்ற ஒரு போராட்டத்தில் ஜனநாயக கட்சி செனட் உறுப்பினரான Dianne Feinstein என்பவர் பங்கேற்றுள்ளார்.அப்போது, ‘ஒவ்வொரு நாளும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இதுபோன்ற நடவடிக்கைகளை எப்படி தடுப்பது?’ என போராட்டக்காரர் ஒருவர் செனட் உறுப்பினரிடம் கேட்டுள்ளார்.சுவிஸில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்த தம்பதி: - நடந்தது என்ன?
[Wednesday 2017-03-22 17:00]

சுவிட்சர்லாந்து நாட்டில் தம்பதி இருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Gansingen நகரில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 59 மற்றும் 50 வயதான தம்பதி இருவர் வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் வீட்டில் வெடி விபத்து வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.பாடசாலைக்கு தாமதமான மாணவனை ஹெலிகொப்டரில் கொண்டு சேர்த்த தந்தை!
[Wednesday 2017-03-22 17:00]

உக்ரைன் நாட்டில் சிறுவன் ஒருவன் பாடசாலைக்கு தாமதமானதால் அவரது தந்தை ஹெலிகொப்டரில் கொண்டு சேர்த்த சம்பவம் பார்வையாளர்களை வியப்படைய வைத்துள்ளது. உக்ரைன் தலைநகர் கியெவ் பகுதியில் குறித்த வியக்க வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. திடீரென்று குறிப்பிட்ட பாடசாலையின் அருகாமையில் Robinson R22 Beta வகை ஹெலிகொப்டர் ஒன்று தரையிறங்கவும், அதில் இருந்து சிறுவன் ஒருவன் வெளியேறி பாடசாலைக்குள் விரைவதும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.மட்டுமின்றி அப்பகுதி மக்கள் உடனடியாக குறித்த காட்சிகளை வீடியோவாகவும் பதிந்துள்ளனர்.சிறுவனை தாக்கிய அமானுஷ்ய சக்தி: - திகிலூட்டும் சம்பவம்
[Wednesday 2017-03-22 17:00]

உலகில் அமானுஷ்ய சக்திகள் உள்ளதா என்ற கேள்வி நிலவிக்கொண்டே இருக்கும் வேளையில் இணையத்தில் தினம் தினம் புதிய அமானுஷ்ய வீடியோக்கள் வெளிவந்துக்கொண்டே இருக்கிறது.தற்போது வெளியாகியுள்ள வீடியோ 2016ம் ஆண்டு நடந்துள்ளது.குறித்த வீடியோவில், அறை ஒன்றில் சிறுவன் தனியாக புத்தகத்தை நடந்துக்கொண்டே படித்துக்கொண்டிருக்கிறார்.அப்போது, திடீரென வீட்டின் கதவு திறக்க கருப்பு நிறத்தில் நுழைந்த உருவம் ஒன்று சிறுவனை கீழே தள்ளி கால்களை பிடித்து தர தர வென இழுத்துச் செல்கிறது. இச்சம்பவம் அறையில் பொருத்தப்பட்டிருந்து சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.சுவிஸில் ட்ராம் வாகன சக்கரத்தில் சிக்கிய சிறுவன்: - நிகழ்ந்த விபரீத சம்பவம்
[Wednesday 2017-03-22 17:00]

சுவிட்சர்லாந்து நாட்டில் ட்ராம் வாகன சக்கரத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் நீண்ட தூரம் இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸில் உள்ள பேசல் மாகாணத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.நேற்று பிற்பகல் வேளையில் 10 வயதான சிறுவன் ஒருவன் Kappeli ட்ராம் நிலையத்திற்கு சென்றுள்ளான்.அப்போது, 14 வழித்தடத்திற்கு செல்வதற்காக ட்ராம் இருப்புச் சாலையை கடக்க முயன்றுள்ளான்.கனடாவில் விபத்துக்குள்ளான விமானம்: - மாயமான விமானியால் பரபரப்பு!
[Wednesday 2017-03-22 17:00]

கனடாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் அதன் விமானியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் அமைந்துள்ள விமான நிலையத்தில் இருந்து கடந்த புதன்கிழமை புறப்பட்டுச் சென்ற விமானமானது 285 மைல்கள் தாண்டி கனடாவின் Ontario பகுதியில் விபத்துக்குள்ளான நிலையில் கண்டெடுக்கப்பட்டது.இந்த நிலையில் விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகளுக்கு இதுவரை குறித்த விமானியின் உடலையோ அவர் தப்பிச்சென்றதற்கான தடயத்தையோ சுட்டிக்காட்ட முடியவில்லை என கூறப்படுகிறது.ஸ்வீடன் வானில் வெடித்து சிதறிய ஏலியன்ஸ் விண்கலம்? -பீதியில் உறைந்த மக்கள்
[Wednesday 2017-03-22 17:00]

ஸ்வீடன் நாட்டு வானில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று பயங்கர வெளிச்சமாக வந்து வெடித்து சிதறிய சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.குறித்த வீடியோவில், நீல நிறத்தில் பயங்கர வெளிச்சத்துடன் பூமியை நோக்கி வரும் மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறுகிறது.இதை உப்சாலா, Örebro மற்றும் தலைநகர் ஸ்டாக்ஹோம் முக்கிய நகரங்கள் உட்பட பல நகர மக்கள் கண்டு பீதியில் உறைந்துள்ளனர்.சீக்கிய கோயில் மீது வெடிகுண்டு தாக்குதல்: - கடுமையான தண்டனை விதித்த நீதிமன்றம்
[Wednesday 2017-03-22 17:00]

ஜேர்மனி நாட்டில் சீக்கிய கோயில் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய மூன்று வாலிபர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.ஜேர்மனியில் தற்போது சுமார் 13 ஆயிரம் சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். மேற்கு Essen நகரில் உள்ள சீக்கிய கோயிலில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் திருமண நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.அப்போது, கோயிலின் முகப்பு பகுதியில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன, இந்த தாக்குதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.சில வினாடிகளில் வெடித்துச் சிதறிய வட கொரியாவின் ஏவுகணை!
[Wednesday 2017-03-22 17:00]

வட கொரியா செலுத்திய ஏவுகணை ஒன்று புறப்பட்ட சில வினாடிகளில் வெடித்துச் சிதறி படுதோல்வியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஐ.நா சபை மற்றும் சர்வதேச வல்லரசு நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி வட கொரியா ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை அடிக்கடி நிகழ்த்தி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 4 ஏவுகணை சோதனைகளை வட கொரியா அரசு நிகழ்த்தியுள்ளது.இந்நிலையில், நேற்று வட கொரியா அரசு செலுத்திய ஏவுகணை ஒன்று புறப்பட்ட சில வினாடிகளில் வெடித்து சிதறியுள்ளதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.இளம் பெண்ணை பேஸ்புக் நேரலையில் கற்பழித்த ஆறு பேர்: - அதிர்ச்சி சம்பவம்
[Wednesday 2017-03-22 17:00]

அமெரிக்காவில் இளம் பெண்ணை பேஸ்புக் நேரலையில் ஆறு பேர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் சிக்காகோ நகரில் வசிக்கும் 15 வயது சிறுமியை பேஸ்புக் நேரலையில் ஆறு பேர் சேர்ந்து கற்பழிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியானது.


Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>11-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற United badminton League GTA நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா