Untitled Document
February 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ஸ்டுடியோவில் போட்டோவுக்கு அசத்தலாக போஸ் கொடுத்த சசிகலா!
[Monday 2017-01-09 18:00]

சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஹோட்டலில் நடந்த இந்தியா டுடேயின் இரண்டு நாள் ஊடக மாநாட்டில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கலந்து கொண்டனர். தென்னிந்தியாவில் முதல்முறையாக நடக்கும் இந்தியா டுடே மாநாட்டில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சி முடிந்த பின்பு, அங்கு இருந்த ஸ்டுடியோவில் சசிகலா போட்டோ ஷூட் நடைபெற்றது. ஸ்டுடியோ லைட்டிங்கில் அதிமுகவின் சின்னம்மா அசத்தலாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஹோட்டலில் நடந்த இந்தியா டுடேயின் இரண்டு நாள் ஊடக மாநாட்டில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கலந்து கொண்டனர். தென்னிந்தியாவில் முதல்முறையாக நடக்கும் இந்தியா டுடே மாநாட்டில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சி முடிந்த பின்பு, அங்கு இருந்த ஸ்டுடியோவில் சசிகலா போட்டோ ஷூட் நடைபெற்றது. ஸ்டுடியோ லைட்டிங்கில் அதிமுகவின் சின்னம்மா அசத்தலாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.comபுலிகளை வேட்டையாடுபவர்களை கண்ட இடத்திலே சுடலாம்: - அதிரடி உத்தரவு
[Wednesday 2017-02-22 18:00]

புலிகள் மற்றும் சிறுத்தைகளை வேட்டையாடுபவர்களை கண்ட இடத்திலேயே சுடலாம் என, இந்தியாவில் பிரசித்தி பெற்ற கார்பெட் வனவிலங்குகள் சரணாலய அதிகாரிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்இந்த சரணாலயத்தில், முக்கியமாக புலிகள் வாழும் இடங்களில் ஆயுதமேந்திய வேட்டைக்காரர்களை கண்ட உடனே சுடலாம் என்று வன அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருப்பதாக கார்பெட் வனவிலங்கு சரணாலயத்தின் இயக்குனர் கூறியதாக ஹிந்து நாளிதழ் தெரிவிக்கிறது. அங்கு சுற்றுலாப் பயணிகளையும் சோதனை செய்வது தொடங்கப்படவுள்ளது. காஜிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில், வேட்டைக்காரர்களை கண்டதும் சுடும் கொள்கைகள் இப்பகுதியில் அதிக அளவு மனித உயிர்களை பலிகொள்வதாக கூறும் ஒரு ஆவணப்படம் வெளியான சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.சென்னைக்குள் ஆறு ஐஎஸ் தீவிரவாத இயக்க ஏஜென்டுகள்: - சுப்பிரமணியன் சுவாமி அதிர்ச்சித் தகவல்
[Wednesday 2017-02-22 17:00]

சென்னைக்குள் ஆறு ஐஎஸ் தீவிரவாத இயக்க ஏஜென்டுகள் ஊடுருவியுள்ளதாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தான் மாநில எல்லை வழியாக ஊடுருவி ஆறு ஐஎஸ் தீவிரவாத இயக்க ஏஜென்டுகள் சென்னை வந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கள்ளக்காதலனை 16 கூறாக கோடாரியால் வெட்டிய கணவன்!
[Wednesday 2017-02-22 17:00]

பஞ்சாப்பில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கள்ளக்காதலனை மனைவியின் கணவர் அவர் குடும்பத்தாருடன் சேர்ந்து 16 கூறுகளாக வெட்டுத்தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப்பில் விமானப்படை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் விபன்சுக்லா(27), இவர் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழந்து வந்துள்ளார்.பணியில் சேர்ந்த சில மாதங்களிலே மற்றொரு விமானப்படை அதிகாரியான சுலேஷ்குமாரின் மனைவியான அனுராதாவுடன் விபன்சுக்லா நெருங்கி பழகியுள்ளார்.இது நாளைடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அனுராதா கற்பமாகியுள்ளார்.உயிரிழந்த இளைஞன் மீண்டும் உயிர்பிழைத்து வந்த அதிசயம்!
[Wednesday 2017-02-22 17:00]

கர்நாடகாவில் உயிரிழந்த இளைஞனை அடக்கம் செய்வதற்காக கொண்டு சென்ற போது வழியில் விழித்தெழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் தர்வாட் மாவட்டத்தின் மானாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் குமார் மார்வாத்(17).இவரை கடந்த மாதம் நாய் ஒன்று கடித்துள்ளது, நாய் கடிக்கு மார்வாத் எந்த வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாததால் அண்மையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் குமாரின் உடல்நிலை மிகவும் அபாயகட்டத்தை எட்டியதால், மருத்துவர்கள் அவரை உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.ஜெயலலிதாவின் விருப்பத்தை புதிய அரசு நிறைவேற்றுமா? - கேள்விஎழுப்புகிறார் நடிகர் சத்யராஜ்
[Wednesday 2017-02-22 13:00]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழாவுக்குத் தயாராகி வருகிறது அ.தி.மு.க தலைமைக் கழகம். அதேநேரம், சிறைக் கைதிகளின் முன்விடுதலை குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன. 'ராஜீவ் காந்தி வழக்கில் சிறைப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக உறுதியான முடிவை எடுத்தார் ஜெயலலிதா. அவரது நோக்கத்தை புதிய அரசு நிறைவேற்றுமா?' எனக் கேள்வி எழுப்புகிறார் நடிகர் சத்யராஜ். தமிழக சிறைச் சாலைகளில் நீண்டநாட்கள் சிறையில் வாடும் கைதிகளை முன்விடுதலை செய்வது தொடர்பான கோப்புகள் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. காரணம். பா.ஜ.க எம்.பி சுப்ரமணியன் சுவாமி தொடுத்திருந்த வழக்கு. அந்த வழக்கும் முடிவுக்கு வந்துவிட்டதால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாளில், முன்விடுதலை நம்பிக்கையோடு காத்திருந்த கைதிகளின் கனவுகள் வீணாகிவிட்டன. இதனால், அதிகப்படியான மனஉளைச்சலுக்கும் அவர்கள் ஆளானார்கள். "தமிழக சிறைகளில் இருபது ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் வாடும் கைதிகள் 80 பேர் உள்ளனர். பத்து ஆண்டுகளைக் கடந்து சிறைவாழ்க்கையை அனுபவித்து வருகின்றவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல். கடந்த ஆண்டு இவர்களின் முன்விடுதலை தொடர்பாக, அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவது என்பது கைதிகளுக்கான உரிமையாகப் பார்க்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர், சிறைக் கண்காணிப்பாளர், நன்னடத்தை அலுவலர் ஆகியோரைக் கொண்ட அறிவுரைக் கழகம், 14 ஆண்டுகள் சிறை வாழ்வை நிறைவு செய்தவர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்கிறது. இந்த அறிவுரைக் கழகம் முறையாகக் கூட்டப்படுவதில்லை.ஈஷா யோகா மையம் நடத்தும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கக் கூடாது: - கம்யூனிஸ்ட் தலைவர்கள்
[Wednesday 2017-02-22 13:00]

சென்னை, சேப்பாக்கத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின் போது, 'ஈஷா யோகா மையம் நடத்தும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கக் கூடாது' என்று தெரிவித்தனர். வரும் 24-ம் தேதி சிவராத்திரி அன்று ஈஷா யோகா மையம் சார்பில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். ஈஷா யோகா மையம் விதிமுறைகளை மீறியுள்ளதால், இந்நிகழ்வில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று மூவரும் கூறினர்.அப்போது பேசிய முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன், 'விதிகளை மீறி 13 லட்சம் சதுர அடியை ஆக்கிரமித்துதான் ஈஷா யோகா மையம் கட்டடங்களை நிறுவியுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி தொடர்ந்து கட்டடங்களைக் கட்டி வருகிறது ஈஷா. எனவே, வரும் 24-ம் தேதி நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கக் கூடாது' என்று கேட்டுக்கொண்டார்.அரசுக்கு ஆதரவான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக போராட்டம்:- ஸ்டாலினின் மகன் பங்கேற்பு
[Wednesday 2017-02-22 13:00]

சட்டசபையில் நடைபெற்ற பழனிச்சாமி அரசுக்கு ஆதரவான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு எதிர்த்து இன்று திமுகவினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சி உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சென்னையில் வள்ளுவர் கோட்டம், ஆதம்பாக்கம், மிண்ட் ஆகிய இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. வள்ளுவர் கோட்டம் அருகே எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் தலைமையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, ஸ்டாலின் மனைவி துர்கா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.மேலும், இந்த போராட்டத்தில் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டார்.அரசியலுக்கு வரப்போகிறாரா கமலஹாசன்?
[Wednesday 2017-02-22 13:00]

உலக நாயகன் கமலஹாசன் கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் தொடர்பான கருத்துக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்து வருகிறார்.அதிலும், குறிப்பாக தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் பிரச்சனைகள் குறித்து, மக்களுக்கு தெரியப்படுத்துவதில் உத்வேகமாக செயல்பட்டு, ஒரு குடிமகனாக தனது வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவுகளும், அரசியல் தரப்பில் இருந்து எதிர்ப்புகளும் வெளியாகின.கமலஹாசனின் இந்த அரசியல் கருத்துக்களை பார்த்த பலரும், இவர் அரசியருக்கு வரப்போகிறாரா? என கேள்வி எழுப்பின.கோவில் திருவிழாவில் 60 அடி தேர் கவிழ்ந்து விபத்து!
[Wednesday 2017-02-22 13:00]

இந்தியாவில் கோவில் திருவிழாவின் போது 60 அடி தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள கொட்டுரேஸ்வர கோவில் திருவிழாவிலே இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த தேர் திருவிழாவில் கலந்துக்கொண்ட ஆயிரக்கணக்கானோர் பக்தியுடன் தேரை இழுத்துக்கொண்டிருந்த போது திடீரென தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்துள்ளது. இதில் தேரின் சக்கரத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.வாகனத்தில் இருந்து பாட்ஷா ஸ்டைலில் இறங்கி வந்த ஸ்டாலின்: - சீமான் கிண்டல்
[Wednesday 2017-02-22 13:00]

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாகனத்தில் இருந்து பாட்ஷா ஸ்டைலில் இறங்கி வந்தார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அனைவரும் சந்தோஷமாக இருந்தததாக கூறுகின்றனர். இப்படி இருப்பதற்கா நாங்கள் அவர்களுக்கு வாக்களித்தோம்.கூவத்தூரில் என்ன சொல்லி கொடுத்தார்களோ, அதனை அப்படியே வந்து சட்டசபையில் செய்துவிட்டார்கள் அதிமுக எம்எல்ஏக்கள். இதற்கிடையில் சட்டசபையில் நடந்ததை பார்த்து மக்கள் சிரிப்பார்கள்.மீண்டும் அதிமுகவில் ஓ.பி.எஸ்: - சசிகலாவுடன் சமரசமா?
[Tuesday 2017-02-21 17:00]

ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் மீண்டும் சேர்த்து கொள்வது பற்றி சசிகலா தான் முடிவெடுக்க வேண்டும் என தம்பிதுரை எம்.பி கூறியுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக வெகுண்டெழுந்த ஓ.பி.எஸ் தனது தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க நினைத்தார்.ஆனால் மன்னார்குடி கோஷ்டி பல வேலைகளை செய்து அவர் ஆசையை கலைத்தது. சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார்.தற்போது செய்திளார்களிடம் பேசிய அதிமுகவை சேர்ந்த சசிகலா ஆதரவாளர் தம்பிதுரை, தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நிலையான ஆட்சி அமைந்துள்ளது.ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடையா? - அதிர்ச்சியில் தமிழர்கள்
[Tuesday 2017-02-21 17:00]

தமிழகத்தில் இந்தாண்டு நடந்த ஜல்லிக்கட்டில், காளைகள் துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆதரங்களை திரட்டி வருவதாகவும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடைசெய்யப்படுவதற்கு முக்கிய காரணம் பீட்டா அமைப்பு என்று கூறப்பட்டது.அதன் பின் இந்தாண்டு கண்டிப்பாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று இளைஞர்கள் உட்பட பலரும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர்.இணைய தளங்களில் ஹீரோவான நாய்: - ஏன் தெரியுமா?
[Tuesday 2017-02-21 17:00]

வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய், மனிதர்களின் பாதுகாப்புக்கும் உதவுகிறது.நாய்க்கு நன்றி உணர்வு உள்ள காரணத்தினாலேயே அனைவருக்கும் பிடித்த பிராணிகளின் வரிசையில் எப்போதும் நாய் முதல் இடத்தில் உள்ளது.ஆனால், என்னை போன்ற இனத்திற்கு நன்றி உணர்வு மட்டுமல்ல மனிதர்களுக்கு இருக்கக்கூடிய ஆறாவது அறிவான பகுத்தறிவும் இருக்கிறது என்று நிரூபித்துள்ளது இந்த நாய்.புதுச்சேரியில் இந்திராகாந்தி சிலை சந்திப்பு மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடமாகும்.எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையின் வழியாக மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.மூன்று வயது சிறுமி ரித்திகாவின் கொலையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்!
[Tuesday 2017-02-21 13:00]

எர்ணாவூரில் கொலை செய்யப்பட்ட 3 வயது சிறுமி ரித்திகாவின் வழக்கில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கலைவாணி என்பவரது மகள் ரித்திகா. இச்சிறுமி நேற்று காலை தனது வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளார்.இதில், எதிர் வீட்டில் வசித்து வந்த ரேவதி என்பவர் தான் ரித்திகாவை கொலை செய்துள்ளார் என தெரியவந்ததையடுத்து பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.ரேவதி அளித்துள்ள வாக்குமூலத்தில், வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிந்த ரித்திகா, திடீரென என்னுடைய வீட்டுக்குள் நுழைந்தாள். அப்போது அவளிது காலில் உள்ள வெள்ளிக்கொலுசை அபகரிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் 24-ம் தேதி திட்டம்!
[Tuesday 2017-02-21 08:00]

சசிகலா மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை அறுவடைசெய்ய, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் திட்டமிட்டு அதற்காக ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி் 24-ம் தேதியைத் தேர்ந்தெடுத்துள்ளார். இன்னும் சில மாதங்களில் பாருங்கள், யாருக்கு எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கும் என்று தெரியும்” சிரிக்கிறார்கள் பன்னீர் அணியி்ன் முக்கியப் புள்ளிகள். சசிகலாவுக்கு எதிராக தீடீர் என வெடித்துக் கிளம்பிய பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க. வில் மட்டுமல்ல பொதுமக்களிடமும் ஆதரவு பெருகியது.பன்னீருக்கு ஆதரவு தரவேண்டும் என்று அ.தி.மு.க எம்.எல்.ஏக்களைப் பொதுமக்கள் வலியுறுத்தியது, இதுவரை நடைபெறாத ஒரு நிகழ்வாக அமைந்தது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருந்த நிலையில், பன்னீர் செல்வம்-தீபா இருவரும் இணைந்து பணியாற்றப் போவதாக அறிவித்தனர்.சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை: - பள்ளி ஆசிரியர் கைது
[Tuesday 2017-02-21 08:00]

பெங்களூரின் பிளான்ந்தர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் 3 வயது சிறுமி, பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் தெரிந்தவுடன் அந்தப் பகுதியில் உள்ள நபர்களும், குழந்தையின் பெற்றோரும் பள்ளியை முற்றுகை இட்டனர்.இதையடுத்து, குற்றம் செய்த பள்ளி ஆசிரியர் மஞ்சுநாத் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி பள்ளிக்கு வந்தவுடன், மஞ்சுநாத் அவரை கழிவறைக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியுள்ளார். மாலையில், சிறுமிக்கு உடல்நிலை சரி இல்லாது போகவே, மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.பன்னீர் செல்வம் அணியினரின் எம்.எல்.ஏ பதவியை பறிக்க அஞ்சும் சசிகலா தரப்பு: - இதுதான் காரணம்!
[Tuesday 2017-02-21 07:00]

ஓபிஎஸ் அணி எம்.எல்ஏக்களின் பதவியைப் பறித்தால் மக்களின் எதிர்ப்பை மேலும் உக்கிரமாக சம்பாதிக்க வேண்டி வரும் என்று சசிகலா தரப்பினர் தயக்கம் காட்டிவருவதாக கூறப்படுகிறது. முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. இதனால் அதிமுக பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என்று இரண்டு அணிகளாக பிளவுப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாள்தோறும் தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.இந்நிலையில், ஓபிஎஸ் அணியை ஆதரிக்கும் 11 எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக கட்சியின் கொறடா உத்தரவை மதிக்காமல் கட்சிக்கு எதிராக வாக்களித்ததாக கூறி அவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பரவலாக கருத்து எழுந்தது.ஆனால் 12 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டால் தேவை இல்லாமல் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் இது திமுகவுக்கு பலமாக அமைந்துவிடும் என்றும் அதிமுக வட்டாரத்தில் கருத்து நிலவுகிறது.கருணாநிதியின் உடல் நலம் குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
[Tuesday 2017-02-21 07:00]

திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலின் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். காவிரி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய மு.கருணாநிதி, தமிழக அரசியலில் ஏற்பட்ட நெருக்கடி குறித்து தற்போது வரை எந்த அறிக்கையும் விடவில்லை. அவரது உடல்நலம் குறித்து திமுகவினர் கவலையில் இருந்தனர். இந்நிலையில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். கருணாநிதி உடல்நிலை குறித்து செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஸ்டாலின், கருணாநிதியின் உடல்நலக் குறைவுக்கு காரணம் அவரது வயது முதிர்வுதான். ஆனால் தற்போது அவரது உடல்நிலையில் படிப்படியான முன்னேற்றம் தெரிகிறது. ட்ரக்யோஸ்டோபி செய்யப்பட்டுள்ளதால், பேசுவதில் சிக்கல் உள்ளது. அவர் பேசுவதற்காக ஸ்பீச் தெரஃபி என்கிற பேச்சுப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். இது திமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எம்.ஜி.ஆர் பாணியில் பொதுமக்களுக்கு உணவளித்து வரும் . பன்னீர்செல்வம்!
[Tuesday 2017-02-21 07:00]

தனது வீடு, அலுவலகங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எம்.ஜி.ஆர் பாணியில் மூன்று வேளையும் உணவளித்து வருகிறார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். கடந்த 8ம் திகதி அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக அதிமுக தலைமைக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போர் கொடி தூக்கினார். அன்று முதல் இன்று வரை அவரை காண பல்வேறு தொண்டர்கள், பொதுமக்கள் அவர் வீட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், நெடுந்தொலைவில் இருந்து வருபவர்களுக்கு தொய்வு ஏற்படாமல் இருக்க அவரது வீட்டிலேயே காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சுடச்சுட உணவு வழங்கப்படுகிறது.ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கு: - சுப்ரமணியன் சுவாமி வெளியிட்ட பகீர் தகவல்
[Tuesday 2017-02-21 07:00]

இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஏர்செல்- மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம்தான் முக்கியக் குற்றவாளிகள் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பிரபல அரசியல்வாதி குறித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட இருப்பதாக தெரிவித்திருந்தார்.இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி, கார்த்தி சிதம்பரம் மற்றும் அவர் நடத்திவரும் நிறுவனங்கள், 21 வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை முறைகேடாகப் பயன்படுத்தி வருகின்றன. இதுகுறித்த தகவல்களை அவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இதுவரை தெரிவித்தது இல்லை.


Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
AIRCOMPLUS2014-02-10-14
Easankulasekaram-Remax-300716
<b>02-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ideal Entertainment நிறுவன அறிமுக விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>29-01-2017 அன்று ரொரன்டோவில் தமிழ்நாடு சமூக மன்றம்  நடாத்திய தைப்பொங்கல் விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>28-01-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற கனடா தமிழர் மரபு மாநாட்டு விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா