Untitled Document
October 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பொங்கல் விழாவிற்கு கட்டாயப் பொதுவிடுமுறை இல்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கிற கொடுஞ்செயல்: - சீமான்
[Monday 2017-01-09 18:00]

தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு பண்டிகையான பொங்கல் திருநாளுக்கு கட்டாயமாக பொது விடுமுறை அளிக்கத் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்து இருப்பது இந்நாட்டில் வசிக்கும் 10 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களை வெகுவாக காயப்படுத்தி இருக்கிறது. கர்நாடாகாவில் 1 கோடிக்கும் அதிகமான தமிழர்கள், மகாராசுடிரத்தில் ஏறக்குறைய 35 லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் என இந்நாடு முழுக்க தமிழர்கள் பரவி வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டு இருக்கிற இந்த அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கிற கொடுஞ்செயல்.

தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு பண்டிகையான பொங்கல் திருநாளுக்கு கட்டாயமாக பொது விடுமுறை அளிக்கத் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்து இருப்பது இந்நாட்டில் வசிக்கும் 10 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களை வெகுவாக காயப்படுத்தி இருக்கிறது. கர்நாடாகாவில் 1 கோடிக்கும் அதிகமான தமிழர்கள், மகாராசுடிரத்தில் ஏறக்குறைய 35 லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் என இந்நாடு முழுக்க தமிழர்கள் பரவி வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டு இருக்கிற இந்த அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கிற கொடுஞ்செயல்.

  

ஏற்கனவே காவிரி நதி நீர் சிக்கலில் உச்சநீதிமன்றம் உத்திரவிட்ட பிறகும் கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்தது, தமிழரின் தொன்மையான பண்பாட்டு நிகழ்வான சல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவது, பாடத்திட்டங்களில் சமஸ்கிருத மொழி திணிப்பு, கல்விக்கொள்கைகளில் மாற்றங்கள் என்பதான தொடர்ச்சியான தமிழர் விரோத செயல்களில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. தற்போது வெந்தப்புண்ணில் வெந்நீர் ஊற்றும் தமிழ்த்தேசிய இனத்தின் பெருமை மிகு திருவிழாவான பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை இல்லை என்று அறிவித்து இருப்பது தமிழர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பொங்கல் திருநாள் என்பது தமிழர்களின் தொன்மையான தேசியப் பண்டிகை. தமிழர்களின் பண்பாட்டு பெருமித வரலாற்றின் அடையாளச்ச்சின்னமாக பொங்கல் திருநாள் பண்டிகை விளங்குகிறது. தமிழர் நிலத்தில் கொண்டாடப்படும் இதர பண்டிகைகள் எல்லாம் காலப் போக்கில் வந்து ஊடுருவி திணிக்கப்பட்ட பண்டிகைகள் ஆகும்.ஆனால் உழவர் திருநாளாக, செந்நெல் எடுத்து உச்சி மோர்கிற அறுவடைப்பண்டிகையான பொங்கல் திருநாள் மட்டுமே தமிழர்களின் ஒரே பாரம்பரியப் பண்டிகை ஆகும்.

இப்படிப்பட்ட பெருமைகள் வாய்ந்த பொங்கல் திருநாளுக்கு கட்டாய விடுமுறை தேவையில்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கும் அறிவிப்பாகதான் இதை கருத வேண்டியுள்ளது. தமிழர் நிலத்தில் மட்டும் பிற இனத்து பண்டிகைகளான ஓணம் பண்டிகை, குருநானக் ஜெயந்தி,மகாவீர் ஜெயந்தி போன்ற பண்டிகைகளுக்கு விடுமுறை விடுகிற மத்திய அரசு தமிழர்களின் தேசிய திருவிழாவான பொங்கல் திருநாளுக்கு மட்டும் கட்டாய விடுமுறை அளிக்கத்தேவையில்லை என அறிவித்து இருப்பது அப்பட்டமான தமிழர் விரோத போக்கினையே காட்டுகிறது.

இந்தியா என்கிற நாட்டின் உருவாக்கத்திற்கும், அதன் சுதந்திர போராட்டத்திற்கும் தமிழர்கள் எண்ணற்ற ஈகங்கள் செய்திருக்கின்றனர். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் தொடங்கி , சமீபத்திய கார்கில் போர் வரையிலும் இந்நாட்டிற்காக தன்னுயிர் தந்த தமிழர்களின் தியாகம் அளப்பரியது. இந்நாட்டிற்கு வரி செலுத்தி, வாக்கு செலுத்தி மற்ற எல்லா மாநிலங்களையும் காட்டிலும் பற்றுறுதி மிக்க குடிமக்களாக திகழும் தமிழர்களை தொடர்ச்சியாக அவமானப்படுத்தி, காயப்படுத்தி வருவதன் மூலமாக மத்திய அரசு தமிழர்களை மாற்றாந்தாய் மக்களாகத்தான் பார்க்கிறது என்பதை உறுதி செய்யும் அறிவிப்பாகதான் மத்திய அரசின் இந்த அறிவிப்பு அமைந்திருக்கிறது.

சங்க காலம் தொடங்கி தமிழரின் வாழ்வியலில் இரண்டற கலந்துள்ள பெருமிதப்பண்டிகை பொங்கல் திருவிழாவாகும். தமிழரின் பண்பாட்டு விழுமியத் திருவிழாவான பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க மறுப்பதன் அரசியல் எம்மை இந்நாட்டின் மக்கள் இல்லை என மத்திய அரசே அறிவித்ததற்கு சமம்.

அதுவும் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் இந் நாட்களில் இது போன்ற அறிவிப்பு வெளியிடுவதற்கான உள்நோக்கம் தமிழர்களை சீண்டி பார்ப்பது அன்றி வேறென்ன…?

ஏற்கனவே இவ்வருடமாவது சல்லிக்கட்டு நடக்குமா என்கிற எதிர்பார்ப்பிலும், ஆற்றாமையிலும் இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாக போராடி வரும் இக் காலச்சூழலில் இது போன்ற அறிவிப்பினை திட்டமிட்டு வெளியிடும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு போராடி வரும் தமிழர்களை சல்லிகட்டு பிரச்சனையிலிருந்து திசைத்திருப்ப இது போன்ற அறிவிப்பினை வெளியிடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே மத்திய அரசு உடனே இதில் கவனம் செலுத்தி , வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பினை திரும்பப்பெற்று.. கொதித்துப் போய் இருக்கும் தமிழர் நிலத்தை போராட்டக்களமாக மாற்றிட வேண்டாம் என கோருகிறேன். மேலும் தமிழர்களின் தேசிய விழாவான பொங்கல் பண்டிகையை தேசியப் பண்டிகையாக அறிவித்து கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், மறுக்கும் பட்சத்தில் தமிழர்களை ஒரே குடையின் கீழ் திரட்டி நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக மாபெரும் போராட்டங்களில் ஈடுபடும் என எச்சரிக்கிறேன்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி.

  
   Bookmark and Share Seithy.com



புலி தாக்கியதில் 10 வயது சிறுமி பரிதாபமாக பலி!
[Monday 2017-10-23 15:00]

மத்தியப்பிரதேசம் மாநிலம் கானாபாத் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று தனது தம்பி மற்றும் சகோதரியுடன் கால்நடைகளை மேய்க்கச் சென்றுள்ளனர். ராத்தபானி விலங்குகள் சரணாலயத்திற்கு அருகில் உள்ள காட்டில் சென்று கொண்டிருந்த போது அங்கு திடீரென வந்த புலி சிறுமி மீது பாய்ந்தது. புலி கொடூரமாக தாக்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள்.



டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் ரம்மில் தரம் இல்லை: - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
[Monday 2017-10-23 15:00]

தமிழ்நாடு முழுவதும் மதுபான வகைகளை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு சுமார் 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது.இந்த கடைகள் மூலம், தினமும் சுமார் 30 லட்சம் லிட்டர் பிராண்டி, ஜின், ரம், வோட்கா, ஒயின் மது பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பீர் வகைகள் மட்டும் தினமும் சுமார் 10 லட்சம் லிட்டர் விற்பனையாகிறது.



கந்துவட்டிக் கொடுமையால் 2 குழந்தைகளுடன் பெற்றோர் தீக்குளிப்பு: - கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அதிர்ச்சி
[Monday 2017-10-23 15:00]

கந்துவட்டிக் கொடுமையால், கலெக்டர் அலுவலகத்தில் பச்சிளம் குழந்தைகளுடன் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தனர். பலத்த காயங்களுடன் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



நடிகர் விஜய்க்கு எதிராக காவல்நிலையத்தில் புகார்!
[Monday 2017-10-23 15:00]

பிரபல திரைப்பட நடிகர் விஜய் மீது மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் முத்துக்குமார் புகார் அளித்துள்ளார். அதில் "சமீபத்தில் மெர்சல் திரைப்படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தில் நடிகர் விஜய் கோயில்களுக்குப் பதிலாக ஆஸ்பத்திரிகள் கட்டலாம் என்று கூறியுள்ளார். இது முற்றிலும் இந்து மதத்துக்கு விரோதமானது ஆகும். திரைப்படங்களை நல்லவிதமாக நம்பிதான் பார்க்கச் செல்கின்றனர். ஆனால், கோயில்களை வெறுக்கும் விதமாகவும், இனிமேல் கோயில்கள் உருவாக்கக் கூடாது என்றும் தேவாலயம், மசூதி உள்ளிட்டவற்றை மட்டும் இந்தியாவில் இடம் பெற வேண்டும் என உள்நோக்கத்துடன் பேசியுள்ளார்.



நான் தவறாக எதுவும் பதிவு செய்யவில்லை: - தமிழிசை
[Monday 2017-10-23 15:00]

மெர்சல் திரைப்படத்தை விமர்சித்ததற்காக பலர் தன்னை தொலைபேசியில் அழைத்து திட்டுவதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தவறான கருத்து குறித்தே நான் பதிவு செய்தேன். நான் தவறாக எதுவும் பதிவு செய்யவில்லை. ஜனநாயகத்தில் எந்த ஒரு கருத்துக்கும் எதிர்கருத்து சொல்ல உரிமை உண்டு. அப்படி வெளியிடப்படும் கருத்துக்களை எதிர்கொள்வதற்கென உரிய வழியைத்தான் பின்பற்ற வேண்டும். தவறான புரிந்துணர்வு இருந்ததால்தான் கருத்து தெரிவித்தேன்.



ஆபாச படம் எடுத்து மிரட்டி இளம்பெண் கற்பழிப்பு:- வாலிபர் கைது
[Monday 2017-10-23 08:00]

திருவனந்தபுரம் அருகே பாறசாலை ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் ஷெகின்(வயது24). இவரது பக்கத்து வீட்டில் திருமணமான ஒரு பெண் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அந்த பெண்ணின் கணவர் வேலைக்கு சென்று இருந்த போது நைசாக அவரது வீட்டிற்குள் புகுந்த வாலிபர் ஷெகின் அந்த பெண் குளித்துக்கொண்டிருந்த காட்சியை தனது செல்போனில் ஆபாசமாக படம் பிடித்தார். அதன்பிறகு ஆபாச படத்தை காட்டி மிரட்டி அந்த பெண்ணை ஷெகின் கற்பழித்தார்.



வாய்த்தகராறில் மருமகனை சுட்டுக்கொன்ற மாமனார்!
[Sunday 2017-10-22 17:00]

பீகார் மாநிலத்தின் ககாரியா மாவட்டத்திற்குட்பட்ட கோக்ரி பகுதியில் வசித்து வருபவர் பெச்சான் ஷர்மா. இன்று அவரது வீட்டில் வைத்து அவருக்கும் அவரது மருமகன் கவுரவ் ஷர்மாவுக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பெச்சான் ஷர்மாவின் மகன் தீரஜ் ஷர்மாவும் சம்பவ இடத்தில் இருந்துள்ளார்.



பெண்ணைக் கொன்று கண்டதுண்டமாக வெட்டி சாக்கு மூட்டைகளில் வைத்து வீசிய கொலையாளிகள்!
[Sunday 2017-10-22 17:00]

மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி அருகே கால்வாயில் சாக்கு மூட்டையில் பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதாக சாந்தி நகர் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அந்த மூட்டையை கைப்பற்றி போலீசார் விசாரித்து வந்தபோது அருகாமையில் உள்ள மற்றொரு கால்வாயில் மேலும் ஒரு சாக்கு மூட்டையில் கொல்லப்பட்ட பெண் உடலின் இதர பாகங்கள் கிடைத்தன.



மர்ம நபர்களால் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சுட்டுக்கொலை!
[Sunday 2017-10-22 17:00]

உத்தர பிரதேச மாநிலம் காஜிபூரை சேர்ந்தவர் ராஜேஷ் மிஸ்ரா என்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர் நேற்று காலை மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை உ.பி. பா.ஜ.க. மாநில தலைவர் மகேந்திரநாத் பாண்டே ராஜேஷ் மிஸ்ராவின் வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்தார்.



மாநில உரிமைகள் அதிகாரங்களை மத்திய பா.ஜ.கா. அரசு ஒவ்வொன்றாக பறித்து வருகிறது: - வைகோ
[Sunday 2017-10-22 17:00]

வேளாண்மைத்துறையை மத்திய அரசின் பொறுப்புக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழக அரசு உடனே எதிர்ப்பு தெரிவிக்க வைகோ வலியுறுத்தியுள்ளார். வேளாண்மை, உணவுப்பதப்படுத்தும் துறையை மத்திய அதிகாரப்பட்டியலுக்கு மாற்றக் கூடாது என்று கூறினார்.



காதலனுடன் வி‌ஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை!
[Sunday 2017-10-22 17:00]

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கொக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் சுகாசினி (வயது 18). இவர் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தார்.குத்தாலம் அருகே ஆலங்குடி பகுதியை சேர்ந்த சீத்தாராமன் என்பவரது மகன் சுரேஷ் (21). கட்டிட தொழிலாளி.இந்த நிலையில் மாணவி சுகாசினிக்கும், சுரேசுக்கும் இடையே கடந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.



சிறைகளில் தினம் ஒருவர் மரணம்: - 5 ஆண்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
[Sunday 2017-10-22 17:00]

உத்தர பிரதேசம் மாநிலத்தில் 62 மாவட்ட சிறைச்சாலைகள், 5 மத்திய சிறைச்சாலைகள், 3 சிறப்பு சிறைச்சாலைகள் உள்ளன. இந்நிலையில், அங்குள்ள சிறைகளில், சிறை மரணங்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ஆக்ராவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரேஸ் பராஸ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சிறைத்துறையினரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு சிறைத்துறையினர் தற்போது பதிலளித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டிருப்ப்பதாவது:-



தாஜ்மகால் அமைந்துள்ள இடத்தில் கோவில் இருந்துள்ளது: -சுப்பிரமணியன் சுவாமி
[Friday 2017-10-20 16:00]

இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளதாகவும், இதற்கான ஆதாரத்தை விரைவில் தாம் ஊடகங்களுக்கு வழங்கவுள்ளதாகவும் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், முகலாய மன்னர் ஷாஜகான், ஜெய்ப்பூர் ராஜாக்களிடம் வலுக்கட்டாயமாக தாஜ்மகால் இருந்த இடத்தினை வாங்கியுள்ளார். அதற்கு ஈடாக 40 கிராமங்களை வழங்கியுள்ளார். ஆனால் தாஜ்மகால் நிலத்துக்கு இணையான மதிப்பு இது அல்ல என்று கூறியுள்ளார்.



பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு செய்ய வேண்டும்: - அற்புதம்மாள் கோரிக்கை மனு
[Friday 2017-10-20 16:00]

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு செய்ய வேண்டும் என அவரின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சுமார் 26 ஆண்டுகள் சிறையிலிருந்தார். இந்த நிலையில், தந்தை உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், இதனால் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு அளித்தார்.



என்னை பலாத்காரம் செய்த முதல்வர் உள்பட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: - சரிதா நாயர்
[Friday 2017-10-20 07:00]

‘கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உம்மன்சாண்டி உட்பட தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு சரிதா நாயர் கடிதம் அனுப்பியுள்ளார். கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் சரிதா நாயர். கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உம்மன்சாண்டி தலைமையிலான கடந்த காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ெபரும்பாலான அமைச்சர்கள் என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்தினர். அவர்கள் பெண்களை ஒரு போக பொருளாகத்தான் கருதினர்.



14 வயது சிறுவனை எரித்துக் கொன்ற சகோதரர்கள்!
[Friday 2017-10-20 07:00]

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் உள்ளது தப்தாரா கிராமம். இங்கு நேற்று முன்தினம் மாலை ராம் பிரசாத் என்பவரது பேரன் யோகேந்திரன் கோயிலில் சாமி கும்பிட சென்றிருந்தான். அப்போது யோகேந்திரன் மீது சோட்டு, சகர்பால் மற்றும் தர்மபால் என்ற 3 சகோதரர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தனர். இதில் படுகாயம் அடைந்த யோகேந்திரன் அலிகார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.



இரு மாதங்களில் 50 மாணவ மாணவிகள் தற்கொலை: - பயிற்சி மையங்களின் அழுத்தம் காரணமா?
[Friday 2017-10-20 07:00]

தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் கடந்த இரு மாதங்களில் மட்டும் 50 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பயிற்சி மையங்களில் அளிக்கப்படும் அழுத்தம்தான் காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுகின்றன.



தீபாவளி நாளில் 12 பேர் படுகொலை: - தமிழகம் புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்
[Friday 2017-10-20 07:00]

தமிழகம், புதுச்சேரியில் தீபாவளியன்று ஒரே நாளில் 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் தெருவில் தீபாவளிக்கு முதல்நாள் நள்ளிரவு மது போதையில் இருந்த அந்தோணி என்பவர், கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 2 பேரிடம் அதை கேட்டுள்ளார். அதில் ஏற்பட்ட தகராறில் அவர் படுகொலை செய்யப்பட்டார். மதுரை மேலூர், வாடிப்பட்டி, சிலைமான், திடீர் நகர், முள்ளிப்பள்ளம் என 5 இடங்களில் நடந்த மோதலில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.



கமலை கைது செய்யக்கோரி கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு!
[Thursday 2017-10-19 18:00]

நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவலை கமல் பரப்புவதாக அவரை கைது செய்ய வலியுறுத்தி சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.நிலவேம்பு கசாயம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தகவல் வெளியிட்டு இருந்தார். அதில் சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை ரசிகர்கள் நிலவேம்பு வினியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று கூறியிருந்தார்.



கொள்ளையர்களால் வயதான தம்பதிக்கு நேர்ந்த சோகம்: - அதிர்ச்சி சம்பவம்
[Thursday 2017-10-19 17:00]

தாலிச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு பெண்ணைத் தாக்கிவிட்டுச் சென்ற ஹெல்மெட் கொள்ளையர்களால் கொளத்தூர் பகுதி பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.தாலிச்சங்கிலியைப் பறிக்கும் ஹெல்மெட் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வழிப்பறி ஆசாமிகளிடம் தாலியைப் பறிகொடுத்த லலிதா, ராஜமங்கலம் காவல் நிலையத்தில் இதுகுறித்துப் புகார் அளித்துள்ளார். லலிதாவின் கணவர் ஏ.வி.நாராயணனிடம் பேசினேன். நடந்த சம்பவத்தை விவரித்தார்.


Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா