Untitled Document
June 27, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழ்நாட்டில் 18 வயதுக்குள் திருமணமான பெண்கள் 2.65 லட்சம் பேர்!
[Tuesday 2017-01-10 17:00]

தமிழகத்தில் 18 வயதுக்குள்பட்ட பெண் மக்கள்தொகையில் 2.65 லட்சம் பேர் திருமணமானவர்கள் என அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாவட்டத் தலைவர் டாக்டர் பெ.ரங்கநாதன் தெரிவித்தார்.நாமக்கல் அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் மற்றும் திருச்செங்கோடு விவேகானந்தா செவிலியர் கல்லூரி சார்பில் நாமக்கல் அருகே ஜங்களாபுரத்தில் குழந்தைத் திருமணம் தடுப்பு மற்றும் பெண் சிசுக் கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஜங்களாபுரம் கிராமப் பிரமுகர் கொண்டப்பநாயக்கர் தலைமை வகித்தார். அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் டாக்டர்.பெ.ரங்கநாதன் பங்கேற்றுப் பேசியது:இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-இன் படி தமிழகத்தில் 14 வயதுக்குக் குறைவான குழந்தைகள் திருமணம் 85 ஆயிரம் பேருக்கு நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்ட பெண் மக்கள்தொகையில் 2.65 லட்சம் பேர் திருமணமானவர்கள்.

தமிழகத்தில் 18 வயதுக்குள்பட்ட பெண் மக்கள்தொகையில் 2.65 லட்சம் பேர் திருமணமானவர்கள் என அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாவட்டத் தலைவர் டாக்டர் பெ.ரங்கநாதன் தெரிவித்தார்.நாமக்கல் அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் மற்றும் திருச்செங்கோடு விவேகானந்தா செவிலியர் கல்லூரி சார்பில் நாமக்கல் அருகே ஜங்களாபுரத்தில் குழந்தைத் திருமணம் தடுப்பு மற்றும் பெண் சிசுக் கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஜங்களாபுரம் கிராமப் பிரமுகர் கொண்டப்பநாயக்கர் தலைமை வகித்தார். அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் டாக்டர்.பெ.ரங்கநாதன் பங்கேற்றுப் பேசியது:இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-இன் படி தமிழகத்தில் 14 வயதுக்குக் குறைவான குழந்தைகள் திருமணம் 85 ஆயிரம் பேருக்கு நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்ட பெண் மக்கள்தொகையில் 2.65 லட்சம் பேர் திருமணமானவர்கள்.

  

18 வயதுக்கு முன் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதால் அவர்கள் உடல் மற்றும் மன ரீதியாகப் பாதிக்கப்படுவர் என்பதை உணர வேண்டும்.புத்தகம் சுமக்க வேண்டிய வயதில் நம் பெண் குழந்தைகள் குழந்தைகளைச் சுமக்கும் தாயாக உலவி வருவது வேதனைக்குரியது. பெண் குழந்தைகளின் கனவு சிதைக்கப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கு எடுக்கும்போது 18 வயதுக்கு முன் பெண்கள் திருமணம் பூஜ்யம் என்ற இலக்கை அடையப் பாடுபட வேண்டும் என்றார்.முன்னதாக குழந்தைகள் திருமணம், பெண் சிசுக் கருக்கொலை தொடர்பான விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. மேலும், குழந்தைத் திருமணம் தொடர்பாக 1098 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துத் திருமணத்தைத் தடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

  
   Bookmark and Share Seithy.com



காதலன் பேசலையே: மாணவி தற்கொலை!
[Tuesday 2017-06-27 09:00]

காதலன் பேசவில்லை என்பதால் வெறுப்படைந்த நர்சிங் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.பெங்களூர் அருகே உள்ள திப்பகோனடனஹள்ளியில் நர்சிங் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் படித்துவருகின்றனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த ரஸியா கதூன் என்பவரும் படித்துவந்தார். இவர் தன்னுடன் படித்தவரை காதலித்துவந்தார். இருவரும் சில வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் சேர்ந்து தனியாக வீடு எடுத்து வசிக்கலாம் என்று கூறினார் ரஸியா. இதற்கு காதலர் சம்மதிக்கவில்லை. இதையடுத்து கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ரஸியாவின் போன் கால்களை தவிர்த்து வந்தாராம் காதலர். இந்நிலையில் தற்செயலாக ரஸியா தங்கி இருந்த அறைக்குச் சென்றார் காதலர்.



இது கடவுளின் செயல்.....நாங்கள் என்ன செய்ய முடியும்
[Tuesday 2017-06-27 09:00]

காஷ்மீரில் கேபிள் கார் அறுந்து விழுந்து 7 பேர் பலியான சம்பவம் கடவுளின் செயல் என்று தெரிவித்த அதிகாரிகள், தாங்கள் பின்பற்ற வேண்டிய விதிகளை முறையாக பின்பற்றியதாக தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் உள்ள கேபிள் கார் பல அடி உயரத்திலிருந்து அறுந்து விழுந்தது. இதில் பயணம் செய்த 7பேர் பரிதாபமாக பலியானார்கள். உலகின் 2வது உயரமான கேபிள் கார் சேவை என்று பெயரைப் பெற்ற இங்கு நிகழ்ந்த விபத்தால் அம்மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அதிகாரிகளின் கவனக்குறைவே இந்த விபத்திற்கு காரணம் என காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா குற்றஞ்சாட்டினார்.



மிஸ் இந்தியா வென்றார் மனுஷி சில்லார்
[Tuesday 2017-06-27 09:00]

2017-ஆம் ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் தட்டிச் சென்றார். அழகிப் பட்டத்திற்கான கிரீடம் அவருக்கு சூட்டப்பட்டது. 52-ஆவது மிஸ் இந்தியா பட்டத்திற்கான போட்டி மும்பையில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் 30 மாநிலங்களை சேர்ந்த பல்வேறு அழகிகள் கலந்து கொண்டு மேடையில் ஒய்யாரமாக நடந்தனர். இறுதியில் நடுவர்கள் குழு இந்தாண்டிற்கான மிஸ் இந்தியாவாக ஹரியான மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லாரின் பெயரை அறிவித்தது. இதனையடுத்து மனுஷி மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கினார். அவருக்கு மிஸ் இந்தியா அழகிப் பட்டத்திற்கான கிரீடம் சூட்டப்பட்டது.



முதலை கடி கையும் போச்சு.....வழக்கும் பதிவாச்சு...
[Tuesday 2017-06-27 09:00]

பெங்களூரைச் சேர்ந்த ஐஐடி மாணவர் ஒருவர் வனப்பகுதியில் சுற்றுலாவுக்கு சென்ற போது அவரின் கையை முதலை ஒன்று கடித்து குதறியது. ஐஐடி மாணவரான முடிட் தண்வாடே பெங்களூருவில் புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கி அதனை நிர்வாகித்து வருகிறார். 26 வயதான இவர் விடுமுறை நாட்களில் வனப்பகுதிகளுக்கு சென்று நேரத்தை கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் பெங்களூருவில் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக சுற்றுலா சென்ற தண்வாடே, அங்குள்ள நீர்நிலைகளில் நேரத்தை கழித்துள்ளார். தனது நண்பர்கள் மற்றும் இரண்டு நாய்களுடனும் சென்ற அவர் நீர்நிலையில் விளையாடிக்கொண்டிருந்த போது, திடீரென நீரிலிருந்து வெளியே வந்த முதலை ஒன்று அவரின் இடது கையை கவ்வியது.



மது விருந்து சுற்றுலாவுக்கு சென்ற கப்பல்
[Monday 2017-06-26 07:00]

சென்னை துறைமுகத்தில் இருந்து மது விருந்து சுற்றுலாவுக்கு 60-க்கும் மேற்பட்டோர்களை ஏற்றிச் சென்ற சொகுசுக் கப்பல் சாதவினா என்ற கப்பல் கரை திரும்பியது. சாதவினா கப்பல் குறிப்பிட்ட நேரத்தில் கரைக்குத் திரும்பாததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் பதற்றம் அடைந்தனர்.



’கருப்பு தினம்’: நினைவுகூர்ந்த பிரதமர் மோடி
[Monday 2017-06-26 07:00]

அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நாட்கள் இந்திய வரலாற்றின் கருப்பு தினம் என்று எமர்ஜென்சி நாட்களை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு வானொலி உரையாற்றிய பிரதமர் மோடி, எமர்ஜென்சியின் போது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜனநாயகத்தின் மாண்புகளை காத்தனர் என்று கூறியுள்ளார். ஜனநாயகம் என்பது நமது பண்பாடு என கூறி இருக்கும் மோடி, ஜனநாயகத்தை விரும்புபவர்கள், கடந்த 1975 ஜூன் 25 நள்ளிரவை மறக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.



பொது இடங்களில் தொழுகையில் ஈடுபடக் கூடாது
[Monday 2017-06-26 07:00]

ஜம்மு காஷ்மீரில் போலீசார் பொது இடங்களில் தொழுகையில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஸ்ரீநகரில் பெரிய மசூதியில் காவல் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, அம்மாநில காவல்துறை பொது இடங்களில் ரமலான் தொழுகையில் ஈடுபட வேண்டாம் என போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளது. மாவட்டங்களில் போலீஸ் அனுமதி பெற்ற மசூதிகள் மற்றும் பாதுகாப்பு நிறைந்த மசூதிகளில் தொழுகையில் ஈடுபட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.பொதுவான மசூதிகள் மற்றும் தனிமையான இடங்களில் ரமலான் தொழுகையை நடத்ததாதீர்கள் என போலீஸ் கட்டுப்பாட்டு அறை போலீசார் அனைவருக்கும் அறிவுரையை வழங்கியுள்ளனர்.



காவலர் சங்கமா? - நடவடிக்கை பாயும்
[Monday 2017-06-26 06:00]

காவலர் சங்கம் அமைப்பது, அவ்விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்திப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனகாவல்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீண்ட நாளாக காவல்துறையினர் சங்கம் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது சமீபகாலமாக அதற்கான முயற்சிகளில் குறிப்பிட்ட சில போலீசார் தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது. காவல்துறையில் உள்ள சிலர் இவ்விவகாரம் தொடர்பாக ரகசியமாக ஆள் சேர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும்போலீசாருக்கு என்று தனி சங்கம் அமைக்க கோரி முதல்வரை அவர்கள் குடும்பத்துடன் விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் சமூக வலைதளங்கில் தகவல் வெளியாகின.



பாஸ்போர்ட்டில் இந்தி திணிப்பு - ஸ்டாலின் கண்டனம்
[Sunday 2017-06-25 06:00]

இந்தியில் பாஸ்போர்ட் என்ற அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இனி வரும் காலங்களில் பாஸ்போர்ட் இந்தியிலும் ஆங்கிலத்திலும் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாஸ்போர்ட் சட்டத்தின் 50 வது ஆண்டு விழாவில் பேசியிருப்பதற்கு திமுக சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



நீட் தேர்வால் மருத்துவக் கனவு தகர்ந்தது
[Sunday 2017-06-25 06:00]

197க்கு மேல் கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் போனதாக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு பள்ளியில் படித்த மாணவிகள் கவலை தெரிவிக்கின்றனர். வந்தவாசி அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த இரட்டை சகோதரிகளான நிலா பாரதி மற்றும் அன்புபாரதி ஆகியோர் மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த போதும் நீட் தேர்வில் ‌குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தங்களது மருத்துவ படிப்பு கனவு தகர்ந்த‌துள்ளதாக அம்மாணவிகள் கவலை தெரிவிக்கின்றனர்‌.



மோடிக்கு பிரத்யேக குஜராத்தி விருந்தளித்த போர்ச்சுகல்
[Sunday 2017-06-25 06:00]

அரசுமுறைப் பயணமாக போர்ச்சுகல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் அண்டோனியா கஸ்டோ பிரத்யேக குஜராத்தி விருந்தளித்தார். பிரதமர் மோடி மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் பகுதியாக போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் சென்றடைந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை குஜராத்தி மொழியில் வரவேற்ற கோஸ்டா, மோடிக்காக பிரத்யேக குஜராத் பாரம்பரியம் கொண்ட மதிய உணவு விருந்தினையும் அளித்தார்.



சிக்கன் சாப்பிட ஒரு வாரம் விடுமுறை கேட்ட ஊழியர்
[Saturday 2017-06-24 06:00]

சிக்கன் சாப்பிடுவதற்காக ஒரு வாரம் விடுமுறை அளிக்குமாறு ரயில்வே ஊழியர் ஒருவர் எழுதிய விடுமுறை விண்ணப்ப கடிதம் ஆன்லைனில் வைரலாகப் பரவி வருகிறது.சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் ரயில் நிலையத்தில் பணிபுரிபவர் பகைராஜ் கோண்ட். இவர், நிலைய அதிகாரிக்கு கடந்த ஜூன் 17ல் ஒருவாரம் விடுமுறை வேண்டி விண்ணப்பம் அளித்தார். அதில், புனித ஷ்ரவான் மாதம் ஒருவாரத்தில் தொடங்க இருக்கிறது. அந்த மாதம் தொடங்கினால் என்னால் கோழி இறைச்சி உணவை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, ஷ்ரவான் மாதம் தொடங்குவதற்கு முன்பாக கோழி இறைச்சி உணவை எடுத்துக் கொள்ள ஒரு வாரம் விடுமுறை அளிக்க வேண்டும் என கோண்ட் குறிப்பிட்டுள்ளார்.



வண்டி நம்பரின் விலை...... ரூ.16 லட்சமா....!
[Saturday 2017-06-24 06:00]

டெல்லியில் போக்குவரத்துறை சார்பாக நடத்தப்பட்ட இ-ஏலத்தில் "0001" என்ற வண்டி எண் ரூ.16லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.டெல்லி அரசு சார்பாக ஃபேன்சி நம்பர்கள் கொண்ட வண்டி எண்கள் கடந்த 2014ம் ஆண்டு முதல் இ-ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நகரப்பகுதியில் வாழும் செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் மற்றும் மக்கள் சேவையில் உள்ள நிறுவனத்தினர் இவ்வாறு ஃபேன்சி வண்டி எண்களை பெறுவதற்கு பெரும் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலைியல் "0001" என்ற வண்டி எண் போக்குவரத்து துறை சார்பாக ஏலம் விடப்பட்டது. இந்த இ-ஏலத்தில் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், பாம் லேன்ட் என்ற தனியார் நிறுவனம் 16 லட்சம் ரூபாய்க்கு இந்த எண்ணை ஏலம் எடுத்துள்ளது.



திருமணத்திற்கு மறுத்த காதலன்.. ஆணுறுப்பை நறுக்கிய இளம்பெண்!
[Saturday 2017-06-24 06:00]

டெல்லியில் திருமணம் செய்ய மறுத்த வாலிபரின் ஆணுறுப்பை இளம்பெண் கத்தியால் நறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி மங்ஹால்புரி பகுதியைச் சேர்ந்தவர் அந்த 23 வயதான இளம்பெண். அதே பகுதியில் சாலையோர கடை நடத்தி வரும் 35 வயது நபரான ரவி. இவர் அந்த இளம்பெண்ணை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அவ்வப்போது தன்னை திருமணம் செய்யும்படி ரவியிடம் அந்த இளம்பெண் வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் ஒருவரை ஒருவர் விரும்பினாலும் ரவியின் வீட்டில் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதனால், ரவி அந்த இளம்பெண்ணை அடிக்கடி சந்திப்பதை தவித்து இருக்கிறார். இந்நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என ரவியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்



மீண்டும் பிளாஸ்டிக் முட்டை..
[Saturday 2017-06-24 06:00]

பிளாஸ்டிக் முட்டை என்பது இன்றளவும் வதந்தி என்ற அளவிலேயே இருக்கிறது. ஆனால், ஆங்காங்கே பிளாஸ்டிக் முட்டை விற்கப்படுவதாக புகார்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜான் என்பவர், நேற்று அதே பகுதியில் உள்ள கடை ஒன்றில் பதினைந்து நாட்டு முட்டைகளை வாங்கியுள்ளார். இன்று காலை குழந்தைகளுக்கு சாப்பாடு கட்டிக்கொடுக்க முட்டையை வேகவைத்தபோது ஒரு முட்டையின் மஞ்சள் கரு மட்டும் பிளாஸ்டிக் போல இருந்தது.



பாஜகவின் பினாமி அரசு அதிமுக அரசு: - ராமதாஸ் பேட்டி
[Friday 2017-06-23 18:00]

கடந்த 2011- ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் பண்ருட்டி தொகுதியில் சபா.ராஜேந்திரன் போட்டியிட்டார். அவரை ஆதரித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன், பாமக தலைவர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் எம்எல்ஏ தி.வேல்முருகன், முன்னாள் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, திரைப்பட நடிகர் நெப்போலியன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.



பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுவிக்கப்படுவது குறித்து மத்திய அமைச்சர் பதில்:
[Friday 2017-06-23 18:00]

ராஜுவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது தொடர்பாக மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜுவ் படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தனு உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களது விடுதலை குறித்து சட்டப்பேரவையில் மனித நேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி எம்எல்ஏ வியாழக்கிழமை கேள்வி எழுப்பினார்.



பசியை ஒழிக்கப் பாடுபடும் இளைஞர் அங்கித் கவத்ராவுக்கு இங்கிலாந்து ராணி விருது:
[Friday 2017-06-23 18:00]

பசியை ஒழிக்கப் பாடுபடும் இளைஞர் அங்கித் கவத்ராவுக்கு இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் ‘இளம் தலைவர்’ விருதை அளிக்க உள்ளார். லண்டன், பக்கிங்ஹாம் அரண்மனையில் நடக்கும் இந்த விருது விழா, 29-ம் தேதி நடைபெற உள்ளது. பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த அங்கித் கவத்ரா, கடந்த 2014-ம் ஆண்டு வேலையை உதறிவிட்டு ‘ஃபீடிங் இந்தியா’என்ற தன்னார்வ அமைப்பை தொடங்கினார். இதன் மூலம் வீடுகள், ஓட்டல்கள், கேன்டீன்கள் மற்றும் விழாக்களில் மீதமாகும் உணவைப் பெற்று, அதை பசியால் வாடுபவர்களுக்கும், உணவு தேவைப்படும் இடங்களுக்கும் விநியோகித்து வருகிறார்.



ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு - நீதிமன்றம் முடிவெடுக்க உத்தரவு:
[Friday 2017-06-23 18:00]

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை,‌ காவல் துறையி‌னர் வி‌சாரிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று முடிவெடுக்க உள்ளது. ஜெயலலிதா இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அதனை விசாரிக்க வேண்டும் எனவும் கடந்த மே 22 ஆம் தேதி செல்வ விநாயகம் என்ற வழக்கறிஞர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் முறையிட்டார். அதில், அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிக‌லா, மு‌தலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முத‌லமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 186 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் எ‌ன அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.



கருணைக் கொலை செய்யுங்கள்.. ராஜீவ் கொலை வழக்கு கைதி
[Thursday 2017-06-22 09:00]

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தன்னை விடுவிக்கவில்லை என்றால் கருணைக் கொலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ராபர்ட் பயாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.ராஜூவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு 25 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறையில் 25 ஆண்டுகளை கழித்துள்ளதால், தங்களை விடுவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா