Untitled Document
January 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
அரசியலுக்கு ரஜினிகாந்த் எந்த விதத்திலும் தகுதியானவர் இல்லை: - சுப்பிரமணிய சுவாமி
[Tuesday 2017-01-10 17:00]
 

தமிழகத்தில் தற்போது இருக்கும் பாஜகவின் நிர்வாக அமைப்பை வைத்துக்கொண்டு மாற்று அரசியலை கொண்டுவர முடியாது என பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இவர், தமிழகத்தைப் பொறுத்தவரையில் வாக்காளர்கள் சுயமாக வாக்களிக்கக் கூடியவர்கள்.இளைய தலைமுறை வாக்காளர்கள் தேசிய சிந்தனையுடன் இருக்கிறார்கள். மேலும், அரசியலுக்கு ரஜினிகாந்த் எந்த விதத்திலும் தகுதியானவர் இல்லை.மேலும், தமிழக அரசியல் குறித்து தெரியாத அவர், எதிலும் நிலையானவர் அல்ல. மேலும் ரஜினிகாந்த் மூலம் சசிகலாவுக்கு எந்த ஒரு அரசியல் சவாலும் வரப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது இருக்கும் பாஜகவின் நிர்வாக அமைப்பை வைத்துக்கொண்டு மாற்று அரசியலை கொண்டுவர முடியாது என பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இவர், தமிழகத்தைப் பொறுத்தவரையில் வாக்காளர்கள் சுயமாக வாக்களிக்கக் கூடியவர்கள்.இளைய தலைமுறை வாக்காளர்கள் தேசிய சிந்தனையுடன் இருக்கிறார்கள். மேலும், அரசியலுக்கு ரஜினிகாந்த் எந்த விதத்திலும் தகுதியானவர் இல்லை.மேலும், தமிழக அரசியல் குறித்து தெரியாத அவர், எதிலும் நிலையானவர் அல்ல. மேலும் ரஜினிகாந்த் மூலம் சசிகலாவுக்கு எந்த ஒரு அரசியல் சவாலும் வரப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

  

எனவே, தற்போது இருக்கும் தமிழக பாஜகவை கலைத்துவிட்டு, பொறுப்பை என்னிடம் கொடுத்தால் மாற்று அரசியல் உண்டாகும் என கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



தமிழக சட்டபேரவையில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா நிறைவேற்றம்!
[Monday 2017-01-23 18:00]

தமிழக சட்டபேரவையில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.கடந்த 21ம் திகதி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை பிறப்பித்தார்.இதனையடுத்து, இந்த அவசர சட்டம் இன்று சட்டசபையில் நிறைவேற்றப்படும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இன்று 2017ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் தொடங்கியவுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரைக்கு பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது.



முதல்வராக பதவியேற்க திட்டமிட்ட சசிகலா? - பரபரப்பு தகவல்
[Monday 2017-01-23 18:00]

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எதிர்வரும் 28ம் திகதி முதல்வராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.அப்படியே முதல்வராக அலங்காநல்லூர் சென்று ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்து மக்களிடம் நல்ல பெயரை பெறவும் திட்டமிட்டுள்ளாராம்.ஜல்லிக்கட்டுக்கு தமிழகமெங்கும் புரட்சி போராட்டம் நடைபெற்ற நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழக சட்டபேரவையிலும் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.



அடிதடி நடத்தி போராட்டத்தை கலைக்க இதுதான் காரணமா? - வெளியான பரபரப்பு தகவல்கள்
[Monday 2017-01-23 18:00]

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் அறவழியில் நடத்தப்பட்ட போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது.தமிழகம் முழுவதும் புரட்சி போராட்டம் வெடித்ததால் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் தங்களுக்கு நிரந்த சட்டம் மட்டுமே தேவை என்று போராட்டக்காரர்கள் தங்களது போராட்டங்களை கைவிட மறுத்தனர்.இந்நிலையில் இன்று காலையில் இருந்து போராட்டக்காரர்களை பொலிசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும், கல்களை வீசியும் கலைத்து வருகின்றனர்.



இந்தியாவில் பெண்ணுக்கு பிறந்த ஏலியன் குழந்தை: - அதிர வைக்கும் சம்பவம்
[Monday 2017-01-23 18:00]

இந்தியாவில் பெண் ஒருவருக்கு தடித்த வெள்ளை தோல், சிவப்பு கண்கள் மற்றும் தலைகீழ் உதடுகளுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலத்திலே இந்த குழந்தை பிறந்துள்ளது, குழந்தையின் பெற்றோர் குழந்தை ஏற்க மறுத்துள்ளனர், தாய் குழந்தையை தூக்கி பால் கொடுக்க மறுத்து வருகிறார்.மேலும், விசித்திரமாக பிறந்த குழந்தையை காண மக்கள் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.



மெரினாவில் இளைஞர்கள் மீது தடியடி: - மறுபக்கம் சட்டப்பேரவையில் ஆளுநர் புகழாரம்!
[Monday 2017-01-23 10:00]

இளைஞர்களின் எழுச்சி காரணமாகவே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்திருப்பதாக சட்டப்பேரவையில் ஆளுநர் புகழாரம் சூட்டும் அதே நேரம், அதே இளைஞர்கள், காவல்துறையினரால் கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்படும் அவலம் நடந்தேறுகிறது. தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடர் இன்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கூட்டத் தொடரை தொடங்கி வைத்து, ஆளுநர் வித்யாசாகர் உரையாற்றினார். அப்போது, இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தால், இன்று ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும். அறவழியில் போராடிய மாணவர்கள், இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் என்று கூறினார்.மேலும், தமிழக அரசின் நடவடிக்கையால் வன்முறை இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்குவதாகவும் அவர் புகழ்ந்து பேசினார்.



மெரினாவிலிருந்து கலையமறுக்கும் இளைஞர்களை வெளியேற்ற திணறும் காவல்துறை!
[Monday 2017-01-23 08:00]

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வுகோரி மெரினா கடற்கரையில் குழுமியிருக்கும் இளைஞர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர்.ஆனால் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்த இளைஞர்கள் கடற்கரையை ஒட்டி குழுமியிருக்கின்றனர்.அவர்களை காவல்துறையினர் தகாத வார்த்தைகளில் திட்டிவருகின்றனர். அத்துடன் செய்தியாளர்களையும் அப்பகுதிக்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.



மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய காவல்துறை!
[Monday 2017-01-23 07:00]

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை காவல்துறையினர் வெளியேற்றத் துவங்கியுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வேண்டி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் கூடி ஜல்லிக்கட்டுக்காக போராடி வருகின்றனர்.இந்நிலையில் இன்று அதிகாலை மெரினாவில் உள்ள போராட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து செல்லுமாறு சென்னை காவல்துறை அறிவுறுத்தியது. அதனைத் தொடர்ந்து கூடுதலாக 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மெரினா கடற்கரை சாலையில் குவிக்கப்பட்டனர்.



காளை பந்தயம் நடத்த அனுமதி அளிக்குமாறு மகராஷ்டிர அரசை வலியுறுத்தும் சிவசேனா!
[Monday 2017-01-23 07:00]

ஜல்லிக்கட்டுக்குக்கு அவசர சட்டம் இயற்றப்பட்டதை தொடர்ந்து காளை பந்தயம் நடத்த அனுமதி அளிக்குமாறு மகராஷ்டிர அரசை சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.போராட்டத்தின் விளைவாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் எதிரொலியாக இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.



ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மகளுடன் தீக்குளிக்க முயன்ற தந்தை: - ஆற்காட்டில் பரபரப்பு
[Monday 2017-01-23 07:00]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள ஆற்காட்டில் மகளுடன் இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மெரினாவில் இன்று 6ஆவது நாளாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவு குவிந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று உலக அளவில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.



அடுத்து தமிழக மாணவர்கள் போராட போவது எந்த விடயத்துக்கு தெரியுமா? - பரபரப்பு தகவல்கள்
[Monday 2017-01-23 07:00]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கோரி தமிழகமெங்கும் கடந்த ஆறு நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.மாணவர்கள், இளைஞர்கள் என பல தரப்பினர் இரவு, பகல் என்று பாராமல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.இதனிடையில் இந்த போராட்டத்தால் தமிழகத்துக்கு மேலும் ஒரு நல்ல விடயம் நடந்துள்ளது. டாஸ்மாக் மதுபான விற்பனை பெரும் சரிவை கண்டுள்ளது.தமிழகத்தில் மொத்தம் 6300 டாஸ்மாக் மதுகடைகள் உள்ளன. இதன் மூலம் அரசுக்கு தினசரியாக 80 கோடி அளவு வருமானம் வருகிறது.



இளைஞர்களது மரணத்துக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: - திருமாவளவன்
[Sunday 2017-01-22 17:00]

ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசர சட்டம் நிறைவேற்றிவிட்டோம் எனத் தமிழக அரசாங்கம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் புதுக்கோட்டையில் தமிழக அமைச்சர் ஒருவரால் துவக்கிவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுமார் நூறுபேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பாதுகாப்பாக நடத்துவதில் அக்கறைகாட்டாமல் அவசர சட்டம் கொண்டுவந்ததற்கு சொந்தம் கொண்டாடுவதில் மட்டுமே ஆர்வம் காட்டிய தமிழக அரசின் நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். உயிரிழந்த இளைஞர்களது மரணத்துக்கு தமிழக அரசே பொறுப்பேற்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.ஜல்லிக்கட்டில் பார்வையாளராக நின்றிருந்த ஒரு இளைஞர் உயிரிழந்ததால் அவரது தந்தை தொடர்ந்த வழக்கில்தான் முதன்முதலில் ஜல்லிக்கட்டுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது.



ஜல்லிக்கட்டில் காளை முட்டி இருவர் பலி: - புதுக்கோட்டையில் சம்பவம்
[Sunday 2017-01-22 17:00]

தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது. இந்நிலையில் புதுக்கோட்டையில் ராப்பூசலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளை முட்டி ராஜா மற்றும் மோகன் என்ற இருவர் உயிரிழந்தனர்.மேலும், 55 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்தவர்களில் ஐந்து பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



சசிகலாவை கண்டுகொள்ளாத ஓபிஎஸ்: - ஏன் தெரியுமா?
[Sunday 2017-01-22 17:00]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம் நடந்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று பிற்பகலில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து அந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கும் வந்தது.இதையடுத்து மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தாமே முன் நின்று தொடங்கி வைப்பேன் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.



போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவோம்: - ஜல்லிக்கட்டுக்காக பதவியை துறந்த மாமனிதரின் வேண்டுகோள்
[Sunday 2017-01-22 17:00]

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு போராட்டங்கள் இன்று 6வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள போதிலும், நிரந்தர சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் எனவும் அது வரை ஜல்லிக்கட்டு நடத்த கூடாது எனவும் போராட்டம் நடத்திவருபவர்கள் கூறியுள்ளார்கள்.இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதி என்பவர் ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்க்கும் விதமாக தான் வகித்து வந்த வேளாண் பல்கலைக்கழக நிர்வாக குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.அவர் தற்போது அளித்த பேட்டியில், தமிழக மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்ட உத்தவை நான் பார்க்கிறேன்.



மதுரையில் சீமான் தலைமையில் நடந்த ஜல்லிக்கட்டு: - சீறி பாய்ந்த காளைகள்
[Sunday 2017-01-22 17:00]

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மேலூர் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை தமுக்கம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில் மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரட்டாபட்டியை அடுத்துள்ள கூழாணிப்பட்டியில் இன்று காலை சீமான் தலைமையில் ஜல்லிக்கட்டு நடந்தது.



பீட்டாவின் முகத்திரையை அம்பலப்படுத்தும் ஆதாரங்களை வெளியிட்ட நடிகர் அரவிந்த் சாமி!
[Sunday 2017-01-22 17:00]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நடிகர் அரவிந்த் சாமி, தற்போது பீட்டாவின் முகத்திரையை அம்பலப்படுத்தும் விதமாக ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பீட்டா ஆண்டுதோறும் ஏகப்பட்ட விலங்குகளை கொன்று குவித்து வருகிறது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் நடிகர் அரவிந்த் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், பீட்டா கொலை செய்துள்ள விலங்குகளில் விபரத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



ஜல்லிக்கட்டுக்கு எதிராக யார் வழக்கு தொடர்ந்தாலும் அதை முறியடிப்போம்: - தமிழக முதல்வர்
[Sunday 2017-01-22 17:00]

மதுரை அலங்காநல்லூரில் வாடிவாசலை திறந்து ஜல்லிக்கட்டை தொடங்கிவைக்க சென்ற தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார்.தமிழர்களில் தொடர் போராட்டத்தின் பலனாக அவரச சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க தமிழக முதல்வர் மதுரை சென்றார்.இந்நிலையில், நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் வரை யார் வந்தாலும் ஜல்லிக்கட்டு நடக்காது என அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிர்வாகிகள், மக்கள் அறிவித்தனர்.



ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தார் ஆளுநர்: - அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு
[Saturday 2017-01-21 17:00]

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக, அவசரச் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. அதன்படி, காட்சி படுத்தக்கூடாத விலங்கின பட்டியலில் இருந்து காளை நீக்கப்பட்டது. இதையடுத்து இன்று சென்னை வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியுள்ளது.இந்நிலையில் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய மூன்று இடங்களிலும் நாளை காலை ஒரே நேரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.



இன்று மாலை ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும்: - மக்களவை துணைத் தலைவர் நம்பிக்கை
[Saturday 2017-01-21 16:00]

'ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இன்று மாலைக்குள் பிறப்பிக்கப்படும் என்று நம்புகிறேன்’ என மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்தார்.ஜல்லிக்கட்டு அவசரச் சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று பிற்பகலில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் குழு சந்தித்துப் பேசியது.இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை ‘ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, மறைந்த ஜெயலலிதா மத்திய அரசிடம் வலியுறுத்தினார். ஆனால் மத்திய அரசு ஜெயலலிதா கோரிக்கையை கண்டுக்கொள்ளவில்லை. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ்- திமுக நடவடிக்கை எடுக்கவில்லை.



சென்னை மெரினாவில் எப்படி மாணவர்கள் திரண்டனர்? - மத்திய அரசை அதிரச் செய்த உளவுத்துறை ரிப்போர்ட்
[Saturday 2017-01-21 16:00]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் எப்படி மாணவர்கள் திரண்டனர் என்ற முழுவிவர அறிக்கையை மத்திய அரசுக்கு மத்திய உளவுத்துறை அனுப்பி உள்ளது. அதிலுள்ள தகவல்கள் மத்திய அரசை உலுக்கியதன் விளைவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
AIRCOMPLUS2014-02-10-14
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
NIRO-DANCE-100213
<b> 15-01-2017 அன்று ஃபான் ஃஅம் மையத்தில்  நடைபெற்ற முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களது பொதுக் கூட்ட  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 15-01-2017 அன்று மார்க்கம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா(Puthinamphotos.com)
<b> 14-01-2017 அன்று ரொரன்டோவில் கனேடிய தமிழர் பேரவை (CTC) நடாத்திய பொங்கல் விழா விருந்து நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா (Puthinamphotos.com)