Untitled Document
March 26, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
அடி பணிந்தது மத்திய அரசு: - கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்ப்பு
[Tuesday 2017-01-10 17:00]
 
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியிலிருந்து நீக்கிய மத்திய அரசு தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பு தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கடும் போராட்டம் நடந்து வரும் நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்தனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியிலிருந்து நீக்கிய மத்திய அரசு தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பு தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கடும் போராட்டம் நடந்து வரும் நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்தனர்.

  

இந்நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கட்டாய விடுமுறை பட்டியலில் தசரா பண்டிகைக்குப் பதிலாக பொங்கல் பண்டிகையைச் சேர்க்கப்பட்டதாக அறிவித்துள்ளது.இதே போல் ஜல்லிக்கட்டு விடயத்திலும் ஓர் நல்ல தீர்ப்பு வரும் என தமிழர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



கொடுமை - பாகிஸ்தானிடம் தன்னை கொல்ல சொன்ன இந்திய ராணுவ வீரர்!
[Saturday 2017-03-25 21:00]

செப்டம்பர் 29ம் தேதி அதிகாலை நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைகின் போது பாகிஸ்தானிடம் மாட்டிக்கொண்ட இந்திய ராணுவ வீரர் தான் சாவை எதிர்ப்பார்த்து காத்திருந்ததாக கூறியுள்ளார். செப்டம்பர் 29-ம் தேதி அதிகாலையில் இந்திய ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தி 38 தீவிரவாதிகளை கொன்றது. சுமார் 2 கி.மீ வரை எல்லைக் கோட்டைத் தாண்டி இந்த படை ஊடுருவிச் சென்று, அங்கிருந்த தீவிரவாத முகாம்களை அழித்தனர். அப்போது 22 வயது இந்திய ராணுவ வீரர் சந்து பாபுலால் சவான் பாகிஸ்தானிடம் மாட்டிக்கொண்டார்.



சட்டசபை எண்ணிக்கையில் திமுக முதலிடம்
[Saturday 2017-03-25 20:00]

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: சட்டசபையில் எண்ணிக்கையில் திமுக முதலிடம் பெறுகின்ற காலம் விரைவில் வரும். எதிர்கட்சி வரிசையில் இருந்தலும் சட்டசபையில் மக்கள் நலனுக்காக செயல்படுவோம். சட்டசபை போல் மக்கள் மன்றத்திலும் செயல்படுவோம். சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை. மாநிலத்தின் வளர்ச்சிக்கும் துணை நிற்கவில்லை என மக்கள் உணர்ந்துள்ளனர். ஒரு மாதம் பட்ஜெட் தொடர் நடத்தப்பட வேண்டிய நிலையில், ஒரு வாரத்தில் ஆட்சி செய்பவர்கள் முடித்து விட்டனர். பெட்ரோல், டீசல் மற்றும் பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டு வரியில்லா பட்ஜெட் என கூறுகின்றனர். தொடர் வெற்றிக்கான முன்னறிவிப்பாக, ஆர் கே இடைதேர்தல்களம், அமைய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்க முடிவு - சுஷ்மா சுவராஜ்
[Saturday 2017-03-25 20:00]

‛ அமெரிக்காவில் இருந்து, 271 இந்தியர்களை வெளியேற்ற உள்ளதாக அமெரிக்கா அரசு தகவல் தெரிவித்துள்ளது' என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக பார்லிமென்டில் சுஷ்மா கூறுகையில், அமெரிக்காவில் சட்ட விரோதமாக வசிக்கும் இந்தியர்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக 271 பேர் அடங்கிய பட்டியலை அந்நாடு அளித்துள்ளது. இந்த பட்டியலில் உள்ளவர்களை பற்றிய தகவல்கள் உறுதி செய்யப்படாத வரை, அதனை நாம் எப்படி நம்ப முடியும். இதற்காக கூடுதல் தகவல் கேட்டுள்ளோம். இந்தியர்கள் என உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்களை வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.



பகத்சிங் இறப்பு - 86 வருடங்கள் கழித்து கேட்கப்படும் நீதி!
[Saturday 2017-03-25 08:00]

1931-ம் ஆண்டு மார்ச் 23, சாண்டர்ஸ் என்கிற வெள்ளைக்கார துரையை சுட்டுக் கொன்றதற்காகவும், தன் நண்பர்கள் சுக்தேவ், ராஜகுரு ஆகியோருடன் சேர்ந்து குண்டுகள் வீசியதற்காகவும் பகத்சிங், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்ட தினம். பகத்சிங் தூக்கிலிடப்பட்டு 86 வருடங்கள் கடந்துவிட்டன. அவரைத் தூக்கிலிடுவதா, வேண்டாமா என்று மகாத்மா காந்தி மற்றும் பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரி இர்வின் ஆகியோரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது, இறுதியில் பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாததை அடுத்து, பகத்சிங் விவகாரத்தில் பிரிடிஷ் அரசாங்கம் என்ன நினைக்கிறதோ அதையே செய்யட்டும் என்று ஒப்புதல் அளித்தார் காந்தி.



ரஜினி இலங்கை செல்வதற்கு சுப்பரமணியன் சுவாமி ஆதரவு:
[Saturday 2017-03-25 08:00]

ரஜினி இலங்கை செல்வதற்கு, பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் சுப்பரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார். லைக்கா நிறுவனத்தின், ஞானம் அறக்கட்டளை சார்பில், இலங்கை வவுனியா, யாழ்ப்பாணத்தில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை, அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சிக்காக ரஜினிகாந்த் இலங்கை செல்ல உள்ளார். இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ரஜினி இலங்கை செல்வது இதுதான் முதன்முறை என்று லைக்கா நிறுவனம் கூறி வருகிறது.



லைகா நிறுவன வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கக் கூடாது: திருமாவளவன்வே ண்டுகோள்
[Saturday 2017-03-25 08:00]

லைகா நிறுவனம் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகத்தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகவேண்டாம் எனக் கூறியுள்ளார்.



ஷாரூக்கானுக்கு அமலாக்கத்துறையிடமிருந்து நோட்டீஸ்..
[Friday 2017-03-24 20:00]

பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், ஐ.பி.எல். கிரிக்கெட்டின் கோல்கட்டா அணி உரிமையாளராக உள்ளார். இவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஷாரூக்கான், இவரது மனைவி கெளரி, மற்றும் பாலிவுட் நடிகை ஜூலி சாவ்லா ஆகியோர் மீது அன்னிய செலாவாணி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறை ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் மூவரும் 15 தினங்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.



'ஏர் - இந்தியா ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்,பி.,மீது வழக்கு பதிவு
[Friday 2017-03-24 20:00]

ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் சிவசேனா எம்,பி., ரவீந்திரா கெய்க்வாட் மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இருக்கை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையில், வாக்குவாதம் முற்றியதால், 'ஏர் - இந்தியா விமான நிறுவன ஊழியரை, சிவசேனா, எம்.பி., ரவீந்திர கெய்க்வாட் செருப்பால் அடித்த சம்பவம்,பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்த எம்.பி , ரவீந்திரா கெய்க்வாட் ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்பதற்கு தடை விதித்தது. மேலும் ஏர்இந்தியா விமான நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ரவீந்திரா கெய்க்வாட் மீது டில்லிபோலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



தினகரன், கங்கை அமரன், தீபா, மதுசூதனன், மருதுகணேஷ் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்பு
[Friday 2017-03-24 20:00]

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள டிடிவி தினகரன், மதுசூதனன், மருது கணேஷ், தீபா மற்றும் கங்கை அமரன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், 127 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள் அளித்திருந்தனர். இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில், முக்கிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.



தி.மு.க. மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு
[Friday 2017-03-24 20:00]

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்தபின்னர், காவிரி மேலாண்மை வாரியம் தாமதம் ஆனதற்கு தி.மு.க. ஆட்சிதான் காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.



இரட்டை இலை சின்னம் கிடைக்காதது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது' : பன்னீர்
[Friday 2017-03-24 06:00]

'இரட்டை இலை சின்னம், எங்களுக்கு கிடைக்காமல் போனது, மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். எம்.ஜி.ஆர்., உருவாக்கிய, ஜெயலலிதாவின் வெற்றி சின்னமான, இரட்டை இலையை, தேர்தல் கமிஷன் முடக்கி உள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வலுவான ஆதாரங்களை, தேர்தல் கமிஷனிடம் முன்வைத்தும், இரட்டை இலை சின்னம், எங்களுக்கு கிடைக்காமல் போனது, மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இரட்டை இலை சின்னத்தை, சட்டப்படி எப்பாடுபட்டாவது, மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.



முஸ்லீம்கள் ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி
[Thursday 2017-03-23 20:00]

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லீம்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லீம்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.



தமிழகத்திற்கு வறட்சி நிதி 'ரூ.1748.28 கோடி' வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு..
[Thursday 2017-03-23 19:00]

தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.39,565 கோடி வேண்டும் என தமிழக அரசு கேட்டுள்ள நிலையில், ரூ.1748.28 கோடி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை வட கிழக்கு பருவமழை காலமாகும். இந்த பருவமழை காலத்தில் சராசரியாக 440 மில்லிமீட்டர் மழை கிடைக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவ மழை பொய்த்தது. 168.03 மில்லி மீட்டர் மழைதான் பெய்தது.140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான மழை பெய்ததால் கடும் வறட்சி ஏற்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவியது. அணைகள் வறண்டு விட்டன. விவசாயம் பொய்த்து விட்டது.



'ஓபிஸ்'ற்கு மின்கம்பம் , 'சசிகலா'விற்கு 'தொப்பி'
[Thursday 2017-03-23 19:00]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஸ் அணிக்கு மின்கம்பம் , சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அணிக்கு மின்கம்பம் , சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னம் ஒதுக்கீடு. ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு, சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் இரு அணியினரும் பலப்பரீட்சை நடத்த தயாராகியுள்ளனர்.



சிறுத்தை மீது பாய்ந்து விரட்டி அடித்த பெண்: தன் மகனை விடுவித்தார்
[Thursday 2017-03-23 17:00]

மும்பையின் வடபகுதியில், சஞ்சய் காந்தி தேசிய உயிரியல் பூங்கா உள்ளது. அதையொட்டிய குடியிருப்பு பகுதிக்குள், ஒரு சிறுத்தைப்புலி நுழைந்து விட்டது. அப்பகுதியில் வசித்து வரும் பிரமிளா ரிஞ்சத் (வயது 23) என்ற இளம்பெண், சிறுத்தையை பார்த்து விட்டு ஓட்டம் பிடித்தார். அவரை பின்தொடர்ந்து, அவருடைய 3 வயது மகன் பிரணாயும் ஓடிவந்தான். முதலில், பிரமிளாவுக்கு அது தெரியாது.



12 வயது சிறுவன் - தந்தையானான்: - ஆச்சர்யத்தை தரும் சம்பவம்
[Thursday 2017-03-23 17:00]

இந்தியாவின், கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத 12 வயது சிறுவன் தந்தையாகியுள்ளான். 17 வயது சிறுமியுடன் ஏற்பட்ட தொடர்பால் பெண் குழந்தை பிறந்து உள்ளது. இவர்கள் இருவருமே உறவினர்கள் ஆவார்கள். இந்தியாவிலேயே இளம் வயது தந்தையாக இச்சிறுவன் கருதப்படுகிறான். இதுகுறித்து திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்து கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் பி.கே. ஜப்பார் கூறியதாவது, இச்சிறுவன் இந்த வயதிலேயே தந்தையாகுவதற்கு ப்ரீகோசியஸ் பருவமடைதல் காரணமாகும்.



உலக கோடீஸ்வரர் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த தமிழன்:
[Thursday 2017-03-23 07:00]

2017ஆம் ஆண்டுக்கான உலக அளவில் இருக்கும் கோடீஸ்வரர்களின் பெயர் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே ஒரு தமிழர் இடம்பெற்றுள்ளார். அவர்தான் 102ஆவது இடத்தைப் பிடித்த ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் சிவ நாடார். இவரது சொத்து மதிப்பு 12.3 பில்லியன் டொலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. சிவ நாடார் தனது பள்ளிப்படிப்பு முழுக்க முழுக்க தமிழிலேயே படித்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் உயர் படிப்பை மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் முடித்தார்.



ஒவ்வொரு துளி தண்ணீரையும் சேமிக்க உறுதி ஏற்க வேண்டும்: - உலக தண்ணீர் தினத்தில் மோடி வேண்டுகோள்
[Wednesday 2017-03-22 17:00]

ஒவ்வொரு துளி தண்ணீரையும் சேமிக்க உறுதி ஏற்போம்: உலக தண்ணீர் தினத்தில் மோடி வேண்டுகோள் புதுடெல்லி:மனித குலத்திற்கு ஆதாரமாக விளங்கும் நீர்வளங்களை பாதுகாப்பதுடன், தண்ணீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு வறட்சிக்கு மத்தியில் உலக தண்ணீர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அரசியல் தலைவர்களும் தங்களின் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.



மகளைக் கொன்று பிணத்தை காதலன் வீட்டு வாசலில் வீசிய தந்தை!
[Wednesday 2017-03-22 17:00]

உத்தர பிரதேச மாநிலம் சர்தாவல் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது மகளைக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் போலீசார் தந்தையைக் கைது செய்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயரதிகாரி ஷிவ்ராஜ் சிங் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட பெண் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை 15 வயது சிறுமி என்றும் பாராமல், தனது மகளின் கழுத்தை அறுத்து அவரைக் கொலை செய்துள்ளார். பின்னர் பிரேதத்தை எடுத்து சென்று அவளது காதலனின் வீட்டுக்கதவு முன்னால் போட்டுவிட்டு வந்துள்ளார்.தற்போது அந்த பெண்ணின் தந்தையைக் கைது செய்துள்ளோம். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டார். பிரேதத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்றார்.



நடிகர் ரஜினிகாந்துக்கு சுற்றுலாத்துறை தூதர் பதவி: - மலேசியா அரசு முடிவு
[Wednesday 2017-03-22 17:00]

மலேசிய அரசு நடிகர் ரஜினிகாந்துக்கு மலேசியா சுற்றுலாத்துறை தூதர் பதவியை தரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மலேசியாவின் மலாக்கா சுற்றுலா துறை தூதராக பிரபல நடிகர் ஷாருக்கான் செயல்ப்பட்டு வருகிறார்.அவர் இந்திய சுற்றுலா பயணிகளை அதிகளவில் மலேசியாவுக்கு கொண்டு வர தவறிவிட்டதாக மலேசியா சுற்றுலா துறை நினைக்கிறது.இது தொடர்பாக மலேசியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று சுற்றுலா துறை அமைச்சர் டத்தோஷி மொகமட் நஸ்ரி அப்துல் தலைமையில் விவாதம் நடைப்பெற்றுள்ளது.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
<b>05-03-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ninaivakal-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா