Untitled Document
August 16, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
இறந்தவர்களின் சாம்பல் மற்றும் எலும்பில் சூப் வைத்து குடிக்கும் மக்கள்: - பதறவைக்கும் மூடநம்பிக்கை
[Tuesday 2017-01-10 18:00]

 

யாரேனும் இறந்துவிட்டால் அவர்களை புதைப்பது அல்லது எரிப்பது ஆகிய இரண்டு முறைகள் தான் உலகளவில் அதிகமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.அப்படி, எரிக்கப்பட்ட உடலில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலை இந்து மதத்தினர் ஆன்மீக அடிப்படையில் சில சடங்குகள் செய்து கடலில் கரைத்துவிடுவார்கள்.ஆனால், பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டில் வசிக்கும் Yanomami இன மக்கள் பின்பற்றும் சடங்கு முறைகள் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இவர்கள் தங்களது இன மக்கள் இறந்துவிட்டால், அவர்களின் உடலை எரித்துவிடுகிறார்கள்.அதன்பின்னர் சாம்பல் மற்றும் எலும்பினை காய்கறிகள் போட்டு சூப் வைத்து குடிக்கிறார்கள். தங்களுடைய இனத்தையே சாப்பிடுவதை பராம்பரியமாக பின்பற்றி வருகிறார்கள்.

யாரேனும் இறந்துவிட்டால் அவர்களை புதைப்பது அல்லது எரிப்பது ஆகிய இரண்டு முறைகள் தான் உலகளவில் அதிகமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.அப்படி, எரிக்கப்பட்ட உடலில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலை இந்து மதத்தினர் ஆன்மீக அடிப்படையில் சில சடங்குகள் செய்து கடலில் கரைத்துவிடுவார்கள்.ஆனால், பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டில் வசிக்கும் Yanomami இன மக்கள் பின்பற்றும் சடங்கு முறைகள் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இவர்கள் தங்களது இன மக்கள் இறந்துவிட்டால், அவர்களின் உடலை எரித்துவிடுகிறார்கள்.அதன்பின்னர் சாம்பல் மற்றும் எலும்பினை காய்கறிகள் போட்டு சூப் வைத்து குடிக்கிறார்கள். தங்களுடைய இனத்தையே சாப்பிடுவதை பராம்பரியமாக பின்பற்றி வருகிறார்கள்.

  

அதாவது, இவர்கள் இனத்தை பொறுத்தவரை மரணம் என்ற ஒன்று நிகழக்கூடாது, அப்படி நிகழ்ந்தாலும் அவர்கள் நம்முடன் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.எனவே, இறந்தவர்களின் சாம்பல் மற்றும் எலும்பில் சூப் வைத்து குடித்தால், அவர்கள் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை இம்மக்கள் நம்பி வருகின்றனர்.எனவே, இந்த மக்கள் இந்த முறையை பின்பற்றி வருகிறார்கள்.

  
   Bookmark and Share Seithy.com



பெல்ஜியம் ஆண்டு விழாவில் 10000 முட்டைகளால் உருவான ராட்சத ஆம்லெட்: - மக்கள் கொண்டாட்டம்
[Wednesday 2017-08-16 18:00]

பெல்ஜியம் நாட்டில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் ஆண்டு விழா கொண்டாடப்படும். இந்த விழாவில் மக்கள் வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டாடுவர். இந்த ஆண்டு பெல்ஜியத்தில் உள்ள மால்மேடி கிராமத்தில் உள்ள மக்கள் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் ராட்சத அளவில் ஆம்லெட் செய்து அதனை அனைவருக்கும் பகிர்ந்து வழங்க முடிவு செய்தனர்.



வடகொரியாவின் தாக்குதல் மிரட்டலையடுத்து சுற்றுலா பயணிகள் குறைந்து வெறிச்சோடிய குவாம் தீவு!
[Wednesday 2017-08-16 18:00]

வடகொரியாவின் தாக்குதல் மிரட்டலையடுத்து குவாம் தீவில் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்துவிட்டது. அமெரிக்காவின் முக்கிய சுற்றுலா தீவான குவாமில் உள்ள மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்காவின் அடுத்த கட்ட செயல்பாட்டை பொறுத்து தற்காலிகமாக, குவாம் மீதான தாக்குதல் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக வடகொரிய அதிபர் அறிவித்துள்ளார். இந்த அறிவப்பு குவாம் தீவில் வசிக்கும் மக்களுக்கு தற்காலிக நிம்மதியை கொடுத்துள்ளது.



கத்தோலிக்க தேவாலய பாவ மன்னிப்பு வழங்கும் கூண்டில் ஆபாசப்படம்? - அதிர்ச்சியில் நிர்வாகம்
[Wednesday 2017-08-16 18:00]

நெதர்லாந்தில் தேவாலயம் ஒன்றில் பாவ மன்னிப்பு வழங்கும் கூண்டில் ஆபாசப்படம் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நெதர்லாந்தின் தில்பர்க் நகரில் அமைந்துள்ள புனித ஜோசப் கத்தோலிக்க தேவாலயத்திலேயே ஆபாச படம் எடுக்கப்பட்டதாக தேவாலயத்தின் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.குறித்த வீடியோ இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆபாசப்பட நடிகையான கிம் ஹாலண்டின் இணையதளத்தில் வெளியானது.



நைஜீரியாவில் போகோ ஹரம் பெண் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல்!
[Wednesday 2017-08-16 08:00]

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், ‘போகோ ஹரம்’ பயங்கரவாத அமைப்பு, தனது அடுத்தடுத்த தாக்குதல்களை நடத்திவருகிறது. போகோ ஹரம் அமைப்பைச் சேர்ந்த பெண் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 83 பேர் வரை படுகாயமடைந்து உயிருக்குப் போராடிவருகின்றனர். பள்ளிச் சிறுமிகள் கடத்தல், கிராமங்களைப் பிடித்துவைத்து மிரட்டுவது, தனது எதிர்ப்பாளர்களைக் கொடூரமாகக் கொல்வது என நைஜீரியாவையும் தாண்டி உலகையே அச்சுறுத்திவருகிறது ‘போகோ ஹரம்’ பயங்கரவாத அமைப்பு.



கடும் வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகிய சியரா லியோன்: - சர்வதேச உதவியை நாடிய அதிபர்
[Wednesday 2017-08-16 07:00]

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன், கடும் வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது. தொடர்ச்சியாக அங்கு பெய்துவரும் கன மழையால், அந்த நாட்டின் பல்வேறு இடங்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. அதன் தலைநகரில் ஏற்பட்ட நிலச்சரிவில், சுமார் 2000-க்கும் அதிகமான வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 300 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 600-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.



மான்செஸ்டரில் நடந்த குண்டு வெடிப்பில் மக்களை காப்பாற்றிய பிச்சைக்காரர்: - பொலிசாரால் கைது
[Wednesday 2017-08-16 07:00]

பிரித்தானியா மான்செஸ்டரில் நடந்த குண்டு வெடிப்பின் போது உதவிய பிச்சைக்காரர் கிறிஸ் பர்கர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரித்தானியாவின் மான்செஸ்டரில் கடந்த மே மாதம் 22-ஆம் திகதி அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சியின் போது பயங்கர சத்ததுடன் குண்டு வெடித்தது.



சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களால் தீ மற்றும் மூச்சு திணறல் அபாயம்: - எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா
[Tuesday 2017-08-15 18:00]

அமெரிக்க அரசாங்கத்தை சேர்ந்த குழு ஒன்று, தீப்பிடிக்கும் சம்பவங்களை தொடர்ந்து விளையாட்டுப் பொருளானபேட்டரியால் இயங்கும் ஃபிட்ஜெட் ஸ்பின்னர்களுக்கென பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.சி பி எஸ் சி எனப்படும் அமெரிக்காவின் நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம், இரவு முழுவதும் விளையாட்டு பொருட்களை சார்ஜ் ஏற்றுவதை தவிர்க்குமாறு கூறுகிறது.



பொருளாதார தடைகளை தொடர்ந்து விதித்தால் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவோம்: - ஈரான் அதிபர்
[Tuesday 2017-08-15 18:00]

தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடைகளை தொடர்ந்து விதித்தால் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய அதிபர் ஹசன் ரவுஹானி, அணு ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா விரும்பினால், அது ஒரு சில மணி நேரங்களிலேயே நிறைவேற்றி விட முடியும் என்றார்.



போர்த்துக்கல்லில் பரவிய காட்டுத் தீ காரணமாக 64 பேர் உயிரிழப்பு!
[Tuesday 2017-08-15 18:00]

போர்த்துக்கல்லில் பரவிய காட்டுத் தீ காரணமாக 64 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், அங்கு 100 ஹெக்டேயர் நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்நிலையில், அப்பகுதியை அண்டி வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.



டூப் போடாமல் சண்டைக்காட்சியில் ஈடுபட்ட நடிகை பலி: - சினிமா படப்பிடிப்பில் பயங்கரம்
[Tuesday 2017-08-15 17:00]

கனடா நாட்டில் சினிமா படப்பிடிப்பு ஒன்றில் டூப் போடாமல் சண்டைக்காட்சியில் ஈடுபட்ட நடிகை ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் நகரில் Deadpool 2 என்ற ஹாலிவுட் படத்தில் படப்பிடிப்பு கடந்த யூன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.



டயானாவை முன் மாதிரியாக எடுத்து கொண்ட ஹரியின் காதலி!
[Tuesday 2017-08-15 17:00]

டயானாவை முன் மாதிரியாக எடுத்து கொண்டதோடு அவரின் திருமண வீடியோவை இளவரசர் ஹரியின் காதலி மேகன் அடிக்கடி பார்ப்பார் என தெரியவந்துள்ளது.பிரித்தானியா இளவரசர் ஹரியும், மேகனும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வருகிறார்கள்.



மறுசீரமைப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்படவுள்ள லண்டனின் பிக் பென் கடிகாரம்!
[Tuesday 2017-08-15 17:00]

உலக புகழ்பெற்ற லண்டனின் பிக் பென் கடிகாரம், மறுசீரமைப்பு பணிகளுக்காக நிறுத்திவைக்கப்பட உள்ளதாக பிரித்தானியா நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.157 ஆண்டுகளாக தேம்ஸ் நதிக்கரையோரம், வெஸ்ட்மின்ஸ்டெர் அரண்மனையில் அமைந்திருக்கும் பிக் பென் கடிகாரம், தற்போது மிகவும் மோசமான நிலையை எட்டியிருப்பதால், அதற்கான பராமரிப்புப் பணிகளை விரைந்து செய்யவேண்டுமென நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.



அமெரிக்காவின் செயல்பாடுகளை பொறுத்து அடுத்தக் கட்ட நடவடிக்கை: - வட கொரியா தலைவர்
[Tuesday 2017-08-15 09:00]

அமெரிக்காவின் செயல்பாடுகளை பொறுத்து அடுத்தக் கட்ட நடவடிக்கையை எடுக்க போவதாக வட கொரியா தலைவர் கிம் ஜாங் கூறியுள்ளார்.வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது.



நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு!
[Monday 2017-08-14 18:00]

நேபாள நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது, மழையினால் 27 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. ரப்தி மற்றும் புதிரப்தி ஆறுகளில் வெள்ளநீர் கரை புரண்டு ஓடுகிறது. கரை கடந்து வெளியேறிய வெள்ளநீர் அரித்துச் சென்றதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



இங்கிலாந்தின் அரசராக அடுத்து யார் வர வேண்டும்? - வெளியான சர்வே முடிவுகள்
[Monday 2017-08-14 18:00]

பிரித்தானியாவின் அடுத்த அரசராக இளவரசர் வில்லியம் தான் வரவேண்டும் என பெரும்பாலான மக்கள் கூறியிருப்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.The Sun பத்திரிக்கை பிரித்தானியாவின் அடுத்த அரசராக யார் வர வேண்டும் என அந்நாட்டு மக்கள் 2000 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. எலிசபெத் மகாராணியின் மகன் சார்லஸ் தான் அடுத்த அரசராக வருவார் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், இளவரசர் வில்லியமுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளது தெரியவந்துள்ளது.



வடகொரியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதை அதிரடியக தடை செய்த சீனா!
[Monday 2017-08-14 18:00]

வடகொரியாவில் இருந்து கடல் உணவுகள், நிலக்கரி, இரும்பு உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதை சீனா அதிரடியக தடை செய்துள்ளது. சீனாவின் இந்த புதிய தடையால், ஏற்கனவே அமெரிக்கா முன்மொழிந்து ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்த பொருளாதார தடைகளால் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை சந்தித்து வரும் வடகொரியா மேலும் சிக்கலை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



பச்சிளம் குழந்தை புகை பிடிக்கும் புகைப்படம்: - விசாரணையை துரிதப்படுத்திய பொலிஸ்
[Monday 2017-08-14 18:00]

பச்சிளம் குழந்தையை புகை பிடிக்க வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக கூறி ஜேர்மனியில் உள்ள Kassel பொலிசார் தாமாகவே முன்வந்து விசாரணையை துவக்கியுள்ளனர்.சமீபத்தில் ஜேர்மனியின் உள்ளூர் நாளேடு ஒன்று பச்சிளமகுழந்தை புகைப்பிடிப்பது போன்ற பேஸ்புக் பதிவு ஒன்றை செய்தியாக வெளியிட்டது. அந்த செய்தி பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனம் மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது,



மாயமான 93 வயதான முதியவர்: - நெகிழ வைக்கும் சம்பவம்!
[Monday 2017-08-14 18:00]

பிரான்சில் முதியோர் இல்லத்தில் இருந்து மாயமான 93 வயதான முதியவர் தமது காதலியை சந்திக்க சென்றுள்ளது அவரை தேடிய உறவினர்களை நெகிழ வைத்துள்ளது.பிரான்சில் உள்ள கடற்கரை கிராமமான Pléneuf-Val-André பகுதியிலேயே குறித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.இங்குள்ள பிரிட்டானி என்ற முதியோர் இல்லத்தில் 93 வயது முதியவர் ஒருவர் தங்கி வந்துள்ளார். ஒவ்வொரு கிழமையும் இவரை சந்திக்க இவரது பேத்தி ஒருவர் வந்து செல்வது வழக்கம்.



பனியால் மூடப்பட்ட அண்டார்டிகாவில் 100 ஆண்டுகள் பழமையான கேக் கண்டெடுப்பு!
[Sunday 2017-08-13 17:00]

பனியால் மூடப்பட்ட அண்டார்டிகா பகுதியில் இருந்து 100 ஆண்டுகள் பழமையான பழ கேக் ஒன்றினை கண்டெடுத்துள்ளனர். அண்டார்டிகாவின் கேப் அடேர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த கேக், பிரித்தானியாவை சேர்ந்த ஆய்வாளரான ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட்க்கு சொந்தமானது என நம்பப்படுகிறது.அண்டார்டிகாவின் மிகப்பழமையான கட்டிடத்தில் இருந்து இந்த கேக் கண்டெக்கப்பட்டுள்ளது.



அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு சிறுமிகள் பலி!
[Sunday 2017-08-13 17:00]

அமெரிக்காவில் திருடப்பட்ட கார் ஒன்றை பொலிசார் துரத்தியபோது நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு சிறுமிகள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓக்லோகோமா மாகாணத்தில் உள்ள உட்வார்ட் நகரில் தான் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.


Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா