Untitled Document
May 30, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
சுவிஸில் இஸ்லாமிய பெண்களுக்கு குடியுரிமை இல்லையா? புயலை கிளப்பும் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள்
[Tuesday 2017-01-10 18:00]

சுவிட்சர்லாந்து நாட்டில் மூன்றாம் தலைமுறை 
வெளிநாட்டினருக்கு எளிதாக குடியுரிமை அளிக்கும் பொது வாக்கெடுப்பிற்கு அந்நாட்டை சேர்ந்த சுவிஸ் மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சுவிஸில் குடியேறியுள்ள மூன்றாம் தலைமுறை வெளிநாட்டினர்கள் எளிதாக குடியுரிமை பெறுவதற்கு ஏதுவாக எதிர்வரும் பெப்ரவரி 12-ம் திகதி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டத்திற்கு அந்நாட்டு சுவிஸ் மக்கள் கட்சி(SVP) கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த தேசிய கவுன்சிலரான Andreas Glarner என்பவர் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை வெளியிட்டுவருகிறார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் மூன்றாம் தலைமுறை வெளிநாட்டினருக்கு எளிதாக குடியுரிமை அளிக்கும் பொது வாக்கெடுப்பிற்கு அந்நாட்டை சேர்ந்த சுவிஸ் மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சுவிஸில் குடியேறியுள்ள மூன்றாம் தலைமுறை வெளிநாட்டினர்கள் எளிதாக குடியுரிமை பெறுவதற்கு ஏதுவாக எதிர்வரும் பெப்ரவரி 12-ம் திகதி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டத்திற்கு அந்நாட்டு சுவிஸ் மக்கள் கட்சி(SVP) கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த தேசிய கவுன்சிலரான Andreas Glarner என்பவர் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை வெளியிட்டுவருகிறார்.

  

அதாவது, முகத்திரை அணிந்துள்ள இஸ்லாமிய பெண்ணின் புகைப்படங்களை மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இந்த சுவரொட்டிகளை வெளியிட்டு வருகிறார்.முகத்திரை அணிந்துள்ள மூன்றாம் தலைமுறை இஸ்லாமியருக்கு எளிதாக குடியுரிமை வழங்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.குறிப்பாக சுவிஸில் பிறந்த மூன்றாம் தலைமுறை இஸ்லாமியர் தீவிரவாத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த பொது வாக்கெடுப்பை ஆதரிக்க கூடாது என சுவிஸ் மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சுவிஸ் மக்கள் கட்சயின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து BDP கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், மூன்றாம் தலைமுறை இஸ்லாமியருக்கு எளிதாக குடியுரிமை வழங்குவதற்கும் அவர்கள் அணிந்துள்ள முகத்திரைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதுபோன்ற சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் வெளியிடுவதை சுவிஸ் மக்கள் கட்சி நிறுத்த வேண்டும் என BDP கட்சி வலியுறுத்தியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



மான்செஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் மாயமான நீல வண்ண பெட்டி: - பொலிசாரின் வேண்டுகோள்
[Tuesday 2017-05-30 08:00]

மான்செஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் மாயமான நீல வண்ண பெட்டி குறித்த தகவல் தெரிய வரும் பொதுமக்கள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.மான்செஸ்டர் தாக்குதல் நடத்தப்படுவதன் சில மணி நேரங்களுக்கு முன்னர் தீவிரவாதி சல்மான் அபேதி பயன்படுத்திய நீல வண்ண பெட்டி ஒன்றை விசாரணையின் ஒருபகுதியாக பொலிசார் தேடி வருகின்றனர்.



விமான நிலையத்தில் முழு நிர்வாணமாக அலைந்த மர்ம நபர்!
[Tuesday 2017-05-30 08:00]

ஸ்பெயின் அருகே உள்ள தீவு நாடான மயோர்காவில் அமைந்துள்ள பரபரப்பான விமான நிலையத்தில் மர்ம நபர் முழு நிர்வாணமாக அலைந்த காட்சிகள் வைரலாகியுள்ளது.மயோர்கா தலைநகர் பால்மாவில் அமைந்துள்ளது சுற்றுலாப்பயணிகளால் பரபரப்பாக காணப்படும் Son Sant Joan விமான நிலையம்.குறித்த விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் நிர்வாணமாக இருக்கை ஒன்றில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் காட்சி உள்ளூர் நாளேடு ஒன்றில் வெளியாகி வைரலாகியுள்ளது.



சீனாவில் தொடங்கிய பாரம்பரிய படகு திருவிழா!
[Monday 2017-05-29 18:00]

சீனாவில் தொடங்கியுள்ள பாரம்பரிய படகு திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் தொடங்கியுள்ள இந்த திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டிருந்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட படகுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. 5 நாட்கள் நடைபெற உள்ள போட்டியை காண அண்டை நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பலலட்சம் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மரண தண்டனை!
[Monday 2017-05-29 17:00]

பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கள்ள உறவில் ஈடுபட்டதாக கூறி இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பல்வேறு கிராமங்களில் இன்றும் பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைகளை போலவே நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அதிர்சியளிக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் நகரிலிருந்து 400 கி.மீட்டர் தொலைவில் ராஜன்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. மதவாதம் நிறைந்த இந்த கிராமத்தில் பெண்களுக்கான பல உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது.



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு இப்படி ஒரு சோதனையா?
[Monday 2017-05-29 17:00]

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் அண்மையில் சவுதி அரேபியாவுடன் செய்துக்கொண்ட ஆயுத ஒப்பந்தத்தை திரும்ப பெற வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.வெளிநாட்டு சுற்றுப்பயணமாக சவுதி அரேபியா சென்றபோது அந்நாட்டுடன் 110 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத ஏற்றுமதி ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.தற்போது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பியுள்ள டிரம்பிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.



இந்த ஆண்டில் ஒன்பது ஏவுகணைகளை தொடுத்த வடகொரியா!
[Monday 2017-05-29 17:00]

குறுகிய தூர ஏவுகணையை வடகொரியா ஜப்பானிய கடலில் (சக்கலின் மற்றும் ஆசியப் பகுதிகளுக்கு இடையே ஒரு குறுகலான கடல்) செலுத்தியுள்ளது .வட கொரியாவின் இந்த நடவடிக்கையின் மூலம் அது பிராந்திய அழுத்தங்களை அதிகரித்துள்ளது மேலும் அதன் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்தும் சர்வதேச முயற்சிகளையும் மீறியுள்ளது.



ஜப்பானை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசிய வடகொரியா!
[Monday 2017-05-29 07:00]

ஜப்பான் கடற்பகுதி நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை வடகொரியா சோதனை செய்துள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.குறித்த ஏவுகணை சோதனையானது வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள வொன்ஸான் பகுதியில் இருந்து நடத்தப்பட்டுள்ளதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.



அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி!
[Monday 2017-05-29 07:00]

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள லிங்கன் கவுண்டி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் துணை ஷெரீப் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர்.அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள லிங்கன் கவுண்டி பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ராணுவத்துக்கு எதேச்சதிகார உரிமை கொடுக்கும் சட்டத்தை அமல்படுத்திய பிலிப்பைன்ஸ் அதிபர்!
[Sunday 2017-05-28 15:00]

பிலிப்பைன்ஸின் அதிபர் ரோட்ரிகோ ட்யூடர்டே (Rodrigo Duterte), அந்நாட்டின் அதிபராக பதவியேற்றதில் இருந்து பல அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக போதைப் பொருளுக்கு எதிராக அவர் தொடுத்த 'போர்' மூலம் பல லட்சம் பேர் பிலிப்பைன்ஸ் போலீஸாரால் கொல்லப்பட்டனர். இந்நிலையில், பிலிப்பைன்ஸில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக் கூடிய தெற்கு பகுதியான மிண்டானவோ (Mindanao) பகுதியில், பல அசம்பாவிதங்கள் நடந்து வருகிறதாம். அங்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக சிலர் செயல்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.



மான்செஸ்டர் தாக்குதலில் தந்தைக்காக உயிரை பணயம் வைத்த சிறுமி!
[Sunday 2017-05-28 15:00]

பிரித்தானியா மான்செஸ்டரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் போது 14 வயது சிறுமி தனது தந்தைக்காக உயிரை பணயம் வைத்துள்ள நெகிழ வைக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.14 வயதான டெமி ஹாய்லி என்ற சிறுமி தனது பெற்றோருடன் அரியானா கிராண்டே இசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். குண்டு வெடிப்பின் போது ஹாய்லின் தந்தை ஆண்டி அப்பகுதிக்கு மிக அருகில் இருந்துள்ளார்.



பிரான்ஸில் கஞ்சா பயன்படுத்தினால் சிறை தண்டனையிலிருந்து விலக்கு: - வருகிறது சட்டம்
[Sunday 2017-05-28 15:00]

பிரான்ஸில் கஞ்சா பயன்படுத்தினால் சிறை தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கக்கூடிய சட்டம் இந்த வருட இறுதிக்குள் அமுலுக்கு வரவுள்ளது.பிரான்ஸில் கஞ்சா பயன்படுத்தும் நபர்களுக்கு €3,750 வரை அபராதமும், ஒரு வருடம் வரை சிறை தண்டனையும் தற்போது உள்ள சட்டத்தின் படி வழங்கப்படுகிறது. கடந்தாண்டு மட்டும் 180,000 மக்கள் மீது கஞ்சா சட்டத்தின் விதிமுறை மீறல் வழக்கு பதிவுசெய்யபட்டது.



புதிய பட்ஜெட்டின் மூலம் பல லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: - ட்ரம்ப்
[Sunday 2017-05-28 09:00]

அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு முதல் வருடாந்திர பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில் ட்ரம்ப், 'இந்த புதிய பட்ஜெட்டின் மூலம், பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்' என்று நம்பிக்கை ததும்ப தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரான ஹிலாரி கிளின்டனை வீழ்த்திய குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், இந்தாண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றார். பதவியேற்ற பின், பல முஸ்லிம் நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்காவில் நுழையத் தடை, மெக்சிக்கோ எல்லையில் சுவர் எழுப்புவது என்ற பல அதிர வைக்கும் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் அவர் தலைமையிலான அரசு, முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.



வட கொரியா அதிபர் புதிய உத்தரவு: - தீவிரமடையும் அமெரிக்கா-வட கொரியா பிரச்சனை
[Sunday 2017-05-28 09:00]

வட கொரியா தலைவர் கிம் ஜோங்-உன்னின் புதிய உத்தரவால் அமெரிக்கா-வட கொரியா இடையேயான பிரச்சனை இன்னும் தீவிரமடைந்துள்ளது.வட கொரியா மீதான அழுத்தத்தை அதிகாரிக்கும் விதமாக அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பல்களை மற்றும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை கொரிய தீபகற்பத்தில் நிலைநிறுத்தியுள்ளது.



பிலிப்பைன்ஸ் இராணுவத்தினர் 3 பெண்களை கற்பழிக்கும் திறனுடையவர்கள்: - ஜனாதிபதி பேச்சால் சர்ச்சை
[Sunday 2017-05-28 09:00]

பிலிப்பைன்ஸ் இராணுவ வீரர்கள் ஒவ்வொருவரும் 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முடியும் என்று அந்நாட்டி ஜனாதிபதி ரோட்ரிகோ ட்யூட்டரெட்டின் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி சர்ச்சைக்கு பெயர் போனவர். அடிக்கடி ஏதேனும் ஒரு சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக பேசி சிக்கிக்கொள்வார்.



உலகின் எந்த பகுதிக்கும் மூன்று மணி நேரத்தில் செல்லும் விமானத்தை தயாரித்த அமெரிக்க ராணுவம்!
[Saturday 2017-05-27 18:00]

உலகின் எந்த பகுதிக்கும் 3 மணி நேரத்தில் செல்லும் விமானத்தை அமெரிக்க ராணுவம் தயாரித்துள்ளது. இந்த அதிவேக ராக்கெட் போன்ற சிறப்பு விமானத்தை அமெரிக்க ராணுவம் மிக ரகசியமாக தயாரித்துள்ளது. மேலும் அதற்கு போயிங் எக்ஸ்.எஸ்.1 என பெயரிடப்பட்டுள்ளது. பான்டம் எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனம் அமெரிக்க ராணுவத்துக்காக இதை தயாரித்துள்ளது. அதற்கான அனுமதியை இந்நிறுவனத்துக்கு ராணுவம் வழங்கியது.



போதை மாத்திரைகளுடன் ஈராக்கிற்கு பறந்த புறா: - அதிர்ச்சி அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள்
[Saturday 2017-05-27 18:00]

போதை மாத்திரைகளுடன் ஈராக்கிற்கு பறந்த புறாவை குவைத் சுங்கத்துறையினர் பிடித்துள்ளனர். பண்டைய காலத்தில் அரசர்கள் புறாவை தூது அனுப்ப பயன்படுத்தினர். குறிப்பாக இரு அரசுகளுக்கு இடையே செய்திகளை பரிமாறிக்கொள்ளவும், காதலர்கள் செய்திகளை பரிமாறிக்கொள்ளவும் புறாக்கள் பயன்பட்டுள்ளன. புறாக்களால் பல நூறு மைல் தூரத்தை சுலபமாக பறந்து கடக்க முடியும். ஒரு குறிப்பிட்ட இடத்தை சரியாக சென்றடைய முடியும். இதனாலேயே புறாக்கள் தூது அனுப்ப சிறந்த பறவையாக உள்ளன.



வெள்ளை மாளிகையில் ரமலான் பண்டிகைக்கு மறுப்பு தெரிவித்த வெளியுறவு துறை செயலாளர்!
[Saturday 2017-05-27 18:00]

அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையில் ரமலான் பண்டிகையை துவக்கி வைப்பதற்கு அந்நாட்டு வெளியுறவு துறை செயலாளர் மறுப்பு தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இஸ்லாமியர்களின் முதன்மை பண்டிகையான ரமலான் இன்று முதல் தொடங்கியுள்ளது.உலக நாடுகள் இப்பண்டிகையை உற்சாகமாக தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை இப்பண்டிகை மீது அக்கறை செலுத்தாது இஸ்லாமியர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.



சீனா எல்லைக்கு அருகில் அமெரிக்க உளவு விமானம்: - வழிமறித்த சீனா போர் விமானங்கள்
[Saturday 2017-05-27 18:00]

சீனா எல்லைக்கு அருகில் அமெரிக்க உளவு விமானம் பறந்த போது சீனா நாட்டு போர் விமானங்கள் அதனை வழிமறித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொரியா தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், நேற்று அமெரிக்காவின் P-3 Orion என்ற உளவு விமானம் சீனா எல்லைக்கு அருகில் பறந்துள்ளது.



காதலி கிடைக்காதது தான் மான்செஸ்டர் தாக்குதலுக்கு காரணமா?
[Saturday 2017-05-27 18:00]

தீவிரவாதி சல்மான் அபேடி குறித்து விசாரணை நடத்தியபோது அவனது குடும்பம் லிபியாவில் இருந்து பிரித்தானிய நாட்டிற்கு குடியேறியது தெரியவந்தது.மேலும், சல்மானின் தந்தை மற்றும் சகோதரனுக்கும் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளதால் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், தீவிரவாதி சல்மான் குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.



தாக்குதலுக்கு முன்னர் தாயாரை தொடர்பு கொண்டு மன்னிப்பு கோரிய தீவிரவாதி!
[Friday 2017-05-26 14:00]

பிரித்தானிய நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தீவிரவாதி தனது தாயாரை தொடர்புக்கொண்டு மன்னிப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மான்செஸ்டர் நகரில் கடந்த திங்கள் இரவு சல்மான் அபேடி என்ற தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பின்னர் பொலிசார் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர்.


Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b>06-05-2017 அன்று கனடா- ரொரன்டோவில் அபிநயாலயா நாடியாலயம் நடாத்திய 20வது ஆண்டுவிழா நிகழ்வின் படத்தொகுப்பு. </b> படங்கள் - குணா
<b>30-04-2017 அன்று கனடா- ரொரன்டோவில்  நடைபெற்ற சங்கீத சங்கமம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா