Untitled Document
June 26, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
கைதாகவுள்ள 5 மூத்த அரசியல்வாதிகள் -20 அதிகாரிகள்: - வெளியான பகீர் தகவல்
[Wednesday 2017-01-11 07:00]

ஊழல் முறைகேடுகளில் கிடைத்த பணத்தை பங்கு போட்டு வெளிநாடுகளில் முதலீடு செய்த தமிழக அரசியல்வாதிகள் 5 பேர் மற்றும், அதிகாரிகள் 20 பேர் விரைவில் கைதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சட்டசபை தேர்தலின் போது கரூர் அன்புநாதன் வீட்டில் ரூ4.8 கோடி கணக்கில் வராத பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.அப்போது அன்புநாதன் வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஆய்வு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் அன்புநாதன் எந்தெந்த அரசியல்வாதிகளுக்கு பினாமியாக செயல்பட்டார்; அவர்களது பணம் சட்டவிரோதமாக எப்படியெல்லாம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை கண்டுபிடித்தனர். பின்னர் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை கையிலெடுத்தனர்.

ஊழல் முறைகேடுகளில் கிடைத்த பணத்தை பங்கு போட்டு வெளிநாடுகளில் முதலீடு செய்த தமிழக அரசியல்வாதிகள் 5 பேர் மற்றும், அதிகாரிகள் 20 பேர் விரைவில் கைதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சட்டசபை தேர்தலின் போது கரூர் அன்புநாதன் வீட்டில் ரூ4.8 கோடி கணக்கில் வராத பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.அப்போது அன்புநாதன் வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஆய்வு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் அன்புநாதன் எந்தெந்த அரசியல்வாதிகளுக்கு பினாமியாக செயல்பட்டார்; அவர்களது பணம் சட்டவிரோதமாக எப்படியெல்லாம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை கண்டுபிடித்தனர். பின்னர் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை கையிலெடுத்தனர்.

  

இந்த நிலையில் சட்டவிரோதமாக பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூ2,000 நோட்டுகளாக மாற்றிய விவகாரத்தில் தமிழக அரசின் முதன்மை கான்டிராக்டரான போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமான சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் அன்புநாதன் மற்றும் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்குமான தொடர்பு குறித்தும் ஏராளமான தகவல்களை வருமான வரி, அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ அதிகாரிகள் திரட்டியுள்ளனர். அத்துடன் முன்னாள் தலைமை செயலர் ராமமோகன் ராவ், அவரது மகன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். தலைமை செயலகத்தில் ராமமோகன் ராவ் அறையில் பதுக்கி வைக்கப்பட்ட முக்கியமான 2 செல்போன்களும் சிக்கின. மேலும் மும்பையில் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி ஒருவருக்காக ரூ1,700 கோடி மதிப்பிலான கட்டிடம் வாங்கப்பட்டதும் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த பரஸ்மால் லோதாவும் கைது செய்யப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டுள்ளார். தற்போதைய நிலையில் தமிழகத்தின் 5 மூத்த அரசியல்வாதிகள், 20 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கப் பிரிவு வலைவிரித்து வைத்திருக்கிறது. ஊழல் முறைகேடுகள் மூலம் கிடைத்த பல்லாயிரம் கோடி ரூபாயை பங்கு போட்டு கபளீகரம் செய்த இந்த அரசியல்வாதிகள் ப்ளஸ் அதிகாரிகள் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் அமலாக்கப் பிரிவிடம் சிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. சேகர் ரெட்டி, பரஸ்மால் லோதா, மனோஜ்குமார் கார்க் ஆகியோரிடம் முழுமையாக விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் அரசியல்வாதிகள் ப்ளஸ் அதிகாரிகளை குறி வைத்து அடுத்த வேட்டையை தொடங்க இருக்கிறது அமலாக்கப் பிரிவு. எந்த நேரமும் தாங்கள் சிக்க நேரிடும் என்பதால் இந்த கோஷ்டி பெரும் பீதியில் உறைந்து போயுள்ளதாம்.

  
   Bookmark and Share Seithy.com



மது விருந்து சுற்றுலாவுக்கு சென்ற கப்பல்
[Monday 2017-06-26 07:00]

சென்னை துறைமுகத்தில் இருந்து மது விருந்து சுற்றுலாவுக்கு 60-க்கும் மேற்பட்டோர்களை ஏற்றிச் சென்ற சொகுசுக் கப்பல் சாதவினா என்ற கப்பல் கரை திரும்பியது. சாதவினா கப்பல் குறிப்பிட்ட நேரத்தில் கரைக்குத் திரும்பாததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் பதற்றம் அடைந்தனர்.



’கருப்பு தினம்’: நினைவுகூர்ந்த பிரதமர் மோடி
[Monday 2017-06-26 07:00]

அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நாட்கள் இந்திய வரலாற்றின் கருப்பு தினம் என்று எமர்ஜென்சி நாட்களை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு வானொலி உரையாற்றிய பிரதமர் மோடி, எமர்ஜென்சியின் போது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜனநாயகத்தின் மாண்புகளை காத்தனர் என்று கூறியுள்ளார். ஜனநாயகம் என்பது நமது பண்பாடு என கூறி இருக்கும் மோடி, ஜனநாயகத்தை விரும்புபவர்கள், கடந்த 1975 ஜூன் 25 நள்ளிரவை மறக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.



பொது இடங்களில் தொழுகையில் ஈடுபடக் கூடாது
[Monday 2017-06-26 07:00]

ஜம்மு காஷ்மீரில் போலீசார் பொது இடங்களில் தொழுகையில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஸ்ரீநகரில் பெரிய மசூதியில் காவல் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, அம்மாநில காவல்துறை பொது இடங்களில் ரமலான் தொழுகையில் ஈடுபட வேண்டாம் என போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளது. மாவட்டங்களில் போலீஸ் அனுமதி பெற்ற மசூதிகள் மற்றும் பாதுகாப்பு நிறைந்த மசூதிகளில் தொழுகையில் ஈடுபட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.பொதுவான மசூதிகள் மற்றும் தனிமையான இடங்களில் ரமலான் தொழுகையை நடத்ததாதீர்கள் என போலீஸ் கட்டுப்பாட்டு அறை போலீசார் அனைவருக்கும் அறிவுரையை வழங்கியுள்ளனர்.



காவலர் சங்கமா? - நடவடிக்கை பாயும்
[Monday 2017-06-26 06:00]

காவலர் சங்கம் அமைப்பது, அவ்விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்திப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனகாவல்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீண்ட நாளாக காவல்துறையினர் சங்கம் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது சமீபகாலமாக அதற்கான முயற்சிகளில் குறிப்பிட்ட சில போலீசார் தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது. காவல்துறையில் உள்ள சிலர் இவ்விவகாரம் தொடர்பாக ரகசியமாக ஆள் சேர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும்போலீசாருக்கு என்று தனி சங்கம் அமைக்க கோரி முதல்வரை அவர்கள் குடும்பத்துடன் விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் சமூக வலைதளங்கில் தகவல் வெளியாகின.



பாஸ்போர்ட்டில் இந்தி திணிப்பு - ஸ்டாலின் கண்டனம்
[Sunday 2017-06-25 06:00]

இந்தியில் பாஸ்போர்ட் என்ற அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இனி வரும் காலங்களில் பாஸ்போர்ட் இந்தியிலும் ஆங்கிலத்திலும் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாஸ்போர்ட் சட்டத்தின் 50 வது ஆண்டு விழாவில் பேசியிருப்பதற்கு திமுக சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



நீட் தேர்வால் மருத்துவக் கனவு தகர்ந்தது
[Sunday 2017-06-25 06:00]

197க்கு மேல் கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் போனதாக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு பள்ளியில் படித்த மாணவிகள் கவலை தெரிவிக்கின்றனர். வந்தவாசி அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த இரட்டை சகோதரிகளான நிலா பாரதி மற்றும் அன்புபாரதி ஆகியோர் மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த போதும் நீட் தேர்வில் ‌குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தங்களது மருத்துவ படிப்பு கனவு தகர்ந்த‌துள்ளதாக அம்மாணவிகள் கவலை தெரிவிக்கின்றனர்‌.



மோடிக்கு பிரத்யேக குஜராத்தி விருந்தளித்த போர்ச்சுகல்
[Sunday 2017-06-25 06:00]

அரசுமுறைப் பயணமாக போர்ச்சுகல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் அண்டோனியா கஸ்டோ பிரத்யேக குஜராத்தி விருந்தளித்தார். பிரதமர் மோடி மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் பகுதியாக போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் சென்றடைந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை குஜராத்தி மொழியில் வரவேற்ற கோஸ்டா, மோடிக்காக பிரத்யேக குஜராத் பாரம்பரியம் கொண்ட மதிய உணவு விருந்தினையும் அளித்தார்.



சிக்கன் சாப்பிட ஒரு வாரம் விடுமுறை கேட்ட ஊழியர்
[Saturday 2017-06-24 06:00]

சிக்கன் சாப்பிடுவதற்காக ஒரு வாரம் விடுமுறை அளிக்குமாறு ரயில்வே ஊழியர் ஒருவர் எழுதிய விடுமுறை விண்ணப்ப கடிதம் ஆன்லைனில் வைரலாகப் பரவி வருகிறது.சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் ரயில் நிலையத்தில் பணிபுரிபவர் பகைராஜ் கோண்ட். இவர், நிலைய அதிகாரிக்கு கடந்த ஜூன் 17ல் ஒருவாரம் விடுமுறை வேண்டி விண்ணப்பம் அளித்தார். அதில், புனித ஷ்ரவான் மாதம் ஒருவாரத்தில் தொடங்க இருக்கிறது. அந்த மாதம் தொடங்கினால் என்னால் கோழி இறைச்சி உணவை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, ஷ்ரவான் மாதம் தொடங்குவதற்கு முன்பாக கோழி இறைச்சி உணவை எடுத்துக் கொள்ள ஒரு வாரம் விடுமுறை அளிக்க வேண்டும் என கோண்ட் குறிப்பிட்டுள்ளார்.



வண்டி நம்பரின் விலை...... ரூ.16 லட்சமா....!
[Saturday 2017-06-24 06:00]

டெல்லியில் போக்குவரத்துறை சார்பாக நடத்தப்பட்ட இ-ஏலத்தில் "0001" என்ற வண்டி எண் ரூ.16லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.டெல்லி அரசு சார்பாக ஃபேன்சி நம்பர்கள் கொண்ட வண்டி எண்கள் கடந்த 2014ம் ஆண்டு முதல் இ-ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நகரப்பகுதியில் வாழும் செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் மற்றும் மக்கள் சேவையில் உள்ள நிறுவனத்தினர் இவ்வாறு ஃபேன்சி வண்டி எண்களை பெறுவதற்கு பெரும் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலைியல் "0001" என்ற வண்டி எண் போக்குவரத்து துறை சார்பாக ஏலம் விடப்பட்டது. இந்த இ-ஏலத்தில் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், பாம் லேன்ட் என்ற தனியார் நிறுவனம் 16 லட்சம் ரூபாய்க்கு இந்த எண்ணை ஏலம் எடுத்துள்ளது.



திருமணத்திற்கு மறுத்த காதலன்.. ஆணுறுப்பை நறுக்கிய இளம்பெண்!
[Saturday 2017-06-24 06:00]

டெல்லியில் திருமணம் செய்ய மறுத்த வாலிபரின் ஆணுறுப்பை இளம்பெண் கத்தியால் நறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி மங்ஹால்புரி பகுதியைச் சேர்ந்தவர் அந்த 23 வயதான இளம்பெண். அதே பகுதியில் சாலையோர கடை நடத்தி வரும் 35 வயது நபரான ரவி. இவர் அந்த இளம்பெண்ணை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அவ்வப்போது தன்னை திருமணம் செய்யும்படி ரவியிடம் அந்த இளம்பெண் வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் ஒருவரை ஒருவர் விரும்பினாலும் ரவியின் வீட்டில் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதனால், ரவி அந்த இளம்பெண்ணை அடிக்கடி சந்திப்பதை தவித்து இருக்கிறார். இந்நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என ரவியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்



மீண்டும் பிளாஸ்டிக் முட்டை..
[Saturday 2017-06-24 06:00]

பிளாஸ்டிக் முட்டை என்பது இன்றளவும் வதந்தி என்ற அளவிலேயே இருக்கிறது. ஆனால், ஆங்காங்கே பிளாஸ்டிக் முட்டை விற்கப்படுவதாக புகார்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜான் என்பவர், நேற்று அதே பகுதியில் உள்ள கடை ஒன்றில் பதினைந்து நாட்டு முட்டைகளை வாங்கியுள்ளார். இன்று காலை குழந்தைகளுக்கு சாப்பாடு கட்டிக்கொடுக்க முட்டையை வேகவைத்தபோது ஒரு முட்டையின் மஞ்சள் கரு மட்டும் பிளாஸ்டிக் போல இருந்தது.



பாஜகவின் பினாமி அரசு அதிமுக அரசு: - ராமதாஸ் பேட்டி
[Friday 2017-06-23 18:00]

கடந்த 2011- ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் பண்ருட்டி தொகுதியில் சபா.ராஜேந்திரன் போட்டியிட்டார். அவரை ஆதரித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன், பாமக தலைவர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் எம்எல்ஏ தி.வேல்முருகன், முன்னாள் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, திரைப்பட நடிகர் நெப்போலியன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.



பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுவிக்கப்படுவது குறித்து மத்திய அமைச்சர் பதில்:
[Friday 2017-06-23 18:00]

ராஜுவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது தொடர்பாக மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜுவ் படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தனு உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களது விடுதலை குறித்து சட்டப்பேரவையில் மனித நேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி எம்எல்ஏ வியாழக்கிழமை கேள்வி எழுப்பினார்.



பசியை ஒழிக்கப் பாடுபடும் இளைஞர் அங்கித் கவத்ராவுக்கு இங்கிலாந்து ராணி விருது:
[Friday 2017-06-23 18:00]

பசியை ஒழிக்கப் பாடுபடும் இளைஞர் அங்கித் கவத்ராவுக்கு இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் ‘இளம் தலைவர்’ விருதை அளிக்க உள்ளார். லண்டன், பக்கிங்ஹாம் அரண்மனையில் நடக்கும் இந்த விருது விழா, 29-ம் தேதி நடைபெற உள்ளது. பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த அங்கித் கவத்ரா, கடந்த 2014-ம் ஆண்டு வேலையை உதறிவிட்டு ‘ஃபீடிங் இந்தியா’என்ற தன்னார்வ அமைப்பை தொடங்கினார். இதன் மூலம் வீடுகள், ஓட்டல்கள், கேன்டீன்கள் மற்றும் விழாக்களில் மீதமாகும் உணவைப் பெற்று, அதை பசியால் வாடுபவர்களுக்கும், உணவு தேவைப்படும் இடங்களுக்கும் விநியோகித்து வருகிறார்.



ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு - நீதிமன்றம் முடிவெடுக்க உத்தரவு:
[Friday 2017-06-23 18:00]

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை,‌ காவல் துறையி‌னர் வி‌சாரிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று முடிவெடுக்க உள்ளது. ஜெயலலிதா இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அதனை விசாரிக்க வேண்டும் எனவும் கடந்த மே 22 ஆம் தேதி செல்வ விநாயகம் என்ற வழக்கறிஞர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் முறையிட்டார். அதில், அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிக‌லா, மு‌தலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முத‌லமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 186 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் எ‌ன அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.



கருணைக் கொலை செய்யுங்கள்.. ராஜீவ் கொலை வழக்கு கைதி
[Thursday 2017-06-22 09:00]

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தன்னை விடுவிக்கவில்லை என்றால் கருணைக் கொலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ராபர்ட் பயாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.ராஜூவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு 25 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறையில் 25 ஆண்டுகளை கழித்துள்ளதால், தங்களை விடுவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



விவசாயிகளை தீவிரவாதிகள்போல் நடத்துகிறது அரசு
[Thursday 2017-06-22 09:00]

துன்பத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு உதவி செய்யாமல், அவர்களை தீவிரவாதிகள்போல் நடத்துகிறது மத்திய அரசு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “விவசாயிகள் துன்பத்தில் இருக்கிறார்கள். போராட்டம் மூலம் தங்களது நிலையை உணர்த்த முயற்சிக்கும் அவர்களை மத்திய அரசு அடக்குகிறது. விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்யாமல் தீவிரவாதிகளைப் போல் நடத்துகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.



துப்பாக்கிச் சண்டை: லஷ்கர் தீவிரவாதிகள் பலி
[Thursday 2017-06-22 09:00]

ஜம்மு காஷ்மீர் மாநிலம் காக்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, ராணுவத்தினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் லக்ஷர் இ-தொய்பா அமைப்பை சேர்ந்த மஸ்ஜித் மிர், ஷரிக் அஹமத், மற்றும் இர்ஷாத் அஹமத் என்ற 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.



‘சவாசனம்’ செய்த விவசாயிகள்
[Wednesday 2017-06-21 14:00]

மத்தியப் பிரதேசம், போபாலில் பாரதீய கிசான் யூனியன் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் ‘சவாசனம்’ செய்து விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு எதிராக தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர். நாடு முழுவதும் யோகா தினக் கொண்டாட்டங்களும், யோகா விழிப்புணர்வுப் பேரணிகள் நடந்துகொண்டிருக்கும் இதே வேளையில், பாரதீய கிசான் யூனியன் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் ‘சவாசனம்’ (இறந்த உடலைப் போல் கிடப்பது) செய்து, மத்தியப் பிரதேசத்தில் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பத்திற்கு எதிராக தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.



முதலமைச்சர் காரில் தலைகீழாகப் பறந்த தேசியக் கொடி
[Wednesday 2017-06-21 08:00]

சென்னை விமான நிலையத்தில் இருந்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்ற காரில் தேசியக் கொடி தலைகீழாகப் பறந்தது. முதலமைச்சரின் காரிலேயே தேசியக்கொடி தலைகீழாகப் பறந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக கட்சி ஆலோசித்து முடிவினை அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா