Untitled Document
February 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
கூட்டமைப்பு எம்.பிக்கள் பதவிகளை துறந்தால் அரசுக்கே சாதகம்! - விக்னேஸ்வரன்
[Wednesday 2017-01-11 07:00]

நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர் பதவிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் துறந்தால், தான் நினைத்ததை அரசாங்கம் செய்துவிடும், எனவே அந்தப் பதவிகளைத் தக்கவைப்பது முக்கியம் என்று  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கனடாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர் பதவிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் துறந்தால், தான் நினைத்ததை அரசாங்கம் செய்துவிடும், எனவே அந்தப் பதவிகளைத் தக்கவைப்பது முக்கியம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கனடாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பதவிகளைத் துறந்தால், அது மத்திய அரசுக்கு மிகப் பெரிய அழுத்தம் கொடுப்பதாக அமையும் தானே என்று வினா தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு பதிலளித்த வடமாகாண முதலமைச்சர், பதவி துறப்பதில் ஒரு விதமான பிரச்சினையும் இல்லை. கடந்த 1972ஆம் ஆண்டு எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பதவி துறந்தார். அவரது தொகுதியில் 1975ஆம் ஆண்டு தான் தேர்தல் வைத்தார்கள். இடைப்பட்ட காலத்தில் அரசு தான் நினைத்ததைச் செய்து முடித்தது.

அத்துடன், பதவிகளுக்காக ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. எங்களைப் பதவிகளிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே அரசு சில வேலைகளைச் செய்யும். மேலும், உடனடியாக உணர்ச்சிகரமான தீர்மானத்தை நாங்கள் எடுக்கக் கூடாது. நாங்கள் பதவிகளைத் துறந்ததும், அரசு தான் நினைத்ததைச் செய்து முடிக்கும். கேட்டால், அவர்கள் தானே பதவியைத் துறந்தார்கள் என்று சொல்வார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.comவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஆதரவில்லை- இந்தியாவின் பதிலால் கூட்டமைப்பு ஏமாற்றம்!
[Wednesday 2017-02-22 07:00]

வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைக்க இந்திய அரசு வலியுறுத்தாது என இந்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் தெரிவித்திருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை இலங்கை ஜனாதிபதியைச் சந்திக்கும் முன்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஜெய்சங்கர் சந்தித்தார்.ஜெனிவாவில் காலஅவகாசத்துக்கு ஆதரவளிப்பது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம்! - கஜேந்திரகுமார்
[Wednesday 2017-02-22 07:00]

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் கோரவுள்ள காலநீட்டிப்பிற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பது தமிழ்மக்களுக்கு செய்யும் துரோகம் என தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.கேப்பாப்பிலவு மக்களின் மண்மீட்பு போராட்டக்கதை! Top News
[Wednesday 2017-02-22 07:00]

தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி கேப்பாப்பிலவு- பிலக்குடியிருப்பு மக்கள் இன்றுடன் 23 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மக்களின் போராட்டத்தின் கதையை தாங்கிய பிரசுரம் ஒன்று நேற்று கேப்பாப்புலவு மக்களின் போராட்டக்களத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.அலட்சியம் செய்கிறார் வடக்கு மாகாண கல்வி அமைச்சர்! - அனந்தி ஆதங்கம்
[Wednesday 2017-02-22 07:00]

வடமாகாண கல்வி மேம்பட வேண்டும். அதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 85அவது அமர்வு நேற்று கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.அச்சுறுத்துவதற்காக படம் எடுக்கவில்லையாம்! - விமானப்படைப் பேச்சாளர் கூறுகிறார்
[Wednesday 2017-02-22 07:00]

போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களைப் படம்பிடிக்கவோ அல்லது வீடியோப் பதிவு செய்யவோ படையினருக்கு உத்தரவிடவில்லை. முகாம் தேவைக்காக, அங்கிருக்கும் படையினர் புகைப்படம் எடுத்திருக்கலாமே தவிர, அது பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என்று, விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.மட்டக்களப்பில் 1802 பேர் புலிகளால் கொல்லப்பட்டனராம்! - அமைச்சர் சாகல கூறுகிறார்
[Wednesday 2017-02-22 07:00]

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1983 ஆம் ஆண்டின் பின்னர் 1802 பேர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்தார். வாய்மூல விடைக்காக பத்ம உதயசாந்த குணசேகர எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.அபிவிருத்தி சட்டமூலத்துக்கு வடக்கு, கிழக்கு மாகாணசபைகளின் அங்கீகாரம் இல்லை! - நாடாளுமன்றத்தில் அறிவிப்பு
[Wednesday 2017-02-22 07:00]

நிலையான அபிவிருத்தி சட்டமூலத்திற்கு உடன்பாட்டை தெரிவிக்க வடமாகாண சபை மறுத்துள்ள அதேநேரம், அரசியலமைப்பு திருத்தமொன்று கொண்டு வரப்படும் வரை அச்சட்டமூலம் தொடர்பான பரிசீலனையை தாமதப்படுத்துவதாக கிழக்கு மாகாண சபை அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.அத்துரெலியே ரத்தன தேரரை வளைக்கிறது ஐதேக! - ஹெல உறுமய குற்றச்சாட்டு
[Wednesday 2017-02-22 07:00]

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இடையில் 2015ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி, ஐ.தே.கவில் சேர்வதற்காக, ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் வண. அத்துரெலியே ரத்தன தேரர், ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துள்ளதாக, ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது.புதிய அரசியல்யாப்பு உருவாக்கப்படாது! - எஸ்.பி திஸாநாயக்கவின் புதிய குண்டு
[Wednesday 2017-02-22 07:00]

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியில் அரசாங்கம் முழுமூச்சாக ஈடுபட்டுவரும் நிலையில் அவ்வாறான புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்படாது என்று அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினருமான எஸ்.பி திஸாநாயக்க பரபரப்பு தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.போரினால் அங்கவீனமானோரைக் கணக்கிட கால அவகாசம் கோருகிறார் அமைச்சர்!
[Wednesday 2017-02-22 07:00]

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக அங்கவீனமடைந்தவர்கள் தொடர்பில் கணக்கிடுவதற்கு, இன்னும் இரண்டுவார கால அவகாசம் வேண்டுமென, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, டக்ளஸ் தேவானந்த கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் ​போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.முறக்கொட்டாஞ்சேனை புதைகுழியில் மனித எச்சங்கள் மீட்பு!
[Tuesday 2017-02-21 20:00]

மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையில், இராணுவ முகாமிற்கு அருகே மனித எச்சங்கள் காணப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட இடத்தில் இரண்டாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆய்வு நடவடிக்கையில், மேலும் பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.கொட்டும் பனியிலும் 22 வது நாளாகத் தொடரும் போராட்டம்! Top News
[Tuesday 2017-02-21 19:00]

முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணி உரிமைப் போராட்டம் இன்று 22 ஆவது நாளாக கடும் பனிக்குளிருக்கு மத்தியில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பிலக்குடியிருப்பு இராணுவ முகாமிற்கு முன்னால் பொதுமக்களால் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு, இன்றைய தினம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.நிரந்தர சமாதானத்துக்கு நல்லிணக்கம் அவசியம்! - அமெரிக்க பிரதிநிதிகளிடம் சம்பந்தன் Top News
[Tuesday 2017-02-21 19:00]

இலங்கையின் நிரந்தர சமாதானத்திற்கு நல்லிணக்கம் அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவினருக்கும் இரா. சம்பந்தனுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே சம்பந்தன் இதனை வலியுறுத்தியுள்ளார்.ஜெனிவாவில் அரசுக்கு காலஅவகாசம் வழங்குவதை கூட்டமைப்பு எதிர்க்கிறது! - சிறிதரன்
[Tuesday 2017-02-21 19:00]

ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவில்லை. அதனை கடுமையாக எதிர்க்கின்றது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.இரண்டாவது நாளாகத் தொடரும் பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம்! Top News
[Tuesday 2017-02-21 19:00]

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கோரி, நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது. பரவிப்பாஞ்சான் ராணுவ முகாமுக்கு முன்னால் நடைபெற்று வரும் இப் போராட்டத்தை ராணுவத்தினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதோடு, அங்கு செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களையும் ஒளிப்பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.கூட்டமைப்பு பிளவுபடுவதற்கு செல்வம் அடைக்கலநாதனே காரணம்! - கஜேந்திரன் குற்றச்சாட்டு
[Tuesday 2017-02-21 19:00]

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதனே காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். முப்படைகளையும் கொண்டிருந்த தமிழர்களால் சாதிக்க முடியாததை உடனடியாக சாதிக்க முடியுமா என செல்வம் அடைக்காலநாதன் கேள்வி எழுப்பியமை குறித்து ஊடகவிலாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.கிளிநொச்சியில் இரண்டாவது நாளாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்! Top News
[Tuesday 2017-02-21 19:00]

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், காணாமல் போனோரின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. தமது பிள்ளைகளின் உண்மை நிலையை கண்டறியும்வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.புதுக்குடியிருப்பில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்- சிவமோகன் எம்.பியும் பங்கேற்பு! Top News
[Tuesday 2017-02-21 19:00]

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் காணி அக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவபிரகாசம் சிவமோகன், இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுக்குச் செல்லாது, உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் இணைந்துகொண்டார்.முல்லைத்தீவு போராட்டங்கள் - அரசிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை!
[Tuesday 2017-02-21 18:00]

தமது காணிகளை விடுவிக்கக் கோரி மக்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பில், அரசாங்கத்தால் இதுவரை எவ்வித அறிவுறுத்தல்களும் மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பப்படவில்லை என, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், தெரிவித்தார்.இலங்கை அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை! - மனித உரிமை கண்காணிப்பகம்
[Tuesday 2017-02-21 18:00]

2017ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன், பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் அளித்திருந்த வாக்குறுதி இன்னமும்நிறைவேற்றப்படவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.


Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
AIRCOMPLUS2014-02-10-14
Easankulasekaram-Remax-300716
<b>02-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ideal Entertainment நிறுவன அறிமுக விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>29-01-2017 அன்று ரொரன்டோவில் தமிழ்நாடு சமூக மன்றம்  நடாத்திய தைப்பொங்கல் விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>28-01-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற கனடா தமிழர் மரபு மாநாட்டு விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா