Untitled Document
November 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பூமியின் உள்மையப்பகுதியில் அறியப்படாத ஆதாரப் பொருள்: - ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவிப்பு
[Wednesday 2017-01-11 08:00]

பூமியின் உள்மையப்பகுதியில் இதுவரை

பூமியின் உள்மையப்பகுதியில் இதுவரை "அறியப்படாத ஆதாரப் பொருள்" ஒன்றை அடையாளம் கண்டிருப்பதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பூமியின் உள்மையப்பகுதியில் என்ன உள்ளன என்பதை அறிவது, பூமி உருவானபோது இருந்த நிலைமைகளை மேலும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவும் இரும்பு மற்றும் நிக்கலுக்கு பிறகு, பூமியின் உள்மையப்பகுதியில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பதாக நம்பப்படும் இந்த ஆதாரப் பொருளை பல தசாப்தங்களாக அவர்கள் தேடி வந்துள்ளனர். பூமியின் உள்மையப்பகுதியில் நிலவுகின்ற உயர் தட்பவெப்ப நிலையையும், அழுத்தங்களையும் மீள் உருவாக்கி சோதனைகள் நடத்தியதன் மூலம் இந்த ஆதாரப் பொருள் சிலிக்கானாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.உலகம் எவ்வாறு உருவானது என்பது பற்றி இன்னும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவும்."இன்னொரு முக்கிய ஆதாரப் பொருளாக இருப்பது சிலிக்கான் என நாங்கள் நம்புகிறோம் பூமியின் உள்மையப்பகுதியின் எடையில் சுமார் 5 சதவீதம் இருக்கும் இது, இரும்பு-நிக்கல் உலோக கலவையில் கலந்திருக்கலாம்" என்று இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய டோக்கியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் ஈஜி ஒக்டானி தெரிவித்திருக்கிறார்.

  

அணுகுவது கடினம்

1,200 கிலோமீட்டர் ஆரமுடைய பூமியின் உள்மையப்பகுதி திடமான ஒரு பந்து போன்றதாக கருதப்படுகிறது. பூமியின் உள்மையப்பகுதி மிகவும் ஆழத்தில் இருப்பதால், நேரடியாக இதனை ஆய்வு செய்ய முடியாது. எனவே இந்தப் பகுதிக்குள் அதிர்வலைகளை உட்புகச் செய்து அதன் மூலம் அப்பகுதி எதனால் ஆனது என்பதைப் புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.நம்முடைய புரிதல்களுக்கு கூடுதல் அம்சங்களை இந்த சமீபத்திய முடிவுகள் வழங்கியிருந்தாலும், இதுவே இறுதியானவை அல்லபெரும்பாலும் இரும்பால் உருவாக்கப்பட்டுள்ள பூமியின் உள்மையப்பகுதி, 85 சதவீதம் இரும்பாலும், சுமார் 10 சதவீதம் நிக்கலாலும் உருவாக்கப்பட்டுள்ளது.இவற்றை சேர்த்து பார்த்தால் 5 சதவீதம் எஞ்சியுள்ளது. அந்த 5 சதவீத பொருளை பற்றிய ஆய்வு மேற்கொள்ள ஈஜி ஒக்டானியும், அவருடைய அணியினரும் இரும்பு மற்றும் நிக்கல் கலவையை உருவாக்கி, அதனை சிலிக்கானோடு சேர்த்தனர்.பூமியின் உள்மையப்பகுதியில் நிலவுகின்ற அதே அளவு அதிக அழுத்தங்களுக்கும், தட்டவெப்ப நிலைக்கும் அதனை உட்படுத்தினர்.

பூமியின் உள்மையப்பகுதியில் இருக்கின்ற அதிர்வலை தரவுகளோடு இந்த கலவை பொருந்தியுள்ளது.ஆனாலும், சிலிக்கான் இருப்பதை உறுதி செய்ய இன்னும் அதிக ஆய்வுகள் நடத்த வேண்டியுள்ளது. பிற ஆதாரப் பொருட்கள் இருப்பதற்கான சாத்தியக்கூற்றை இது தவிர்க்கவில்லை என்று பேராசியரியர் ஒக்டானி கூறியிருக்கிறார்.

பூமியின் மையத்தின் உருவாக்கம்

"இத்தகைய சோதனைகள் உண்மையிலேயே உற்சாகத்தை தருகின்றன. 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், பூமி உருவானபோது, பூமியின் மையம் பூமியின் பாறை போன்ற பகுதிகளிலிருந்து முதலில் பிரிந்து வர தொடங்கியபோது, அதன் உள்மையப்பகுதி எப்படி இருந்தது என இந்த பரிசோதனைகள் காட்ட முடியும் என்பது இதற்கு காரணமாகும்" என்று இந்த ஆய்வு பற்றி குறிப்பிடுகையில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் கேம்பிரிட்ஃஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சீமோன் ரெட்ஃபெர்ன் தெரிவித்திருக்கிறார்.1,200 கிலோமீட்டர் ஆரமுடைய பூமியின் உள்மையப்பகுதி திடமான ஒரு பந்து போன்றதாக கருதப்படுகிறது "ஆனால், ஆக்ஸிஜனும் பூமியின் உள்மையப்பகுதியில் இருக்கும் முக்கிய ஆதாரப் பொருளாக இருக்கலாம் என்று பிற ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன" என்றார் அவர்.அங்கு என்ன உள்ளன என்பதை அறிவது, பூமி உருவானபோது இருந்த நிலைமைகளை மேலும் சிறந்த முறையில் விஞ்ஞானிகள் புரிந்துகொள்ள உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக கூறினால், ஆக்ஸிஜன் குறைந்த சூழ்நிலைகள் என்று அறியப்படும், ஆக்ஸிஜன் மிகவும் குறைவான பகுதியாக பூமியின் ஆரம்ப கட்ட உள்பகுதி இருந்ததா? அல்லது ஆக்ஸிஜன் உடைய சூழ்நிலைகள் என்று விவரிக்கப்படும் வகையில் ஆக்ஸிஜன் இருக்கின்ற பகுதியாக அமைந்ததா? என்பதை அறிய இவை உதவும்.போரசிரியர் ஈஜி ஒக்டானியின் ஆய்வு முடிவுகள்படி, 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அதிக அளவிலான சிலிக்கான் பூமியின் உள்மையப்பகுதியில் உள்ளடக்கப்பட்டிருந்தால், பூமியின் பிற பகுதிகளில் ஓரளவு அதிகமான ஆக்ஸிஜனை நிரப்பியிருக்கலாம்.ஆனால், அதற்கு மாறாக, பூமியின் மையப்பகுதியில் ஆக்ஸிஜன் உள்ளிழுக்கப்பட்டிருந்தால், மையப்பரப்பை சுற்றியுள்ள பாறையாலான மேண்டில் என்ற பகுதிக்கு, ஆக்ஸிஜன் குறைவாகவே கிடைத்திருக்கும்."நம்முடைய புரிதல்களுக்கு கூடுதல் அம்சங்களை இந்த சமீபத்திய முடிவுகள் வழங்கியிருந்தாலும், இதுவே இறுதியானவை என்று கூறுவதற்கில்லை" என பேராசிரியர் ரெட்ஃபெர்ன் குறிப்பிட்டுள்ளார்.சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க புவி இயற்பியல் ஒன்றியத்தின் இலையுதிர்கால கூட்டத்தில் இந்த ஆய்வை போரசிரியர் ஈஜி ஒக்டானி சமர்ப்பித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



அதிக உடல் எடை கொண்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோயை கண்டறிவது கடினம்!
[Friday 2017-11-24 07:00]

அதிக உடல் எடை கொண்ட பெண்களுக்கு, மார்பக புற்றுநோய் தாக்கியுள்ளதா என எளிதில் கண்டறிய முடியாது என ஆய்வு மூலம் தெரியவந்தள்ளது. பெண்கள் 40 வயதை கடந்த பின்னர் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளது. இதனை முன்கூட்டியே கண்டறிந்தால் உயிர்ப்பலியை தடுக்கலாம். இதற்காக மருத்துவர்களிடம் சென்று பெண்கள் பரிசோதனை மற்றும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதற்காக மம்மோகிராம் சோதனையை பெண்கள் செய்து கொள்ளவேண்டும். சுவீடன் நாட்டில் 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மார்பக புற்றுநோயை கண்டறியும் மம்மோகிராம் சோதனை செய்து கொள்வது நடைமுறையில் உள்ள ஒன்றாகும்.



கொள்ளையடிக்க வந்த வீட்டில் இருந்த திண்பண்டங்களை சாப்பிட்டு தூங்கிய திருடன் கைது!
[Thursday 2017-11-23 17:00]

ஸ்காட்லந்து நாட்டின் வடக்கு லனர்க்சிரின் பகுதியில் நடைபெற்ற சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த திங்கட் கிழமை திருடன் ஒருவன் கொள்ளையடிக்க வந்துள்ளான். வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே வந்த அவன் வீட்டில் இருந்த திண்பண்டங்களை சாப்பிட்டுள்ளான்.



திருமணம் நடந்ததா இல்லையா? - நிரூபிக்க நீதிமன்றப்படி ஏறிய பாகிஸ்தானிய நடிகை!
[Thursday 2017-11-23 16:00]

தனக்கு திருமணம் நடந்ததா, இல்லையா என்பதை நிரூபிக்கும் பொருட்டு ஏழு வருடங்களாக நீதிமன்ற வழக்கு ஒன்றை சந்தித்து வருகிறார் பாகிஸ்தான் நடிகை.மீரா என்று அறியப்படும் இர்டிசா ருபாப், பல வெற்றிகரமான வணிகரீதியான படங்களில் நடித்துள்ளார். அதற்காக பல உள்ளூர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.



அணுஆயுத போர்வாளை தொடர்ந்து உறுதியாக பற்றிக்கொள்ள வேண்டும்: - வடகொரியா
[Thursday 2017-11-23 15:00]

உலக நாடுகளின் கண்டனம், ஐ.நா. சபையின் பொருளாதார தடைகள் போன்ற நடவடிக்கைகளுக்கு கவலைப்படாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், வடகொரியா தீவிரவாதத்தை ஆதரித்து வருவதாக கூறினார். தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து வரும் நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஈரான், சூடான், சிரியா போன்ற நாடுகளின் பட்டியலில் வடகொரியாவும் இணைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.



மோடியைச் சந்திக்க ஆவலாக உள்ளேன்: - இவான்கா ட்ரம்ப்
[Thursday 2017-11-23 15:00]

பிரதமர் மோடியைச் சந்திக்க ஆவலாக உள்ளேன்” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மகள் இவான்கா ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.ஹைதராபாத்தில் நடக்கவுள்ள சர்வதேசத் தொழில்முனைவோர் மாநாட்டில், இவன்கா ட்ரம்ப் கலந்துகொள்ளவிருக்கிறார். வருகிற 28-ம் தேதி தொடங்கவிருக்கும் இந்தத் தொழில் முனைவோர் மாநாட்டுக்காக அமெரிக்க தொழில்முனைவோர் குழுவைத் தலைமையேற்று இந்தியா அழைத்துவருகிறார் இவான்கா ட்ரம்ப். இதற்காக ஹைதராபாத் நகரம் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு எனப் பல வகையிலும் தயாராகி வருகிறது.



முதல் முறையாக சீனாவில் ஒன்லைனில் விற்கப்பட்ட விமானம்!
[Thursday 2017-11-23 15:00]

சீனாவில் ஆன்லைனில் விமானம் விற்கப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சீன நிறுவனம் ஒன்று போயிங் ரக விமானத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறது. பல நாட்கள் விற்காமல் இருந்த இந்த விமானம் ஆன்லைன் மூலம் விற்கப்பட்டு இருக்கிறது. மேலும் அந்த விமானத்தை புக் செய்த நிறுவனத்தின் இடத்திற்கே சென்று நேரடியாக ஷாப்பிங் நிறுவனம் டெலிவரி செய்து இருக்கிறது. சீனாவில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான போயிங் 747எஸ் ராக விமானம் இரண்டு பல நாட்களாக பயன்படுத்தபடாமல் இருந்து வந்து இருக்கிறது.



சனி கிரகத்தின் அரை வட்ட படங்களை அனுப்பிய காசினி விண்கலம்!
[Thursday 2017-11-23 15:00]

காசினி விண்கலம் கடந்த 20 ஆண்டுகளாக விண்வெளியில் சுற்றி வந்தது. இந்நிலையில் விண்கலம் தன் ஆயுட்காலம் நிறைவடையும் முன்பாக சனி கிரகத்தின் அற்புதமான படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. இதில் சனி கிரகத்தின் அரைவட்ட சுழற்சியையும் அதைச் சுற்றி ஏராளமான உப கிரகங்களின் வட்டப்பாதையையும் அது படம் பிடித்துள்ளது. சுமார் 42 வகையான பச்சை, சிவப்பு, நீல நிறங்களில் புகைப்படங்களை காசினி விண்கலம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.



வடகொரியாவில் இருந்து தப்பிக்க முயன்ற வீரர் மீது சக நாட்டு ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு!
[Wednesday 2017-11-22 18:00]

வடகொரியாவில் இருந்து தப்பிக்க முயன்ற ராணுவ வீரரை சக ராணுவ வீரர்களே சுட்டு வீழ்த்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவில் இருந்து தப்பிக்க முயன்ற ராணுவ வீரர் ஒருவர், பல தடைகளை கடந்து ஜீப் ஒன்றின் மூலம் ராணுவ விலக்கல் மண்டலம் வந்து அங்கிருந்து தென்கொரியாவுக்குள் தப்பிக்க முயன்றுள்ளார். இதை அறிந்த வடகொரிய ராணுவ வீரர்கள் எல்லையில் அவரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். ராணுவ விலக்கல் மண்டலம் என்பது வடகொரியா மற்றும் தென்கொரியாவின் இடையில் அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களைக் கொண்டு பாதுகாக்கப்படும் எல்லையாகும்.



கால் டாக்சி நிறுவன வாடிக்கையாளர்களின் தகவல் திருட்டு: - வாடிக்கையாளர்களை மிரளவைத்த உபேர்
[Wednesday 2017-11-22 17:00]

உபேர் கால் டாக்சி நிறுவன வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த மிகப்பெரிய ஹேக்கிங் நிகழ்ந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள உபேர் வாடிக்கையாளர்கள் மின்னஞ்சல், தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட 5.7 கோடி பேரின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருடப்பட்டுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்ட உபேர் ஓட்டுநர்களின் லைசென்ஸ் எண் உள்ளிட்ட விவரங்களும் திருடப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.



அமெரிக்காவில் கேட்ட மர்மமான சத்தம்: - காரணம் என்ன? -
[Wednesday 2017-11-22 17:00]

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் சமீபத்தில் மர்மமான வெடிச்சத்தம் போன்ற ஒலி பெரியளவில் கேட்டது, இங்கு மட்டுமல்ல! இதே போன்ற சத்தம் இந்த ஆண்டில் உலகின் 64 இடங்களில் கேட்டுள்ளது. மிச்சிகன் மாகாணம், பின்லாந்தின் லப்லாந்து பகுதி, பிரித்தானியாவின் வேல்ஸில் உள்ள ஸ்வன்சீ நகரம், பிரித்தானியாவின் யார்க்ஷயர் கவுண்டி போன்ற முக்கிய பகுதிகளும் இதில் அடக்கமாகும். இந்த பயங்கர சத்தத்துக்கு ’பமா பூம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இது எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து பல்வேறு விதமான விளக்கங்கள் அளிக்கப்படுகிறது.



சவுதி அரேபியாவில் கனமழை: - நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
[Wednesday 2017-11-22 17:00]

சவுதி அரேபியாவில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வெள்ளப் பெருக்கால் பல பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது ஜித்தாவில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் ஆறுகளைப் போன்று வெள்ளம் தேங்கி உள்ளது.ஜித்தா, மக்கா நகரங்களில் பள்ளிகள்,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கனமழை மற்றும் பலத்த சூறைக்காற்று தொடர வாய்ப்புள்ளதால் பல சாலைகளை மூட மக்கா பேரிடர் மேலாண் மையம் அறிவுறுத்தி உள்ளது.



வங்காளதேசத்தில் போர் குற்ற வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!
[Wednesday 2017-11-22 17:00]

வங்காளதேசத்தில் 1971-ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தின்போது ஒரு தரப்பினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, இத்தகைய போர்க்குற்றங்களை விசாரிக்க கடந்த 2010-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இங்கு நடைபெற்றுவரும் வழக்குகளின் விசாரணையில், பலருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.



சீன வடகொரியா நிறுனங்கள மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் நடவடிக்கை!
[Wednesday 2017-11-22 17:00]

வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை முடக்கும் விதமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய பொருளாதார தடையை விதித்துள்ளார். அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளாலட உலக நாடுகளின் கண்டனங்களுக்கு ஆளாகி வரும் வடகொரியா மீது ஐ.நா ஏற்கனவே பொருளாதார தடை விதித்துள்ளது. இந்த நிலையில் வடகொரிய கப்பல் நிறுவனங்கள், சீன வர்த்தக நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை வதித்துள்ளது.



15 வருடகால சுரங்கப்பாதை பணி நிறைவுக்கு வந்தது! – மகிழ்ச்சியில் கனடா மக்கள்
[Tuesday 2017-11-21 23:00]

நீண்ட காலமாக அமைக்கப்பட்டு வந்த கனடாவின் ரொறொன்ரோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யோர்க் ஸ்பாடினா சுரங்கப்பாதையானது எதிர்வரும் 30 நாட்களுக்குள் திறந்து வைக்கப்படவுள்ளது. குறித்த சுரங்கப்பாதையானது சுமார் 15 வருடகாலத்திற்கும் மேலாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. எனினும் இது வரையிலும் அதனை பாவனைக்கு விடுவது தொடர்பாக அரசு எந்த அறிவித்தலையும் வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் குறித்த சுரங்கப்பாதையில் திறப்பு நேரக்கணிப்பினை, கனடாவின் அரசு உயர் அதிகாரிகள் குழு தொடக்கி வைத்துள்ளது.



புதிதாக தேர்தலை சந்திக்க தயார்: - ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அதிரடி அறிவிப்பு
[Tuesday 2017-11-21 18:00]

ஜெர்மனியில் புதிதாக தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில் நான்காவது முறையாக ஏஞ்சலா பிரதமரானார். இதற்கிடையே ஏஞ்சலா ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய முன்வர வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஃபிராங் வால்டர் வலியுறுத்தியுள்ளார்.



நைஜீரியா மசூதிக்குள் மனித வெடி குண்டு தாக்குதலில் 50-க்கும் அதிகமானவர்கள் பலி!
[Tuesday 2017-11-21 15:00]

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அடமாவா மாநிலத்தின் முபி நகரில் உள்ள ஒரு மசூதிக்குள் இன்று புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதி தனது உடலில் கட்டி இருந்த வெடி குண்டுகளை வெடிக்க வைத்த தாக்குதலில் 50-க்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அடமாவா மாநில காவல்துறை செய்தி தொடர்பாளர் ஒத்மான் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.



ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெறுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம்: - ஆங் சான் சூகி அறிவிப்பு
[Tuesday 2017-11-21 15:00]

கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உள்பட பல உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.



கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு தயார்: - சீனா அறிவிப்பு
[Tuesday 2017-11-21 15:00]

சீனா அனைத்து துறைகளிலும் அதிவேகமாக முன்னேறி வருகிறது. அணுசக்தி துறையிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. ‘டாங்பெங்-41’ என்ற ஏவு கணையை தயாரித்து கடந்த 2012-ம் ஆண்டில் முதன் முறையாக சோதனை நடத்தியது.இது 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்தது. இதன் மூலம் 10 அணுகுண்டுகளை ஒரே நேரத்தில் செலுத்தி தாக்குதல் நடத்த முடியும்.



அமெரிக்காவின் ஹாலிவுட் பீச்க்கு வந்த முதலையால் பரபரப்பு!
[Tuesday 2017-11-21 15:00]

அமெரிக்காவின் பிரபல கடற்கரையான ஹாலிவுட் பீச்க்கு திடீரென வந்த முதலையால் சுற்றுலா பயணிகள் செய்வதறியாது திகைத்து போய்யினர். ஹாலிவுட் கடற்கரையில் வழக்கம் போல அவர்கள் உற்சாகமாக பொழுதை கழித்தனர். அப்போது கரைக்கு வந்த அலைகளின் இடையே 6 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று திடீரென வந்து சேர்ந்தது. இதனை கண்ட அனைவரும் பீதியடைந்து பின்வாங்கினர்.



ஐந்து நிமிடத்திற்கு ஒரு குழந்தை வன்முறையால் பாதிப்பு: - அதிகாரி அதிர்ச்சி தகவல்
[Tuesday 2017-11-21 08:00]

சர்வதேச குழந்தைகள் வன்முறை மற்றும் புறக்கணிப்புக்கு எதிரான அமைப்பு சார்பில் அரபு நாடுகளின் பிராந்தியத்தில் 5-வது சர்வதேச குழந்தைகள் தின மாநாடு துபாயில் நேற்று தொடங்கியது. மாநாட்டுக்கு சர்வதேச குழந்தைகள் வன்முறை மற்றும் புறக்கணிப்புக்கு எதிரான அமைப்பின் தலைவர் டாக்டர் துபைல் முகம்மது தலைமை தாங்கி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-


Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா