Untitled Document
January 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
2020இல் ஜனாதிபதி தேர்தல் நடக்காது!
[Wednesday 2017-01-11 18:00]

2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறமாட்டாது என  அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறமாட்டாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com



இரண்டாவது நாளாகத் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்! Top News
[Tuesday 2017-01-24 19:00]

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் வவுனியாவில் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல்நிலையை வவுனியா பொது வைத்தியசாலையின் சிரேஸ்ட மருத்துவ அதிகாரி தலைமையிலான குழுவினர் இன்று பரிசோதனை செய்தனர்.



தனிமையில் இருந்த கர்ப்பிணிப் பெண் பட்டப்பகலில் வெட்டிக் கொலை! - ஊர்காவற்றுறையில் பதற்றம் Top News
[Tuesday 2017-01-24 19:00]

ஊர்காவற்துறை பகுதியில் தனிமையில் வீட்டில் இருந்த 27 வயதுடைய 7 மாதக் கர்ப்பிணிப் பெண்ணொருவர் இன்று பட்டப்பகலில் கொரூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு பொது மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டமையினால் ஊர்காவல்துறை பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.



விமானத்தைச் சுட்டு வீழ்த்தியவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்தார் யாழ். நீதிபதி!
[Tuesday 2017-01-24 19:00]

விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தி நான்கு விமானப்படையினரை கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ் மேல் நீதிமன்றம் நிராகரித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ்.மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.



கொழும்பு வந்தார் அமெரிக்க அதிகாரி!
[Tuesday 2017-01-24 19:00]

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் பிரதி இராஜாங்க செயலாளர் அஞ்செலா அக்லெர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ள அவர், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளதோடு, இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்.



ஜனாதிபதியிடம் நியமனக் கடிதத்தை கையளித்தார் புதிய இந்தியத் தூதுவர்! Top News
[Tuesday 2017-01-24 19:00]

புதிய இந்திய தூதுவர் தரஞ்சித் சிங் சந்து உள்ளிட்ட நான்கு நாடுகளின் தூதுவர்கள் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர்.



யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் பிராந்திய அலுவலகம்!
[Tuesday 2017-01-24 19:00]

வெளிநாட்டு அமைச்சின் பிராந்திய அலுவலகம், நாளை மறுதினம் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.



ஜல்லிக்கட்டு போன்று உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் ஆதரவளிக்க வேண்டும்! - செல்வம் அடைக்கலநாதன்
[Tuesday 2017-01-24 19:00]

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தமை போன்று, காணாமல் போனோரின் உறவினர்களின் உணவுத்தவிர்ப்பு போராட்டத்திற்கும் ஆதரவு வழங்க வேண்டும் என எதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.



வடமராட்சி இளைஞர் சியராலியோனில் அடித்துக் கொலை! - சடலத்துக்கு 15 இலட்சம் ரூபா கப்பம் கேட்கும் முகவர்கள்
[Tuesday 2017-01-24 18:00]

சுவிற்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக, யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த வருடம் புறப்பட்டுச் சென்ற கரவெட்டி பகுதியைச் சேர்ந்த ம.ரவிசங்கர் என்ற இளைஞன், மேற்கு ஆபிரிக்காவில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில், நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான சியாராலியோனிலேயே இந்தக கொலை இடம்பெற்றுள்ளது.



ரவிராஜ் கொலை வழக்கின் மேன்முறையீட்டை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடிவு!
[Tuesday 2017-01-24 18:00]

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் மேன்முறையீட்டை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் குறித்த மேன்முறையீட்டை தாக்கல் செய்திருந்தார். ரவிராஜ் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீடு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது.



விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு!
[Tuesday 2017-01-24 18:00]

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன, இன்று உத்தரவிட்டார்.



10 கோடி ரூபா வலம்புரிச் சங்கை விற்க முயன்ற 7 பேர் மட்டக்களப்பில் கைது! Top News
[Tuesday 2017-01-24 18:00]

சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான வலம்புரிச் சங்கு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற 7 பேரை மட்டக்களப்பு, கல்குடாவில் நேற்று மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர். இது தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்துக்கு விசேட அதிரடிப் படையினர் சென்று தேடுதல் நடத்தினர். இதன்போது, கல்குடா விஷ்ணு கோவில் வீதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வலம்புரிச் சங்கு ஒன்றையும் அவர்கள் கைப்பற்றினர்.



சுவிசில் புகலிடம் தேடுவதில் ஐந்தாம் இடத்தில் இலங்கையர்கள்!
[Tuesday 2017-01-24 18:00]

சுவிஸர்லாந்தில் புகலிடம் கோரும் வெளிநாட்டவர்களின் பட்டியலில் இலங்கையர்கள் ஐந்தாமிடத்தில் உள்ளனர். சுவிஸர்லாந்தில் அதிகளவில் எரித்திரியர்களும், இவர்களைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் புகலிடம் கோரி வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக சுவிஸர்லாந்திடம் அதிகளவில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்பவர்களில் இலங்கையர்களே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



ஊடகவியலாளர் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று! - 11 ஆண்டுகளாகியும் கிடைக்காத நீதி Top News
[Tuesday 2017-01-24 07:00]

ஊடக தர்மத்தை காப்பாற்றுவதற்காக, உண்மையை உலகிற்கு கொண்டு சென்றதால் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 11 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.



உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை படமெடுத்து அச்சுறுத்தும் புலனாய்வாளர்கள்! Top News
[Tuesday 2017-01-24 07:00]

காணாமல் போனவர்களின் உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். வவுனியா பிரதான தபால் நிலையம் அருகில் காணாமல் போனவர்களின் உறவுகள் நேற்றுக்காலை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.



லசந்த கொலையாளியின் அடையாளங்களை வெளியிடுவேன்! - என்கிறார் மஹிந்த
[Tuesday 2017-01-24 07:00]

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவைப் படுகொலை செய்தவரின் அடையாளங்களை வெளிப்படுத்த தயார் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை, முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலருக்குத் தெரிந்தே நடந்தது என்றும், முன்னாள் பாதுகாப்புச் செயலரே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்றும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியிருந்தார்.



காணாமற்போனோர் செயலகம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விளக்கம்! Top News
[Tuesday 2017-01-24 07:00]

காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடிக்கண்டுபிடிப்பது தொடர்பான அலுவலகம் அமைப்பது பற்றி விளக்கமளிக்கும் அமர்வு நேற்று வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் இடம்பெற்றது. குறித்த அமர்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு, காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அமைக்கப்படவிருக்கும் அலுவலகம் தொடர்பான விளக்கங்களை மனித உரிமைகள் சம்பந்தமான விரிவுரையாளர் ருக்கி பெனாண்டோ வழங்கியுள்ளார்.



தமிழ் இளைஞருக்கு பிடியாணை! - தேடுகிறது கனடியப் பொலிஸ்!
[Tuesday 2017-01-24 07:00]

தமிழ் இளைஞர் ஒருவரைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை ரொறன்டோ பொலிஸார் பிறப்பித்துள்ளனர். 36 வயதான லிங்கதாசன் சுந்தரமூர்த்தி என்பவருக்கே இவ்வாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தொடர்பான அடையாளங்களை ரொறன்டோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 5 அடி 10 அங்குலம் உயரம், கறுப்பு நிற தலைமயிர், இடைநிலையான உடல்பருமனை சந்தேகநபர் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இலங்கையில் வினாடிக்கு மூவரை பலியெடுக்கும் புகைப்பழக்கம்!
[Tuesday 2017-01-24 07:00]

இலங்கையில் புகைப்பிடித்தல் காரணமாக ஏற்பட்டுள்ள நோய்களால் வினாடிக்கு மூவர் வீதம் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். புகைப்பிடித்தல் காரணமான நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கவென நாட்டு வருமானத்தில் 72 பில்லியன் ரூபாவை வருடாந்தம் செலவிடுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.



குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடுகிறார் ஜனாதிபதி! - அனுரகுமார
[Tuesday 2017-01-24 07:00]

திறைசேரி முறி விநியோக மோசடி குறித்து விசாரிக்க விசேட விசாரணை ஆணைக்குழுவை அமைக்க ஜனாதிபதி எடுத்திருக்கும் தீர்மானமானது குதிரை ஓடிய பின்னர் லாயத்தை பூட்ட முனைவதைப் போன்றதென ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க விமர்சித்துள்ளார்.



இயற்கைக்கு நாம் இழைத்த கொடூரத்தின் விளைவுதான் வறட்சி! - அமைச்சர் பொ.ஐங்கரநேசன்
[Tuesday 2017-01-24 07:00]

வறட்சி இயற்கையின் கொடூரம் அல்ல இயற்கைக்கு நாம் இழைத்த கொடூரத்தின் விளைவுதான் வறட்சி என வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் வடக்கு விவசாய அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்குரிய சாதனை விவசாயிகளைக் கௌரவிக்கும் உழவர் பெருவிழா நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.


NIRO-DANCE-100213
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
AIRCOMPLUS2014-02-10-14
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<b> 15-01-2017 அன்று ஃபான் ஃஅம் மையத்தில்  நடைபெற்ற முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களது பொதுக் கூட்ட  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 15-01-2017 அன்று மார்க்கம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா(Puthinamphotos.com)
<b> 14-01-2017 அன்று ரொரன்டோவில் கனேடிய தமிழர் பேரவை (CTC) நடாத்திய பொங்கல் விழா விருந்து நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா (Puthinamphotos.com)