Untitled Document
April 25, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்தார் மங்கள! Top News
[Wednesday 2017-01-11 18:00]

பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்நாட்டின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான அமைச்சர் போரிஸ் ஜோன்சனை சந்தித்துள்ளார்.  லண்டனிலுள்ள பொதுநலவாய அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்நாட்டின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான அமைச்சர் போரிஸ் ஜோன்சனை சந்தித்துள்ளார். லண்டனிலுள்ள பொதுநலவாய அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

  

இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது சம்பந்தமாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்நாட்டின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான அமைச்சருக்கு விளக்கிக் கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.comஜனாதிபதியைச் சந்திக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்!
[Monday 2017-04-24 17:00]

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அடுத்த மாதம் 17 ஆம் திகதி கொழும்பில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. வடக்கில் நிலவும் நெருக்கடிகள் மற்றும் அது சம்பந்தமான எழுந்துள்ள எதிர்ப்புகள் சம்பந்தமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்திருந்தார். இது சம்பந்தமாக கலந்துரையாடவே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.வடக்கின் கல்வி நிலை படு வீழ்ச்சி! - கிழக்கிலும் நிலைமை மோசம்
[Monday 2017-04-24 17:00]

அண்மையில் வெளியாகியிருந்த, 2016ஆம் ஆண்டு நடந்த க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகளின் தேர்ச்சி வீதத்தின் அடிப்படையில் முதல் 25 இடங்களை பிடித்த கல்வி வலயங்களின் பட்டியலை கல்வி திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 25 இடங்களில் வடக்கில் உள்ள எந்தவொரு கல்வி வலயங்களும் இடம்பெறவில்லை. எனினும், கிழக்கு மாகாணத்தின் இரண்டு கல்வி வலயங்கள் இடம்பிடித்துள்ளன.இரண்டு மாதங்களாகியும் கிடைக்காத தீர்வு! - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆலயத்தில் மன்றாட்டம் Top News
[Monday 2017-04-24 17:00]

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று இரண்டு மாதத்தை எட்டியுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து அழுது புலம்பி இறைவனிடம் நீதி கேட்டனர்.கிளிநொச்சி போராட்டம் இன்று 64 ஆவது நாள்! Top News
[Monday 2017-04-24 17:00]

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 64 ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது. காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகள் தொடர்பில் உரிய பதிலை இந்த அரசு வழங்க வேண்டும் எனக் கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.ஊர்காவற்றுறையில் மயக்கமருந்து தூவி யுவதியை வல்லுறவுக்குட்படுத்த முயற்சி! -
[Monday 2017-04-24 17:00]

ஊர்காவற்றுறை பகுதியில் வீட்டில் தனித்திருந்த இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து தூவி, வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற நபரை, எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான், நேற்று உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் புகுந்த சந்தேக நபர், அங்கு தனித்து இருந்த 18 வயதுடைய யுவதி தூக்கத்தில் இருந்த போது, அவரது வாயை கைகளினால் பொத்தியவாறு மீது மயக்க மருந்தை விசிறியுள்ளார்.சிவில் பாதுகாப்பு படையின் காணிகளைப் பறிக்காதே! - கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டப் பேரணி Top News
[Monday 2017-04-24 17:00]

கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றுவோரும் அவர்களின் உறவினர்களும் இணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினர். தாம், பணியாற்றுகின்ற சிவில் பாதுகாப்புத் திணைக்கள பண்ணைக் காணிகளை பறிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுர.தந்தை செல்வா நினைவுப் பேருரை நிகழ்த்துகிறார் ராஜித சேனாரத்ன!
[Monday 2017-04-24 17:00]

இலங்கை தமிழரசுக்கட்சியின் நிறுவுனர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 26ஆம் திகதி புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு நினைவுப்பேருரை நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறும்.மே வரை கடும் வெப்பநிலை தொடரும்! அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
[Monday 2017-04-24 17:00]

வரும் மே மாதம் வரை கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரவுள்ளதால் பொதுமக்கள் வெப்பத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.கடையடைப்பு குறித்து முடிவு செய்யவில்லை! - வவுனியா வர்த்தகர் சங்கம்
[Monday 2017-04-24 17:00]

எதிர்வரும் 27 ஆம் திகதி வவுனியாவிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ள போதிலும், அப்படியொரு முடிவை, வவுனியா வர்த்தக சங்கம் எடுக்கவில்லை என்று அதன் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தொவித்துள்ளார். அது குறித்து அவர் மேலும் கூறுகையில்-குப்பை மேடு சரிவு குறித்த ஜப்பானிய நிபுணர்களின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு! Top News
[Monday 2017-04-24 17:00]

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பான ஜப்பானிய நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று முற்பகல் கையளிக்கப்பட்டுள்ளது. மீதொட்டமுல்ல குப்பைமேட்டு அனர்த்தத்துக்கு காரணமான விடயங்கள் மற்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறான சம்பவம் ஏற்படுவதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விதந்துரைப்பதற்காக வருகைதந்த ஜப்பானிய நிபுணர்கள் குழுவின் அறிக்கையே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவை மாற்றத்தை எதிர்க்கிறது ஐதேக!
[Monday 2017-04-24 17:00]

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வதற்கு தற்போது உகந்த காலம் இல்லையென்றும் அதற்கு தாம் உடன்படமாட்டோம் என்றும் ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் குறித்த மறுசீரமைப்புக்கு விருப்பம் இல்லை என்று ​தெரிவித்துள்ளனர்.மக்கள் அணியொன்றை உருவாக்குவது குறித்து தமிழ் மக்கள் பேரவை திருகோணமலையில் ஆலோசனை!
[Monday 2017-04-24 07:00]

தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயற்படுவதற்கு மக்கள் அணியொன்றை உருவாக்குவதென்றும் அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடியதாக வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த அனுமதிக்கும் சட்டத்தை கொண்டு வரப் போகிறதாம் அரசாங்கம்!
[Monday 2017-04-24 07:00]

போரை முடிவுக்கு கொண்டு வந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என்ற பெயரில் சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கும் உரிமையை வழங்கும் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவர அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. புலம்பெயர் அமைப்புகளினதும் சர்வதேச நாடுகளின் தேவைக்கு அமைய எம்மை தண்டிக்க முயற்சிக்கப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.நாளை மறுநாள் ஹர்த்தாலுக்கு அழைப்பு - தமிழ் மக்கள் பேரவை ஆதரவு!
[Monday 2017-04-24 07:00]

காணாமல் ஆக்கப்பட்​டோரின் உறவுகள் மற்றும் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்வரும் 27ம் திகதி வடக்கு கிழக்கில் அழைப்பு விடுத்துள்ள பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவை ஆதரவை தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் நில மீட்புக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிற்கு நீதி கோரும் வகையில், தமிழ் மக்கள் பேரவையினர், நேற்று திருகோணமலையில் கூடி கலந்துரையாடினர்.கோலூன்றிப் பாய்தலில் மற்றொரு தேசிய சாதனையை நிகழ்த்தினார் அனிதா ஜெகதீஸ்வரன்!
[Monday 2017-04-24 07:00]

23 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடத்தும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுனர் போட்டிகள் தியகமை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமானது.சம்பந்தனின் பாதையில் கண்ணை மூடிக் கொண்டு செல்வோம்! - சித்தார்த்தன்
[Monday 2017-04-24 07:00]

அரசியலில் எத்தகைய முரண்பாடுகள், மாற்றங்கள் ஏற்பட்டாலும் அரசியலமைப்பு முயற்சிகள் முடிவுறும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தலைவர் சம்பந்தனையும் விட்டு விலகமாட்டோம். அதுவரை அவர் செல்லும் பாதையில் கண்களை முடிக்கொண்டு செல்வோம் என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.இன்றைய கூட்டத்தில் முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமை அகற்ற அழுத்தம் கொடுப்போம்! - யோகேஸ்வரன் எம்.பி
[Monday 2017-04-24 07:00]

பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் இன்றையதினம் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமை அகற்றுவது தொடர்பில் அழுத்தம் கொடுக்கவுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.சிவமந்திரத்தை உச்சரித்துக் கொண்டு சிவனொளிபாத மலையில் ஏறிய யாத்திரிகர்களுக்கு மிரட்டல்!
[Monday 2017-04-24 07:00]

சிவகொடியை ஏந்திக் கொண்டு “ஓம் நமச்சிவாய”, “ஓம் நமச்சிவாய” என்ற நாமத்தை உச்சரித்து கொண்டும் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யாத்திரிகள் சிலரை, இனந்தெரியாத சிலர் அச்சுறுத்தியுள்ளதாக, இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் சிவஸ்ரீ வேலு சுரேஷ்வர தெரிவித்தார்.தொடங்கியது வேலைநிறுத்தம் - நள்ளிரவு வரை வரிசையில் காத்திருந்த வாகனங்கள்! Top News
[Monday 2017-04-24 07:00]

பெற்றோலியக் கூட்டத்தாபன ஊழியர் தொழிற்சங்கங்கள் நள்ளிரவு தொடக்கம் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ள நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள பெற்றோல் நிலையங்களில் நேற்று வாகனங்கள் அலைமோதின. பெற்றோலிய வர்த்தக சங்கம் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையிலேயே எண்ணெய் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் கூட்டம் அலைமோதின.இலங்கையில் புதிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு! Top News
[Monday 2017-04-24 07:00]

இலங்கையில் புதிய நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலங்கொடை, கீழ் வலேபொட பிரதேத்தில் உள்ள காடு ஒன்றில் சுமார் 100 அடி உயரத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எவர் கண்ணிலும் இந்த நீர்வீழ்ச்சி இதுவரை தென்படவில்லை.


Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
<b>08-04-2017 அன்று  மார்க்கத்தில்  நடைபெற்ற IMHO DINNER NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>01-04-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற PRIMA DANCE NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-03-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற  பைரவி நுண்கலைக் கூட இசை அர்ப்பணம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா