Untitled Document
February 23, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
இலங்கைக்கு மீண்டும் ஒரு அழிவு காத்திருக்கிறது! - ஆனந்தசங்கரி ஆரூடம்
[Wednesday 2017-01-11 18:00]

தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நாடு எங்கே செல்கின்றது என்று எவருக்கும் தெரியவில்லை. எனது 60 வருடகால அரசியல் அனுபவத்தை வைத்து நான் சொல்வதை எவரும் புரிந்து கொள்வதுமில்லை. ஆனால் மீண்டும் ஒரு அழிவை எமது நாடு சந்திக்கப் போகின்றது என்பது மட்டும் உறுதி என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நாடு எங்கே செல்கின்றது என்று எவருக்கும் தெரியவில்லை. எனது 60 வருடகால அரசியல் அனுபவத்தை வைத்து நான் சொல்வதை எவரும் புரிந்து கொள்வதுமில்லை. ஆனால் மீண்டும் ஒரு அழிவை எமது நாடு சந்திக்கப் போகின்றது என்பது மட்டும் உறுதி என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்திலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“விடுதலைப் புலிகள் அழிந்தமையானது, ஒரு சிலருக்கு வேண்டுமானால், சந்தோசமாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி அல்ல. நான், நாட்டு மக்கள் அனைவரையும் நேசிப்பவன். எது நடந்து விடக்கூடாது என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அடிக்கடி கடிதம் எழுதினேனோ, அதுதான் கடைசியில் நடந்தும் முடிந்தது.

அதேபோல்தான் இன்றும் தனித்து நின்று கூறுகின்றேன். தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள், தாங்கள்தான் என்று கூறும் ஒருசிலருடன் மட்டும் நீங்கள் உறவு வைத்துக்கொண்டு, ஏனையவர்களை புறம்தள்ளி, தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நடத்தும் ஆட்சியில், எமது மக்களுக்கு நிலையான தீர்வு எதுவும் கிட்டப்போவதில்லை. உங்கள் தேசிய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களே, அரசில் நம்பிக்கை இழந்து பேசுகின்றார்கள். இந்நிலையில், எமது மக்களுக்கு, இந்த அரசு எதனையும் சாதிக்கப்போவதில்லை.

காலங்காலமாக குறிப்பிட்ட ஒருசிலருடன், அவர்களை திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே. முடிந்தன. அதுதான் வரலாறும் ஆகும். அவ்வாறான ஒரு செயலையே மீண்டும் நீங்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். இது நாட்டுக்கு மீண்டும் ஒரு அழிவையே கொண்டுவரும். சகல தமிழ் அமைப்புகள் மற்றும் சகல முஸ்லிம் தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கி ஒரு பேச்சுவார்த்தை மூலம் விரைவில் ஒரு தீர்வை முன்வையுங்கள்.

புதிய அரசியல் அமைப்பு என்று கூறி காலத்தை இழுத்தடிப்பதும், மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றிவிட்டு, என்றுமில்லாதவாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகளை அளிப்பதும், மாற்றத்தை ஏற்படுத்திய சகல இன மக்களையும் ஒரு ஏமாற்றும் செயலாகவே நான் கருதுகின்றேன். மீண்டும் மக்களிடையே இனக்குரோதம் வளரத் தொடங்கியுள்ளது என்பது, நாட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளே சான்று கூறுகின்றன.

இந்திய முறையிலான ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்கி, தென்னாபிரிக்க அரசியல் சாசனத்தில் உள்ளது போன்ற உரிமைகள் சட்டத்தை உள்ளடக்கி, அதனை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் ஒரு நல்ல தீர்வை வழங்கி, நாட்டு மக்கள் அனைவரையும் சுபீட்சமாக வாழவைக்கலாம்” என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.comபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு!
[Friday 2018-02-23 08:00]

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிiமைப் பேரவையின் அமர்வுகள் ஆரம்பாகவுள்ள நிலையில், இந்த உத்தேச சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுளளது.10 வீத பெண் வேட்பாளர்களே தேர்தலில் வெற்றி!
[Friday 2018-02-23 08:00]

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பெண்களின் விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்துள்ளது. இதன்படி 25 நிர்வாக மாவட்டங்களிலுமிருந்து 535 பெண்கள் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.இன்று அமைச்சரவை மாற்றம்?
[Friday 2018-02-23 08:00]

அமைச்சரவையில் இன்று பெரும்பாலும் மாற்றங்கள் நிகழலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வசமுள்ள தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, மங்கள சமரவீரவின் நிதியமைச்சு, கபீர் ஹரிமின் அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு, மலிக் சமரவிக்ரமவின் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகிய நான்கு அமைச்சுக்களிலும் மாற்றங்கள் நிகழவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் வெளியாகியிருந்தன.பிரிகேடியர் பிரியங்க இன்று வெளிவிவகார அமைச்சுக்கு அழைப்பு!
[Friday 2018-02-23 08:00]

கொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சிற்கு செல்லவுள்ளார். அமைச்சினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கமையவே அவர் பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.இராணுவ தளபதியின் பணிப்புரைக்கு அமைய பிரிகேடியர் இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சிற்கு செல்லவுள்ளார். அத்துடன் இராணுவ தலைமையத்திற்கும் செல்லவுள்ளார்.குண்டைக் கொண்டு சென்ற இராணுவச் சிப்பாய் உயிர் ஊசல்!
[Friday 2018-02-23 08:00]

பண்டாரவளையிலிருந்து தியத்தலாவை சென்று அங்கிருந்து மஹியங்கனை - ஹிராதுருகோட்டை நோக்கி பயணிக்க சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் வண்டியில் கைக்குண்டொன்று வெடித்து பரவிய தீயினால் 19 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்ப்ட்டுள்ளன.சம்பந்தனின் பதவியைக் கைப்பற்ற மகிந்தவின் புதிய திட்டம்!
[Friday 2018-02-23 08:00]

மைத்திரி- ரணில் தலைமையிலான தேசிய அரசின் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்களின்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கவேண்டுமென வலியுறுத்தப்படவுள்ளது.உடல் தகுதி சோதனைக்குப் பின்னரே தலைமைத்துவ பயிற்சி! - கல்வி அமைச்சர் அறிவிப்பு
[Friday 2018-02-23 08:00]

தலைமைத்துவப் பயிற்சியின் போது பாடசாலை அதிபர் உயிரிழந்த சம்பவத்தில் தவறு நிகழ்ந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். எதிர்காலத்தில் அதிபர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னர் அவர்களின் உடல் தகுதியை பரிசீலிப்பதற்கும், கடுமையான பயிற்சிகளை நிறுத்துவதற்கும் எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் கூறினார்.பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவி விலகவில்லை! - வெளிவிவகார அமைச்சு
[Friday 2018-02-23 08:00]

பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவர் அமரி விஜேவர்தன பதவியை இராஜினாமா செய்யவில்லை என்றும் அவரின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. அமரி விஜேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருடன் தொடர்புபடுத்தி ஊடகங்களில் வௌியாகியுள்ள செய்து தவறானது என்று வௌிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.உதயங்கவுக்கு இன்டபோல் சிவப்பு எச்சரிக்கை!
[Friday 2018-02-23 08:00]

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக இன்டபோல் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிக் போர் விமானக் கொள்வனவில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வரும் காவல்துறையினர், உதயங்க வீரதுங்கவுக்கு அழைப்பாணை விடுத்திருந்தும், அவர் விசாரணைகளுக்கு முன்னிலையாகாத நிலையில் நீதிமன்றத்தின் ஊடாக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்காலில் கடற்படையின் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்! Top News
[Thursday 2018-02-22 18:00]

முள்ளிவாய்க்கால் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணியை, அளவீடு செய்வதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், ள் இணைந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பந்தனைச் சந்தித்தார் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்!
[Thursday 2018-02-22 18:00]

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜேம்ஸ் சென்சென்ப்ரெக்னெர் மற்றும் அவரது தலைமை அதிகாரி மட் பைசென்ஸேனிஸ் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்:
[Thursday 2018-02-22 18:00]

இலங்கையில் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற இலங்கைத் தமிழ் அகதி அங்கிருந்து நாடுகடத்தப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2012 யில் படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற சாந்தரூபன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவில் படகு கட்டுபவராக இருந்துள்ளார். 2009 யில் ஏற்பட்ட புலிகளின் வீழ்ச்சி அவரின் வாழ்வையும் புரட்டிப்போட்டுள்ளது.முள்ளிவாய்க்கால் கடற்படைத் தளம் முன்பாக கொடும்பாவி எரிப்பு! Top News
[Thursday 2018-02-22 18:00]

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக கொடும்பாவி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முள்ளிவாய்க்கால் கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாகவே நல்லாட்சி அரசுக்கு எதிராக கொடும்பாவி எரித்து தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.தமிழர்களுக்கு மட்டும் அறிவுரை கூறுவதாக நல்லிணக்க பிரச்சாரம் இருக்க கூடாது: - நல்லிணக்க தமிழ் தொலைக்காட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் மனோ கணேசன்
[Thursday 2018-02-22 18:00]

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தால் இன்று ஆரம்பிக்கப்படும் நேத்ரா நல்லிணக்க தமிழ் தொலைக்காட்சி, தெற்கில் இருந்து வடக்கிற்கு மாத்திரம் நல்லிணக்க பிரச்சாரங்களை கொண்டு செல்லும் ஒருவழி பாதை ஊடகமாக இருக்க கூடாது. இருக்கவும் முடியாது. இந்த நல்லிணக்க அலைவரிசையை பயன்படுத்தி தெற்கில் இருந்து வடக்குக்கு மட்டும் உங்கள் நல்லிணக்க செய்திகளை அனுப்பாதீர்கள். அங்கிருந்தும் தமிழ் மக்களின் துயரங்களை, துன்பங்களை, அபிலாசைகளை ஏன் கோபங்களை கூட செய்திகளாக இங்கு கொண்டு வந்து சிங்களத்தில் மொழி பெயர்த்து சிங்கள மக்களுக்கும் சொல்லுங்கள்.கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெரு­விழா நாளை ஆரம்பம்!
[Thursday 2018-02-22 18:00]

கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த பெரு­விழா நாளை கொடி­யேற்­றத்­துடன் ஆரம்ப ­மா­கின்­றது. நாளை மாலை 4 மணிக்கு கொடி­யேற்­றத்­துடன் நற்­க­ருணைப் பெரு­விழாத் திருப்­பலி வழி­பா­டுகள் நடை­பெறும். நாளை மறு­தினம் காலை 7 மணிக்கு யாழ்.மறை­மா­வட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்­பி­ர­காசம் ஆண்­டகை மற்றும் காலி மறை­மா­வட்ட ஆயர் றேமன் விக்­கி­ர­ம­சிங்க ஆண்­டகை ஆகியோர் இணைந்து பெரு­விழா கூட்டுத் திருப்­பலியை நிறை­வேற்­ற­வுள்­ளனர்.கொழும்பு வந்து சேர்ந்தார் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ!
[Thursday 2018-02-22 18:00]

பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ இன்று பிற்பகல் நாடு திரும்பியுள்ளார். சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ அவர்களை எச்சரிக்கும் வகையில் செயற்பட்டிருந்தார்.திரு.பற்றிக் பிறவுன் அவர்கள் தலைமைத்துவத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
[Thursday 2018-02-22 18:00]

தடைகள் பல தாண்டி திரு.பற்றிக் பிறவுன் அவர்கள் தலைமைப்பதவிக்குப் போட்டியிடுகின்றார். தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையெல்லாம் முறியடித்து திரு.பற்றிக் பிறவுன் அவர்கள் போட்டியிட்டு தனது தலைமையைத் தக்கவைப்பதென்பது கனடாவிற்கு ஒரு புதிய பாடம். பண பலமும், ஊடக பலமும் இருந்தால் நினைத்ததைச் சாதித்து விடலாம் என்று நினைத்த சர்வாதிகரத் தரப்புச் சவுக்கடி.உள்ளே வந்தார் ஜனாதிபதி - வெளியே போனார் பிரதமர்!
[Thursday 2018-02-22 18:00]

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் முதல் முறையாக இன்று பாராளுமன்றத்திற்கு சென்ற ஜனாதிபதியின் வருகையை புறக்கணிக்கும் வகையில் பிரதமர், சபையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான மோதல் உச்ச நிலையை அடைந்துள்ளமை இன்று நாடாளுமன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.தேசிய அரசுக்கு சட்டச் சிக்கல் இல்லை! - சபாநாயகர்
[Thursday 2018-02-22 18:00]

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து பயணிப்பதாக அறிவித்துள்ளன. ஆகையால் தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்வதில் எந்தவொரு சட்ட சிக்கலும் இல்லை என்று தனக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.கிளிநொச்சியில் குளத்தில் மிதந்த இளைஞனின் சடலம்! Top News
[Thursday 2018-02-22 18:00]

கிளிநொச்சி - புதுமுறிப்புக் குளத்திலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது. கிளிநொச்சி- உதயநகர் பகுதியைச்சேர்ந்த ப.டனுசன் (வயது 25) என்பவரது சடலமே குளத்தில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டது. குறித்த இளைஞரின் ஆட்டோவை, வாடகைக்கு அமர்த்திய சிலரை ஏற்றிக் கொண்டு நேற்று மாலை சென்ற இளைஞர் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா