Untitled Document
September 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
வடக்கு மாகாணத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை!
[Wednesday 2017-01-11 18:00]

வடக்கு மாகாணத்தில் பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணை நேற்று வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணை நேற்று வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டது.

  

குறித்த பிரேரணையை பதில் முதலைமைச்சர் பொ.ஐங்கரநேசன் சமர்ப்பித்து உரையாற்றுகையில், “வடக்கு மாகாணம் எதிர்கொள்ளும் சுற்றுசூழல் பிரச்சினைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் பிரதானமானதாக உள்ளது. குறிப்பாக பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், தட்டுக்கள், பெட்டிகள் போன்றன. இதனால் சுற்றுசூழல் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றது. இலங்கை அரசாங்கம் 20 மைக்றோன் அல்லது அதற்கு குறைவான அளவுள்ள பிளாஸ்டிக் உற்பத்தியையும், விற்பனையையும் 1980ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் படி 2007.01.01ஆம் திகதி முதல் தடை செய்திருக்கின்றது.

அந்த சட்டம் தென்னிலங்கையில் இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மீறுவோர் மீது பாரியளவு பணம் தண்டம் விதிக்கப்படுவதுடன், 2 வருடத்திற்கு குறையாத சிறை தண்டனையும் விதிக்கப்படுகின்றது. ஆனால், வடக்கு மாகாணத்தில் இந்த தடை நடைமுறை படுத்தப்படவில்லை. இந்நிலையில் மேற்படி தடை எதிர்வரும் 22.04.2017ம் திகதி தொடக்கம் வடக்கில் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது” என அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

  
   Bookmark and Share Seithy.comவடக்கில் பெயர் மாற்றப்பட்ட சுற்றுலாத் தளங்கள், தொல்லியல் இடங்கள்! - விசாரணைக்குத் தயாராகிறார் முதலமைச்சர்
[Friday 2017-09-22 19:00]

வடக்கு மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தளங்கள் மற்றும் தொல்லியல் இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டமைக்கான காரணம் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.“ வடக்கு மாகாணத்தில் ஏராளமான இடங்கள் பெயர்மாற்றம் அடைந்துள் ளன. கடந்த 1975ஆம் ஆண்டு வடக்கில் உள்ள பிரசித்தி பெற்ற எல்லா இடங்களினதும் பெயர்களை சேகரித்து வருகின்றேன். அதன் அடிப்படையில் ஏன் பெயர்களை மாற்றினீர்கள் என்பது தொடர்பில் ஆராயவுள்ளேன்.ஸ்காபரோ-கில்வூட் தொகுதி - திரு.குயின்ரஸ் துரைசிங்கம் அவர்களது வேட்பாளர் நியமனத் தேர்தல் மிக விரைவில் நடக்கவிருக்கிறது: Top News
[Friday 2017-09-22 19:00]

ஸ்காபரோ-கில்வூட் தொகுதியில், 2018ல் வரவுள்ள மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள திரு.குயின்ரஸ் துரைசிங்கம் அவர்களது வேட்பாளர் நியமனத் தேர்தல் மிக விரைவில் நடக்கவிருக்கிறது. சிறந்த சமூகசேவையாளரும் அரசியல் ஆய்வாளரும் எமது சமூகத்தில் நன்கு அறியப்பட்டவருமான குயின்ரஸ் துரைசிங்கம், வடஅமெரிக்காவில் பெயர்பெற்ற முன்னணி நிறுவனமான தொம்சன்-றொய்ட்டேர்ஸ் ரொறன்ரோ கிளையில் கணினித் தொழில்நுட்பத் துறையில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக உயர் பணியிலுள்ளார்.ஒரே ஆண்டில் தேசிய சாதனையை நான்கு தடவைகள் முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்தார் அனிதா!
[Friday 2017-09-22 19:00]

யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் கோலூன்றிப் பாய்தலில் 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி மீண்டும் தேசிய சாதனை படைத்துள்ளார். அவர் இவ்வருடத்தில் மாத்திரம் தொடர்ச்சியாக 4 ஆவது முறையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் இடம்பிடித்தார்.இலங்கையில் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் - பல்வேறு தரப்புகளுடனும் சந்திப்பு!
[Friday 2017-09-22 19:00]

இருபது ஆண்டுகள் கழித்து இலங்கை வந்துள்ள உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல், கொழும்பிலும் வடபகுதியிலும் பல முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அருட்தந்தை 1997ஆம் ஆண்டு ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தார். புலிகளுடன் தொடர்புடைய, பயங்கரவாதத்துக்கு உதவும் குற்றச்சாட்டுகளின் பேரில் சுமார் நானூறு தனி நபர்களையும் அமைப்புகளையும் கடந்த ஆட்சியின்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தடை செய்திருந்தார். அந்தத் தனி நபர்களுள் அருட்தந்தையும் ஒருவர்.தேர்தலை நடத்தாவிடின் பதவி விலக மஹிந்த முடிவு!
[Friday 2017-09-22 19:00]

அரசியல் காரணிகளுக்காக தேர்தலை தள்ளிப்போட முயற்சிக்க வேண்டாம், மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் முன்வரவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் மாகாணசபைகள் தேர்தலை நடத்தாவிட்டால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமை பதவியில் இருந்து விலகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இலங்கையில் பிறந்த மாணவனின் கண்டுபிடிப்புக்கு கனடாவில் கௌரவம்! Top News
[Friday 2017-09-22 19:00]

இலங்கையில் பிறந்த தமிழ் மாணவன் ஒருவர் கனடாவில் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். கருணாதிபதி லின் வீரா என்ற மாணவரே இந்த புதிய கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர் ஆவார். டொரன்டோ Ryerson பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவரான கருணாதிபதி புதிய கண்டுபிடிப்புக்காக கனடாவில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.நாகர்கோவில் பாடசாலை படுகொலை - 22 ஆவது ஆண்டு நினைவேந்தல்! Top News
[Friday 2017-09-22 19:00]

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பாடசாலையில் 40 பேர் படுகொலை செய்யப்பட்ட 22வது ஆண்டு நினைவு தினம் இன்று நாகர்கோவில் மகா வித்தியாலத்தில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி நாகர்கோவில் மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 26 மாணவர்கள் உட்பட 40 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.கொழும்பில் மணல் மழை! Top News
[Friday 2017-09-22 19:00]

கொழும்பை சூழவுள்ள பகுதிகளில் இன்று காலை மணல் மழை பெய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பிலுள்ள உலக வர்த்தக மையம் மற்றும் காலி முகத்திடலை சுற்றியுள்ள பிரதேசங்களில் காலை 9.30 மணிக்கும் 10.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மணல் மழை பெய்துள்ளது. திடீரென பெய்த மழை காரணமாக அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது மணல் விழுந்துள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது.அச்சுவேலியில் கத்திக்குத்து - ஒருவர் காயம்!
[Friday 2017-09-22 19:00]

அச்சுவேலிப் பகுதியில் நேற்று இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறி கத்தி வெட்டில் முடிந்தது. அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக இருவர் கதைத்துக்கொண்டிருந்தனர்.இவர்களின் பேச்சு வாய்த்தர்க்கமாகி இறுதியில் ஒருவர் மற்றவரின் தலையில் கத்தியால் வெட்டியுள்ளார். அச்சுவேலியைச் சேர்ந்த நிறோஐன் (வயது-27) என்பவரே தலையில் வெட்டுண்ட நிலையில் அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.மங்கள சமரவீரவின் கையெழுத்துடன் புதிய 5000 ரூபா தாள்! Top News
[Friday 2017-09-22 19:00]

மங்கள சமரவீர, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் முதன் முறையாக அவர் கைச்சாத்திட்ட ஐயாயிரம் ரூபா தாள் நேற்று சந்தையில் விடப்பட்டது. குறித்த விநியோக நிகழ்வு நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் நேற்று மாலை இடம்பெற்றது.குப்பிளான் விபத்தில் இருவர் படுகாயம்!
[Friday 2017-09-22 19:00]

குப்பிளானில் இன்று மாலை நடந்த விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வந்த பாரவூர்தி ஒன்று இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது என்று கூறப்படுகின்றது.கின்னஸ் சாதனையில் சிக்கல் - மாணவர்களை ஈடுபடுத்தியது குறித்து விசாரணை! Top News
[Friday 2017-09-22 19:00]

கின்னஸ் சாதனைக்காக பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தியமை தொடர்பாக, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கின்னஸ் சாதனைக்காக உலகில் மிக நீளமான முந்தானையை மணப்பெண் அணிந்த திருமண வைபவம் ஒன்று கண்டியில் இடம்பெற்றது. இதில் மணமகளின் 3.2 கிலோ மீற்றர் நீளமான முந்தானையை பாடசாலை மாணவிகள் ஏந்தியபடி நின்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.மஹிந்தவின் வீட்டுக்குள் கத்தியுடன் நுழைய முயன்ற நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
[Friday 2017-09-22 17:00]

கொழும்பு, விஜயராம மாவத்தையில் உள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், உத்தியோகபூர்வ வீட்டுக்குள், அத்துமீறி நுழைய முற்பட்ட, சந்தேகநபர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர், வியாழக்கிழ​மை இரவு 7 மணியளவில், நுழைவதற்கு முற்பட்டுள்ளார். வீட்டிலிருந்த பாதுகாப்பு பிரிவினர், அந்த நபரை பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவரை சோதனைக்கு உட்படுத்திய போது, இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியையும் பொலிஸார் மீட்டனர்.தமிழ் மக்களின் அடையாளம்,சுயமரியாதையை உறுதிப்படுத்தும் நியாயமான அரசியலமைப்பே தேவை! - சம்பந்தன்
[Friday 2017-09-22 08:00]

தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசைகளான சுயமரியாதை மற்றும் அடையாளம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையிலான அரசியலமைப்பே உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு எனும் சட்டகத்துக்குள் நியாயமான மற்றும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அரசியலமைப்பு அமையவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.மாகாணசபை தேர்தல் சட்ட திருத்தங்கள், எமது ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி! -அமைச்சர் மனோ கணேசன்
[Friday 2017-09-22 08:00]

மாகாணசபைகள் சட்டத்துக்கு கடைசி நேரத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள், தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற முறையில் எமது ஒற்றுமைக்கும், கூட்டணிக்கு வெளியே ஏனைய சிறுபான்மை கட்சிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றிகள் என ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.பௌத்தத்துக்கான முன்னுரிமையை விட்டுக் கொடுக்க முடியாது! - தினேஸ் குணவர்த்தன
[Friday 2017-09-22 08:00]

பௌத்தத்துக்கான முன்னுரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என, ஒன்றிணைந்த எதிரணி தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். வழிபடுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இடம் பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், அறிக்கையில் சகல கட்சிகளினதும் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பிரதமர் முன்வைத்த விடயங்களுக்கிடையில் முரணான ஏற்கமுடியாத விடயங்களும் இருக்கின்றன.கூட்டாட்சியைக் கொடுத்து விடுவாரா மகாநாயக்கர்? - கேட்கிறார் ஐதேக எம்.பி
[Friday 2017-09-22 08:00]

வடக்கு முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் மகா­நா­யக்க தேரரைச் சந்­தித்துக் கூட்­டாட்­சித் தீர்வைக் கேட்­டா­லும் அந்­தத் தீர்வைத் தேரர்­க­ளால் வழங்க முடி­யுமா என்று ஐக்­கிய தேசியக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் துஸார இந்­து­னில் கேள்வி எழுப்பியுள்ளார்.இலங்கை பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இருக்க வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்கத் தயார்! - ரணில்
[Friday 2017-09-22 08:00]

பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை ஏற்க சகல கட்சிகள், குழுக்கள் மற்றும் அமைப்புகள் அடங்கலாக சகலரும் தயாராக உள்ளனர். சகலரும் இணைந்து புதிய அரசியலமைப்பு ஒன்றை தயாரித்து பலம் வாய்ந்த இலங்கை ஒன்றை கட்டியெழுப்புவதற்கு செயற்படுவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக நம்பகமான சாட்சியங்கள் முன்வைக்கப்படவில்லை! - திலக் மாரப்பன
[Friday 2017-09-22 08:00]

யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டார் எனக் குற்றஞ்சாட்டி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு நம்பகமான சாட்சியங்கள் முன்வைக்கப்படவில்லை என்பதால் அவர் மீது விசாரணை நடத்தவோ அல்லது அவரைப் பாதுகாக்க வேண்டிய தேவையோ இல்லையென வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.அமெரிக்காவின் அரசியல் விவகார செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி!
[Friday 2017-09-22 08:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமெரிக்காவின் அரசியல் விவகார உதவி இராஜாங்க செயலாளர் தோமஸ் ஷெனனுக்குமிடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் நியூயோர் நகரில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக உத்தியோகபூர்வ அமெரிக்க விஜயத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இருவருக்குமிடையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.


Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா