Untitled Document
May 30, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம்: - தமிழக முதல்வர்
[Wednesday 2017-01-11 18:00]

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவில் இருந்து தமிழக அரசு சிறிதும் பின்வாங்காது என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை கட்டிக் காப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பிராணிகள் வதை தடுப்பு சட்டத்திற்கு முரணாக தமிழக அரசால் சட்டம் இயற்ற இயலாது என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவில் இருந்து தமிழக அரசு சிறிதும் பின்வாங்காது என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை கட்டிக் காப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பிராணிகள் வதை தடுப்பு சட்டத்திற்கு முரணாக தமிழக அரசால் சட்டம் இயற்ற இயலாது என குறிப்பிட்டுள்ளார்.

  

உச்சநீதிமன்ற உத்தரவால் 2014-ல் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மத்திய வனத்துறை அறிவிக்கைக்கு எதிரான வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. இதில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பால் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.comதிருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது: - தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்!
[Tuesday 2017-05-30 08:00]

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பதற்குப் பல்வேறு கட்சியின் தலைவர்கள் கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளனர். இதுகுறித்து, இன்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'குண்டர் சட்டத்தைப் பிரயோகம் செய்வதை, தமிழகத்தில் பேச்சுரிமைக்கு வாய்ப்பூட்டு போடும் நிகழ்வாகவே கருதுகிறேன். ஜனநாயகரீதியில் சுதந்திரமாக உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு எதிராக, காவல்துறை அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடுவது கொடுமையான அதிகார துஷ்பிரயோகம்' எனக் கூறியிருந்தார்.மதுபான விடுதியை திறந்து வைத்த பெண் அமைச்சர்!
[Tuesday 2017-05-30 08:00]

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் மதுபான விடுதி ஒன்றை திறந்து வைத்த பெண் அமைச்சரால் சர்ச்சை எழுந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் பெண்கள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் சுவாதிசி்ங், இவரது கணவர் தயாசங்கர்சிங், அந்த மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில் லக்னோவில் பீர் விற்பனை மையத்தில் புதிய மதுபான விடுதி ஒன்றின் திறப்பு விழாவில் பெண் அமைச்சர் சுவாதி சிங் பங்கேற்றார்.மாட்டிறைச்சி தடை உத்தரவு: - திருமாவளவன் சொல்லும் பகீர் காரணம்!
[Monday 2017-05-29 18:00]

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியைச் சந்திப்பதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதுச்சேரிக்குச் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் அவர், "இறைச்சித் தடை உத்தரவை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இது இஸ்லாமியர்களை மட்டுமே குறிவைக்கும் தாக்குதலாக இல்லாமல், ஒட்டு மொத்த இந்திய மக்களின் கலாசார, பொருளாதாரத்தின்மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.அரசு விழாவில் அரைகுறை ஆடையுடன் மேடையில் வலம் வந்த அழகிகள்!
[Monday 2017-05-29 18:00]

தமிழக அமைச்சர் கலந்து கொண்ட அரசு விழாவில் மொடலிங் துறையை சேர்ந்த பெண்கள் அரைகுறை ஆடையுடன் மேடையில் வலம் வந்தது அங்கிருந்த பொதுமக்களை முகம் சுழிக்க செய்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளமான ஏலகிரியில் கோடை விடுமுறையின் போது ஆண்டு தோறும் பரதநாட்டியம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகள் அரசின் சார்பில் நடத்தப்படுவது வழக்கமாகும்.பேண்ட் பெல்ட்டுக்கு பதில் நாடாவை கட்டிக் கொள்ள முடியுமா? - குஷ்பு கேள்வி
[Monday 2017-05-29 18:00]

மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை எருமை, பசு, காளை மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்கக்கூடாது என்று தடைவிதித்தது.இதற்கு நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இதைத் தாண்டி கேரளா மாநிலத்தில் இந்த விவகாரத்தால் தனி திராவிடம் கோரி தனி ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையான குஷ்பு இதுகுறித்து கூறுகையில், மக்கள் எதை உண்ண வேண்டும் என்பதை அரசு கூற வேண்டாம்.அரிவாளை நேர்த்திக்கடனாகச் செலுத்தும் பக்தர்கள்: - விசித்திர பிரார்த்தனை
[Monday 2017-05-29 07:00]

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோயில் ஒன்றில் பிரார்த்தனைசெய்யும் பக்தர்கள், அரிவாளை நேர்த்திக்கடனாகச் செலுத்தும் விசித்திர வழக்கம் பின்பற்றப்பட்டுவருகிறது.பொது இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்டவருக்கு நேர்ந்த கொடுமை!
[Monday 2017-05-29 07:00]

டெல்லியில் பொது இடத்தில் சிறுநீர் கழித்தவர்களை தட்டிக் கேட்ட ரிக்‌ஷா ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காந்தி மரணத்தில் உள்ள சதியின் பின்னணியை வெளிக்கொண்டு வர வேண்டும்: - நீதிமன்றத்தில் பொது நல வழக்கு
[Monday 2017-05-29 07:00]

இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா காந்தி மரணத்தில் உள்ள சதியின் பின்னணியை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் பங்கஜ் பத்னிஸ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர், காந்தியின் மரணத்தில் மிகப்பெரிய சதி புதைந்து கிடக்கிறது. அதை வெளியில் கொண்டு வர வேண்டும். இதற்காக புதிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.இரு பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 14 இளைஞர்கள்!
[Sunday 2017-05-28 17:00]

பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் உத்தரபிரதேசத்தில் 2 பெண்களை 14 இளைஞர்கள் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ராம்பூர் மாவட்டத்தில் பட்டப்பகலில் இந்த குற்ற சம்பவம் நடத்துள்ளது. தங்களை விட்டுவிடுமாறு அந்த பெண்கள் கெஞ்சுகின்றனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் 14 இளைஞர்கள் அவர்களை பலாத்காரம் செய்யும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளன.விண்ணில் மனிதர்களுடன் பாய தயாராகும் மெகா ராக்கெட்: - இஸ்ரோவின் அடுத்த அதிரடி!
[Sunday 2017-05-28 15:00]

மாதம் ஒரு மைல் கல்லை எட்டி வருகிறது இஸ்ரோ. இந்நிலையில், உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, மிகப்பெரிய ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. மனிதர்களை, விண்ணில் செலுத்தி ஆய்வு செய்வதற்காக, இந்த ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உள் நாட்டில் தயாரிக்கப்பட்டதில் இதுதான் மிகப்பெரிய ராக்கெட் என்று கூறப்படுகிறது.நரபலிக்காக கடத்தப்பட்ட ஒரு வயது குழந்தை: - அதிர்ச்சி சம்பவம்
[Sunday 2017-05-28 15:00]

தமிழகத்தில் நரபலிக்காக ஒரு வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த தம்பதி சத்யராஜ்- புவனேஸ்வரி. இவர்கள் தங்களுடைய ஒரு வயது மகனுடன் இரு நாட்களுக்கு முன் பனப்பாக்கம் அருகே உள்ள மதகு காத்த அம்மன் கோவிலுக்கு அமாவாசை பூஜைக்காக சென்றுள்ளனர்.இரவு பூஜை முடிந்தவுடன் கோவிலில் தங்கியுள்ளனர், இரவு 11 மணியளவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.மனைவியை பழிதீர்க்க தம்பிகளுக்கு விருந்தாக்கிய கணவர்!
[Sunday 2017-05-28 15:00]

இந்தியாவில் நபர் ஒருவர் மனைவியை பழிதீர்க்க தனது மூன்று தம்பிகளுக்கும் விருந்தாக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் தஹோட் மாவட்டத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. அபால்ட் கிராமத்தை சேர்ந்த இளம்ஜோடிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவனுடன் ஏற்பட்ட சண்டையால் 19 வயதான மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவியின் வீட்டிற்கு சென்ற கணவன் வலுக்கட்டாயமாக அவரை அழைத்து வந்துள்ளார்.இன்றுடன் நிறைவடையும் அக்னி நட்சத்திரம்: - வெயில் தாக்கம் குறையுமா?
[Sunday 2017-05-28 08:00]

அக்னி நட்சத்திரம் எனப்படும் அதிகப்பட்ச வெப்பநிலை நிலவும் காலம் தமிழகத்தில் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து படிப்படியாக வெப்பம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.காஞ்சிபுரத்தில் தீ பற்றி எரிந்த கார்: - பெண் உள்பட 3 பேர் பலி
[Sunday 2017-05-28 08:00]

காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரம் அருகே நேற்று இரவு கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒரு பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். அந்தச் சாலையில், மகாபலிபுரத்தை அடுத்த கல்பாக்கம் அருகே உள்ள மணமை கிராமத்தில் நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் இருந்த பெண் உள்பட மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்!
[Saturday 2017-05-27 18:00]

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எழுதி வெளியிட்ட புத்தகத்தில் இந்துக்களின் மனம் புண்படும்படியான கருத்துகள் இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்ற ஆண்டு 'Turbulent Years 1980 - 1996' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நிகழ்ந்த சில சம்பவங்களை முகர்ஜி அவர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.தந்தையின் மரண கிரியைக்கு லஞ்சம் கேட்ட அரச அதிகாரிகள்: - அதிரடி முடிவெடுத்த இளம்பெண்
[Saturday 2017-05-27 17:00]

தந்தையின் ஈமச்சடங்கு நிதியை கொடுக்க அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால் மாவட்ட கலெக்டருக்கு ரூ.2000 லஞ்ச பணத்தை மணியார்டர் மூலம் அனுப்பியுள்ள பெண்ணின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவலூரை சேர்ந்தவர் தொப்பையன்(55), இவர் மனைவி குப்பம்மாள், இவர்களின் மகள் சுதா.இந்நிலையில் கடந்த 30.8.2016 ஆன்று தொப்பையன் இறந்துவிட்டார். இதையடுத்து அவர் இறந்ததற்கான இறப்பு சான்றிதழ் மற்றும் ஈமச்சடங்குக்கான நிதி உதவி கேட்டு குப்பம்மாள் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.டெல்லியில் பார்ட்டிக்கு அழைத்து அமெரிக்க மாணவியை பாலியல் பலாத்காரம் நபர்!
[Saturday 2017-05-27 17:00]

இந்திய தலைநகர் டெல்லியில் பார்ட்டிக்கு அழைத்து அமெரிக்க மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது நண்பரை பொலிசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவைச் சேர்ந்த 25-வயதான இளம்பெண் ஒருவர் படிப்பு விசா மூலம் இந்தியா சென்றுள்ளார். அங்கு மூன்று பேர் அவருக்கு அறிமுகமாகியுள்ளனர்.அவர்களுடன் நண்பராகி இருக்கிறார். ஹோட்டலில், பார்ட்டி தருகிறோம் என நண்பர்கள் அழைப்பு விடுக்க அந்தப் பெண்ணும் நம்பி ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.குண்டர்களை ஏவி மிரட்டிய மறைந்த முன்னாள் முதலமைச்சர்!
[Saturday 2017-05-27 17:00]

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குண்டர்களை ஏவி மிரட்டியதால்தான் கொடநாடு எஸ்டேட்டை மிக குறைந்த விலையில் விற்கும் நிலை ஏற்பட்டதாக அதன் முன்னாள் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.நீலகிரியில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளர்களில் ஒருவரான பீற்றர் ஜான்ஸ் தற்போது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.பிரித்தானிய தலைநகர் லண்டனை பிறப்பிடமாகக் கொண்ட வில்லியம் ஜான்ஸ் என்பவர் 1975 ஆம் ஆண்டு குறித்த எஸ்டேட்டை விலைக்கு வாங்கியுள்ளார்.மக்கள் மன்றத்தில் மதிப்பிழந்தவர்கள் சட்டமன்ற மாண்பு பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும்: - பன்னீர் செல்வம்
[Saturday 2017-05-27 17:00]

தமிழக சட்டசபை மண்டபத்தில் மறைந்த ஜெயலலிதாவின் உருவப்படத்தை ஜூலை மாதம் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறக்கப்படுவதற்கு தமிழக எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, மக்கள் மன்றத்தில் மதிப்பிழந்தவர்கள் சட்டமன்ற மாண்பு பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும் என பன்னீர் செல்வம் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா படம் திறக்கப்படுவதால் சட்டமன்றம் மட்டும் அல்ல தமிழ்நாட்டுக்கே பெருமை.சொகுசு ரயிலில் எல்சிடி திரைகளை உடைத்துச் சேதப்படுத்திய பயணிகள்!
[Friday 2017-05-26 14:00]

மும்பை - கோவா இடையே புதிதாக இயக்கப்படும் தேஜாஸ் சொகுசு ரயிலில் பயணிகள் எல்சிடி திரைகளை உடைத்துச் சேதப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பை சிஎஸ்டி மற்றும் கோவாவின் கர்மாலி ஆகிய நிலையங்கள் இடையே நாட்டிலேயே முதன்முறையாகப் புதிய வசதிகள் கொண்ட தேஜஸ் சொகுசு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரயில் போக்குவரத்தைக் கடந்த 22ம் திகதி மும்பையில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடக்கி வைத்தார்.


SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b>06-05-2017 அன்று கனடா- ரொரன்டோவில் அபிநயாலயா நாடியாலயம் நடாத்திய 20வது ஆண்டுவிழா நிகழ்வின் படத்தொகுப்பு. </b> படங்கள் - குணா
<b>30-04-2017 அன்று கனடா- ரொரன்டோவில்  நடைபெற்ற சங்கீத சங்கமம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா