Untitled Document
March 29, 2024 [GMT]
எங்கே போனார் சுப்பிரமணியன் சாமி? - ஒரு தமிழனின் கேள்வி!
[Saturday 2017-01-14 05:00]

தமிழகத்திற்குத் தர வேண்டிய காவிரி நீரைத் தராததன் விளைவாக இதுவரை 18 லட்சம் ஏக்கர் டெல்டா விளை நிலங்கள் கருகி போய் விட்டன.100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பாலும் இறந்துள்ளனர்.எஞ்சிய விளைநிலமும் பருவமழை பொய்த்ததன் காரணமாக முற்றிலும் அழிந்துபோய் உள்ளது. இப்படி ஒட்டுமொத்தமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலில் விவசாயிகள் உள்ளனர். இந்தநிலையில் தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி போராடி வருகிறார்கள் மக்கள்.
ஜல்லிக்கட்டுக்காக தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி, முயற்சி மேற்கொண்டிருக்கும் நிலையில்,

தமிழகத்திற்குத் தர வேண்டிய காவிரி நீரைத் தராததன் விளைவாக இதுவரை 18 லட்சம் ஏக்கர் டெல்டா விளை நிலங்கள் கருகி போய் விட்டன.100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பாலும் இறந்துள்ளனர்.எஞ்சிய விளைநிலமும் பருவமழை பொய்த்ததன் காரணமாக முற்றிலும் அழிந்துபோய் உள்ளது. இப்படி ஒட்டுமொத்தமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலில் விவசாயிகள் உள்ளனர். இந்தநிலையில் தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி போராடி வருகிறார்கள் மக்கள். ஜல்லிக்கட்டுக்காக தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி, முயற்சி மேற்கொண்டிருக்கும் நிலையில், "உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன் தமிழகத்தில் தடையை மீறி, ஜல்லிக்கட்டு நடந்தால் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும்" என பி.ஜே.பி மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி தனது ட்விட்டரில் பதிவிட்டிருப்பது தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமிழர்களை அவமதிக்கும் வகையில் சில கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.

  

அவருடைய இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், சமூக வலைதளங்களிலும் சுப்பிரமணியன் சாமியின் கருத்துக்கு கண்டனக்குரல் ஒலித்து வருகிறது. இந்த நிலையில், சுப்பிரமணியன் சாமிக்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளான் தமிழன் ஒருவன்.

இது நீதிமன்றத்தை மீறிய செயல் இல்லையா?

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் தமிழகத்துக்கு, செப்டம்பர் 21 முதல் 27-ம் தேதி வரை தினமும் விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வார காலத்துக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல், தண்ணீரைத் திறந்து விடாமல் பிடிவாதம் பிடித்து வந்தது கர்நாடக அரசு. அத்துடன் நில்லாமல் கர்நாடக அரசு, சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை சிறப்புக் கூட்டத்தைக்கூட்டி, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று தீர்மானம் இயற்றியது. "தற்போது இருக்கும் தண்ணீர், பெங்களூரு மற்றும் மைசூரூ நகரக் குடிநீர்த் தேவைக்குத்தான் போதுமானதாக உள்ளது. எனவே, தண்ணீர் திறப்பதில் சிரமம் உள்ளது" என்றார் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அவரைத் தொடர்ந்து "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு ஏற்கக் கூடாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாக நிராகரிக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும் மறுஆய்வு செய்ய வேண்டும்" என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா கருத்து தெரிவித்தார். அடுத்து கடந்த டிசம்பர் மாதம், "அணைகளில் தண்ணீர் இல்லாததால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது" என கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனுவைத் தாக்கல் செய்தது. இப்படி பலமுறை உச்ச நீதிமன்ற உத்தரவுகளை கர்நாடக அரசு மீறியுள்ளது.

எங்கே போனார் சுப்பிரமணியன் சாமி?

"குறுவை சாகுபடி பொய்த்து விட்டது. சம்பா சாகுபடிக்காவது, தண்ணீரை திறந்து விடுங்கள் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுப் பார்த்தார்கள். அப்போது அமைதியாக இருந்து விட்டு, தன் போக்கிற்கு தண்ணீரை திறந்து விட்டது கர்நாடக அரசு. 2,000 கன அடி என்றால் 1,000 கன அடி தண்ணீர் கூட வந்து சேராது. இதுபோன்ற நிலையிலேயே கர்நாடக அரசின் பிடிவாதம் இருந்து வந்துள்ளது. இப்படி நடுவர்மன்ற தீர்ப்பையும் மதிக்கவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் கட்டுப்படவில்லை. விவசாயிகளின் கண்ணீருக்கும் கரையவில்லை. கடைசியாக போராட்டத்திற்கும் மசியவில்லை. இப்படி சட்டங்களையும், விதிகளையும் மீறியே கர்நாடக மாநில அரசு செயல்பட்டு வந்துள்ளது. பயிர் செய்ய தண்ணீர் கேட்ட தமிழனுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. இவற்றில் எல்லாம் எங்கே போனது சாமியின் சட்டவிதிகள்? அப்போது ஏன் சட்டத்தைப் பற்றியும் அரசியல் சாசனம் பற்றியும் அவர் பேசவில்லை? தான் ஒரு சட்டவல்லுநர் என அடிக்கடி சொல்லிக் கொள்ளும் சாமி ஏன் மறுக்கப்பட்ட நீதிக்காக மேல்முறையீடு செய்யவில்லை? கர்நாடக அரசின் நடவடிக்கையில் அவருடைய சட்டமும், நீதியும் எங்கே போனது?" இதுதான் பாதிக்கப்பட்ட தமிழன் சாமிக்கு வைக்கும் கேள்வி..?

  
   Bookmark and Share Seithy.com



பில் கேட்ஸ்க்கு தூத்துக்குடி முத்தை பரிசளித்த மோடி!
[Friday 2024-03-29 16:00]

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ்க்கு தூத்துக்குடி முத்தை இந்திய பிரதர் நரேந்திர மோடி பரிசளித்தார். உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் (bill Gates) உடன் AI முதல் டிஜிட்டல் பிரிவை கட்டுப்படுத்துவது வரையிலான பல்வேறு விடயங்கள் குறித்து இந்திய பிரதமர் மோடி உரையாடினார்.



துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்!
[Friday 2024-03-29 16:00]

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.



முதல் மாதவிடாய் எதிர்கொண்ட 14 வயது சிறுமி: மன அழுத்தத்தில் எடுத்த விபரீத முடிவு!
[Friday 2024-03-29 16:00]

மாதவிடாய் குறித்த மன அழுத்தம் காரணமாக மும்பையில் 14 வயது சிறுமி விபரீத முடிவு (உயிரிழப்பு) எடுத்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் Makwani பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, தனது முதல் மாதவிடாய் சந்தித்த நிலையில் வியாழக்கிழமை இரவு விபரீத முடிவு (உயிரிழப்பு) எடுத்து கொண்டுள்ளார். உறவினர்கள் விபரீத முடிவு குறித்து அறிந்ததும் விரைவாக சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.



ரூ.921 கோடிக்கு சொத்து: யார் இந்த சுயேட்சை வேட்பாளர்?
[Friday 2024-03-29 16:00]

மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ.921 கோடி சொத்து காட்டிய சுயேட்சை ஒருவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் தோப்பூரைச் சேர்ந்த கன.வேழவேந்தன் (50). இவர், மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாளில், கடைசி நபருக்கு முந்தைய நபராக மனு தாக்கல் செய்ய வந்தார்.



தமிழகத்தில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்பு!
[Friday 2024-03-29 07:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.



பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: முக்கிய தகவலை வெளியிட்ட என்.ஐ.ஏ.!
[Friday 2024-03-29 07:00]

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.



சென்னையில் அதிர்ச்சி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!
[Friday 2024-03-29 07:00]

சென்னையில் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் தனியார் கேளிக்கை விடுதி அமைந்துள்ளது. இதன் அருகே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கேளிக்கை விடுதியின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது.



மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!
[Thursday 2024-03-28 18:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.



அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!
[Thursday 2024-03-28 18:00]

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.



வேட்பு மனுத்தாக்கல்: வெளியானது அண்ணாமலையின் சொத்து மதிப்பு!
[Thursday 2024-03-28 18:00]

கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவரின் சொத்து மதிப்பு விபரங்கள் வெளியாகியுள்ளது. கோவையில் போட்டியிடும் அண்ணாமலை நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்த போது பிராமண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதன்படி, அண்ணாமலையிடம் கையிருப்பில் ரொக்கமாக ரூ.5.11 லட்சம் உள்ளது எனவும், வங்கி இருப்பில் ரூ.25,30,492 உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.



இங்கிலாந்தில் குடியுரிமை பெற்றவர் நாம் தமிழர் கட்சி பொதுச் செயலாளரா? - வெடித்தது அடுத்த சர்ச்சை!
[Thursday 2024-03-28 18:00]

இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் இந்தியாவில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்பு மனுவில் கட்சி பொதுச்செயலாளராக கையெழுத்திட முடியுமா என்று சர்ச்சைகள் எழுந்துள்ளது. 40 மக்களவை தொகுதிக்கான வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதில் 20 பெண் வேட்பாளர்களும், 20 ஆண் வேட்பாளர்களும் களமிறங்குகின்றனர்.



தனக்கு தானே ஊசிசெலுத்தி உயிரை மாய்த்துக்கொண்ட இளம் மருத்துவர்!
[Thursday 2024-03-28 06:00]

இந்திய மாநிலம் கேரளாவில் இளம் பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் அபிராமி. 30 வயதான இவர், பிரதீஷ் ராகு என்பவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.



“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - முதல்வர் பதிலடி!
[Thursday 2024-03-28 06:00]

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.



தமிழகத்தில் 1749 வேட்பு மனுக்கள் தாக்கல்!
[Thursday 2024-03-28 06:00]

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. மேலும் தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி (27.03.2024) நாள் ஆகும்.



ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: சென்னையில் பரபரப்பு!
[Wednesday 2024-03-27 18:00]

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.



தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
[Wednesday 2024-03-27 18:00]

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.



ம.தி.மு.க. சின்னம் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
[Wednesday 2024-03-27 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் (25.03.2024) அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று (26.03.2024) இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.



'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்!
[Wednesday 2024-03-27 18:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.



தமிழக கடற்றொழிலாளர்களின் நலனைக் காக்கத் தவறும் மோடி அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு!
[Wednesday 2024-03-27 06:00]

தமிழக கடற்றொழிலாளர்களின் நலனைக் காக்கத் தவறிய அரசாக மோடி அரசு செயற்பட்டு கொண்டிருக்கிறது என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



"பெருமாளுக்கு பக்தன், பெரியாருக்கு பேரன்" - துரை வைகோவின் அரசியல்!
[Wednesday 2024-03-27 06:00]

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் முன்னணி அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒபந்தம் இறுதிசெய்து தேர்தல் பணிகளில் அதிரடி காட்டி வருகின்றன். அந்த வகையில், தமிழகத்தை ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒத்துக்கப்பட்டுள்ளது. விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் அகிய கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலா 2 இரண்டு தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. மற்ற கூட்டணி கட்சிகளான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு தலா ஒரு தொகுதி என 19 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கும், மற்ற 21 தொகுதிகளில் திமுக 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றது.


Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா