Untitled Document
April 24, 2024 [GMT]
ஈபிடிபி கொலைக்குற்றவாளிகளை நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு யாழ்.மேல் நீதிமன்றம் பரிந்துரை!
[Saturday 2017-01-14 05:00]

நாரந்தனை இரட்டைக் கொலை வழக்கில் தமைறைவாகியுள்ள நிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த இருவரையும் இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்த ஏற்பாடு செய்யுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

நாரந்தனை இரட்டைக் கொலை வழக்கில் தமைறைவாகியுள்ள நிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த இருவரையும் இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்த ஏற்பாடு செய்யுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

  

தூக்குத் தண்டனை தீர்ப்புக்களில், தீர்ப்பளிக்கின்ற நீதிபதி ஜனாதிபதிக்குத் தமது தனிப்பட்ட அபிப்பிராயத்தை அனுப்பிவைக்க வேண்டும், என்ற நடைமுறையின்படி, இந்த வழக்கில் இவர்கள் இருவருக்கும் நீதிமன்றத் தீர்ப்பில் அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை, ஆயுட்கால சிறைத் தண்டனையாகக் குறைக்குமாறும் குற்ற நடவடி கோவை ஏற்பாடுகளின் கீழ் யாழ் மேல் நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள பரிந்துரையில் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துடனான நாடுகடத்தல் உடன்படிக்கையின் மூலம் அல்லது இருநாடுகளுக்கிடையில், பரஸ்பரம் குற்றவாளிகளைப் பரிமாற்றிற்கொள்ளும் நடைமுறையின் மூலம் இந்த நாடு கடத்தல் ஏற்பாட்டைச் செய்யுமாறு யாழ் மேல் நீதிமன்றம் நீதிபதி இளஞ்செழியன் தனது பரிந்துரையில் குறப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த இவர்கள் இருவரும், வவுனியா மேல் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த போது, பிணையில் சென்றதன் பின்னர், வழக்கு நடவடிக்கைக்கு நீதிமன்றத்திற்கு வருகை தராமல் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதனால், இவர்கள் இருவரும் தலைமறைவாகியிருந்த நிலையில், இவர்கள் இல்லாமலேயே, வழக்கு விசாரணைகள் நடைபெற்றன. விசாரணையின் முடிவில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் இருவருக்கும் இரட்டை தூக்குத் தண்டனையும், 20 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ள இங்கிலாந்தில் மரண தண்டனை இல்லாது ஒழிக்கப்பட்டிருப்பதனால், அவர்களை அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு ஏதுவாக, அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ஆயுட்காலச் சிறைத் தண்டனையாகக் குறைக்குமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து இவர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் ஏற்பாடுகள் தொடர்பில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் பற்றிய நீதிமன்றத்திற்கான அறிக்கையை ஜனாதிபதியின் செயலாளர் அல்லது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அல்லது அங்கீகாரம் அளிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் ஊடாக எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் யாழ் மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, வெளிநாட்டு அமைச்சர், நீதியமைச்சர், சட்டமா அதிபருக்கும் இவர்கள் இருவரையும் இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தல் சம்பந்தமான சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து, எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் யாழ் மேல் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் யாழ் மேல் நீதிமன்றத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி ஊர்காவற்றுறை நாரந்தனையில் தேர்தல் பரப்புரைக்காகச் சென்றிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மது நடத்தப்பட்ட தாக்குதலில் கூட்டமைப்பின் ஆதராளர்கள் இருவர் கொல்லப்பட்டனர். அத்துடன், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான மாவைசேனாதிராஜா, எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட பலர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த நெப்போலியன் அல்லது ரமேஷ், மதனராஜா அல்லது மதன், அன்ரன் ஜீவராஜா அல்லது ஜீவன் ஆகிய மூவருக்கும் இரட்டை மரண தண்டனையும் 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து, யாழ் மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டது, இந்த மூவரில் தலைமறைவாகியுள்ள இருவரையும் நாடு கடத்துவதற்குரிய சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக நீதிமன்றத்தின் தூக்குத் தண்டனை விதித்துள்ள தீர்ப்பின் பிரதியும் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக்குழு அனுரவுடன் சந்திப்பு!
[Wednesday 2024-04-24 05:00]

சர்வதேசத் திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு நேற்று ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தது.



ஈரானிய ஜனாதிபதிக்கு விசேட பாதுகாப்பு!
[Wednesday 2024-04-24 05:00]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.



கனேடியத் தமிழர் பேரவையின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ரவீனா ராஜசிங்கம்!
[Wednesday 2024-04-24 05:00]

கனேடியத் தமிழர் பேரவை'யின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரவீனா ராஜசிங்கம் அறிவித்துள்ளார். முழு நேர அரசியல் செயற்பாடுகளில் கவனம் செலுத்தும் முகமாக இம்முடிவை எடுத்ததாக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் விவாதம்!
[Wednesday 2024-04-24 05:00]

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.



சுதந்திரக் கட்சியை 100 மில்லியன் ரூபாவுக்கு பேரம் பேசிய மைத்திரி!
[Wednesday 2024-04-24 05:00]

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ள பிரபல வர்த்தகர் ஒருவரிடம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஏலம் விடுவதற்கு 100 மில்லியன் ரூபா பேரம் பேசியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றஞ்சுமத்தினார்.



அனுரவுடன் விவாதம் - மாற்றுத் திகதிகளை முன்மொழித்த சஜித்!
[Wednesday 2024-04-24 05:00]

அரசியல் விவாதம் ஒன்றுக்காக தேசிய மக்கள் சக்தி முன்மொழிந்துள்ள நாட்களில் சஜித் பிரேமதாசவுக்கு வேறு அலுவல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து தவறான செயற்பாட்டில் ஈடுபடுத்திய கும்பல்!
[Wednesday 2024-04-24 05:00]

யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று தவறான செயற்பாட்டில் ஈடுபடுத்தியுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



அரகலயவின் அமைப்பு மாற்றத்தை கட்சியில் இருந்து தொடங்கும் நாமல்!
[Wednesday 2024-04-24 05:00]

அரகலய போராட்டத்தின் போது கோஷமாக மாறிய அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துதலை எமது கட்சியில் இருந்தே ஆரம்பிக்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்!
[Wednesday 2024-04-24 05:00]

2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளதோடு மே 06 ஆம் திகதி முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.



ஆர்ப்பாட்டம் நடத்த தடை!
[Wednesday 2024-04-24 05:00]

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (24) நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வெலிக்கடை பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னர் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



தையிட்டியில் தொடரும் திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்! Top News
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணம் - தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று ஆரம்பமாகி இன்றும் நடைபெறுகிறது.



பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க முயன்ற முதியவர் மாரடைப்பால் மரணம்!
[Tuesday 2024-04-23 16:00]

பாக்கு நீரிணையை கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.



வலம்புரி ஆசிரியரிடம் விசாரணை- யாழ்.ஊடக அமையம் கண்டனம்!
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் முன்னணி நாளிதழ்களுள் ஒன்றான வலம்புரி நாளிதழது பிரதம ஆசிரியர் ந.விஜயசுந்தரம் வடக்கு ஆளுநரின் முறைப்பாட்டின் பேரில் இன்று திங்கட்கிழமை இலங்கை காவல்துறையின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்துகொள்கின்றது.



சஜித் - அனுர விவாதம் - நாள் குறித்தது தேசிய மக்கள் சக்தி!
[Tuesday 2024-04-23 16:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.



தியத்தலாவ கார் பந்தய விபத்து - இராணுவ விசாரணைக்கு உத்தரவு!
[Tuesday 2024-04-23 16:00]

தியத்தலாவ ஃபொக்ஸ் ஹில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது. மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.



பதவி விலகுகிறார் மைத்திரி?
[Tuesday 2024-04-23 16:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.



ஆறுகால்மடத்தில் பட்டா வாகனம் மோதி முச்சக்கரவண்டி சேதம்! - சாரதி படுகாயம்.
[Tuesday 2024-04-23 16:00]

யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் சந்தியில் இன்று முச்சக்கர வண்டி பட்டாரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.



புங்குடுதீவு கண்ணகியம்மனின் சேவை 16 இலட்சம் ரூபாவுக்கு ஏலம்!
[Tuesday 2024-04-23 16:00]

புங்குடுதீவு கண்ணகியம்மன் ஆலய தேர்த்திருவிழாவில், அம்மனின் சேலை 16 இலட்சம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.



நிறுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி மீது சூடு - இருவர் பலி!
[Tuesday 2024-04-23 16:00]

மொரகஹஹேன- மிரிஸ்வத்த பிரதேசத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஒத்திவைப்பு!
[Tuesday 2024-04-23 05:00]

இன்று நடைபெறவிருந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா