Untitled Document
April 16, 2024 [GMT]
பாவனா கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
[Tuesday 2017-02-21 19:00]

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி  நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 17-ந்தேதி இவர் திருச்சூரில் நடந்த படப்பிடிப் பில் கலந்துகொண்டு விட்டு கார் மூலம் கொச்சி நோக்கி சென்று  கொண்டிருந்தார். அந்த காரை டிரைவர் மார்ட்டின் என்பவர் ஓட்டினார். பாவனாவின் காரை ஒரு கும்பல் வழிமறித்தது. அந்த  கும்பலை சேர்ந்த பிரபல ரவுடி சுனில் உள்பட 5 பேர் காரில் ஏறி நடிகை பாவனாவிடம் பாலியல் கொடுமை செய்து அதை  செல்போனிலும் படம்பிடித்தனர்.

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 17-ந்தேதி இவர் திருச்சூரில் நடந்த படப்பிடிப் பில் கலந்துகொண்டு விட்டு கார் மூலம் கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த காரை டிரைவர் மார்ட்டின் என்பவர் ஓட்டினார். பாவனாவின் காரை ஒரு கும்பல் வழிமறித்தது. அந்த கும்பலை சேர்ந்த பிரபல ரவுடி சுனில் உள்பட 5 பேர் காரில் ஏறி நடிகை பாவனாவிடம் பாலியல் கொடுமை செய்து அதை செல்போனிலும் படம்பிடித்தனர்.

  

டிரைவர் உள்பட 3 பேர் கைது. நடிகை பாவனா டைரக்டர் லால் உதவியுடன் இதை போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார். போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக டிரைவர் மார்ட்டினை கைது செய்தனர். மேலும் கோவையில் பதுங்கி இருந்த சுனிலின் கூட்டாளிகள் 2 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சுனில் அவரது கூட்டாளிகள் மணிகண்டன், விஜேஷ் ஆகிய 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கில் துப்பு துலக்க போலீஸ் ஏ.டி.ஜி.பி. சந்தியா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் உடனடியாக விசாரணையை தொடங்கினார். நடிகை பாவனா ஓடும் காரில் கொடுமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.போலீசாரின் தீவிர விசாரணையை தொடர்ந்து சுனிலின் கூட்டாளியான மணிகண்டன் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளார். அவரை பாலக்காட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மூலம் தலைமறைவாக உள்ள சுனில் மற்றும் விஜேஷ் ஆகியோரை கைது செய்ய போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சுனில் தனது செல்போனை முன் ஜாமீன் தாக்கல் செய்த வக்கீலிடம் கொடுத்திருந்தார். அதை வக்கீல் கோர்ட்டில் ஒப்படைத்தார். அந்த செல் போனை போலீசார் பெற்று சைபர்கிரைம் போலீசார் மூலம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். அந்த செல்போன் மூலம் சுனில் பிரபல நடிகர் மற்றும் சில தயாரிப்பாளர்கள் பலரிடமும் பேசி உள்ளார். அவரிடமும் பலர் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அதுபற்றியும் விசாரித்து துப்புதுலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர் பாக கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா கூறியதாவது:- கேரளாவில் பெண் களுக்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்கி வருகிறார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகு டிரைவரை மட்டும் நம்பி நடிகையை சினிமா தயாரிப்பாளர் அனுப்பியிருக்ககூடாது. பாதுகாப்புக்கு ஆட்களை அனுப்பி இருக்கலாம். பாவனாவை கடத்திய முக்கிய குற்றவாளியான சுனில் சிக்கும்போது அவரை யாராவது தூண்டி இதனை செய்தார்களா? என்பது தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் முதல்- மந்திரி பினராய் விஜயன், கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் ஆகியோர் நடிகை பாவனாவிடம் செல் போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது அவருக்கு ஆறுதல் கூறிய அவர்கள் இந்த சம்பவத்தில் அரசு விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் என்றும் யாரும் தப்பமுடியாது என்றும் தெரிவித்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



மகளுக்காக 200 கோடியை செலவழிக்கும் ஷாருக் கான்!
[Tuesday 2024-04-16 05:00]

நடிகர் ஷாருக் கான் தற்போது ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருகிறார். தொடர்ந்து 1000 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டும் படங்களாக கொடுத்து மீண்டும் பாலிவுட்டை தலைநிமிர செய்து இருக்கிறார். தொடர்ந்து தென்னிந்திய படங்களை ஹிந்தியில் வசூல் சாதனை படைத்து வந்த நிலைமையை மாற்றி இருக்கிறார் அவர்.



ரெட் ஜெயண்ட் பற்றி கோபமாக பேசிய நடிகர் விஷால்!
[Tuesday 2024-04-16 05:00]

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார். தானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என விஷால் சமீபத்தில் அறிவித்து இருந்தார். 2026 தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறி இருக்கிறார். அடுத்து அவர் நடிப்பில் ரத்னம் என்ற படம் திரைக்கு வருகிறது. ஹரி இயக்கி இருக்கும் அந்த படத்தின் ட்ரைலரும் நேற்று வெளியாகி இருந்தது.



தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
[Monday 2024-04-15 18:00]

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து 18 நவம்பர் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த 2022 ஜனவரி 17 அன்று இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தனர். இது திரையுலகில் பரபரப்பையும், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.



கமலின் வாரிசுக்கு வாய்ப்பு கொடுக்க சொல்லி கெஞ்சிய லோகேஷ்!
[Monday 2024-04-15 18:00]

80களில் இருந்தே தற்போது வரை போட்டி நடிகர்களாக பார்க்கப்படுபவர்கள் ரஜினி, கமல். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால் இரண்டு நடிகர்களுமே சினிமாவில் உயரத்தை அடைந்த பிறகு ஒன்றாக நடிக்கவில்லை.



இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை மாளவிகா மோகனன்! Top News
[Monday 2024-04-15 18:00]

இப்போதெல்லாம் பெரும்பாலான நடிகைகள், சினிமாவில் நடிக்க வருவதே தங்களது நடிப்பு திறமையை காட்டவா அல்லது தங்களது உடல் அழகை காட்டவா என்ற சந்தேகம் தான் பெரும்பாலான ரசிகர்களுக்கு எழுகிறது. ஏனென்றால் நடிப்பை காட்டி ரசிகர்களிடம் பெயர் வாங்கிய நடிகைகள் ஒரு காலகட்டத்தில் இருந்தனர். இப்போது தங்களது உடல் அந்தரங்க பகுதிகளை கவர்ச்சியாக காட்டி, அதன் மூலமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து சினிமாவில் நீடிக்க ஆசைப்படும் நடிகைகள் தான் அதிகமாக இருக்கின்றனர்.



ரத்த களரியாக வெளியான லோகேஷின் புதுப்பட போஸ்டர்!
[Monday 2024-04-15 06:00]

லோகேஷ் தற்போது தலைவர் 171ல் பிஸியாக இருக்கிறார். விரைவில் இதன் டைட்டில் டீசர் வெளிவர உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே சூப்பர் அப்டேட் ஒன்றை அவர் கொடுத்துள்ளார். அதன்படி லோகேஷின் ஜி ஸ்குவாட் நிறுவனம் தங்களுடைய புது பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனத்துடன் இணைந்து லோகேஷ் தயாரிக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார்.



ஹீரோ ஆகும் KPY பாலா: கனவை நிறைவேற்றிய முன்னணி நடிகர்!
[Monday 2024-04-15 06:00]

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட பல ஷோக்களில் காமெடியனாக கலக்கி பாப்புலர் ஆனவர் பாலா. அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கின்றனர். சமீப காலமாக பாலா தான் சம்பாதித்த பணத்தை கொண்டு பலருக்கும் உதவிகள் செய்து வருகிறார். மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மாற்று திறனாளிகளுக்கு வண்டி வாங்கி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அவர் செய்து வருகிறார்.



2026ஆம் ஆண்டு அரசியலுக்கு வருகிறேன் - நடிகர் விஷால்!
[Sunday 2024-04-14 18:00]

நடிகர் விஷால் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் களம் காண இருப்பதாக தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மக்களுக்கு தேவையானதை அவர்களின் பிரதிநிதியாக இருந்து முழுமையாக வழங்குவதே அரசியலின் நோக்கமாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.



ரஜினியை பார்த்து படப்பிடிப்பு தளத்தில் வாடா என அழைத்த நடிகை!
[Sunday 2024-04-14 18:00]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஜெயிலர். ரூ. 700 கோடி வசூலித்து சாதனை படைக்க சன் பிக்சர்ஸ் சம்பளத்தை தாண்டி ஒரு காரையும் ரஜினிக்கு பரிசளித்தனர். இப்பட வெற்றியை தொடர்ந்து ரஜினி அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.



சல்மான் கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு!
[Sunday 2024-04-14 18:00]

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பின்பு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.



கொச்சையாக கமெண்ட் செய்த ரசிகருக்கு செம பதிலடி கொடுத்த ரெடின் கிங்ஸ்லீ மனைவி சங்கீதா!
[Sunday 2024-04-14 07:00]

சாதாரணமாகவே சின்னத்திரை நடிகைகள் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக இருப்பார்கள். அதைத்தாண்டி பிரபல நடிகரை திருமணம் செய்தது மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சங்கீதா. தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வானத்தை போல தொடரில் நடித்து வருகிறார்.



மும்பையில் புது வீடு வாங்கிய பூஜா ஹக்டே!
[Sunday 2024-04-14 07:00]

நடிகை பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் முகமூடி, பீஸ்ட் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். ஆனால் அவரால் பெரிய ஹிட் கொடுக்க முடியவில்லை. மேலும் ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் அவர் நடிக்கும் படங்களுக்கும் இதே நிலை தான். கடைசியாக அவர் சல்மான் கான் ஜோடியாக Kisi Ka Bhai Kisi Ki Jaan என்ற படத்தில் நடித்து இருந்தார். தமிழில் அஜித் நடித்த வீரம் படத்தின் ரீமேக் தான் அது. அந்த படமும் தோல்வியை தான் தழுவியது.



அஜித்துடன் மோதப்போகும் சூர்யா பட வில்லன்!
[Saturday 2024-04-13 18:00]

அஜித்தின் விடாமுயற்சி படம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தொடங்க இருக்கிறது. இதை அடுத்து அஜித்தின் அடுத்த பட அப்டேட்டும் சமீபத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார். பக்கா ஆக்சன் படமாக உருவாக உள்ள இந்த படத்திற்கு வில்லனை வலை வீசி தேடி வந்தனர் படக்குழுவினர்.



திலீப் விவகாரத்தில் பாவனாவின் அதிரடி பதிவு!
[Saturday 2024-04-13 18:00]

கடந்த 2017 ஆம் ஆண்டு பாவனாவின் வழக்கு மிக பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவருக்கு நடந்த கொடுமையால் கொந்தளித்த ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்காக நீதி கேட்டு நின்றது. அதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு ஆதாரங்கள் அடங்கிய மெமரி கார்டு நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.



குரேஷியும் குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறாரா?
[Saturday 2024-04-13 18:00]

குக் வித் கோமாளி ஷோவின் ஐந்தாம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கு முன் நான்கு சீசன்களையும் தயாரித்த நிறுவனம், இயக்குனர் என கூண்டோடு வெளியேறிவிட்டனர். அதனால் புது தயாரிப்பு நிறுவனம் குக் வித் கோமாளி தயாரிக்க இருக்கின்றனர். அதனால் நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்!
[Saturday 2024-04-13 06:00]

விஜய் தற்போது கோட் படத்தில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருகின்ற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 வெளியாகிறது. இதை தொடர்ந்து சமீபத்தில் கோட் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது. செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கோட் படத்திற்கு போட்டியாக மற்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.



ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது!
[Saturday 2024-04-13 06:00]

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸ் ஆன ஜெயிலர் படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினி, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களை கிஃட் ஆக கொடுத்தது மட்டுமின்றி ஒரு பெரிய தொகையையும் செக் ஆக கொடுத்தது.



28 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் இணையும் நடிகை!
[Friday 2024-04-12 18:00]

கமலின் விக்ரம் படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் ஒரு படம் கூட வெளிவரவில்லை. ஆனால் வருகிற படம் சாதனை படைக்கும் அளவிற்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டும் என்று இந்தியன் 2 படத்தை முழுமையாக நம்பி இருக்கிறார்.



"என் கணவர் இப்படி தான் இருக்க வேண்டும்" - ஜான்வி கபூர் வெளிப்படை!
[Friday 2024-04-12 18:00]

பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் திருமணத்திருற்கு தயாராகி வந்த நிலையில் இவர் ஷிகர் பஷிர் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார் என்பது தெரியவந்தது. இந்த ஜோடி திருப்பத்துக்குக் சென்று தரிசனம் செய்வது வழக்கம். அதுவும் புத்தாண்டு, பிறந்தநாள் மிகவும் முக்கியம்யான நாட்களில் தவறாமல் தரிசம் செய்வார்கள். இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று வதந்திகள் பரவி வந்த நிலையில் ஜான்வியும் ஷிகர் பஷிரும் காதலிப்பத்த போனி கபூருர் சம்பத்தில் உருதி செய்திருந்தார்.



அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்த பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்!
[Friday 2024-04-12 18:00]

அரசியல் பேச்சாளரும், சின்னத்திரை நடிகருமான அருள்மணி திடீரெனெ மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'அழகி', 'தென்றல்' போன்ற தொலைக்காட்சி தொடர்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் அருள்மணி. இவர், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார்.


Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா