Untitled Document
April 20, 2024 [GMT]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கும் திருமாவளவன்!
[Thursday 2017-03-09 17:00]

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவித்துவிட்டது தேர்தல் ஆணையம். ' மக்கள் நலக் கூட்டியக்கம் இந்தத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடும். பொது வேட்பாளராக திருமாவளவனை முன்னிறுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது' என்கின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, ' ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?' என்ற கேள்வி அரசியல் மட்டத்தில் எழுந்தது. வரும் ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை உணர்ந்து முன்கூட்டியே நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.கவுக்கு எதிராக தி.மு.க, மக்கள் நலக் கூட்டியக்கம் உள்ளிட்டவை களமிறங்க உள்ளன. ஜெயலலிதா ஆதரவை ஒட்டுமொத்தமாக பெறும் நோக்கில் தீபாவும் களமிறங்க இருக்கிறார். இந்நிலையில், ' அ.தி.மு.கவின் புதிய தலைமையின் மீது மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை இல்லை. ஊழல் குற்றச்சாட்டுக்களில் அவர்கள் சிக்கியிருக்கிறார்கள். இவர்களை வீழ்த்துவதற்கு பொது வேட்பாளராக திருமாவளவனை முன்னிறுத்த வேண்டும்' என்ற குரல் எழுந்துள்ளது.

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவித்துவிட்டது தேர்தல் ஆணையம். ' மக்கள் நலக் கூட்டியக்கம் இந்தத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடும். பொது வேட்பாளராக திருமாவளவனை முன்னிறுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது' என்கின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, ' ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?' என்ற கேள்வி அரசியல் மட்டத்தில் எழுந்தது. வரும் ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை உணர்ந்து முன்கூட்டியே நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.கவுக்கு எதிராக தி.மு.க, மக்கள் நலக் கூட்டியக்கம் உள்ளிட்டவை களமிறங்க உள்ளன. ஜெயலலிதா ஆதரவை ஒட்டுமொத்தமாக பெறும் நோக்கில் தீபாவும் களமிறங்க இருக்கிறார். இந்நிலையில், ' அ.தி.மு.கவின் புதிய தலைமையின் மீது மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை இல்லை. ஊழல் குற்றச்சாட்டுக்களில் அவர்கள் சிக்கியிருக்கிறார்கள். இவர்களை வீழ்த்துவதற்கு பொது வேட்பாளராக திருமாவளவனை முன்னிறுத்த வேண்டும்' என்ற குரல் எழுந்துள்ளது.

  

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். " தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுடன் பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் உடன்பாடு வைத்திருக்கிறோம். அவர்களுடன் தொகுதிப் பங்கீடு என்று வரும்போது தனித் தொகுதிகளை மட்டுமே எங்களுக்கு ஒதுக்குவார்கள். அதிலும், அவர்கள் தோற்கும் வாய்ப்புள்ள சில இடங்களில்தான் எங்கள் வேட்பாளர்கள் போட்டியிட்டு வந்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கினோம். இதற்கான கருத்துவிதையைத் தூவியது சிறுத்தைகள்தான். ஆனால், மக்கள் மன்றத்தில் எங்கள் கூட்டணிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. 'எதிர்காலத்தில் இப்படியொரு கூட்டணி உருவாகுமா?' எனவும் அறுதியிட்டுக் கூற முடியாது. தேர்தல் நேரத்தில் வைகோவின் செயல்பாடுகளும் விஜயகாந்தின் நடவடிக்கைகளும் எங்கள் அணியைத் தோல்வியுறச் செய்யும் காரணிகளாக அமைந்துவிட்டன. அதேநேரத்தில், தனித்தொகுதியில் போட்டியிடாமல் பொதுத் தொகுதிகளில் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்பதும் சிறுத்தைகளின் நீண்டநாள் விருப்பம். பொது நீரோட்டத்தில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இவை இன்றியமையாதவை. அதையொட்டியே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை குறி வைத்திருக்கிறோம்" என விவரித்தவர்,

ஜி.ராமகிருஷ்ணன்" ஆர்.கே.நகர் தொகுதியில் கணிசமான அளவுக்கு தலித் மக்களும் சிறுபான்மை இன மக்களும் நிறைந்திருக்கிறார்கள். கடந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் வி.சி.க வேட்பாளராக கல்வியாளர் வசந்திதேவி போட்டியிட்டார். சொற்பமான வாக்குகள்தான் கிடைத்தன. அந்தவகையில், மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில் எங்களுக்கே தொகுதி ஒதுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட வென்ற தொகுதியாகவும் இருக்கிறது. அவரது மரணம் குறித்த சந்தேகங்களும் அதிகரித்துள்ளன. தவிர, ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி சிறைப்பட்டிருக்கிறார் சசிகலா. இதே குற்றச்சாட்டுக்கள் ஜெயலலிதா மீதும் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் காரணங்களை முன்னிறுத்தி, பொதுவேட்பாளராக திருமாவளவனை முன்னிறுத்தும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறோம். எங்களுடைய முயற்சிகளுக்கு இடதுசாரிகளும் துணை நிற்பார்கள். இதற்குத் தி.மு.கவின் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறோம். அதற்கான சாத்தியக் கூறுகள் அமையாவிட்டால், சிறுத்தைகளின் சார்பில் யாராவது ஒருவர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார். அரசியல் களத்தில் தூய்மையானவராகவும் முதிர்ந்த அரசியல் தலைவராகவும் விளங்கும் திருமாவளவன் போட்டியிடுவது, தொகுதியின் வளர்ச்சிக்கும் அப்பகுதி மக்களின் எதிர்காலத்துக்கும் மிக முக்கியமானதாக இருக்கும்" என்றார் உறுதியாக.

' இப்படியொரு தகவல் வலம் வருவது உண்மையா?' என்ற கேள்வியை வி.சி.கவின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசுவிடம் கேட்டோம். " இதுகுறித்து தலைவரிடமும் பேசியிருக்கிறோம். அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. பொதுவேட்பாளராக அவர் களத்தில் நிற்க வேண்டும் என்பதுதான் சிறுத்தைகளின் விருப்பம்" என்றார் நிதானமாக. சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். " ஆர்.கே.நகரில் மக்கள் நலக் கூட்டியக்கம் கட்டாயம் போட்டியிடும். தேர்தல் நடவடிக்கைகள் குறித்து, மூன்று கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்" என்றதோடு முடித்துக் கொண்டார்.

  
   Bookmark and Share Seithy.com



எலான் மஸ்க்கின் வருகை திடீர் ஒத்திவைப்பு!
[Saturday 2024-04-20 16:00]

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்வசப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.



வாக்கு சதவீதம் சரிவு: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்!
[Saturday 2024-04-20 08:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.



“சிறையில் கெஜ்ரிவாலுக்கு எதுவும் நடக்கலாம்” - டெல்லி எம்.பி. குற்றச்சாட்டு!
[Saturday 2024-04-20 08:00]

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.



பேச்சுவார்த்தை தோல்வி: இறுதிவரை தேர்தலை புறக்கணித்த இறையூர் மக்கள்!
[Saturday 2024-04-20 08:00]

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.



உலகளவில் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்த கோயம்புத்தூர் பெண்மணி!
[Friday 2024-04-19 16:00]

‘டைம்’ இதழின் உலகளவில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் கோயம்புத்தூர் பெண் இடம்பிடித்துள்ளார். ‘டைம்’ இதழ் 2024 -ம் ஆண்டுக்கான உலகளவில் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 8 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.



லண்டனில் இருந்து ரூ.1.5 லட்சம் செலவு செய்து ஓட்டு போட வந்தவருக்கு அதிர்ச்சி!
[Friday 2024-04-19 16:00]

'சர்கார்' பட பாணியில் வெளிநாட்டில் இருந்து ஓட்டு போட வந்தவருக்கு வாக்காளர் பட்டியலில் பெயல் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



வாக்களித்தவுடன் குஷ்பு போட்ட ட்வீட்டால் பாஜகவுக்கு அதிர்ச்சி!
[Friday 2024-04-19 16:00]

மக்களவை தேர்தலில் நடிகை குஷ்பு வாக்களித்த பின்னர் பகிர்ந்த ட்வீட் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். மேலும் பொதுமக்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.



தமிழகத்தில் வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து இருவர் மரணம்!
[Friday 2024-04-19 16:00]

சேலம் வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.



அனைத்து ஏற்பாடுகளும் தயார்: வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்!
[Friday 2024-04-19 07:00]

தமிழகத்தில் (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.



தேர்தல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர சோதனை!
[Friday 2024-04-19 07:00]

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும் நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



ஈரோட்டில் போலீசார் விடிய விடிய தீவிர சோதனை!
[Friday 2024-04-19 07:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.



“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
[Thursday 2024-04-18 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.



“வாக்காளர்கள் கவனத்திற்கு...” - சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!
[Thursday 2024-04-18 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.



ஒட்டு மொத்தமாக தேர்தலை புறக்கணித்த கிராமம்!
[Thursday 2024-04-18 18:00]

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு, முனங்காடு மீனவ கிராமத்தில் தேர்தலுக்கு முன்பே தேர்தல் முடிவை பகிரங்கமாக அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த கிராமத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஒரே ஒருமுறை தான் தார் சாலை போடப்பட்டிருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம். அதுவும் ஒருசில மாதங்களில் பழுதாகி பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்தும், புகார் மனுக்களை அளித்தும் பலனளிக்காத நிலையில் இரண்டாவது தார் சாலை போட சொல்லியும் மற்றும் சுத்தமான குடிநீர் கேட்டும் போராடும் ஒரு அத்திப்பட்டி மாதிரியான அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாத ஒரு குக்கிராமம் தான் அது.



கோவையில் அண்ணாமலை வெற்றி பெற கைவிரலை துண்டித்த பாஜக பிரமுகர்!
[Thursday 2024-04-18 18:00]

கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெற பாஜக நிர்வாகி ஒருவர் கைவிரலை துண்டித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான கடலூர், ஆண்டாள் முள்ளி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம். இவர், அம்மாவட்டத்தில் பாஜக துணைத்தலைவராக உள்ளார்.



ஓய்ந்தது பிரச்சாரம்: முடிவுக்கு வரும் தொழிலாளர் தட்டுப்பாடு!
[Thursday 2024-04-18 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.



வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்!
[Thursday 2024-04-18 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.



வெயிலின் தாக்கம்: வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல்!
[Thursday 2024-04-18 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.



“பாஜகவினர் 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள்” - பிரியங்கா காந்தி!
[Wednesday 2024-04-17 15:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.



“மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
[Wednesday 2024-04-17 15:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.


 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா