Untitled Document
August 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ஆயுளை அதிகரிக்கும் குழந்தைப் பேறு..
[Wednesday 2017-03-15 23:00]

குழந்தை பெற்றவர்கள் , பெறாதவர்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள் என்று ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. 15 லட்சம், ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்த இந்த ஆய்வு, குறைந்தது ஒரே ஒரு குழந்தையையாவது பெற்றவர்கள், குழந்தைகள் ஏதும் பெறாதவர்களைக் காட்டிலும், குறைவான இறப்பு ஆபத்தையே எதிர்கொள்கிறார்கள் என்று முடிவுக்கு வந்தது.

குழந்தை பெற்றவர்கள் , பெறாதவர்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள் என்று ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. 15 லட்சம், ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்த இந்த ஆய்வு, குறைந்தது ஒரே ஒரு குழந்தையையாவது பெற்றவர்கள், குழந்தைகள் ஏதும் பெறாதவர்களைக் காட்டிலும், குறைவான இறப்பு ஆபத்தையே எதிர்கொள்கிறார்கள் என்று முடிவுக்கு வந்தது.

  

இந்த ஆய்வில் 1911-லிருந்து 1925 வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களை விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். குழந்தை பெற்றவர்களுக்கும், பெறாதவர்களுக்கும், ஆயுட்கால எதிர்பார்ப்பில் உள்ள இடைவெளி என்பது , அவர்களது 60வது வயதில், ஆண்களுக்கு இரண்டு ஆண்டுகளாகவும், பெண்களுக்கு ஒன்றரை ஆண்டுகளாகவும் இருக்கிறது என்று அந்த ஆய்வு கண்டறிந்தது. பெற்றோர்கள் தங்களது முதுமைக்காலத்தில், குழந்தைகளிடம் இருந்து சமூக மற்றும் நிதி ஆதரவைப் பெறுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



இஞ்சியை கொண்டு தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்!
[Friday 2017-08-18 08:00]

தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் போன்ற சமையலறைப் பொருட்கள் மட்டுமின்றி, இஞ்சியும் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா? தலைமுடி பிரச்சனைக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு கண்டால், பிரச்சனைகள் நீங்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும். தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் போன்ற சமையலறைப் பொருட்கள் மட்டுமின்றி, இஞ்சியும் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா?



ஏ.சியில் வேலை பார்த்தால் ஓ.சியில் சிறுநீரக கல் வருகிறதாம்..?
[Wednesday 2017-08-16 18:00]

கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் உருவாகத் தொடங்கிவிடும். இந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகின்றன. சிறுநீரகக் கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின் கூட்டு கலவை என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த கல் சிறுநீரக பையில் இருக்கும் வரை எந்த அறிகுறியும் தெரியாது. சிறுநீரக பாதையில் அது பயணிக்கும் போது குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இதற்கு இரண்டு வகையான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நவீன அறுவை சிகிச்சை அல்லது மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்துகிறார்கள்.



மாரடைப்பு வராம தடுக்க இதை அடிக்கடி ஸ்வீட் கார்ன் சாப்பிடுங்க!
[Wednesday 2017-08-16 18:00]

ஈஸி ஸ்நாக்ஸாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பெஸ்ட்சாய்ஸ் ஸ்வீட் கார்ன். இதிலிருக்கும் சில ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் கண்பார்வைக்கு, சருமத்திற்கு, மிகவும் நல்லது. ஸ்வீட் கார்ன் மூலமாக நமக்கு என்னநன்மையெல்லாம் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.



நினைவாற்றலை மீட்க உதவும் புதிய புரதம்:
[Friday 2017-08-11 07:00]

அல்ஸைமர் போன்ற நோய்களினால் நினைவாற்றலானது இழக்கப்படுகின்றது. இழக்கப்படும் நினைவாற்றலை மீட்பதற்கு தற்போது எதுவிதமான சிகிச்சை முறைகளும் இல்லை. எனினும் விசேட நொதியம் ஒன்றின் மூலம் இது சாத்தியப்படும் என MIT ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த நொதியத்திற்கு தேவையான புரதத்தினை உருவாக்கும் முயற்சியில் குறித்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.



சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்:
[Thursday 2017-08-10 09:00]

பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது.



வெறும் வயிற்றில் திராட்சை சாறு! - கிடைக்கும் நன்மைகள்!
[Wednesday 2017-08-09 20:00]

திராட்சை பச்சையாக உள்ளபோதும், உலர்ந்திருக்கும் போதும் அதன் மருத்துவ குணம் ஒரே மாதிரி சிறப்புடன்தான் உள்ளது. திராட்சையில் சுமார் 60 வகைகள் உள்ளன. இதில் புளிக்கும் இனத்தை விடப் புளிப்பு இல்லாத இனமே மிகச் சிறந்த பலன் தருவதாகும்.



ஆண்களைக் காட்டிலும் அதிக சுறுசுறுப்புடன் இயங்கும் பெண்களின் மூளை: - ஆய்வில் தகவல்
[Wednesday 2017-08-09 14:00]

ஆண்களைக் காட்டிலும் பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.மறதி நோயான அல்சீமர் நோய் தொடர்பான அறிவியல் இதழில் வெளியிட்டப்பட்ட அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:



ஐஸ்க்ரீம் உருகாமல் இருக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த ஜப்பான் விஞ்ஞானிகள்!
[Wednesday 2017-08-09 08:00]

ஐஸ்க்ரீம் இந்தப் பெயரை கேட்டாலே பலர் சிலாகிப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வயதினரும் அதற்கு அடிமையே. வெயிலில் மட்டுமல்ல, மழை பெய்யும்போதும் ஐஸ்க்ரீம் சாப்பிட ஒரு கூட்டம் கிளம்பும். ஆனால், எந்த ஐஸ்க்ரீமாக இருந்தாலும் நம் கைக்கு வந்த சில நிமிடங்களில் அது உருகிவிடும்.



2050- இல் கண் பார்வையற்றோரின் எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக அதிகரிக்கும்: - ஆய்வில் தகவல்
[Friday 2017-08-04 15:00]

சர்வதேச அளவில் தற்போது 3 கோடியே 60 லட்சம் கண் பார்வையற்றோர் உள்ளனர். இந்த நிலையில் 2050-ம் ஆண்டில் அவர்களது எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக உயரும் அபாயம் உள்ளது.இங்கிலாந்தில் உள்ள ஏஞ்சிலியா ருக்சின் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் சர்வதேச அளவில் 1.88 நாடுகளில் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 1980 முதல் 2015-ம் ஆண்டு வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.



துளசி செடியை இந்தியர்கள் சுற்றி வருவதற்கான அறிவியல் காரணங்கள்
[Friday 2017-08-04 08:00]

நாம் இந்தியாவில் பாரம்பரியமாக செய்து வரும் சில தெய்வ சடங்குகள் அதிக நன்மைகளை தருவதாக இருக்கின்றன. இவை நமது ஒழுக்கத்தை மேம்படுத்துவதோடு மட்டுமில்லாமல், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவியாக இருக்கின்றன. இதில் நாம் காலம் காலமாக துளசி செடியை சுற்றி வந்து வணங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அதற்கு என்ன காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?



எய்ட்ஸ் நோய்க்கு பசு மாட்டில் இருந்து மருந்து: - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
[Saturday 2017-07-22 16:00]

பசு மாட்டின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருந்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் புதிய வழிமுறையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். விஞ்ஞான இதழான Nature-ல் இதுகுறித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அமெரிக்க விஞ்ஞானிகள் பசுவினைக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்டு தங்களது புதிய கண்டுபிடிப்பினை வெளியிட்டுள்ளனர். அதில் 4 பசு கன்றுகளுக்கு ஹெச்.ஐ.வி வைரஸை செலுத்தி ஆராய்ச்சி மேற்கொண்ட விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியமான முடிவு கிடைத்துள்ளது.



குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை:
[Wednesday 2017-07-19 07:00]

குறட்டை என்ற ஒரு வியாதிதான், அந்த வியாதி உள்ளவர்களுக்கு அதன் சிரமம் ஒன்றும் அந்த சமயத்தில் தெரியாமல், அவரைச்சார்ந்தோருக்கு, அதிக அளவில், மன வேதனை, தூக்கம் கெட்டு ஏற்படும் உடல் வேதனை மற்றும் மன உளைச்சல் ஆகிய துன்பங்களை அடைய வைக்கும் ஒரு மோசமான வியாதி.



நீண்ட காலம் வாழ உதவும் கோப்பி: - ஆய்வில் தகவல்
[Monday 2017-07-17 08:00]

நாளொன்றுக்கு மூன்று கப் காபி அருந்துவது நீங்கள் நீண்ட காலம் வாழ உதவலாம் என்று 10 ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ அரை மில்லியன் மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. உள்மருந்துக்கான வருடாந்திர இதழில் பிரசுரிக்கப்பட்ட அந்த ஆய்வில், காஃபின் நீக்கப்பட்டிருந்தாலும் கூட, கூடுதலாக ஒரு கப் காபி, ஒருவரின் ஆயுளை அதிகரிக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்காவிலும், கனடாவிலும் செய்தி நிறுவனங்களின் வருமானத்தை சுரண்டும் ஃபேஸ்புக், கூகுள்:
[Wednesday 2017-07-12 19:00]

ஆன்லைன் மூலம் செய்தி நிறுவனங்களுக்கு வரும் வருமானத்தின் பெரும்பகுதி கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு சென்றுவிடுகின்றன என்று அமெரிக்காவின் செய்தி நிறுவனங்கள் குற்றம்சாட்டியுள்ளன. இதுகுறித்து கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களோடு பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் செய்தி நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.



மிகவும் ஆழமான பகுதிகளில் தாமாகவே ஒளியைப் பிறப்பிக்கும் பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு!
[Tuesday 2017-07-11 20:00]

சமுத்திரங்களின் மிகவும் ஆழமான பகுதிகளில் சூரிய ஒளி கிடைப்பது மிக மிக அரிதாகவே இருக்கும். இதனால் அப் பகுதிகளில் உயிரினங்கள் வாழ்வதும் அரிதாகவே இருக்கும். ஆனால் சில வகையான பவளப்பாறைகள் சூரிய ஒளிக்கு பதிலாக தாமே ஒளியைப் பிறப்பித்து தம்மைத் தாமே உயிர்பிழைக்கச் செய்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை ஆழமான பகுதிகளில் அல்காக்கள் உணவு தயாரிப்பில் ஈடுபட உதவியாகவும் இருக்கின்றன.



தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் முடி உதிர்வதை தடுப்பது எப்படி?
[Wednesday 2017-07-05 17:00]

ஆண் - பெண் இருவருக்கும் ஹெல்மெட் அணிவதனால் தலை முடி உதிரும். இப்போது ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் முடி உதிர்வதை தடுப்பது எப்படி என்று பார்க்கலாம்.



திடீரென்று மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
[Wednesday 2017-07-05 17:00]

திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள். அப்போது என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.



ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?
[Wednesday 2017-07-05 17:00]

கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.



தூக்கமின்மையால் அவதிபடுபவர்களா? - அப்ப இந்த பிராணாயாமம் செய்யுங்க
[Wednesday 2017-07-05 17:00]

தூக்கமின்மையால் உங்கள் நரம்பு மண்டலம் கிளர்ச்சியடைந்து உங்களது மன அழுத்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும் அபாயமும் உண்டாகிறது. நீங்கள் இரவு நேரத்தில் அமைதியான நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொள்ள யோகா பயிற்சிகள் செய்ய வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள யோகா பயிற்சி ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்திற்கு உதவும்.



வறட்டு இருமல் சளியை கட்டுப்படுத்தும் ஏலக்காய்!
[Wednesday 2017-07-05 17:00]

சளி, வறட்டு இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த ஏலக்காய் டீயை குடிக்கலாம். இன்று ஏலக்காய் டீ தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். சளி, இருமலை கட்டுப்படுத்தும்


Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா