Untitled Document
October 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்க ஜப்பான் திடீர் போர் ஒத்திகை!
[Friday 2017-03-17 18:00]

அச்சுறுத்தலாக விளங்கிவரும் அண்டை நாடான வட கொரியாவை அவசர நேரத்தில் எதிர்கொள்ள தயாராகும் நிலையில் ஜப்பான் இன்று திடீர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.ஜப்பானை அச்சுறுத்தும் ஏவுகணை சோதனைகளை வடகொரியா மேற்கொண்டு வருவதை தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.இந்நிலையில், வட கொரியா ஏவுகணைகளை தங்கள் நாட்டின் மீது வீசினால் அந்த நிலைமையை எவ்வாறு கையாள வேண்டும்? என்பதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இன்று ஜப்பான் ராணுவம் திடீர் போர் ஒத்திகையில் ஈடுபட்டது.

அச்சுறுத்தலாக விளங்கிவரும் அண்டை நாடான வட கொரியாவை அவசர நேரத்தில் எதிர்கொள்ள தயாராகும் நிலையில் ஜப்பான் இன்று திடீர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.ஜப்பானை அச்சுறுத்தும் ஏவுகணை சோதனைகளை வடகொரியா மேற்கொண்டு வருவதை தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.இந்நிலையில், வட கொரியா ஏவுகணைகளை தங்கள் நாட்டின் மீது வீசினால் அந்த நிலைமையை எவ்வாறு கையாள வேண்டும்? என்பதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இன்று ஜப்பான் ராணுவம் திடீர் போர் ஒத்திகையில் ஈடுபட்டது.

  

தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 450 கிலோ மீட்டர் தூரத்தில் சமீபத்தில், ஜப்பான் கடல் பகுதியில் வட கொரியாவின் ஏவுகணைகள் வந்து விழுந்த இடத்தின் அருகேயுள்ள மீன்பிடிக்கும் தொழிலுக்கு பிரசித்தி பெற்ற நகரத்தில் இந்தப் போர் ஒத்திகை நடைபெற்றது.அபாய சங்குகள் ஒலித்ததும் பெரியவர்களும் மாணவ மாணவியரும் எப்படியாவது பாதுகாப்பான இடத்தை நோக்கிச் சென்று தங்களது உயிர்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் வகையில் இன்றைய ஒத்திகை அமைந்திருந்ததாக உள்ளூர்வாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.முன்னதாக ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஏவுதளத்தில் இருந்து H-2A ராக்கெட் மூலம் ரேடார் 5 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வடகொரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.இந்த செயற்கைக்கோள் ஜப்பானின் கடற்பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில் வடகொரியாவை விண்ணில் இருந்தபடி உளவு பார்க்கும் என அந்நாட்டு விண்வெளி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.comராணுவத்தை கட்டுக்கோப்பில் வைத்துள்ளாரா வடகொரியா அதிபர்? - வெளியான புகைப்படம்
[Monday 2017-10-23 18:00]

உலக நாடுகளை தமது அணு ஆயுத பலத்தால் அச்சுறுத்திவரும் வடகொரியா உண்மையில் தமது ராணுவத்தை கட்டுக்கோப்பில் வைத்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.வல்லரசு நாடுகளை தமது அணு ஆயுத பலத்தால் வடகொரிய தலைவர் கிம் ஜோங் வுன் அச்சுறுத்தி வருகிறார்.இதனால் அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் ஒப்புதலுடன் ஐக்கிய நாடுகள் மன்றம் வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.அர்ஜென்டீனாவில் தாயாரின் கண்முன்னே 12 வயது சிறுவனுக்கு மின்னல் தாக்கி விபத்து!
[Monday 2017-10-23 18:00]

அர்ஜென்டீனாவின் Posadas பகுதியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று 12 வயது சிறுவன் தங்களது குடியிருப்பின் முன்பு குடையுடன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளான்.அப்போது சக்தி வாய்ந்த மின்னல் ஒன்று குறித்த சிறுவனின் அருகாமையில் விழுந்து தாக்கியுள்ளது.சிறுவனின் தாயார் கரோலீன தமது மகனை பின்னர் வேடிக்கை காட்டுவதற்காக குறித்த காட்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தவர் இச்சம்பவத்தால் அலறியவாறே மகனை காப்பாற்ற விரைந்துள்ளார்.உலகம் முழுவதும் கண் பார்வை இன்றி அவதிப்படும் 110 கோடி பேர்: - ஆய்வில் தகவல்
[Monday 2017-10-23 08:00]

உலக வங்கியின் ‘வளர்ச்சி திட்டங்களை கண்டறிதல்’ என்ற அமைப்பு சமீபத்தில் சர்வதேச நாடுகளில் ஆய்வு மேற்கொண்டபோது, அதில் 110 கோடி பேர் கண் பார்வை இன்றி அவதிப்படுவதும் அடையாளம் இன்றி தவிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் உலக மக்களில் பெரும்பாலானோருக்கு சுகாதாரம் மற்றும் கல்வி அறிவு இல்லாததே என கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களில் கண் பார்வையற்றவர்கள் அதிகம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.மீண்டும் ஜப்பானில் ஆட்சியைப் பிடித்தார் அபே!
[Monday 2017-10-23 08:00]

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தேர்தலின் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறார். அவரது சுதந்திர ஜனநாயகக் கட்சி, போட்டியிட்ட 465 இடங்களில் 312 இடங்கள் வெற்றிபெற்றிருக்கிறது. சுதந்திர ஜனநாயகக் கட்சிக்கு கடுமையான போட்டியாக இருந்த புதிய அரசியலமைப்பு குடியரசுக் கட்சி, 54 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் சுதந்திர ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றிருப்பதால், ஷின்சோ அபே மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.இரவு நேரத்தில் தந்தையால் தண்டனை அளிக்கப்பட்ட சிறுமி மரணம்!
[Monday 2017-10-23 08:00]

அமெரிக்காவில், இரவு நேரத்தில் தந்தையால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, காணாமல் போன சிறுமி ஷெரின் மேத்யூஸின் உடல் கிடைத்துள்ளதாக போலீஸ் அறிவித்துள்ளது. டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரைச் சேர்ந்தவர், வெஸ்லி மேத்யூஸ். இவரின் மாற்றுத்திறனாளி மகள் ஷெரின் (வயது 3). இவரை, கேரளாவில் இருந்து தத்தெடுத்து வளர்ந்து வந்தார் மேத்யூஸ். அக்டோபர் 7-ம் தேதி இரவு, ஷெரினுக்கு டம்ளரில் பால் கொடுத்துள்ளார்.ஜப்பானில் கனமழை: - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
[Monday 2017-10-23 08:00]

ஜப்பானை மிரட்டும் அதிவேக லேன் புயல் இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானின் முக்கிய தீவுகளில் லேன் புயல் நெருங்கும் நிலையில் மேற்கு மற்றும் மத்திய ஜப்பானில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு இடங்களில் கனமழையால் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் மத்திய ஜப்பானின் பசிபிக் கடலோரத்தில் கரையை கடந்து டோக்கியோவை நோக்கி புயல் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக புல்லட் ரயில் உள்ளிட்ட ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.வடகொரியாவில் கின்னஸ் சாதனை படைத்த 1069 ரோபோக்களின் நடனம்!
[Sunday 2017-10-22 18:00]

உலகின் எதிர்காலம் ‘ரோபோ’க்கள் கைகளில் தான் உள்ளது என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த ‘ரோபோ’க்கள் ‘செயற்கை அறிவு’ தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்பத்தை வைத்து பல வித்தியாசமான செயல்களை செய்ய முடியும். இந்த நிலையில் வடகொரியாவில் மேற்கண்ட தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட 1069 ‘ரோபோ’க்கள் ஒரே நேரத்தில் நடனமாடின.செக் நாட்டின் பாராளுமன்ற தேர்தல்: - பிரதமராகும் கோடீசுவரர் பேபிஸ்!
[Sunday 2017-10-22 18:00]

ஐரோப்பா கண்டத்தில் உள்ள செக்குடியரசு நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. 200 இடங்களுக்கு நடந்த மோதலில் ஏஎன்ஓ (யெஸ்) கட்சியும், சிவிக் டெமாக்ரடிக் மற்றும் தி செக் பைரேட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. வாக்கு பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை நடை பெற்றது. அதை தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஏஎன்ஓ (யெஸ்) கட்சி அமோக வெற்றி பெற்றது. இக்கட்சியின் தலைவராக ஆண்ட்ரெஜ் பேபிஸ் (63). கோடீசுவரரான இவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.கடலில் மூழ்கி இறந்த டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதம் ரூ.8 கோடிக்கு ஏலம்!
[Sunday 2017-10-22 18:00]

இங்கிலாந்தின் மிக பிரமாண்டமான பயணிகள் சொகுசு கப்பலான டைட்டானிக் சவுத்தாம்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்கு புறப்பட்டு சென்றது. வழியில் அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையின் மீது மோதி உடைந்து கடலில் மூழ்கியது.இக்கோர விபத்து கடந்த 1912-ம் ஆண்டு நடந்தது. அதில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது இறந்தவர்களில் அமெரிக்காவின் ஹோல்வர்சன் என்பவரும் ஒருவர்.ஆப்பிரிக்காவில் ரத்தக்காட்டேரி பயத்தில் ஒன்பது பேர் அடித்துக் கொலை!
[Sunday 2017-10-22 18:00]

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் பிளாண்ட்ரீ என்ற மாகாணம் உள்ளது. அங்கு மாந்திரீக நாட்டம் உடைய மக்கள் அதிகம் உள்ளனர்.அங்கு சில மாதங்களாக ரத்தக்காட்டேரிகளின் நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரவியது. அதையடுத்து அப்பகுதி மக்கள் கடும் பயத்தில் இருந்தனர்.ஆப்கான் மசூதியில் தற்கொலை படை தாக்குதல்: - 63 பேர் உயிரிழப்பு
[Sunday 2017-10-22 09:00]

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் 2 மசூதிகளில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 63 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷியா முஸ்லிம்களுக்கு சொந்தமான மசூதி உள்ளது. இங்குள்ள இமாம் ஜமான் மசூதியில் ெதாழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடலில் வெடிகுண்டுகளை கட்டி வந்த தற்கொலை படை தீவிரவாதி, வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். அதில், 30 பேர் கொல்லப்பட்டனர்.விற்பனைக்கு வந்த ஆரஞ்ச் வைன்!
[Sunday 2017-10-22 09:00]

ஒயின் என்றாலே ரெட், ஒயிட், ரோஸ் நிறங்களே ஞாபகத்திற்கு வரும். இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக ஆரஞ்ச் நிற ஒயின் விற்பனைக்கு வந்துள்ளது. நியூயார்க்கை சேர்ந்த பிரபல மது தயாரிப்பு நிறுவனம் 4 விதமான ஆரஞ்ச் ஒயின் பாட்டில்களை அறிமுகம் செய்திருக்கிறது. ஆரஞ்ச் நிறத்திற்காக இந்த ஒயின் சிட்ரஸ் பழங்களை கொண்டு தயாரிக்கப்படவில்லை.தலாய்லாமாவை உலக தலைவர்கள் யாரும் சந்திக்க கூடாது: - சீனா எச்சரிக்கை
[Sunday 2017-10-22 09:00]

தலாய்லாமாவை சந்தித்தால் அது மிகப்பெரிய குற்றம் என்று உலக தலைவர்களை சீனா எச்சரித்துள்ளது.திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா (வயது 82). ஆனால் இவரை பிரிவினைவாதியாகத்தான் சீனா பார்க்கிறது. சீனாவிடம் இருந்து திபெத்தை பிரித்துக்கொண்டு செல்வதற்கு இவர் முயற்சிக்கிறார் என்பது சீனாவின் குற்றச்சாட்டு.இரவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் சிறுவர்களின் மனநலம் பாதிக்கும்: - ஆய்வில் தகவல்
[Friday 2017-10-20 16:00]

இரவில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்தும் சிறுவர், சிறுமிகள் குறித்து கிரிப்த் பல்கலைக்கழகம் மற்றும் முர்டேக் பல்கலைக் கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 29 பள்ளிகளில் படிக்கும் 8 முதல் 11 வயது வரையிலான 1100 சிறுவர், சிறுமிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.வெளிநாட்டு மொழியை மிக எளிதாக பேச உதவும் ஆல்கஹால்: - ஆய்வில் தகவல்
[Friday 2017-10-20 16:00]

மது குடிப்பவர்களின் அறியும் திறன் மற்றும் ஆற்றல் குறையும். இது பொதுவான கருத்து. ஆனால் அதில் உள்ள ஆல்கஹால் மனிதர்களின் தன்னம்பிக்கையை வளர்த்து அச்ச உணர்வை போக்குகிறது.அதன் மூலம் வெளிநாட்டு மொழிகளை மிக சுலபமாக கற்றுக் கொள்ளும் திறனும், பேசும் திறனும் அதிகரிக்கும். இது குறித்த ஆய்வை லிவர்பூல் பல்கலைக்கழக நிபுணர்கள் சமீபத்தில் நடத்தினார்கள். <./p>உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு முகபாவங்களைப் பயன்படுத்தும் நாய்கள்: - ஆய்வில் தகவல்
[Friday 2017-10-20 08:00]

நாய்கள் முன்னர் நினைத்ததை விடவும் அவற்றின் முகபாவங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான சான்றுகள் இருப்பதாகவும், மேலும் மனிதர்களுடன் பேசுவதற்காக முகபாவங்களை அவை பயன்படுத்துகின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.கூகுளில் நிலா உட்பட மற்ற கோள்களுக்கும் போகலாம் ஒரு விசிட்!
[Friday 2017-10-20 08:00]

பரந்துவிரிந்த இந்த உலகை, கூகுள் மேப் கொண்டு சுலபமாக அளந்துவிட முடியும். தொலைதூரத்தில் எங்கேயோ அமர்ந்தபடி, வேண்டிய இடத்தில் அங்குலம் அங்குலமாக என்னவெல்லாம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, இங்கே தமிழ்நாட்டின் உசிலம்பட்டியில் இருந்துகொண்டு, கான்பெர்ராவில் இருக்கும் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் உள்ளே வரை சென்று வர முடியும். பல்வேறு சிறப்பம்சங்களுடன் அவ்வப்போது அப்டேட் ஆகிக்கொண்டிருக்கும் இந்தக் கூகுள் மேப்தான், தெரியாத ஊர்களில் வழிகாட்டி.ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் லீக் போட்டியில் 100 -வது கோல் அடித்து சாதனை படைத்த மெஸ்ஸி!
[Friday 2017-10-20 08:00]

நம்ம ஊரு ஐபிஎல் போட்டியைப் போல ஐரோப்பாவில் கால்பந்து சாம்பியன் லீக் போட்டிகள் மிகப் பிரபலம். பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் லியோனல் மெஸ்ஸி, ஐரோப்பிய போட்டியில் 100-வது கோல் அடித்து சாதனைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். இவரது 100-வது கோல் மூலம் பார்சிலோனா அணி அடுத்த சுற்றுக்கு இடம்பிடித்திருக்கிறது.நியூசிலாந்தின் புதிய பிரதமர் ஆகிறார் 37 வயது ஜெசிந்தா ஆர்டர்ன்!
[Friday 2017-10-20 08:00]

கடைசி நிமிட தள்ளுமுள்ளு, முடிவில்லாது 26 நாள்கள் தொடர்ந்த பேச்சுவார்த்தைகள், இதற்கெல்லாம் பிறகு நியூசிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன். இந்த முடிவு ஏற்பட அங்கே நிகழ்ந்த அரசியல் ஆட்டங்கள், நம் மாநிலத்துக்குக் கொஞ்சமும் குறைவில்லாதது. கடந்த செப்டம்பர் மாதம் அங்கு நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்பட்டது.ஜப்பானில் நிலநடுக்கம்: - ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகாக பதிவு
[Thursday 2017-10-19 18:00]

ஜப்பானின் தெற்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கியுஷு தீவில் இருந்து சுமார் 682 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா