Untitled Document
January 21, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
வைத்தியசாலையில் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்: - வேடிக்கை பார்த்த பொதுமக்கள்
[Friday 2017-03-17 18:00]


 
அவுஸ்ரேலியா நாட்டில் இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப்படும்போது உதவி செய்யாமல் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெல்போர்ன் நகரை சேர்ந்த 49 வயதான நபர் சில குற்றங்கள் காரணமாக சிறை தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.கடந்த புதன் கிழமை அன்று ஜாமீனில் வெளியே வந்த அவர் ட்ராம் வாகனத்திற்காக காத்திருந்துள்ளார்.அப்போது, அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து எடுத்துள்ளார்.இந்நிலையில், 22 வயதான இளம்பெண் ஒருவர் ட்ராம் வாகனத்தில் ஏறியபோது அவரை பின் தொடர்ந்து நபரும் வாகனதில் ஏறியுள்ளார்.

அவுஸ்ரேலியா நாட்டில் இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப்படும்போது உதவி செய்யாமல் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெல்போர்ன் நகரை சேர்ந்த 49 வயதான நபர் சில குற்றங்கள் காரணமாக சிறை தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.கடந்த புதன் கிழமை அன்று ஜாமீனில் வெளியே வந்த அவர் ட்ராம் வாகனத்திற்காக காத்திருந்துள்ளார்.அப்போது, அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து எடுத்துள்ளார்.இந்நிலையில், 22 வயதான இளம்பெண் ஒருவர் ட்ராம் வாகனத்தில் ஏறியபோது அவரை பின் தொடர்ந்து நபரும் வாகனதில் ஏறியுள்ளார்.

  

ட்ராம் வாகனத்தில் பயணிகள் அதிகம் இல்லாத காரணத்தினால் இளம்பெண்ணிடம் அவர் அத்துமீறி நடந்துள்ளார்.நபரின் செயல்களால் அதிர்ச்சி அடைந்த பெண் மருத்துவமனை அருகில் ட்ராம் வாகனம் நின்றதும் திடீரென வெளியே தப்பியுள்ளார். ஆனால், இளம்பெண்ணை பின் தொடர்ந்த நபர் மருத்துவமனைக்குள் நுழைவதற்கு முன்னதாக பிடித்து கீழே தள்ளியுள்ளார்.பின்னர், அதே இடத்திலேயே இளம்பெண்ணை கொடூரமாக கற்பழித்துள்ளார். இக்காட்சியை கண்ட பயணிகள் யாரும் உதவிக்கு கூட வரவில்லை. இந்நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருத்துவமனை காவலாளிகள் உடனடியாக சென்று இளம்பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.மேலும், பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு பொலிசார் நபரை கைது செய்துள்ளனர். விசாரணை முடியும் வரை குற்றவாளியை யூன் மாதம் வரை வெளியே விடக் கூடாது எனக் கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



ஆப்கானிஸ்தானில் நட்சத்திர ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: - 15 பேர் பலி?
[Sunday 2018-01-21 15:00]

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காபூலில் உள்ள இண்டர்காண்டினெல் ஹோட்டலில் வெளிநாட்டவர் அதிகம் தங்குவது வழக்கம். சனிக்கிழமை இரவு இந்த ஹோட்டலில் புகுந்த தீவிரவாதிகள் 4 பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



வீட்டில் பணம் திருடிய மகனுக்கு தாய் கொடுத்த கொடூர தண்டனை!
[Sunday 2018-01-21 15:00]

சீனாவில் ‌ஷயோடாங் பகுதியில் உள்ள லுடியான் கவுன்டி என்ற இடத்தில் ஒரு தாய் தனது இளைய மகனை மோட்டார் சைக்கிளின் பின்னால் கயிற்றால் கையை கட்டி இழுத்துச் சென்றார். கயிறு கட்டப்பட்ட நிலையில் இருந்த சிறுவன் கதறி அழுதபடி இருந்தான்.



விமான பணிப்பெண்களின் சீருடை தொடர்பில் கொந்தளித்த பெண் பயணி!
[Sunday 2018-01-21 07:00]

மலேசியாவில் இருந்து செயல்படும் ஏர் ஆசியா விமான பணிப்பெண்களின் சீருடை தொடர்பில் பெண் பயணி ஒருவர் அந்த நாட்டு அமைச்சகத்திற்கு கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில் அவர், ஏர் ஆசியா விமான பணிப்பெண்களின் சீருடை உண்மையில் அருவருப்பை தூண்டுகிறது.விமான பணிப்பெண்களின் உள்ளாடை வரை வெளியே தெரியும் அளவுக்கு சீருடை வழங்கப்பட்டுள்ளது கண்டிப்பாக பாராட்டுதலுக்கு உரியதன்று.



உளவாளிகளை அனுப்பி வைக்க வடகொரியா திட்டம்: - முறியடிக்குமா தென் கொரியா?
[Sunday 2018-01-21 07:00]

தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருக்கும் வீரர்களுடன் மிக ரகசியமாக உளவாளிகளையும் அனுப்பி வைக்க வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் தங்கள் நாட்டு ரகசியங்கள் வெளி உலகிற்கு கசியாமல் இருக்கும் என வடகொரிய அதிகாரிகள் நம்புகின்றனர்.சியோலில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் எதிரும் புதிருமாக இருந்துவரும் இரு கொரிய நாடுகளும் ஒரே கொடியின் கீழ் கலந்துகொள்ள இசைந்துள்ளது.



அமெரிக்காவில் பத்து வயது மகளின் கைப்பேசியில் இருந்த செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய்!
[Sunday 2018-01-21 07:00]

அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது 10 வயது மகளின் செல்போனில் இருந்த குறுஞ்செய்திகளை படித்துவிட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.தனது பெயர் மற்றும் தனது மகளின் பெயரை குறிப்பிட விரும்பாத அந்த தாய் கூறியதாவது, எனது மகள் செல்போன் பயன்படுத்துகிறான். வீட்டில் உள்ளவர்களுடன் அவசர நேரத்தில் பேசுவதற்கும், கணிணி விளையாட்டுகளை விளையாடுவதற்கும் மட்டுமே அவளுக்கு அது வாங்கி கொடுக்கப்பட்டது.ஆனால், அவளது செல்போனில் இருந்த குறுஞ்செய்திகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவளது வயதுக்கு மீறிய பேச்சுகளை தனது நண்பனின் பேசியுள்ளார்.



சவுதியில் பெற்ற தாயை கத்தியால் குத்தி கொலை செய்த இரட்டை சகோதரர்கள்!
[Sunday 2018-01-21 07:00]

சவுதியில் பெற்ற தாயை கத்தியால் குத்தி கொலை செய்த இரட்டை சகோதரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.நாட்டின் ரியாத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. காலித் மற்றும் ஷலி ஆகிய இருவரும் இரட்டை சகோதரர்கள் ஆவார்கள்.இவர்கள் Daesh என்ற தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து செயல்பட முடிவெடுத்த நிலையில் அதை அவர்களின் தாய் கண்டுப்பிடித்துள்ளார்.



நான் கர்ப்பமாக இருக்கின்றேன்: - நியூசிலாந்து பிரதமர்
[Saturday 2018-01-20 17:00]


குங்பூ பாணியில் மெழுகுவர்த்தியை அணைக்க முயன்ற சீன சிறுவன் - 40 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசம்
[Saturday 2018-01-20 17:00]

சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த சிறுவன் தற்காப்பு கலையான குங்பூ மீது மிகவும் ஆர்வம் கொண்டிருந்தான். குங்பூ படங்களில் வருவது போல கடந்த சில தினங்களுக்கு முன் தீயை கையால் அணைக்க முயற்சி செய்தான். பார்க்கிங்கில் உள்ள இருசக்கர வாகனம் மீது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தி அதனை குங்பூ பாணியில் அணைக்க முயன்றான். தீ அணையாததால் அதிருப்தி அடைந்த சிறுவன் மெழுவர்த்தியை அணைக்காமல் சென்று விட்டான்.



ஒரு ரத்தப் பரிசோதனை மூலம் 8 விதமான உடல் உறுப்புகளில் ஏற்படும் புற்று நோயை கண்டுபிடிக்க முடியும்!
[Saturday 2018-01-20 17:00]

உயிர்க்கொல்லி நோயான புற்று நோய் அதன் அறிகுறி மூலம் கண்டு பிடிக்கப்படுகிறது. அதை துல்லியமாக கண்டறிய பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.தற்போது அதை மிக எளிதான ரத்த பரிசோதனை முலம் கண்டுபிடிக்க முடியும். அதுவும் ஒரு பரிசோதனையின் மூலம் கர்ப்பபை, கல்லீரல், வயிறு, கணையம், நுரையீரல், மார்பக பெருங்குடல், உணவுக் குழாய் என 8 விதமான உடல் உறுப்புகளில் ஏற்படும் புற்று நோயை கண்டுபிடிக்க முடியும்.



திருமணத்திற்கு முன்னர் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த பெண்ணிற்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி!
[Saturday 2018-01-20 09:00]

இந்தோனேசியாவில் திருமணத்திற்கு முன்னர் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த பெண்ணிற்கு, பொதுமக்கள் முன்னிலையில் 20 பிரம்படிகள் கொடுக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் திருமணத்திற்கு முன்பு உறவில் ஈடுபடுவது குற்றமாகும், இந்த குற்றத்திற்கு பொது மக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை அளிக்கப்படும்.இந்நிலையில், திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில், பெண்ணொருவர் தனது ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக இருந்துள்ளார்.



கர்ப்பம் தரிக்க வைக்கிறேன்: - வயிற்றை வீங்க வைத்து நூதன மோசடி
[Saturday 2018-01-20 09:00]

கென்யாவில் பெண்மணி ஒருவர் கர்ப்பம் தரிக்க வைக்கிறேன் எனக்கூறி இலைகள் மற்றும் மூலிகைகளை கொடுத்து பெண்களை ஏமாற்றிய குற்றத்திற்காக கைது செய்யப்பபட்டுள்ளார்.பாண்டா காமாரா என்ற பெண்மணி, குழந்தை பாக்கியம் கொடுப்பதாக கூறி மருத்துவ சிகிச்சையை நடத்தி வந்துள்ளார்.இவரிடம் வரும் பெண்களிடம், வயிறை வீங்கவைக்ககூடிய இலைகள் மற்றும் மூலிகைகளை கொடுத்துள்ளார்.



உணவு கொடுக்காமல் கட்டிப்போட்டு 13 பிள்ளைகளை சித்திரவதை செய்த தம்பதியைப் பற்றிய சமீபத்திய தகவல்!
[Saturday 2018-01-20 09:00]

உணவு கொடுக்காமல் கட்டிப்போட்டு 13 பிள்ளைகளை சித்திரவதை செய்த Louise Turpin, 16 வயதில் தனது காதலனுடன் வீட்டைவிட்டு ஓடி வந்தது தெரியவந்துள்ளது.David Turpin தனது காதலியிடம், தன்னுடன் வந்து விட்டால் அவள் உலகத்தில் எதைக்கேட்டாலும் தருவதாக வாக்களித்துள்ளான்.நாட்டை விட்டு 1000 மைல்கள் தப்பி ஓடிய நிலையில், அவர்கள் பொலிசாரால் பிடிக்கப்பட்டு நாட்டுக்குக் திரும்பக்கொண்டு வரப்பட்டனர், எனினும் அவரை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.



10 நாட்களுக்கு முன் இறந்த பெண்ணுக்கு பிறந்தது குழந்தை: - தென்னாப்ரிக்காவில் அபூர்வம்
[Friday 2018-01-19 18:00]

தென்னாப்ரிக்காவின் தாம்போ மாவட்டத்தில் தயிசி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சோ்ந்த 9 மாத கா்ப்பிணி டோயி சில தினங்களுக்கு முன்னா் இறந்து விட்டார். நிறை மாத கா்ப்பிணி திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடா்ந்து முறைப்படி சடங்கு, சம்பரதாயங்கள் மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் நடத்தினர். இறுதியில் அப்பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்காக பிணவறையில் வைக்கப்பட்டது.



தனிமையில் அவதிப்படும் மக்களுக்காக அமைச்சர் நியமனம்: - பிரிட்டன் பிரதமரின் புது முயற்சி
[Friday 2018-01-19 18:00]

பிரிட்டன் அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, தனிமையில் அவதிப்படும் மக்களுக்காக ஓர் அமைச்சரை நியமனம் செய்திருக்கிறார் பிரதமர் தெரேசா மே. தற்போது விளையாட்டு அமைச்சராகப் பணிபுரிந்துவரும் ட்ரேசி கிரௌச், தனிமை அமைச்சராக (Loneliness Minister) சமீபத்தில் பதவியேற்றார். மறைந்த MP ஜோ காக்ஸின் நினைவாக இந்தப் பதவியை அறிவித்திருக்கிறார் தெரேசா மே.



கடலில் சிக்கியவர்களை காப்பாற்றிய ஆளில்லா விமானம்!
[Friday 2018-01-19 09:00]

ஆஸ்திரேலியாவில் கடலில் விழுந்தவர்களை காப்பாற்றுவதற்காக ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த போது இரண்டு வாலிபர்களை அலை இழுத்துச் சென்றது. அவர்கள் உயிருக்காக போராடிக்கொண்டிருந்தனர்.



சிலியில் விமானத்தில் பறந்த படி போப் ஆண்டவர் முன்னிலையில் ஊழியர்கள் திருமணம்!
[Friday 2018-01-19 09:00]

போப் ஆண்டவர் பிரான்சிஸ் தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று 3-வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தலைநகர் சாண்டியாகோவில் இருந்து ஐகியுகியூ நகருக்கு தனது விமானத்தில் சென்றார்.சுமார் 2½ மணி நேரம் விமான பயணம் நடைபெற்றது. அப்போது போப் ஆண்டவரின் விமானத்தில் பணிபுரியும் கார்லோஸ், சியூப்பார்டி (41), பயுலா போடெஸ்ட் (39) ஜோடியின் திருமணம் நடைபெற்றது. சிலி நாட்டை சேர்ந்த இவர்களுக்கு 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி தேவாலயத்தில் திருமணம் நடைபெறவில்லை.



அதிக வெப்பமிக்க ஆண்டுகளின் பட்டியலில் இடம்பெற்ற 2017: - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
[Friday 2018-01-19 09:00]

இயற்கை காலநிலை சுழற்சியான எல் நினோ காரணத்தால் 2017ம் ஆண்டு வெப்பம் மிகுந்த 3 ஆண்டுகளில் ஒன்றாக கணக்கிடப்பட்டுள்ளது. அதிக வெப்பமிக்க 3 ஆண்டுகளில் ஒன்றாகக் கடந்த 2017ம் ஆண்டு இருந்ததாக உலக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. எல் நினோ என்பது புவி வெப்பமாதலின் காரணமாக ஏற்படக்கூடிய ஒர் ஒழுங்கற்ற காலநிலை மாற்றம் ஆகும். இந்த எல் நினோ தாக்கம் இல்லையென்றபோதிலும், 2017ம் ஆண்டு அதிக வெப்பம் மிகுந்த ஆண்டுகளில் ஒன்றாகவே இருந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



பூமிக்கு அருகில் மிகப்பெரிய விண்கல் வர வாய்ப்பு: - நாசா தகவல்
[Friday 2018-01-19 09:00]

மிகப்பெரிய விண்கல் ஒன்று வரும் பிப்ரவரி 4ம் தேதி பூமிக்கு மிக அருகாமையில் வர உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 2002 AJ129 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், 1.1 கிலோ மீட்டர் விட்டம் கொண்டது. அதாவது உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் உயரத்தை விடவும் அதிக விட்டம் கொண்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த விண்கல் பூமிக்கு சுமார் 74 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை நெருங்கி வரும் என தெரிவித்துள்ளனர். நாசாவின் வகைப்பாட்டின்படி, பூமியின் சுற்றுப்பாதையின் 0.05 வானியல் அலகுகளில் விண்கற்கள் எங்கும் பயணம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



கனடாவில் தோழியை கொன்ற பெண்: - பேஸ்புக்கில் பதிவு செய்த புகைப்படம் மூலம் சிக்கினார்
[Thursday 2018-01-18 18:00]

கனடாவைச் சேர்ந்த பிரிட்டினி கார்கல் என்ற பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாஸ்கடூன் நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கார்கல் கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருந்தார். கொலை செய்ய பயன்படுத்திய பெல்ட்டை போலீசார் கைப்பற்றினர். இதன் மூலம் கொலையாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். கார்கலின் தோழி சியனே ரோஸ் அண்டோனி மீது சந்தேகத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.



அமெரிக்காவில் மசாஜ் பார்லர்களில் விபசாரம்: - 250 கோடி டாலர் அளவுக்கு பிசினஸ்
[Thursday 2018-01-18 18:00]

சீனா மற்றும் தென்கொரியா நாடுகளில் இருந்து இளம் மற்றும் நடுத்தர வயது பெண்களை தேடிப் பிடிக்கும் தரகர்கள் அவர்களில் வறுமை நிலை மற்றும் கடன்சுமையால் சிக்கி தவிப்பவர்களை கவுரவமான வேலை வாங்கி தருவதாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.சரியாக ஆங்கிலம் பேச தெரியாத இவர்கள் அமெரிக்காவில் உள்ள விபசார புரோக்கர்கள் மூலமாக நியூயார்க் மற்றும் கலிபோர்னியா மாநில எல்லை வழியாக அமெரிக்கா வந்து சேருகிறார்கள்.


Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா