Untitled Document
March 29, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
மக்களை வியப்பில் ஆழ்த்திய கூந்தல்: - வியக்க வைக்கும் இளம்பெண்
[Friday 2017-03-17 18:00]

ரஷ்ய இளம்பெண் ஒருவர் தமது கூந்தலை 7.5 அடி நீளத்திற்கு வளர்த்து பராமரித்து வருவது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.ரஷ்யாவின் இளம்பெண் ஒருவர் தமது கூந்தல் மீது கொண்ட அக்கறையால் கடந்த 20 ஆண்டுகளாக கத்தரி படாமலே வளர்த்து வந்துள்ளார்.தற்போது லத்வியா பகுதியில் கணவருடன் குடியிருந்துவரும் 27 வயதான Brunette Aliia Nasyrova என்பவரின் கூந்தலின் நீளம் 7.5 அடி என தெரிவித்துள்ளார்.

ரஷ்ய இளம்பெண் ஒருவர் தமது கூந்தலை 7.5 அடி நீளத்திற்கு வளர்த்து பராமரித்து வருவது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.ரஷ்யாவின் இளம்பெண் ஒருவர் தமது கூந்தல் மீது கொண்ட அக்கறையால் கடந்த 20 ஆண்டுகளாக கத்தரி படாமலே வளர்த்து வந்துள்ளார்.தற்போது லத்வியா பகுதியில் கணவருடன் குடியிருந்துவரும் 27 வயதான Brunette Aliia Nasyrova என்பவரின் கூந்தலின் நீளம் 7.5 அடி என தெரிவித்துள்ளார்.

  

2 கிலோ எடை கொண்ட இந்த கூந்தலை சீவி பராமரிக்க தினசரி ஒரு மணி நேரம் ஒதுக்குவதாக கூறும் அவர், மாதம் ஒருமுறை தனது கூந்தலின் நுனிகளை கத்தரித்து பராமரிப்பதாக தெரிவித்துள்ளார்.ஆலியாவின் கூந்தல் தங்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் என கூறும் அவரது கணவர் ஈவான், படுக்கையில் கூட தேவைக்கும் அதிகமான இடத்தை விட்டு அக்கறையுடன் பராமரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.2 கிலோ அளவுக்கு கூந்தல் இருப்பதால் தமது கழுத்து பகுதியில் தொடர்ந்து வலி இருப்பதாக ஆலியா தெரிவித்துள்ளார். ஆனால் அந்த வலி தமக்கு பெரிதாக படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.சிறு வயது முதலே நீளமான கூந்தல் வளர்ப்பதில் அதிக நாட்டம் இருந்ததாக கூறும் ஆலியா, கூந்தல் நீளமாக கொண்ட கதாநாயகிகள் மீது தமக்கு எப்போதும் ஆர்வம் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.comஉலகின் முதலாவது தங்கப் பாதணி இத்தாலில் தயாரிப்பு!
[Wednesday 2017-03-29 19:00]

இத்தாலியை சேர்ந்த பாதணி தயாரிப்பவர் ஒருவர் உலகின் முதலாவது 24 கரட் தங்கத்தலான செருப்பை உருவாக்கி தயாரித்துள்ளார். துரின் நகரைச் சேர்ந்த அந்தோனியோ வியட்றி என்ற மேற்படி நபர் முப்பரிமாண ஊடுகாட்டும் கருவியின் உதவியுடன் அளவீடுகளை மேற்கொண்டு 230 கிராம் தங்கத்தைப் பயன்படுத்தி இந்த செருப்பை உருவாக்கியுள்ளார். இதன் பெறுமதி 21,000 ஸ்ரேலிங் பவுணாகும். இதனை எண்ணெய் வளம் மிக்க செல்வந்த பிராந்தியமான வளைகுடா பிராந்திய சந்தையில் விற்பனை செய்ய அவர் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.‘டெப்பி’ புயல் - குயீன்ஸ்லாந்து சின்னாபின்னமாகியுள்ளது: - 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!
[Wednesday 2017-03-29 19:00]

ஆஸ்திரேலிய நாட்டின் கிழக்கு கடலோரப்பகுதியை டெப்பி புயல் தாக்கியது இதனால் குயீன்ஸ்லாந்து முழுவதும் சின்னாபின்னமாகியுள்ளது. bஆஸ்திரேலிய நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதியை ‘டெப்பி’ என்ற புயல் நேற்று தாக்கியது. குயின்ஸ்லாந்து பகுதியில் அமைந்துள்ள பவன், ஏர்லி கடற்கரை பகுதியில் மணிக்கு 263 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி வீசியது. 3–வது பிரிவு புயலாக வகைப்படுத்தப்பட்ட இந்த புயல் காரணமாக அங்கு இடைவிடாது, பேய் மழை பெய்தது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 23 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின. வீடுகள் இடிந்து விழுந்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். வீடுகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.சூனியக்காரர்கள் என குற்றம்சாட்டி இருவரின் தலையை துண்டித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்:
[Wednesday 2017-03-29 12:00]

பில்லி, சூனியம் வைக்கும் சூனியக்காரர்கள் என குற்றம்சாட்டி, ஐ.எஸ். தீவிரவாதிகள் இருவரின் தலைகளை துண்டித்துக் கொன்ற சம்பவம் எகிப்தில் இடம்பெற்றுள்ளது. எகிப்தின் காசா முனை பகுதியையொட்டி சூயஸ் கனவாய் பிரதேசத்தில் அமைந்துள்ள எகிப்து எல்லையில் சினாய் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதோடு, கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து ஷரியா நீதிமன்றம் என்ற அமைப்பை உருவாக்கி, இப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, இஸ்லாமிய சட்டதிட்டத்தை மீறியதாக பலரை கைது செய்து தண்டனை வழங்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.வெள்ளை மாளிகை அருகே மர்ம பொருள்! அதிபர் மாளிகை திடீர் மூடல்
[Wednesday 2017-03-29 07:00]

அமெரிக்கா - வெள்ளை மாளிகை அருகே உள்ள மைதானத்தில் மர்ம பை ஒன்று இருப்பதை பாதுகாவலர்கள் கண்டுபிடித்தனர். இதையெடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளை மாளிகை மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் வடக்கு பகுதியில் உள்ள பூங்காவில் மர்ம பை ஒன்று இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.உலகின் மிகப்பெரிய டைனோசர் கால்தடம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது:
[Wednesday 2017-03-29 07:00]

உலகின் மிகப்பெரிய டைனோசர் காலடித் தடங்கள் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் ஜுராசிக் பார்க் என்றழைக்கப்படும் வடக்கு ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பிரைஸ் பாயிண்ட் என்ற இடத்தில் இந்த காலடித் தடங்களை குயின்ஸ்லாந்து மற்றும் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சுமார் 5 அடி 9 அங்குல உயரம் கொண்ட காலடி தடம் ஒன்றினையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.வங்கதேசத்தில் புகைப்பட பத்திரிகையாளரைக் கொன்ற 5 பேருக்கு தூக்கு:
[Wednesday 2017-03-29 07:00]

வங்கதேசத்தில் புகழ்பெற்ற புகைப்பட பத்திரிகையாளரைக் கொன்ற 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி, புகழ்பெற்ற புகைப்பட பத்திரிகையாளர் அப்தப் அஹமத்(80), ராம்புராவில் இருந்த தன்னுடைய வீட்டில் மர்மநபர்களால் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஹுமாயுன் கபிர், ஹபிப் ஹவ்லதர், பெலால் ஹுசைன், ராஜூ முன்ஷி, ரஷீல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு டாக்கா விரைவு நீதிமன்ற அமர்வு முன்பு, நீதிபதி அப்துர் ரஹ்மான் சர்தர் தலைமையில் விசாரணைக்கு வந்தது.ஜேர்மனிய நூதனசாலையிலிருந்து 100 கிலோ எடை கொண்ட கனே­டிய தங்க நாணயம் திருடப்பட்டது:
[Wednesday 2017-03-29 07:00]

100 கிலோ எடை கொண்ட 60.8 கோடி ரூபா பெறுமதியான பாரிய தங்க நாணயம் ஜேர்மனிய நூதனசாலையிலிருந்து திருடப்பட்டது இந்த கனே­டிய தங்க நாணயம் 10 லட்சம் கனே­டிய டொல­ருக்­கா­ன­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆனால், 100 கிலோ­கிராம் எடை­யுள்ள சுத்­த­மான 24 கரட் தங்­கத்தால் தயா­ரிக்­கப்­பட்­டதால் இந்­த­நா­ண­யத்தின் வர்த்­தக மதிப்பு 40 லட்சம் அமெ­ரிக்க டொலர்கள் (சுமார் 60.8 கோடி ரூபா) என கணிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஜேர்­ம­னியின் பேர்லின் நக­ரி­லுள்ள போட் நூத­ன­சா­லையில் கண்­ணாடிப் பெட்­டி­யொன்றில் இந்த நாணயம் வைக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் நேற்­று­முன்­தினம் திங்­கட்­கி­ழமை இந்த நாணயம் காணாமல் போன­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். திங்­கட்­கி­ழ­மை அதி­காலை 3.30 மணி­ய­ளவில் இந்த நாணயம் திரு­டப்­பட்­டுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது.அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்தில் ஆரம்பித்தது டெபி சூறாவளியின் தாக்கம்!
[Tuesday 2017-03-28 20:00]

அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்தில், ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டபடி டெபி சூறாவளி தாக்கத் தொடங்கியுள்ளது. மணிக்கு சுமார் 260 கிலோமீற்றர் வேகத்தில் வீசிவரும் சுழல் காற்றால் வீடுகள் சின்னாபின்னமாகி வருகின்றன. கடல் அலைகளும் அச்சுறுத்தும் நிலையில் வீசி வருகின்றன. நான்காம் நிலைச் சூறாவளி எனக் குறிப்பிடப்பட்ட டெபி, சிறிது நேரத்தில் அதியுச்ச ஆபத்து நிலையான ஐந்தாம் நிலைக்கு மாறுமோ என்ற அச்சமும் தோன்றியிருந்தது. எனினும், சிறிது நேரத்துக்கு முன் அதன் வேகம் சற்றுக் குறைந்ததால், மூன்றாம் நிலைச் சூறாவளியாக நிலை மாறியிருக்கிறது.மனித மூளையுடன் கம்ப்யூட்டர்களை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறை: - புதிய நிறுவனம் துவங்கும் எலான் மஸ்க்
[Tuesday 2017-03-28 18:00]

மனித மூளையுடன் கம்ப்யூட்டர்களை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை எலான் மஸ்க் துவங்குகிறார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், நியூராலின்க் எனும் நிறுவனத்தை துவங்குகிறார். நியூராலின்க் நிறுவனத்திற்கான துவக்க கால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மனித மூளையுடன் இணைந்து செயல்படும் சாதனங்களை நியூராலின்க் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமானதால் கைது செய்த காவல்துறை!
[Tuesday 2017-03-28 18:00]

அரபு நாடான அபுதாபியில் திருமணத்திற்கு முன்னர் ஒரு பெண் கர்ப்பமானதால் அவரையும், அவரது கர்ப்பத்துக்கு காரணமான அவரது காதலரையும் அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. அபுதாபி நாட்டு சட்டப்படி திருமணத்திற்கு முன்னர் உடலுறவு கொள்வது குற்றமாகும். இந்த சட்டம் அந்த நாட்டில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தும். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த எம்லின் என்பவர் அவரது காதலியான உக்ரை நாட்டை சேர்ந்த இரினாவுடன் சேர்ந்து அபுதாபியில் சேர்ந்து வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன்னர் இரினாவுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தார் எம்லின்.மேற்கு மொசூல் 300 பொதுமக்கள் உயிரிழப்பு: ஐ.நா. தகவல்:
[Tuesday 2017-03-28 07:00]

ஈராக்கின் மேற்கு மொசூலில் நகரை கைப்பற்றும் ராணுவ நடவடிக்கையில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்திருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மேற்கு மொசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அதனை மீட்பதற்காக கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அவர்களுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டுப்படையும் விமான தாக்குதல் நடத்துகிறது. இந்த தாக்குதலின்போது தீவிரவாதிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் தரப்பிலும் அதிக அளவிலான உயிர்ப்பலி ஏற்படுகிறது.உலகின் அதிவேக போலீஸ் கார்! - மணிக்கு 407 கிலோ மீட்டர் வேகம்
[Monday 2017-03-27 17:00]

உலகின் அதிவேகமான போலீஸ் காரை கொண்டுள்ள நாடு என்ற சிறப்பை துபாய் பெற்றுள்ளது. துபாய் காவல்துறைப் பிரிவில் உள்ள BUGATTI VEYRON ரகக் கார், மணிக்கு 407 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடியதாகும். இந்தக் கார் இரண்டரை விநாடிகளில் 97 கிலோ மீட்டரை எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 10 கோடியே 41 லட்ச ரூபாயாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த கார் துபாய் போலீஸ் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது.மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் ஆஸ்திரேலியாவை மிரட்டும் அசுரப் புயல்: - மக்கள் வெளியேற்றம்!
[Monday 2017-03-27 17:00]

ஆஸ்திரேலியா நாட்டின் வடகிழக்கு பகுதியை நோக்கி மணிக்கு சுமார் 300 கிலோமீட்டர் வேகத்தில் நெருங்கி வரும் டெபி புயலின் கோரத் தாண்டவத்தில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மெல்போர்ன்:

ஆஸ்திரேலியா நாட்டின் வடகிழக்கில் உள்ள குவீன்ஸ்லாந்து பகுதியை நோக்கி மணிக்கு சுமார் 300 கிலோமீட்டர் (185 மைல்) வேகத்தில் முன்னேறிவரும் இந்த அசுரப் புயலுக்கு ‘டெபி’ என பெயரிடப்பட்டுள்ளது.அமெரிக்காவில் லெபனானுக்கு திரும்பிப்போ என சீக்கிய பெண்ணிடம் மிரட்டல்:
[Monday 2017-03-27 17:00]

லெபனானுக்கு திரும்பிப் போ என சீக்கிய பெண்ணை அமெரிக்கர் ஒருவர் ஓடும் ரயிலில் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லெபனானுக்கு திரும்பிப் போ என சீக்கிய பெண்ணை அமெரிக்கர் ஒருவர் ஓடம் ரயிலில் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியர்கள் இந்தியர்கள் உட்பட வெளி நாட்டினர் கொல்லப்பட்டு வரும் நிலையில் சீக்கிய பெண் ஒருவர் மிரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் இனவெறி சம்பவங்கள் அங்கு அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ராஜ்பிரீத் ஹெயர் என்ற சீக்கிய அமெரிக்க பெண் நியூயார்க் மெட்ரோ ரயிலில் அமெரிக்கர் ஒருவரால் லெபனான் நாட்டுக்கு திரும்பிப்போ என மிரட்டியுள்ளார்.அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!
[Sunday 2017-03-26 17:00]

அமெரிக்காவில் ஓஹியோ மாநிலம், சின்சினாட்டியின் இரவு விடுதி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 14 பேர் காயமடைந்தனர் என போலிஸார் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு கேமியோ இரவு விடுதியில் நடைபெற்றதாக சின்சினாட்டி போலிஸ் துறை டிவிட்டரில் தெரிவித்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் காயமடைந்துள்ளனர் என துணை போலிஸ் அதிகாரி ஒருவர் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.வல்லுறவின் போது பெண் கூக்குரல் எழுப்பவில்லை என்பதற்காக சந்தேக நபர் விடுவிக்கப்பட்டது குறித்து விசாரணை!
[Sunday 2017-03-26 17:00]

பாலியல் வல்லுறவு சம்பவத்தின்போது, பாதிக்கப்பட்ட பெண் கூக்குரல் எழுப்பவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றம் விடுதலை செய்ததையடுத்து இது குறித்து விசாரிக்கப் போவதாக இத்தாலியின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.சீனாவில் தங்கச் சுரங்கங்களில் வாயுக்கசிவு - 10 பேர் பலி!
[Sunday 2017-03-26 17:00]

சீனாவில் இரு தங்கச்சுரங்கங்களில் ஏற்பட்ட வாயு கசிவால் 10 தொழிலாளர்கள் பலியாகினர். சீனா ஹெனான் மாகாணம் லிங்காபோ நகரில் இயங்கி வந்த குயின்லிங் தங்கச் சுரங்கத்தில், நேற்றிரவு திடீரென கார்பன் மோனாக்சைட் விஷவாயு கசிந்தது. இந்த விஷவாயு தாக்கியதில் சிக்கி மூச்சுத் திணறிய 8 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர். இதேபோல், அருகே அமைந்துள்ள மற்றொரு சுரங்கத்திலும் நேற்று ஏற்பட்ட விஷவாயுக் கசிவில் மேலும் இரு தொழிலாளிகள் பலியாகினர்.அடுத்த அணுகுண்டு சோதனைக்குத் தயாராகிறது வடகொரியா!
[Sunday 2017-03-26 09:00]

நிலத்துக் கடியில் தனது 6-வது அணுகுண்டு சோதனையை நடத்த வடகொரியா தயாராக உள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக சி.என்.என் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் வடகொரியா, நிலத்துக் கடியில் தனது 6-வது புதிய அணுகுண்டு சோதனையை நடத்தத் தயாராக இருப்பதற்கான அடையாளங்களைக் காட்டுகின்றன" எனக் கூறப்பட்டுள்ளது.விமானங்களில் லேப்டாப் மற்றும் டேப்லெட்களை எடுத்துச் செல்லத் தடை அமுலுக்கு வந்தது!
[Sunday 2017-03-26 09:00]

துருக்கி மற்றும் சில மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் செல்லும் விமானங்களில் லேப்டாப் மற்றும் டேப்லெட்களை பயணிகள், தங்களுடன் விமானத்தில் எடுத்துச் செல்வதற்கான தடை நேற்று அமலுக்கு வந்துள்ளது. ஸ்மார்ட் ஃபோன்களைவிட பெரிய அளவில் இருந்தால் அவற்றைக் கையில் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. ஏனெனில், அவற்றில் வெடிபொருள்களை எடுத்துச் செல்லக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே தாக்குதலை நடத்தியவர் சவுதி அரேபியாவில் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தவர்!
[Sunday 2017-03-26 09:00]

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே தீவிரவாதத் தாக்குதலை நடத்திய காலித் மசூத் என்ற நபர் சவுதி அரேபியாவில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக இருந்துள்ளார். நவம்பர் 2005 முதல் நவம்பர் 2006 வரையிலும் பிறகு ஏப்ரல் 2008 முதல் ஏப்ரல் 2009 வரையிலும் சவுதி அரேபியாவில் ஆங்கிலம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார் என்று சவுதி அரேபியா தூதரகம் தெரிவித்துள்ளது.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<b>05-03-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ninaivakal-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா