Untitled Document
March 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
மகிழ்ச்சியாக வாழ சில ஐடியாக்கள்..
[Friday 2017-03-17 20:00]

சில எளிய விஷயங்களைப் பின்பற்றினாலே போதும், மகிழ்ச்சியும் நிம்மதியும் உங்கள் மனதில் குடிகொள்ளும் என்று மனநல ஆலோசகர்களும் வாழ்வியல் நிபுணர்களும் கூறுகிறார்கள்.மகிழ்ச்சியின் ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்
எல்லோருக்கும், எப்போதும், மகிழ்ச்சியாக இருக்கத்தான் விருப்பம். ஆயினும், ‘சந்தோஷமா... அமைதியா இருக்க விரும்பறேன்’ என்று சொல்லிக்கொண்டே அதற்கு எதிர்ப் புறமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.

சில எளிய விஷயங்களைப் பின்பற்றினாலே போதும், மகிழ்ச்சியும் நிம்மதியும் உங்கள் மனதில் குடிகொள்ளும் என்று மனநல ஆலோசகர்களும் வாழ்வியல் நிபுணர்களும் கூறுகிறார்கள்.மகிழ்ச்சியின் ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள் எல்லோருக்கும், எப்போதும், மகிழ்ச்சியாக இருக்கத்தான் விருப்பம். ஆயினும், ‘சந்தோஷமா... அமைதியா இருக்க விரும்பறேன்’ என்று சொல்லிக்கொண்டே அதற்கு எதிர்ப் புறமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.

  

ஆனால், சில எளிய விஷயங்களைப் பின்பற்றினாலே போதும், மகிழ்ச்சியும் நிம்மதியும் உங்கள் மனதில் குடிகொள்ளும் என்று மனநல ஆலோசகர்களும் வாழ்வியல் நிபுணர்களும் கூறுகிறார்கள்.

அந்த விஷயங்கள்...

மூச்சுப் பயிற்சி: மனஅழுத்தத்தைப் போக்குவதற்கான அமைப்பு, நமக்குள்ளேயே உள்ளது. அது, நம் மனமும் நுரையீரலும்தான். மூச்சை ஆழ உள்ளிழுத்து, நிதானமாக வெளியேற்றி மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். அமைதியாக அமர்ந்து உங்கள் சுற்றுப் புறத்தைக் கவனியுங்கள். ஐம்புலன்களைக் கூர்மைப்படுத்துங்கள். இந்தச் செயல்கள் எல்லாம் உங்கள் மனஅழுத்தம் போக்கும்.

உடற்பயிற்சி: உடற்பயிற்சி, அது வெறும் நடைப்பயிற்சியாக இருந்தாலும்கூட மனநலத்துக்கு மிகுந்த நன்மை அளிக்கிறது. ஆனால் வீட்டுக்குள்ளாக நடைப்பயிற்சி எந்திரத்தில் நடப்பதை விட திறந்தவெளியில் காலாற நடப்பது நல்லது.

புதிய அனுபவங்கள்: சந்தோஷத்துக்காகவே ‘ஷாப்பிங்’ செல்வதும், பொருட்களை வாங்கிக் குவிப்பதும் சிலரின் வழக்கம். ஆனால் அதையும்விட, புதிய அனுபவங்கள் அதிக மகிழ்ச்சி தரும். ஒரு சாகச அனுபவம், புதிய நிகழ்ச்சி என்று வித்தியாசமாக முயற்சித்துப் பாருங்கள்.

எழுத்தில் வடித்தல்: மனதில் அழுத்திக்கொண்டிருக்கும் எதிர்மறை எண்ணங்களை இறக்கிவைப்பது, அதாவது டைரி எழுதுவது போன்ற எழுத்தில் வடிப்பது உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் என் கிறார்கள் நிபுணர்கள்.

பிடித்த இசை: மனம் படபடப்பாகவும், அமைதியின்றியும் இருக்கும்போது உங்களுக்குப் பிடித்த இசை, பாடலை ஒலிக்கவிடலாம். அது மூளையையும் இதயத்தையும் எட்டி உங்களை அமைதிப்படுத்தும்.

மகிழ்ச்சி மனிதர்கள்: எப்போதும் சோகத்திலும் விரக்தியிலும் புலம்பிக்கொண்டிருப்பவர்களுடன் இருந்தால் நம்மையும் அந்த ‘வியாதி’ தொற்றிக்கொள்ளும். நாமே தேடித் தேடி சோக நினைவுகளை மீட்டு, சோக இசையை வாசித்துக்கொண்டிருப்போம். எனவே எப்போதும் உற்சாகமாக, மகிழ்ச்சியாக இருக்கும் மனிதர்களுடன் பழகுங்கள். உங்களையும் மகிழ்ச்சித் தீ பற்றிக்கொள்ளும்.

போதை பாதை: கடுமையாக உழைப்பவர்களும், எப்போதும் நெருக்கடியில் பணிபுரிபவர்களும், கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்கிறேன் என்று அந்தந்த நாளின் முடிவில் மதுபோதை போன்றவற்றை நாடுகிறார்கள். இது மிகவும் தவறு. இது ஆரம்பத்தில் அமைதி, மகிழ்ச்சி தருவது போலத் தோன்றினாலும், நாளடைவில் உடல்நல, மனநல பாதிப்புகளை ஏற்படுத்தி மகிழ்ச்சியை ஒட்டுமொத்தமாகச் சூறையாடிவிடும்.

சுற்றுலா: அடிக்கடி வெளியிடங்களுக்குச் சென்றுவருபவர்களும், சுற்றுலாவில் நாட்டமுள்ளவர்களும் அதிக மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுகிறது ஓர் ஆய்வு. புதிய இடம், புதிய நபர்கள் எப்போதுமே ஓர் உற்சாகம் தருவார்கள். எனவே, வாரயிறுதிச் சுற்றுலாவாக இருக்கட்டும், ஒரு வார காலச் சுற்றுலாவாக இருக்கட்டும். அடிக்கடி எங்காவது சென்றுவாருங்கள்.

உறக்கம் அவசியம்: நீங்கள் வழக்கமாக படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகச் செல்லுங்கள். காரணம், உறக்கத்துக்கும், மனநலத்துக்கும் மிகுந்த தொடர்பு உள்ளது. தூக்கம் குறைந்தவர்களிடம் அமைதி தொலைந்திருக்கும், எதற்கெடுத்தாலும் எரிச்சல் படுவார்கள். தூங்கும் நேரத்தைக் குறைப்பது, உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

மனந்திறந்து பேசுங்கள்: நமது உணர்வுகள், கவலைகளை நமது நம்பிக்கைக்கு உரியவரிடம் மனந் திறந்து பேசுவது நன்மை தரும். மனநல ஆலோசகர்களிடமும் பேசலாம். நாம் நம் கவலைகள், பிரச்சினைகளை நமக்குள்ளேயே அமுக்கி வைத்துக்கொண்டிருக்கும்போது மேலும் மேலும் ஊதப்படும் பலூன் போலவே ஆகிறோம் என் கிறார்கள் நிபுணர்கள். அதாவது ஒருகட்டத்தில் நம்மையும் அறியாமல் வெடித்துவிடுவோம். எனவே, காற்றை மெல்லத் திறந்துவிடுவது போல பிறருடன் மனந்திறந்து பேசுங்கள்.

  
   Bookmark and Share Seithy.com



உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் முதலிடத்தில் நோர்வே..
[Wednesday 2017-03-22 18:00]

சர்வதேச மகிழ்ச்சி தினம் உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, சமூக ஆதரவு, நம்பிக்கை, வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் சுதந்திரம், பெருந்தன்மை உள்பட ஆறு காரணிகளைக் கொண்டு உலகின் அதிக மகிழ்ச்சியான நாடு எது? என சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது. இதில் அதிக புள்ளிகள் பெற்று நார்வே நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா இந்தப் பட்டியலில் 14-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகள் வருமாறு:-



மாரடைப்பை முன்னரே கண்டறியும் கருவி கண்டுபிடிப்பு
[Wednesday 2017-03-22 18:00]

ஓசூரில், தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர் ஆகாஷ் மனோஜ், மாரடைப்பை முன்பே கண்டறியும் கருவியைக் கண்டுபிடித்துள்ளார். குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, அந்த மாணவருக்கு, 'ராஷ்ட்ரபதி நவ பிரவர்த்தன் புரஸ்கார்' விருதை கடந்த 15-ம் தேதி வழங்கி கவுரவித்துள்ளார். தேசிய அளவில் நன்மை தரும், புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறவர்களால் மட்டுமே குடியரசுத் தலைவரின் `இன்னோவேஷன் ஸ்காலர்ஸ் இன்-ரெசிடென்ட்ஸ் புரோகிராம்’ திட்டத்தில் இடம்பெற முடியும். அந்த வகையில், மாரடைப்பு ஏற்படுவதைக் கண்டுபிடிக்க ஆகாஷ் வடிவமைத்திருக்கும் கருவி, தமிழர்கள் அத்தனை பேரையும் பெருமைகொள்ள வைத்திருக்கிறது.



முருங்கைகீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..
[Wednesday 2017-03-22 18:00]

முருங்கைகீரையில் கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் A, B, B2, C, பீட்டா கரோட்டீன், மாங்கனீசு, புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே வாரம் ஒருமுறை முருங்கைக் கீரை மட்டுமின்றி, அதனுடைய பூ மற்றும் காயையும் சமைத்து சாப்பிட்டால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.



தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிட்டு பாருங்க ; 12 நாட்களிலேயே பதில் கிடைக்கும்
[Wednesday 2017-03-22 18:00]

பேரிச்சம் பழத்தில் காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, விட்டமின் B6, மெக்னீசியம் போன்ற அனைத்து விதமான ஊட்டச்சத்துள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே தினமும் 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், வெறும் 12 நாட்களில் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ!



பெண்களுக்கு மாரடைப்பு வரும் அறிகுறி..
[Monday 2017-03-20 22:00]

பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. பெண்களுக்கு மாரடைப்பு வரும் அறிகுறி தெரியுமா? பெண்களுக்கு மாரடைப்பு வராது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கும் மாரடைப்பு வரும். ஆனால் அறிகுறி எளிதில் தெரிவதில்லை. பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.



தொடர்ச்சியாக உட்கார்ந்திருப்பதால் உடம்புக்கு ஏற்படும் பாதிப்புக்கள்..
[Monday 2017-03-20 21:00]

நாள் பூரா உட்காந்துட்டு இருந்தா உங்க உடம்புக்குள்ள என்ன நடக்கும் ன்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா? நாள்பூராவும் அமர்ந்தபடி வண்டி ஓட்டறீங்களா? இல்ல கம்ப்யூட்டர் முன்னாடி தவம் கிடக்கறீங்களா? இல்ல எப்போதும் சும்மாவே உட்காந்துட்டு இருக்கீங்களா? உடலுக்கு தசை இயக்கம் நடக்கிறமாதிரி உழைப்பு கொடுத்துக்கிட்டே இருந்தால் நீண்ட ஆரோக்கியத்தோடு , திடமா வாழ முடியும். இப்படி நாள் பூரா உட்காந்துட்டு இருந்தா உங்க உடம்புக்குள்ள என்ன நடக்கும் ன்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா? இதைப் படிச்சு தெரிஞ்சுகோங்க.



அறிமுகமாகிறது 'கூகுள் ஜாக்கெட்'
[Monday 2017-03-20 19:00]

தொடுதிரையைப்போல செயற்படும் ஜாக்கெட்டை லெவிஸும் கூகுளும் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த கூகுள் ஜாக்கெட்டின் கைப்பகுதி தொடுதிரையைப்போல செயறபடவல்லது. இதை அணிந்தவர் செய்யும் எளிய அசைவுகள் இதனுள் உள்ள பயன்பாடுகளை செயற்படவைக்கும். இந்த ஜாக்கெட்டை செய்தியாளர் பயன்படுத்தி பரிசோதித்துப் பார்த்தார். இந்த கூகுள் ஜாக்கெட்டோடு புளூடூத் இணைக்கப்பட்டது அதில் ஒரே ஒரு தடவல் மூலம் நேரத்தை அறியலாம். மதிய நேரம் 2.37 மணி. செல்ல வேண்டிய இடத்துக்கு ஆகும் நேரத்தையும் அது சொல்கிறது. கேட்கும் இசையின் ஒலியளவை ஜாக்கெட்டின் முன்கையில் தடவி கூட்டலாம் குறைக்கலாம். இதன் விலை $350 ஆக இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.



உயர் ரத்த அழுத்த அழுத்தத்தைப் போக்க ஆயுர்வேத மருத்துவம்
[Friday 2017-03-17 21:00]

கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்துச் சாறு எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். ரத்த அழுத்தம் என்பது சுத்த ரத்த நாளங்களில் உருவாகும் அழுத்த நிலை. இதயத்தால் வெளியேற்றப்பட்ட ரத்தம் ஆர்டெரிஸ் என்று சொல்லக்கூடிய சுத்த ரத்த நாளங்களில் ஏற்படுத்துகிற ஒரு அழுத்த நிலையை ஹைபர்டென்சன் என்கிறோம். இது இரண்டு எண்ணிக்கையில் குறிப்பிடப்படுகிறது. ஒன்று சிஸ்டோலிக் பிளட்பிரஷர். இது மேலே உள்ள எண்ணைக் குறிக்கும். அடுத்தது டயஸ்டோலிக் பிளட் பிரஷர். இது கீழே உள்ள எண்ணைக் குறிக்கும். உதாரணமாக மருத்துவர்கள் 120/80 mm of hg என்று எழுதுவார்கள். இதில் ஒன்றோ, இரண்டோ அல்லது இரண்டுமே அதிகமாக இருக்கலாம்.



சூரியசக்தி மூலம் காசநோயை கண்டுபிடிக்கலாம்..
[Friday 2017-03-17 20:00]

வேகமாக தொற்றக்கூடிய காசநோயால் கானாவில் ஆண்டுக்கு ஒன்பதாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலாவால் கொல்லப்பட்டதாக பதிவானவர்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம். இப்போது வேகமாக காசநோயை கண்டுபிடித்து அதிக உயிர்களை காப்பாற்றும் நோக்கத்துடன் கானா நாட்டு அரசு, புதுமையானதொரு திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் எக்ஸ்ரே கருவிகளை அவர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.



அப்பிள் நிறுவனம் வெளியிடும் அதிரடி சாதனைகள்!
[Thursday 2017-03-16 19:00]

உலகின் முன்னணி நிறுவனமான அப்பிள் நிறுவனம், தனது புதிய படைப்புகளை எதிர்வரும் மாதம் 20ஆம் திகதி முதல் 24-ம் திகதி வரையிலான காலகட்டத்தில் வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கான அறிமுக அழைப்பிதழ்கள் விரைவில் அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.ஆனால், குறித்த அறிமுக விழாவில் என்னென்ன அப்பிள் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.முன்னதாக வெளியான தகவல்களின் படி அப்பிள் விழாவில் சிவப்பு நிற ஐபோன் 7, 128 ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எஸ்.இ மற்றும் மூன்று புதிய ஐபேட் ப்ரோ மொடல்கள் – 9.7 இன்ச், 10.5 இன்ச் மற்றும் 12.9 இன்ச் திரை கொண்ட மொடல்களுடன் ஐபேட் மினி ஒன்றும் வெளியாகும் என கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



காலையில் விரைவாக எழ சில ரிப்ஸ்..
[Thursday 2017-03-16 19:00]

காலையில் அலுவலகத்திற்கு நேரம் கழித்து செல்கிறீர்களா? அரைகுறையாக காலை உணவை உண்ணுகிறீர்களா? தூக்க கலகத்தில் அலாரத்தை மீண்டும் மீண்டும் அனைத்து விடுகிறீர்களா? ஆனால் உங்கள் சக பணியாளரோ தன் காலை வேளையை எப்படி பயனுள்ளதாக கழித்தார் என்று கூறுவதை கேட்டு ஆச்சரியப்படுவீர்கள். அவர்களை குத்த வேண்டும் என்று தோன்றினால் கூட அவர்களை போல் நீங்களும் உங்கள் காலை பொழுதை உருப்படியாக கழிக்க நினைப்பீர்கள்; ஒரு காலை விரும்பியாக மாற ஆசைப்படுவீர்கள்.



மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் அப் பயன்படுத்தும் வசதி..
[Thursday 2017-03-16 19:00]

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தாதவர்களே இல்லை. அதிகளவில் பயன்படுத்தப்படும் இதனை பாதுகாப்பாக எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என பல யோசனைகள் கூறப்படுகிறது. வாட்ஸ் அப்பினை சிம் கார்டு, மொபைல் நம்பரை உபயோகிக்காமல் பயன்படுத்த இயலும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். வாட்ஸ் அப் செயலியினை அன் இன்ஸ்டால் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். ஸ்மார்ட் மொபைலில் ஸ்பூப்(Spoof) இன்ஸ்டால் செய்து கொள்ளவேண்டும்.



ஆயுளை அதிகரிக்கும் குழந்தைப் பேறு..
[Wednesday 2017-03-15 23:00]

குழந்தை பெற்றவர்கள் , பெறாதவர்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள் என்று ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. 15 லட்சம், ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்த இந்த ஆய்வு, குறைந்தது ஒரே ஒரு குழந்தையையாவது பெற்றவர்கள், குழந்தைகள் ஏதும் பெறாதவர்களைக் காட்டிலும், குறைவான இறப்பு ஆபத்தையே எதிர்கொள்கிறார்கள் என்று முடிவுக்கு வந்தது.



இயற்கையின் அருமருந்து 'தயிர்'
[Wednesday 2017-03-15 22:00]

தயிர் இயற்கையின் அருமருந்து. தயிர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று பலரும் பயந்து தயிரை முற்றிலும் ஒதுக்கி விடுகின்றனர். ஆனால் அது தவறாக கருத்து. தயிர் இயற்கையின் அருமருந்து. பாலிலிருந்து பெறப்படும் தயிரானது மிக எளிதில் ஜீரணமாகும் திறன் கொண்டது. பாலை நாம் எடுத்துக் கொள்ள முக்கிய காரணம் அதில் உள்ள கால்சியம் மற்றும் புரதம் மற்றும் வைட்டமின் பி தான். பால் செரிக்க நேரம் எடுக்கும். ஆனால் தயிர் பாலில் உள்ள கால்சியம் மற்றும் புரதத்தை பெற்றுள்ளதுடன் மிக விரைவாக செரித்து விடும்.



வெற்றியின் இரகசியம்..
[Wednesday 2017-03-15 20:00]

வெற்றியை எப்ப‍டி நாம் நேசிக்கிறோமோ அதேபோல் தோல்வியையும் நேசிக்க‍க் கற்றுக்கொள்ள‍ வேண்டும். வாலிபமாக இருந்தாலும் சரி, வயோதிகமாக இருந்தாலும் சரி, நீங்கள் வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் என்றாலும், சுயமாக வேலைதொடங்க எண்ணி இருந்தாலும் உங்கள் நம்பிக்கையில், காரியத்தில் வெற்றிபெற ஒரே தாரக மந்திரம் தான் இருக்கிறது. அதன் பெயர் முயற்சி. ஆனால் வெற்றிக்கு பல வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன?



பொது இடத்தில் Wi-Fi பயன்படுத்தும்போது அவசியம் கவனிக்கவேண்டியவை..
[Tuesday 2017-03-14 22:00]

நம்மில் பெரும்பாலானோர் வெளியூருக்கோ அல்லது வெளியிடத்திற்கோ சென்றவுடன் Wi-Fi கிடைக்கிறதா என்று தான் பார்ப்போம். அப்படி பொது இடங்களில் கிடைக்கும் Wi-Fi இணையத்தள வசதியை நாம் பயன்படுத்தும் போது தகவல்கள் பரிமாறப்படுகின்றன.இதனால் நமது மொபைல் போனில் பதியப்பட்டிருக்கும் போட்டோ, வங்கிக் கணக்குகளின் தகவல்களை எளிதாக ஹேக்கர்கள்(Hackers) திருடி விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.எனவே பொது இடங்களில் Wi-Fi பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய டிப்ஸ்,பாதுகாப்பானதா என உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்பொது இடங்களில் நாம் பயன்படுத்தும் Wi-Fi பாதுகாப்பானது என்றால் அதில் Password போன்ற தகவல்கள் கேட்கப்படும்.



ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை, சம நிலையில் வைக்க உதவும் கார உணவுகள்:
[Tuesday 2017-03-14 22:00]

கார உணவுகள் உடலுக்கு நல்லது தான் என்றாலும், அவற்றை அளவோடு எடுத்துக்கொண்டால் முழுமையான பயன் கிடைத்துவிடும். இது குறித்து விரிவாக பார்க்கலாம். கார உணவுகள் உடலுக்கு நல்லது தான் என்றாலும், அவற்றை அளவோடு எடுத்துக்கொண்டால் முழுமையான பயன் கிடைத்துவிடும். பொதுவாக கார உணவுகளில் விட்டமின் ஈ நிறைந்துள்ளன, மேலும் கார வகை உணவுகள் உழிழ் நீரை நன்கு சுரக்கச் செய்கிறது.



போனை அன்லாக் செய்து திருடலாம் ; எச்சரிக்கை
[Tuesday 2017-03-14 18:00]

ஸ்மார்ட்போனை திருடுபவர்கள் அதை எளிதாக அன்லாக் செய்யும் முறையை பற்றி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகளவில் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் பயன்ப்பாட்டாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போனைப் பாதுகாக்க பேட்டர்ன் லாக் மற்றும் நம்பர் லாக் என இருவகையான பாதுகாப்பு அம்சங்களை பயன்ப்படுத்துகின்றனர். இப்படி லாக் ஆன போன்களை திருடுபவர்கள் அதை அன்லாக் செய்ய புதிய யுக்தியை கையாளுகின்றனர்.



இந்தோனேஷியாவில் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்கும் நீர்வேலி..
[Monday 2017-03-13 22:00]

2015 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட மோசமான காட்டுத்தீயில் இருபதாயிரம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான காடு எரிந்து சாம்பலானது. அதைத்தொடர்ந்து அத்தகைய காட்டுத்தீயை நிறுத்தவும் அதனால் உருவாகும் காற்று மாசைக்குறைக்கவும் வேண்டும் என்கிற அழுத்தம் அரசுக்கு அதிகரித்துவருகிறது. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயில் ஒரு காட்டுப்பகுதி மட்டும் தனித்தீவாக தப்பியது. காரணம் அந்த காட்டில் ஆழ்துளைக்கிணறுகளை தோண்டிய செயற்பாட்டாளர் ஒருவர், அதில் கிடைத்த தண்ணீரைக்கொண்டு அந்த காட்டைச்சுற்றி நீராலன வேலி அமைத்து தீயில் இருந்து காட்டை காப்பாற்றினார்.



பயமும், டென்ஷனும் இருதயத்தை பாதிக்கும்..
[Monday 2017-03-13 20:00]

தொடர்ந்து மனிதன் ஏதோ ஒரு ஆபத்தினை உடல் ரீதியாக, மன ரீதியாகவோ ஏற்க நேர்ந்தால் அது அந்த மனிதனின் உடலையும், மனதினையும், வெகுவாய் பாதித்து விடுகின்றது. பயமும், டென்ஷனும் உடலை என்ன செய்கின்றது?


Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>11-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற United badminton League GTA நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா