Untitled Document
February 25, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
கலைக்கப்படுகிறது தீபா பேரவை? - பலம் பெறுகிறது ஓபிஎஸ் அணி
[Saturday 2017-03-18 16:00]


 
தீபா பேரவையை கலைத்து ஓபிஎஸ் அணியில் இணைய பேரவையின் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் திகதி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் தனி அமைப்பை தொடங்கினார்.ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் தீபா போட்டியிடுவதாக அறிவித்தார். இது தொடர்பாக தீபாவின் கணவர் மாதவன் ஆர்கேநகர் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார்.

தீபா பேரவையை கலைத்து ஓபிஎஸ் அணியில் இணைய பேரவையின் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் திகதி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் தனி அமைப்பை தொடங்கினார்.ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் தீபா போட்டியிடுவதாக அறிவித்தார். இது தொடர்பாக தீபாவின் கணவர் மாதவன் ஆர்கேநகர் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார்.

  

இந்நிலையில், தீபாவின் கணவர் மாதவன், திடீரென தீபாவின் அமைப்பில் இருந்து அதிரடியாக விலகி தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார்.மேலும், தீபா பேரவையில் தீய சக்திகள் புகுந்து விட்டதாகவும் குற்றச்சாட்டினார்.இதே சமயம் தீபாவிற்கு ஆதரவு அளித்து தீபா பேரவையில் இருந்து செயல்பட்டு வந்த முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் பேரவையை கலைக்க முடிவு செய்துள்ளார்.இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் ஒன்றுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.அந்த அழைப்பு கடிதத்தில், தீபா பேரவையில் ஈடுபட்ட தோழர்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.எனவே இது தொடர்பாக நாளை நடைபெறும் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



ஆந்திராவில் தொடர்ச்சியாக கொல்லப்படும் தமிழர்கள்: - செம்மரக் கடத்தல் மட்டும்தான் காரணமா ?
[Sunday 2018-02-25 16:00]

ஆந்திராவில் தமிழர்கள் தொடர்ச்சியாகக் கொல்லப் படுவதற்கு, செம்மரக் கடத்தல் விவகாரம் மட்டும்தான் காரணமா? தமிழகத்தில் ஒரு என் -கவுன்ட்டர் நடந்தாலே பதறித் துடிக்கிற நிலை இருந்தும், தமிழகத்தைச் சேர்ந்த 20 பேரை ஆந்திராவில் சாதாரணமாகச் சுட்டுக் கொல்ல முடிகிறது, ஐந்துபேரைக் கொன்று ஏரியில் மிதக்க விட முடிகிறது என்றால்? மாநில, தேசிய ஊடகங்களில், ஏப்ரல், 7, 2015-ம் தேதி அன்று, நாட்டையே உலுக்கிய அந்தத் தலைப்புச் செய்தி, ஒளிபரப்பானது. ஆந்திர வனத்துறை மற்றும் காவல் துறையினரால் சுட்டும், எரித்தும் கொல்லப் பட்டிருந்த 20 பேரின் உடல்களை, ஊடகங்கள் நெருக்கத்தில் காட்டியதைப் பார்த்தவர்கள் பதறித்தான் போனார்கள்.



மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால்தான் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா?
[Sunday 2018-02-25 16:00]

தமிழில் அறிமுகமாகி பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக மிளிர்ந்ததுடன் இந்தி திரைப்பட உலகில் நுழைந்து பாலிவுட்டின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற அந்தஸ்த்துக்கு உயர்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து இரு பெண் குழந்தைகளுக்கு தாயான பின்னரும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.



பச்சிளங் குழந்தையை குப்பைத்தொட்டியில் தூக்கி வீசிக்கொன்ற இளம்பெண்!
[Sunday 2018-02-25 15:00]

தனது 25-நாள் பச்சிளங் குழந்தையை குப்பைத்தொட்டியில் தூக்கி வீசிக்கொன்ற இளம்பெண்ணை டெல்லி பொலிசார் கைது செய்துள்ளனர். டெல்லியின் கிழக்கு வினோபூர் பகுதியை சேர்ந்த பெண் நேஹா. GTB மருத்துவமனையில் அவருக்கு பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் தூக்கி வீசியுள்ளார். அதையடுத்து அந்த பச்சிளம் குழந்தை இறந்துவிட்டது என்று டெல்லி பொலிசார் தெரிவித்தனர்.



அறிவியலில் சாதனை படைத்த ஆறு வயது சிறுவன்: - பாராட்டு குவிகிறது
[Sunday 2018-02-25 08:00]

திண்டுக்கல்லைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் பிரியதர்ஷினி தம்பதியின் மகன் சர்வேஷ். ஆறு வயதே ஆன இந்த சிறுவனுக்கு பல்வேறு சிறப்பு திறமைகள் இயற்கையிலேயே இருந்திருக்கிறது. இவர் கண்ணைக் கட்டிக்கொண்ட நிலையில் வாசனையை நுகர்ந்து மசாலா பொருட்களின் பெயரைச் சொல்லுவார். நீச்சல் குளத்தில் ஒரே இடத்தில் அதிக நேரம் மிதப்பார். இவரது தனித்திறமையை பெற்றோர்கள் ஊக்குவித்தனர். தேனியைச் சேர்ந்த நினைவாற்றல் பயிற்சியாளர் நக்ஷத்திரா மூலம் பயிற்சி அளித்தனர்.



கமலுடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை: - நடிகை கவுதமி
[Sunday 2018-02-25 08:00]

கமல்ஹாசனின் தனக்கு சம்பள பாக்கி வைத்துள்ளார் என நடிகை கவுதமி குற்றம்சாட்டியுள்ளார். நடிகர் கமல்ஹாசனுடன் வாழ்ந்து வந்த கவுதமி அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் கடந்தாண்டு அவரை பிரிந்தார். அதன் பின்னர் கமலுடன் கவுதமிக்கு எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் கமலுடன் இணைத்து கவுதமி குறித்த வதந்திகள் பரவி வருகிறது.



நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார்!
[Sunday 2018-02-25 08:00]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகில் கோலோச்சியவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். பின்பு இந்தி திரையுலகம் வரை சென்று தன் காலடியைப் பதித்தவர்.



அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்: - மோடியை எச்சரிக்கும் பெண்
[Saturday 2018-02-24 08:00]

”பிரதமர் மோடி அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்” என ஆசிரமரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சகோதரிகளில் ஒருவரான ஹேமலதா எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பரிசு பொருள் வெடித்ததில் புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி!
[Saturday 2018-02-24 08:00]

ஒடிசா மாநிலத்தின் பொலிங்கர் மாவட்டத்தில் உள்ள பட்நாகர் நகரை சேர்ந்தவர் சவுமியா சேகர் சாஹூ. இவருக்கும் ரீமா சாஹூ என்பவருக்கும் கடந்த 18-ம் தேதி திருமணம் நடைபெற்றது.இதைத் தொடர்ந்து 21-ம் தேதி நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் புதுமண தம்பதிக்கு ஏராளமான பரிசு பொருட்கள் குவிந்தன.



இனி ஒழிப்பு போராட்டம்தான்: - தூத்துக்குடியில் கொதித்த இயக்குனர் கெளதமன்
[Saturday 2018-02-24 08:00]

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இனி போராட்டம் நடத்தப்போவதில்லை. தூத்துக்குடியில் இருந்து ஸ்டெர்லைட் ஆலையை ஒழித்துகட்டும் தொடர் போரட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்.” என இயக்குனர் கெளதமன் தெரிவித்துள்ளார்.



ஒரு வருடம் ஆகிவிட்டது முதல்வர் பதவியை எனக்கு கொடுங்கள்: - டிடிவி தினகரன் புதிய தகவல்
[Saturday 2018-02-24 08:00]

ஒரு வருடம் ஆகிவிட்டது. எனவே முதல்வர் பதவியை எனக்கு கொடுங்கள் என்று எடப்பாடியிடம் ஓபிஎஸ் சண்டை போடுவதாக டிடிவி.தினகரன் கூறினார். டிடிவி.தினகரன் நேற்று பகல் 12.10 மணிக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: காவிரி பிரச்னைக்காக தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது. இதேபோன்று தமிழக நலன் பிரச்னைக்காக அனைத்து கட்சிகளும் ஓரணியில் தொடர்ந்து செயல்பட வேண்டும். அதே நேரத்தில் தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, இதை தீர்மானமாக நிறைவேற்றி விட்டு, அதன்பின்பு பிரதமரை சந்தித்தால் நன்றாக இருக்கும்.



மனைவிக்கு கோயில் கட்டி 12 வருடங்களாகப் பூஜை செய்யும் கணவன்!
[Friday 2018-02-23 18:00]

கர்நாடகாவில் தன் மனைவிக்கு விவசாயி ஒருவர் கோவில் கட்டி வழிபட்டு வரும் நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் எல்லந்தர் அருகே உள்ள கிருஷ்ணபுரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜு என்ற ராஜுசாமி. இவர் ராஜம்மா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் ராஜம்மா குறைந்த வயதில் இறந்துவிடவே, அவரை மறக்க முடியாமல் தவித்த கணவன், மனைவிமீது இருந்த காதலின் காரணமாக 2006-ம் ஆண்டு கோயில் எழுப்பியதுடன், கோயிலில் அவரின் சிலையை வைத்துப் பூஜை செய்துவருகிறார்.



மரணித்து போன மனித நேயம்: - ஒருவர் தாக்கி கொல்லப்படும் சம்பவத்தை தடுக்காமல் செல்பி எடுத்த வாலிபர்
[Friday 2018-02-23 18:00]

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கடையே மனிதநேயம் தேய்ந்து கொண்டே போகிறது. இதனை உணர்த்தும் வகையில் மற்றொரு சம்பவம் கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. பல நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மொபைல் போன்கள் நமது வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை ஆக்கிரமித்து கொள்கின்றன என்பதே நிதர்சனம். இதில் செல்பி மோகம் உலகெங்கிலும் தலைவிரித்தாடுகிறது. மோகம் என்பதை விட செல்பி பைத்தியமாகவே சிலர் மாறிவிடுவதையும் பார்க்க முடிகிறது. எங்கு சென்றாலும், எதைப் பார்த்தாலும் ஒரு செல்பி எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளிக் குவிக்க வேண்டும் என்பது பல இளைஞர்களின் வாடிக்கையாக உள்ளது.



குழந்தைகளின் ஆபாச வீடியோ படங்களை பகிர வாட்ஸ் அப் குழு: - சி.பி.ஐ. அதிரடியில் கும்பல் சிக்கியது
[Friday 2018-02-23 08:00]

பாலியல் ரீதியில் வக்கிர புத்தி உள்ளவர்களிடம் குழந்தைகளின் ஆபாச வீடியோ படங்கள், தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு சர்வதேச அளவில் ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி நடத்தி வந்து உள்ளார், ஒரு வேலை இல்லாத வாலிபர்.அவர் உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் பகுதியை சேர்ந்த நிகில் வர்மா (வயது 20).



துணிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்: - மாணவிகளுக்கு கனடா பிரதமர் மனைவி அறிவுரை
[Friday 2018-02-23 07:00]

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா நாட்டு பிரதமரின் மனைவி சோபி ட்ரூடோ டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், உலகை பயமின்றி எதிர்கொள்ளுங்கள் என மாணவிகளுக்கு அறிவுரை கூறினார். கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த அவர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார்.



முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி 2 பேர் படுகொலை: - டெல்லியில் துணிகரம்
[Friday 2018-02-23 07:00]

தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் நரேலா பகுதியில் ஒரு கும்பல் நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மற்றொரு கும்பல் அவர்கள் மீது கத்தியால் குத்தியது.



மாணவி உடை மாற்றுவதை படம் பிடித்த சென்னை நபர்!
[Friday 2018-02-23 07:00]

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 23 வயது மாணவி தனது தோழிகள் மற்றும் ஆசிரியர்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லிக்கு கல்வி சுற்றுலா வந்தார். அங்குள்ள ஓட்டலில் அவர் உடை மாற்றும் போது பக்கத்து அறையில் இருந்து படம் எடுப்பது தெரிய வந்தது. அங்கு தங்கியிருந்த சென்னை பெரம்பூரை சேர்ந்த தொழிலதிபர் தீபக் போரா (29)வை போலீசார் கைது செய்தனர்.



கனடா பிரதமரை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும்: - சீமான்
[Wednesday 2018-02-21 17:00]

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும்’ என சீமான் வலியுறுத்தியுள்ளார்.கனட பிரதமர் ஜஸ்டின் இந்திய மற்றும் தமிழகப் பண்டிகைகளை ஆர்வமாகக் கொண்டாடுவது வழக்கம். அவர் மற்ற நாடுகளின் கலாசாரத்துக்கு மதிப்பு கொடுப்பதால் இந்தியாவில் அவருக்கு ஃபேன்ஸ் அதிகம். கடந்த தீபாவளிப் பண்டிகையின்போது கனடா தலைநகர் ஒட்டாவாவில், இந்திய மக்கள் முன் குத்துவிளக்கேற்றி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார். இதையடுத்து இந்தாண்டு தொடக்கத்தில் கனடாவில் வசிக்கும் தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்துக் கொண்டாடி அசத்தினார்.



தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறி கொன்ற தெரு நாய்கள்!
[Wednesday 2018-02-21 16:00]

ஆந்திராவில் கர்னூல் மாவட்டம் சிட்டியலா கிராமத்தை சேர்ந்தவர் உசேன். இவரது 4 வயது மகன் இப்ராகிம் உசேன் தனது மனைவியுடன் வயல் வேலைக்கு சென்றார். சிறுவனை வயல் அருகே மரத்தில் தொட்டில் கட்டி தூங்க வைத்துவிட்டு சென்றனர். அப்போது 2 தெரு நாய்கள் தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறின. முகம், கை, கால்களில் பலத்த காயமடைந்து சிறுவன் இப்ராகிம் பரிதாபமாக இறந்தான்.



உங்கள் அன்புக்கு நன்றி: - பரமக்குடியில் காரில் இருந்தபடியே பேசிய கமல்!
[Wednesday 2018-02-21 16:00]

ராமநாதபுரத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடியில் திரண்டிருந்த மக்களிடையே பேசினார். விழாவுக்கு நேரமாகிவிட்டதால் மேடைக்கு வரவில்லை என்ற அவர், காரில் இருந்தபடியே திரண்டிருந்த மக்களிடம் உங்கள் அன்புக்கு நன்றி என்றார். நடிகர் கமல்ஹாசன் இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். அப்துல் கலாம் வீட்டில் இருந்த தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல், கலாமின் குடும்பத்தாரிடம் ஆசி பெற்றார்.



கலாம் சகோதரரிடம் ஆசி பெற்று அரசியல் பயணத்தைத் ஆரம்பித்தார் கமல்!
[Wednesday 2018-02-21 07:00]

கமல் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். முதல்கட்டமாக அப்துல்கலாம் இல்லத்துக்குச் சென்ற நடிகர் கமலஹாசன், அப்துல் கலாம் சகோதரர் முத்து மீரான் மரைக்காயரிடம் ஆசிப்பெற்று தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அப்துல்கலாம் இல்லத்தில் அவரது உறவினர்களிடம் தற்போது கமல் பேசி வருகிறார்.


Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா