Untitled Document
March 25, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியான பின் வன்முறைகள்: - ஹிலாரி கவலை
[Saturday 2017-03-18 17:00]

டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியான பின்னர் அமெரிக்காவில் வன்முறை என செய்திகள் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது என ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி டொனால்டு டிரம்பிடம் தோல்வியடைந்தார்.

டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியான பின்னர் அமெரிக்காவில் வன்முறை என செய்திகள் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது என ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி டொனால்டு டிரம்பிடம் தோல்வியடைந்தார்.

  

தோல்விக்கு பின்னர் அவர் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.அவர் பேசுகையில், டிரம்ப் ஜனாதிபதியான பின்னர் அமெரிக்காவில் நடக்கும் வன்முறைகளை பார்த்தால் கஷ்டமாக உள்ளது.நான் காயங்களிலிருந்து வெளியே வந்து பொதுவெளியில் அமெரிக்க மக்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.அமெரிக்க நிலவரம் குறித்து ஹிலாரி பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது

  
   Bookmark and Share Seithy.com



ஐ.நா அமைதிப்படையில் இந்திய வீரர்களின் பங்களிப்பு அபாரமானது - ஹெர்வ் லாட்சவுஸ்
[Saturday 2017-03-25 21:00]

ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இந்திய வீரர்களின் பங்களிப்பு அபாரமானது எனவும், திறமையான வீரர்களை இந்தியா கொண்டுள்ளதாகவும் அமைதிப்படை தலைவர் ஹெர்வ் லாட்சவுஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா அமைதிப்படையில் இந்திய வீரர்களின் பங்களிப்பு அபாரமானது - தலைவர் புகழாரம்ஐக்கிய நாடுகளின் சபையில் உள்ள அமைதிப்படை அமைப்பானது, உள்நாட்டு போர் நிலவும் நாடுகளில் அமைதி ஏற்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மேலும், அப்பகுதியில் உள்ள பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனது.



ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் பேரணி
[Saturday 2017-03-25 21:00]

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் இன்று நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 52 சதவீத பிரிட்டிஷ் மக்கள், வெளியேற ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். 48 சதவீதம் பேர் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டாம் என்று வாக்களித்தனர்.



போலீஸ் அதிகாரியின் உயிரை காப்பாற்ற போராடிய மந்திரி ராணி எலிசபத்தினால் கௌரவிப்பு
[Saturday 2017-03-25 21:00]

இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றம் மீது சமீபத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது காயமடைந்த போலீஸ் அதிகாரியின் உயிரை காப்பாற்ற போராடிய மந்திரியை உயர் பதவி அளித்து இங்கிலாந்து ராணி எலிசபத் கவுரவித்துள்ளார். இங்கிலாந்து பாராளுமன்ற கட்டிடம் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பாலம் அருகே உள்ளது. கடந்த 22-ம் தேதி இந்த கட்டிடத்தின் வழியாக காரை வேகமாக ஓட்டி வந்த ஒரு தீவிரவாதி அங்கிருந்த மக்கள் கூட்டத்தின்மீது மோதினான்.



ரஷ்யாவில் 6 கிளர்ச்சியாளர்கள், 6 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
[Saturday 2017-03-25 21:00]

ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பகுதியில் கிளர்ச்சியாளர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 6 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். 6 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக அரசுக்கு எதிரான புரட்சி நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இதேபோல் செசன்யாவிலும் வன்முறை மோதல்கள் ஏற்படுகின்றன. கிளர்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர் ஆயுதம் ஏந்தி ரஷ்ய படையினரை தாக்கி வருகின்றனர். எனவே, வடக்கு காகசஸ் மற்றும் செசன்யா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக செசன்யாவில் கடந்த ஆண்டு தேசிய பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது.



அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் ஆந்திரப் பெண் மகனுடன் கொலை:
[Saturday 2017-03-25 08:00]

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணும், அவரது ஆறு வயது மகனும் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர், நாரா அனுமந்தராவ். அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த 9 ஆண்டுகளாக அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார்.



சிரியாவில் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு ஐ.நாவில் அழைப்பு..!
[Saturday 2017-03-25 08:00]

சிரியாவில் இடம்பெற்றுவரும் வன்முறைகளை ரஷ்யா, ஈரான், அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டுமென, ஜெனீவா பேரவையில் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிரியதூதுவர் ஸ்டாப்பென் டீ மிஸ்டூர அழைப்புவிடுத்துள்ளார். ஐ.நாவின் கோரிக்கையை ஏற்று சிரிய வன்முறை நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்ப்பதாகவும், ஜெனீவாவில் பல்வேறு அரசியல் மட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம், சிரிய வன்முறைகளை குறைக்கும் பணிகளில் சர்வதேச பங்களிப்பை சிரிய தூதுவர் வேண்டுகோளாகவிடுத்துள்ளார்.



அகதிகளாக பயணித்த சுமார் 200 பேர் மத்திய தரைக்கடலில் மூழ்கி பலி..!
[Saturday 2017-03-25 08:00]

மத்திய தரைக்கடல் வழியாக பயணித்த சுமார் 200 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க நாடுகளிலிருந்து, ஐரோப்பாவிற்கு இரண்டு படகுகள் மூலம் அகதிகளாக பயணித்த சுமார் 200 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இத்தாலிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் படகு கவிழ்ந்த விடயம் கேள்வியுற்று விபத்து பகுதிக்கு வந்துள்ள இத்தாலிய கடலோர பாதுகாப்புப்படையினர் இதுவரை உயிரிழந்துள்ள 5 பேரின் உடல்களை மட்டுமே மீட்டுள்ளதாகவும், ஏனையவர்களை தேடும் பணிகள் இடம்பெறுவதாகவும் அறிவித்துள்ளனர்.



இந்திய குடிமகன் அந்தஸ்து பெற்ற ஆஸி வீரர், இந்திய அணியில் விளையாடு
[Saturday 2017-03-25 06:00]

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஷான் டெய்ட் இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன் அந்தஸ்தை பெற்றுள்ளார். இதனால் இவர் இந்திய அணியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷான் டெயிட் வெளிநாட்டு வாழ் இந்திய குடிமகன் (Overseas Citizen of India - OCI) என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இதனை அவரே தனது ட்விட்டரின் மூலம் உறுதி செய்துள்ளார். வெளிநாட்டு வாழ் இந்திய குடிமகன் அட்டையின் புகைப்படத்தை ஷான் டெயிட் சமீபத்தில் ட்விட்டரில் பதிவு செய்ததை தொடர்ந்து அவர் இந்திய அணியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.



பாகிஸ்தான் தேசிய தினத்தில் சீன, சவுதி படைகளின் சிறப்பு அணிவகுப்பு
[Friday 2017-03-24 21:00]

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டத்தில் சீனா மற்றும் சவுதி படைகளின் சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது. முஸ்லிம்களுக்கு தனி நாடு கேட்டு 1940-ம் ஆண்டு லாகூரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை குறிக்கும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் 23-ந்தேதி தேசிய தினமாக பாகிஸ்தான் கொண்டாடுகிறது. அவ்வகையில் பாகிஸ்தானில் நேற்று தேசிய தினம் கொண்டாடப்பட்டது.. தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த தேசிய தின ராணுவ அணிவகுப்பில், முதல் முறையாக சீன ராணுவம் அதாவது சீனாவின் மக்கள் விடுதலைப் படை கலந்துகொண்டது. இதேபோல் சவுதி மற்றும் துருக்கி படைகளும் இந்த அணிவகுப்பில் இணைந்தது. இந்த அணி வகுப்பில் பாகிஸ்தான் ராணுவம் தனது ஆயுதங்களை காட்சிப்படுத்தியது.



எகிப்து முன்னாள் அதிபர் 6 ஆண்டுகளுக்கு பின் வீடு திரும்பினார்
[Friday 2017-03-24 21:00]

கைது செய்யப்பட்டு சிறைவாசத்துடன் ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக் ஆறாண்டுகளுக்கு பின்னர் இன்று வீடு திரும்பினார். அராபிய வசந்தம் என்ற பெயரில் வளைகுடா நாடுகளில் நிகழ்ந்த மக்கள் புரட்சி, அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எகிப்தில் அந்நாட்டின் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தெழுந்தபோது ராணுவம் கையாண்ட அடக்குமுறை நடவடிக்கையில் போராட்டக்காரர்களில் சுமார் 900 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் முபாரக்கிற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.



லண்டன் தாக்குதலுக்கு வடகொரியா இரங்கல்..!!
[Friday 2017-03-24 20:00]

லண்டன் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் தெரசா மேவுக்கு வடகொரியா இரங்கல் செய்தி அனுப்பியுள்ளது. பிரிட்டன் பாராளுமன்றம் அருகே நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், லண்டன் தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்து பிரிட்டனுக்கு வடகொரியா செய்தி அனுப்பியுள்ளது. வடகொரியா பிரதமர் பக் பாங்-ஜு, பிரிட்டன் பிரதமர் தெரசா மேவுக்கு இந்த இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார். இந்த செய்தியில், அனைத்துவிதமான தீவிரவாத செயல்பாடுகளையும் வடகொரியா அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.



ஆப்கானிஸ்தானில் சங்கின் மாவட்டம் தீவிரவாதிகள் வசம்..
[Friday 2017-03-24 20:00]

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுடன் கடும் சண்டையிட்டு வரும் தீவிரவாதிகள் முக்கிமான மாவட்டத்தை கைப்பற்றி உள்ளனர். தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் இருந்த ஆப்கானிஸ்தானை அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ படைகள் மீட்டனர். தற்போது அங்கு ஜனநாயக ஆட்சி அமைக்கப்பட்டு மக்களாட்சி நடக்கிறது. தற்போது நேட்டோ படைகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் தலிபான் தீவரவாதிகள் கை ஓங்கியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் ராணுவத்துக்கும், தலிபான்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அதில் வெற்றி பெற்ற தீவிரவாதிகள் தென் ஹெல்மண்டில் உள்ள முக்கியமான மாவட்டமான சங்கின் மாவட்டத்தை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.



எந்த நேரத்திலும் அல் பாக்தாதி கொல்லப்படுவார்:அமெரிக்க மந்திரி ரெக்ஸ் டில்லர்சன்
[Friday 2017-03-24 07:00]

ஐ.எஸ். துணைத்தளபதிகள் அனைவரும் பலியான நிலையில் ‘எந்த நேரத்திலும் அல் பாக்தாதி கொல்லப்படுவார்’ என அமெரிக்க மந்திரி திட்டவட்டமாக கூறினார். உலகையே அச்சுறுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை முழுமையாக தோற்கடிப்பது குறித்த 68 உலக நாடுகள் கொண்ட கூட்டணி பேரவை கூட்டம், வாஷிங்டனில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் பேசும்போது, “ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் துணைத்தளபதிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். குறிப்பாக பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டவரும் சாகடிக்கப்பட்டு விட்டார். எந்த நேரத்திலும் அந்த அமைப்பின் தலைவனான அல் பாக்தாதி கொல்லப்பட்டு விடுவார்” என உறுதிபடகூறினார்.



அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பலி
[Friday 2017-03-24 06:00]

அமெரிக்காவில் அடையாளம் தெரியாத மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலிஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அடையாளம் தெரியாத மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலிஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் வடக்கு பகுதியில் இருக்கும் விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள வங்கி ஒன்றில் நேற்று நுழைந்த மர்மநபர் ஒருவர் தான் கொண்டுவந்த கைத்துப்பாக்கியால் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சரமாரியாக சுட ஆரம்பித்தார்.



கனடாவின் பிரபல ஸ்டார்பக்ஸ் நிறுவனம் 1000 அகதிகளுக்கு வேலை வழங்க திட்டம்:
[Thursday 2017-03-23 21:00]

கனடாவின் பிரபல ஸ்டார்பக்ஸ் கோப்பி நிறுவனம், எதிர்வரும் ஐந்து வருடங்களில் சுமார் 1000 அகதிகளுக்கு வேலை வழங்க தீர்மானித்துள்ளது. மீள் குடியேற்ற முகவர் வலையமைப்புடன் இணைந்து செயற்படும் தேசிய அமைப்புக்கள், ஆகியனவற்றின் ஊடாக இந்த வேலை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.



பிரித்தானியாவிற்கு முழு ஒத்துழைப்பை நல்குவோம்: - அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.
[Thursday 2017-03-23 21:00]

பிரித்தானியாவில் நான்கு பேரின் உயிரை காவுகொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத் தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்னிறுத்துவதற்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதலை அடுத்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-ஐ தொலைபேசியில் தொடர்புகொண்ட ட்ரம்ப் இவ்வாறு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். தீவிரவாத செயற்பாடுகள் எம்மை துயரில் ஆழ்த்தியுள்ளன. பிரித்தானிய மக்கள் இன்று அனுபவிக்கும் வேதனையை எம்மால் நன்கு உணர முடியும் என பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலண்ட் தெரிவித்துள்ளார்.



லண்டன் தாக்குதல் தொடர்பாக 7 பேர் கைது
[Thursday 2017-03-23 20:00]

பிரிட்டனில் பாராளுமன்ற வளாகம் அருகில் நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் லண்டன் போலீசார் 7 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து பாராளுமன்ற கூட்டம் நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, பாராளுமன்ற வளாகம் அருகே உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில், ஒரு கார் அதிவேகத்தில் வந்து பொதுமக்கள் மீது மோதியது. இதில், 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து கீழே விழுந்தனர். ஒரு பெண் பலியானார். பீதியில், பொதுமக்கள் சுமார் 50 பேர், பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி ஓடினர்.



லண்டன் தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு
[Thursday 2017-03-23 19:00]

லண்டன் பாராளுமன்றம் அருகே நேற்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பாராளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தீவிரவாதி ஒருவன் பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது காரை மோதிவிட்டு, போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி பாராளுமன்றத்திற்குள் நுழைய முயன்றான். அந்த தீவிரவாதியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.



தடைகளை கண்டு அஞ்சப் போவதில்லை: வடகொரியா அமெரிக்காவுக்கு பதில்!
[Thursday 2017-03-23 17:00]

வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை முடக்கும் வகையில் அமெரிக்காவினால் சுமத்தப்படும் எவ்வித பொருளாதார தடைகளுக்கும் அஞ்சப் போவதில்லை என பியோங்யாங் தூதுவர் ஒருவர் தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியா தொடர்ந்தும் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்நிலையில், வடகொரியா மீது புதிய கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்தே வடகொரியா தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



304 பேருடன் மூழ்கிய தென்கொரியக் கப்பலை அப்புறப்படுத்தும் முயற்சியில் மீட்புக் குழுவினர்:
[Thursday 2017-03-23 07:00]

மூன்று வருடங்களுக்கு முன் 304 பேருடன் மூழ்கிய தென்கொரியக் கப்பலை அப்புறப்படுத்தும் முயற்சியில் மீட்புக் குழுவினர் இறங்கியுள்ளனர். ‘செவோல்’ என்ற இந்தக் கப்பல் மூன்று வருடங்களுக்கு முன், நூற்றுக்கணக்கான உயர் வகுப்பு பாடசாலை மாணவர்களுடன் தென்மேற்குக் கடலில் மூழ்கியது. அளவுக்கதிகமானோரை ஏற்றியமையாலும், வேகமாகப் பயணித்தபடியே திரும்ப முயற்சித்ததாலுமே இந்த விபத்து நிகழ்ந்தது என்று கூறப்படுகிறது. இதில் 304 பேர் கொல்லப்பட்டதுடன் ஒன்பது பேர் காணாமல் போயினர்.


SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
<b>05-03-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ninaivakal-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா