Untitled Document
March 25, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
சட்டசபையில் எனக்கு நாற்காலி ரெடியாகிறது - கங்கை அமரன்
[Saturday 2017-03-18 17:00]

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்; அவர் கூறியதாவது: மோடியின் உத்தரவுப்படி நடக்கும் ஊழியனாக தொண்டனாக வருவதில் பெருமையடைகிறேன். தமிழகத்தில் என்னை பரிந்துரை செய்த தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள். சுத்தமான அரசியல்வாதிகள் மட்டுமே உள்ள பாஜ.,வில் இருப்பது பெருமைப்படுகிறேன். வேட்பாளரானதால் மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இது எனக்கு உற்சாகமாக உள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்; அவர் கூறியதாவது: மோடியின் உத்தரவுப்படி நடக்கும் ஊழியனாக தொண்டனாக வருவதில் பெருமையடைகிறேன். தமிழகத்தில் என்னை பரிந்துரை செய்த தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள். சுத்தமான அரசியல்வாதிகள் மட்டுமே உள்ள பாஜ.,வில் இருப்பது பெருமைப்படுகிறேன். வேட்பாளரானதால் மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இது எனக்கு உற்சாகமாக உள்ளது.

  

சட்டசபையில் எனக்கு நாற்காலி ரெடியாவது இப்போதே எனக்கு தெரிகிறது. மாற்றத்தை கொண்டு வருபவர்கள் யார் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



ரஜினியின் இலங்கை பயணம் ரத்து..!!
[Saturday 2017-03-25 21:00]

தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த், நான் ஒரு கலைஞன், என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு வழங்க இருந்தார். இந்நிலையில், அவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் எதிரப்பு தெரிவித்ததை அடுத்து இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ’2.0’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.



விவசாயிகள் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்திய விஷால்
[Saturday 2017-03-25 21:00]

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் தற்கொலை முயற்சியை விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தினர்.தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான முறையில் நடைபெற்று வரும் இவர்களது போராட்டத்துக்கு மத்திய அரசு செவி கொடுக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற தமிழ் நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ், பாண்டியராஜ் உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.



தனுஷ் ஐ புகழ்ந்து தள்ளிய வித்யூலேகா..!
[Saturday 2017-03-25 21:00]

பிரபல குணசித்ர நடிகர் ராமனின் மகள் வித்யூலேகா. கல்லூரி காலத்திலிருந்து நாடகத்தில் நடித்தும், இயக்கியும் வந்த வித்யூலேகாவை நீ தானே என் பொன் வசந்தம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் கவுதம் மேனன். அதன் பிறகு சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது தெலுங்கிலும் பிசியான காமெடி நடிகையாகிவிட்டார். தற்போது அவர் தனுஷ் இயக்கி, தயாரிக்கும் பவர் பாண்டி படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார். இதுகுறித்து வித்யூலேகா கூறியதாவது:



யாருங்க இதைக் கிளப்பிவிட்டது? நடிகை நித்யா மேனன் பாய்ச்சல்
[Saturday 2017-03-25 18:00]

படம் இயக்கப் போவதாக வந்த தகவலை மறுத்துள்ளார் நடிகை நித்யா மேனன். தமிழில், 180, வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, ஓகே கண்மணி, இருமுகன் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். இப்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் தெலுங்கு படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் விரைவில் அதை தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது.



ஆப்பிள் மியூசிக் நிறுவனத்தின் இந்தியாவுக்கான பிராண்ட் அம்பாசிடராக அனிருத்!
[Saturday 2017-03-25 18:00]

இசை சேவை வழங்கி வரும் ஆப்பிள் மியூசிக் நிறுவனத்தின் இந்தியாவுக்கான பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார் அனிருத். தென் இந்தியாவை சேர்ந்த ஒருவர் ஆப்பிள் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் ஆகி இருப்பது இதுதான் முதல் முறை! 'ஆப்பிள் மியூசிக் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதியாக செயல்படவிருப்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் அனிருத்.



மர்டர் மிஸ்டரி - நீது சந்திராவுக்கு அடையாளம் தந்தது யார்?
[Saturday 2017-03-25 18:00]

தமிழ் சினிமாவை விட்டுவிட மாட்டேன் என்று நடிகை நீது சந்திரா கூறினார். தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன் உட்பட சில படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நீது சந்திரா. சிங்கம் 3 படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இப்போது ஆர்.கே.நடிக்கும் ’வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூரும்போது...



மீண்டும் இணைகிறது ‘கத்தி’ கூட்டணி!
[Saturday 2017-03-25 12:00]

மீண்டும் விஜய்யுடன் இணைகிறார்கள் ஏஆர் முருகதாஸும், லைகா நிறுவனமும். இது விஜய் 62 படத்துக்காக. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது 'தளபதி 61'. முதல் கட்டடமாக 25 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளன. விஜய்யின் அடுத்த படத்தினை இயக்குகிறார் ஏ ஆர் முருகதாஸ்.



சுயநலத்துக்காக எதையும் செய்யமாட்டேன்: விஷால்
[Friday 2017-03-24 20:00]

சுயநலத்துக்காக நான் எதையும் செய்யமாட்டேன் என்று நடிகர் விஷால் கூறினார்.சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி போட்டியிடுகிறது. அவர்கள் புதுச்சேரி வந்து ஆதரவு திரட்டினார்கள். அதைத்தொடர்ந்து நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-



டெல்லியில் விவசாயிகள் போராட்டம்; விஷால், பிரகாஷ்ராஜ் நேரில் சென்று ஆதரவு
[Friday 2017-03-24 20:00]

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து நடிகர் விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்திரில் 2 வாரங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாய கடனை வசூலிக்க வங்கிகள் விவசாயிகளிடம் கெடுபிடி நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும், வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.



வாழைப்பழ கேக் வெட்டி செந்திலின் பிறந்தநாள் கொண்டாட்டம்..
[Friday 2017-03-24 20:00]

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியன் செந்தில். கவுண்டமணியுடன் இவர் சேர்ந்து செய்த காமெடிகள் இன்றும், என்றும் மறக்க முடியாதவை. இப்போதும் டிவி.க்களில் இவரது காமெடிகள் வந்தால் மக்கள் ரசிக்காமல் இருக்க மாட்டார்கள். வடிவேலு, சந்தானம், சூரி... என அடுத்தடுத்து ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் வந்துவிட்டதால் செந்திலுக்கான வாய்ப்பு குறைந்து போனது. இருந்தாலும் அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது சூர்யா நடித்து வரும் ‛தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார்.



‘டோரா’ வழக்கு விசாரணை 28-ந் தேதி..
[Friday 2017-03-24 20:00]

‘டோரா’ படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் 28-ந் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது. நடிகை நயன்தாரா, நடிகர் தம்பிராமையா நடித்துள்ள ‘டோரா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் கதை, திரைக்கதை தனக்கு சொந்தமானது எனக் கூறி சினிமா இணை இயக்குனர் நாடிமுத்து என்பவர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘2013ம் ஆண்டு ‘நீயும் நானும்’ என்ற தலைப்பில் கதை, திரைக்கதை எழுதியிருந்தேன்.



கமல் மீது விசாரணை..
[Friday 2017-03-24 20:00]

மகாபாரதத்தை இழிவுப்படுத்தியதாக கூறி நடிகர் கமல் மீது வழக்கு பதிவு செய்ய கோரி மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் தனியார் டிவி., ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல், மகாபாரதத்தை மேற்கோள் காட்டி தனது விளக்கத்தை கொடுத்தார். இந்துக்களின் தெய்வநூலாக போற்றி வரும் மகாபாரதம் மற்றும் இதிகாசத்தை கொச்சைப்படுத்தும் கமலை கண்டிக்கிறோம் என்று கூறி இந்து மக்கள் கட்சி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தது.



மகேஷ் பாபு - முருகதாஸ் இணைந்து தரும் புத்தாண்டு விருந்து
[Thursday 2017-03-23 22:00]

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ஸ்பை திரில்லர் படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையிலும் இப்பட தலைப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் டீசரை ஏப்ரல் 14 தமிழ்புத்தாண்டு அன்று தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் மே 28ல் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை ஐதராபாத்தில் நடத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதாம்.



நம் மண் இசையே நமக்கு தேவை - தனுஷ்
[Thursday 2017-03-23 21:00]

பவர்பாண்டி படம் மூலம் இயக்குனராகியுள்ள நடிகர் தனுஷ், தன் தாய், தந்தை, சகோதரி மற்றும் ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளதோடு, எதிர்காலத்தில், நம் மண் இசையே நமக்கு தேவை என்றார். நடிகர் தனுஷ் முதல் முறையாக இயக்கியுள்ள படம், பவர்பாண்டி. இதில், கதை நாயகனாக ராஜ்கிரண் நடித்துள்ளார். பிரசன்னா, ரேவதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின், டீசர் வெளியீட்டு விழா, நேற்று நடந்தது. பின், நடிகர் தனுஷ் கூறியதாவது: உலகில், நல்லது, கெட்டது; அன்பு, வெறுப்பு என, இரண்டும் உள்ளது. இதில், நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம்; எதை நோக்கி போகிறோம் என்பது, நம் கையில்தான் உள்ளது. நேர்மறையான சிந்தனைகளை தேர்ந்தெடுத்தால், நிம்மதியாக இருக்கலாம்; இதுதான், பவர்பாண்டி.



பாகுபலி - 2 இசையை ரஜினி வெளியிடுகிறார்..
[Thursday 2017-03-23 21:00]

இந்திய திரையுலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் பாகுபலி-2 படத்தின் இசையை, நடிகர் ரஜினிகாந்த் வெளியிட உள்ளார். இதற்கான விழா சென்னையில், பிரமாண்டமாய் நடைபெற இருக்கிறது. 'பாகுபலி' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் உருவாகியுள்ளது. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலர், உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட 7-வது டிரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்நிலையில் டிரைலருக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பால் படக்குழு உற்சாகமாகியுள்ளது.



குத்துப்பாட்டுக்கு ரூ.65 லட்சம் வாங்கிய கேத்தரின் தெரசா
[Thursday 2017-03-23 21:00]

குத்துப்பாட்டு ஒன்றில் நடனமாட நடிகை கேத்தரின் தெரசா ரூ.65 லட்சம் வாங்கியுள்ளார். `மெட்ராஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்துள்ள ‘கடம்பன்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் விஷ்ணு விஷால் ஜோடியாக `கதாநாயகன்' படத்திலும், தெலுங்கில் `நேனே ராஜு நேனே மந்த்ரி' என்ற படத்திலும் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷின் மகன் ஸ்ரீனிவாஸ் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார்.



மாமாவானார் சிம்பு..
[Thursday 2017-03-23 20:00]

சிம்பு நிஜத்தில் மாமாவாகியுள்ளார். சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தில் சிம்பு அஸ்வின் தாத்தா என்ற கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். திரையில் தாத்தாவாக நடிக்கும் சிம்பு, நிஜத்தில் மாமாவாகியுள்ளார்.



மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் 'விக்ரம் வேதா'
[Thursday 2017-03-23 09:00]

இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் படங்களுக்கு, கோலிவுட்டில் மீண்டும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. விக்ரம் வேதா என்ற படத்தில், மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கின்றனர். மாதவன், நேர்மையான, கண்டிப்பான போலீஸ் அதிகாரியாகவும், விஜய்சேதுபதி, தாதாவாகவும் நடித்துள்ளனர். இரண்டு பேருமே போட்டிப் போட்டு நடித்துள்ளனராம். கட்டாய வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும் மாதவனுக்கு, இந்த படத்தின் மூலம், செமத்தியான தீனி கிடைத்துள்ளதாம். இதனால், இந்த படத்துக்கு, கோலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



ஆர்யா மீது வண்டுகள் தாக்குதல்..
[Thursday 2017-03-23 09:00]

தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுக்காவிட்டால், கோலிவுட், நம்மை சுத்தமாக மறந்து விடும். ரசிகர்களும் மறந்து விடுவர் என்பதை, தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார் ஆர்யா. சமீபகாலமாக, இவரது படங்கள் சரியாக போகவில்லை. இதனால், அடுத்து நடிக்கும், கடம்பன் படத்தை வெற்றிப் படமாக்க வேண்டும் என்பதற்காக கடுமையான உழைக்கிறார் அவர். மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் இந்த படத்தில், இவருடன் கேத்ரின் தெரசா, ஜோடி சேர்ந்துள்ளார். மலைத்தேன் எடுக்கும் சமூகத்தைச் சேர்ந்தவராக இருவரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பின் போது, தேனீ மட்டுமல்லாமல், ஏராளமான பூச்சி மற்றும் வண்டுகளிடம் கடி வாங்கி, நடித்துள்ளாராம் ஆர்யா.



'மகளிர் மட்டும்' ஜோதிகாவுக்காக தயாரான கதை..
[Thursday 2017-03-23 08:00]

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எடுக்கப்பட்டுள்ள படம், மகளிர் மட்டும். ஜோதிகாவுக்காகவே, பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட கதையாம் இது. சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா என, மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே, இந்த படத்தில் நடித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின், அதிகமான நட்சத்திரங்கள் நடித்து வெளிவரும் படம் இது. பானுப்ரியா, ஊர்வசி போன்ற நடிகையரை இதில் நடிக்க வைக்கும்படி வற்புறுத்தியதும், ஜோதிகா தானாம். இந்த படம் வெற்றியடைந்தால், தொடர்ச்சியாக அதிக படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம் ஜோதிகா.


SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
<b>05-03-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ninaivakal-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா