Untitled Document
June 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பிரித்தானியாவில் புகைப்படிக்கும் விடயத்தில் அதிரடி மாற்றம்!
[Sunday 2017-03-19 17:00]


பிரித்தானியாவில் புகைப்படிக்கும் விடயத்தில் அதிரடி மாற்றங்களுடன் புதிய சட்டம் அமலாகவுள்ளதுபிரித்தானியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.அவர்களை தடுக்கும் நோக்கில் பல புதிய சட்டங்கள் போடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் புகைப்படிக்கும் விடயத்தில் அதிரடி மாற்றங்களுடன் புதிய சட்டம் அமலாகவுள்ளதுபிரித்தானியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.அவர்களை தடுக்கும் நோக்கில் பல புதிய சட்டங்கள் போடப்பட்டுள்ளது.

  

அதன்ப்படி, எல்லா விதமான சிகரெட் விலையும் உயர்த்தப்படுகிறது. ஒரு பாக்கெட்டில் பத்து சிகரெட் கொண்ட பேக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.மெந்த்தால் வகை சிகரெட் இன்னும் சில வருடங்களில் தடை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.மேலும் வரும் மே மாதம் 21 முதல் குறைந்த விலை சிகரெட் விலை £8.82ஆக உயர்த்தப்பட்டுள்ளது.புகையிலை உடல் நலத்துக்கு கேடு என பெரிய புகைப்படம் இனி சிகரெட் பாக்கெட்டில் இடம் பெறும். மசாலா, மூலிகைகள், மது, சாக்லேட் போன்ற வஸ்துக்களை புகையிலையுடன் சேர்த்து செய்யப்படும் சிகரெட்களும் சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சட்டம் போன வருடமே அமலுக்கு வந்த போதும், கடைகாரர்கள் பழைய சிகரெட்களை விற்க போதிய அவகாசம் கேட்டனர்.இது குறித்து புகைப்பிடித்தல் மற்றும் உடல்நல விழிப்புணர்வு இயக்க தலைவர் Amanda கூறுகையில், புதிய சட்டத்தால் சிகரெட் வாங்க நினைப்பவர்கள் பணம் அதிகம் செலவாகும் என நினைப்பார்கள். அவர்கள் உடல் நலன் பற்றியும் யோசிப்பார்கள் என கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.comபிரித்தானிய மகாராணியின் வருடாந்த உரை: - முக்கிய அம்சங்கள்
[Thursday 2017-06-22 18:00]

பிரித்தானிய மகாராணியின் வருடாந்த உரையில் பல முக்கிய அம்சங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் மொத்தமாக 27 மசோதாக்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து சுமூகமாக பிரித்தானியா வெளியேறுவது குறித்த மசோதாவில் பொதுமக்களுக்கும், தொழில்துறைக்கும் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வது முக்கிய விடயமாக இந்த Great Repeal Bill மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.அல்-நூரி பள்ளிவாசலைத் தகர்த்த ஐ எஸ்
[Thursday 2017-06-22 09:00]

மொசூலில் உள்ள பெரிய பள்ளிவாசல் ஒன்றை இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பினர் வெடிவைத்து தகர்த்துவிட்டதாக இராக் படைகள் கூறுகின்றன.சாயும் தோற்றம் கொண்ட கோள் வடிவ கோபுரங்களைக் கொண்ட அந்த பிரபலமான இடத்தில்தான், ஐ.எஸ் . அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி 2014ல் தனது இஸ்லாமிய ராஜ்யத்தை (கலிஃபாட்) அறிவித்தார்.ஆனால், இந்த வளாகத்தை அமெரிக்க விமானம் சேதப்படுத்தியது என ஐ எஸ் அமைப்பு தனது செய்தி நிறுவனமான அமாக் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இந்த பள்ளிவாசலை வெடிக்கவைத்த நடவடிக்கை, ஐ ஸ் அமைப்பு தனது ''தோல்வியை அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்ட அறிவிப்பு'' என்று இராக் பிரதமர் ஹைதர் அல் அபடி தெரிவித்தார்.இங்கிலாந்து அரசி எலிசபத்தின் கணவர் பிலிப் மருத்துவமனையில்
[Thursday 2017-06-22 08:00]

இங்கிலாந்து அரசி எலிசபத்தின் கணவர் பிலிப்(96) முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அரசி ராணி எலிசபத்தின் கணவரும் இளவரசருமான பிலிப், இந்த ஆண்டு கோடை காலத்துக்கு பிறகு அரச பணிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என பக்கிங்ஹாம் அரண்மனை கடந்த மே மாதம் அறிவித்தது.இந்நிலையில், இளவரசர் பிலிப் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை இன்று வெளியிட்டுள்ள செய்தி வெளியிட்டுள்ளது.மனிதன் பூமியை கைவிடும் நேரம் நெருங்கிவிட்டது: ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் அதிர்ச்சி
[Thursday 2017-06-22 08:00]

வரும் காலங்களில் மனித இனம் வாழவேண்டும் என்றால் சந்திரனுக்கு 2020-லும், செவ்வாய்க்கு 2025-க்குள்ளும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்ப வேண்டும். ஏனென்றால் நாம் பூமியை விட்டு வெளியேற வேண்டிய காலம் மிக விரைவில் வரப்போகிறது என்று ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் கூறியுள்ளார்.உலகப் புகழ்பெற்ற அறிவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் எதிர்காலத்தில் மனித இனம் முற்றிலும் அழிந்து போகாமல், தொடர்ந்து வாழ வேண்டுமானால், பூமியை கைவிட்டு வேறு கிரகங்களில் மனிதன் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார்.வேற்று கிரகவாசிகளால் கடத்தப்பட்டுவிடக்கூடும்: 40000 அமெரிக்கர்கள் காப்பீடு
[Thursday 2017-06-22 08:00]

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’ வேற்று கிரகங்கள் பற்றி ஆய்வு செய்வதற்காக விண்வெளியில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியை நிறுவி, ஆராய்ச்சி செய்து வருகிறது. இதன் முடிவுகள் கடந்த சில தினங்களுக்குள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வேற்று கிரகவாசிகள் பற்றிய தகவல்கள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு நிலவியது.இந்த நிலையில் கலிபோர்னியாவில் ‘நாசா’ விஞ்ஞானி மரியோ பெரஸ் நேற்று முன்தினம் (இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு) ‘நாசா’ வின் கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார்.மகனை அடுத்த முடிக்குரிய இளவரசராக நியமித்தார் செளதி அரசர் சல்மான்
[Wednesday 2017-06-21 14:00]

செளதி அரேபியாவின் அரசர் தன்னுடைய மகன் மொஹமத் பின் சல்மானை, தனக்குப் பின் பட்டத்துக்கு வரும் வரிசையில் முதலாவதாக இருந்த தனது மருமகன் மொஹமத் பின் நயேஃபுக்கு பதிலாக, அடுத்த முடிக்குரிய இளவரசராக நியமித்துள்ளார். 31 வயதாகும் இளவரசர் மொஹமத் பின் சல்மான் செளதி அரேபியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியில் தொடர்ந்து கொண்டே நாட்டின் துணை பிரதமராகவும் இருப்பார் என்பதுதான் அரசர் சல்மான் ஆணையின் சாரம்சமாகும். மொஹமத் பின் சல்மான் மற்றும் மொஹமத் பின் நயேஃப் உள்நாட்டு பாதுகாப்பு தலைவர் பதவியிலிருந்து 57 வயதாகும் இளவரசர் மொஹமத் பின் நயேஃப் நீக்கப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.வெள்ளை சுறாவோடு மைக்கேல் ஃபெல்ப்ஸ் நீச்சல் போட்டி
[Wednesday 2017-06-21 14:00]

எல்லா காலத்திலும் மிகவும் வெற்றிகரமான ஒலிம்பிக் சாம்பியன் என்று கருதப்படும் மைக்கேல் ஃபெல்ப்ஸ், ஜூலையில் நடைபெற இருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக மிகப் பெரிய வெள்ளை சுறாவோடு போட்டி ஒன்றில் பங்கேற்கவுள்ளார். நீச்சலில் ஜாம்பவானாக உலக அளவில் கொண்டாடப்படும் தடகள வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ், கடலில் மிகவும் திறமையாக வேட்டையாடும் சுறாவோடு போட்டியிட இருப்பதாக டிஸ்கவரி சானல் தொலைக்காட்சியின் செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிவேக ப்ளட்ஹாண்ட் சூப்பர்சானிக் கார்
[Wednesday 2017-06-21 14:00]

வரும் அக்டோபர் 26-ஆம் தேதியன்று ப்ளட்ஹாண்ட் சூப்பர்சானிக் கார் சாலையில் வெள்ளோட்டம் நடத்தப்படவுள்ளது. இதன் சோதனையோட்டம் கார்ன்வாலில் நியூகே விமான நிலைய ஓடுபாதையில் இருந்து குறைவான வேகத்தில் மேற்கொள்ளப்படும்.அடுத்த ஆண்டு வேகத்தின் அனைத்து சாதனையும் முறியடிக்கும் விதமாக தென்னாப்பிரிக்காவில் களம் இறக்கப்படுவதற்கு முன்பு, அதிவிரைவாக செல்லும் இந்த காரின் சோதனையோட்டத்தை பொறியாளர்கள் மேற்கொள்ளவிருக்கின்றனர்.குடும்பப் பிரச்சனை நிர்வாகத்தை பாதிக்காது -பிரதமர் வெளிப்படை
[Wednesday 2017-06-21 14:00]

தனது குடும்பப் பிரச்னை பெரும் சர்ச்சையைக் கிளப்பி, அதன் காரணமாக ஒரு அசாதாரணமான சூழலை ஏற்படுத்திய காரணத்தால், அதற்கு வருத்தம் தெரிவித்து சிங்கப்பூர் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார், அந்நாட்டுப் பிரதமர் லீ சியென் லூங். சிங்கப்பூர் மக்களிடம் காணொளிக் காட்சி மூலம் உரையாற்றிய சிங்கப்பூர் பிரதமர் லீ, "38 ஆக்ஸ்லி ரோட்டிலுள்ள எங்களின் குடும்ப இல்லம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பூர்வீக வீடு குறித்து, கடந்த சில நாட்களாக என் சகோதரர்களுக்கும் எனக்குமிடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. எனக்கும், என் குடும்பத்தினருக்கும் இடையிலான இந்த சூழல் தொடர்பாக நான் சிங்கப்பூர் மக்களாகிய உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”.சவூதியில் குடும்ப வரி - தவிக்கும் இந்தியர்கள்
[Wednesday 2017-06-21 14:00]

சவூதி அரேபியாவில் வரும் ஜுலை 1 ஆம் தேதி முதல் குடும்ப வரி அமல்படுத்தப்பட உள்ளதால் இந்தியர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.வெளிநாடுகளிலிருந்து பலர் சவூதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். அதன்படி, சவூதி அரேபியாவில் தற்போது சுமார் 41 லட்சம் இந்தியர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். வெளிநாடுகளிலிருந்து சவூதிக்கு வேலைக்கு செல்லும் சிலர். அங்கு சென்ற சில நாட்களில் தங்களது மனைவி, குழந்தைகளை தங்களுடன் தங்க அழைத்து கொள்வர்.யுனிசெஃப்பின் நல்லெண்ணத் தூதரான 19 வயது சிரிய அகதி
[Wednesday 2017-06-21 09:00]

ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக 19 வயதான சிரிய அகதியான முசூன் அல்மெல்லீஹன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை யுனிசெஃப்பின் துணை நிர்வாக இயக்குனர் ஜஸ்டின் ஃபார்ஸித் வெளியிட்டார். அகதியான ஒருவர் யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் அவர் கூறினார். உள்நாட்டுப் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவைச் சேர்ந்த முசூன், ஜோர்டான் நாட்டிலுள்ள ஜாட்டாரி அகதிகள் முகாமில் வசித்து வருகிறார்.ட்ரம்பை ஒரு போதும் காதலித்தது இல்லை: - பிரான்ஸ் முன்னாள் அதிபர் மனைவி மறுப்பு
[Tuesday 2017-06-20 22:00]

ட்ரம்பை நான் ஒரு போதும் காதலித்தது இல்லை என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசியின் மனைவியும், மாடலுமான கர்லா புரூனி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசியின் மனைவி கர்லா புரூனி (49) காதல் வயப்பட்டிருப்பதாகவும், ட்ரம்பின் 2-வது மனைவி மார்லா மாப்பில்ஸ் விவாகரத்துக்கு கர்லா புரூனி காரணமாக இருந்ததாகவும் கூறப்பட்டது.பேஸ்புக்கில் அதிக லைக்குகள் பெற விரும்பி குழந்தையை அந்தரத்தில் தொங்கவிட்ட தந்தை அல்ஜீரியாவில் கைது: -
[Tuesday 2017-06-20 18:00]

சமூகவலைத்தளமான ஃபேஸ்புக்கில் அதிக எண்ணிக்கையில் `லைக்`பெற வேண்டும் என்பதற்காக, வீட்டு ஜன்னலில் இருந்து தனது குழந்தையை தொங்கவிட்ட ஒருவருக்கு அல்ஜீரியாவில் உள்ள ஒரு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ''1000 லைக்குகள் வேண்டும் இல்லையெனில் குழந்தையை தூக்கி போட்டுவிடுவேன்'' என்ற வாசகத்துடன் குழந்தையின் தந்தை வெளியிட்டார். மிகவும் உயரமான கட்டடத்தில் ஒரு ஜன்னலுக்கு வெளியே தனது குழந்தையைப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்க விடுவது போன்ற புகைப்படத்தை தாங்கிய பதிவை ''1000 லைக்குகள் வேண்டும், இல்லையெனில் குழந்தையை வெளியே விட்டுவிடுவேன்'' என்ற வாசகத்துடன் குழந்தையின் தந்தை வெளியிட்டார்.வாழ விரும்பாத முதியவர்கள் தற்கொலை செய்து கொள்ள உதவும் புதிய சேவை! Exit நிறுவனம் அறிமுகம்
[Tuesday 2017-06-20 18:00]

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று வாழ விரும்பாத முதியவர்கள் தற்கொலை செய்து கொள்ள உதவும் புதிய சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்படும் நபர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது. இதுபோன்ற ஒரு சேவையை அரசு அனுமதி பெற்ற Exit என்ற நிறுவனம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் உதவியுடன் குணப்படுத்த முடியாத நோய் உள்ளவர்கள் சட்டப்பூர்வமாக தற்கொலை செய்து கொள்ளலாம்.இந்தோனீஷிய சிறையிலிருந்து சுரங்கம் வழியாக தப்பிய 4 கைதிகள்:
[Tuesday 2017-06-20 18:00]

சுரங்கம் ஒன்றை பயன்படுத்தி பாலி தீவிலுள்ள கெரோகோபான் சிறையில் இருந்து தப்பி சென்றுள்ள 4 வெளிநாட்டினரை இந்தோனீஷிய போலீஸார் தேடி வருகின்றனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷௌயுன் எட்வர்ட் டேவிட்சன், பல்கேரியாவை சேர்ந்த டிமிதார் நிகோலோஃப் இந்தியாவை சேர்ந்த சையத் முகமது மற்றும் மலேசியாவை சேர்ந்த டீ கோக் கிங் ஆகிய நான்கு கைதிகளும் தப்பிவிட்டதாக இனம்காணப்பட்டுள்ளனர். இந்த 4 கைதிகளும் இன்னும் இந்த ரிசாட் தீவில் தான் இருக்கிறார்கள் என தான் நம்புவதாக சிறையின் ஆளுநர் டோனி நாங்கோலான் கூறியுள்ளார்.முஸ்லிம்கள் மீது வேனை ஏற்றி தாக்குதல்
[Tuesday 2017-06-20 09:00]

லண்டனில் மசூதி அருகே நடந்து சென்றவர்கள் மீது வேனை மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.லண்டனில் மசூதிக்கு அருகே நடந்து சென்றவர்கள் மீது வேனை மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 10 பேர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மசூதியில் தொழுகை நடத்திவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள். உள்ளூர் நேரப்படி நள்ளிரவுக்கு சற்று நேரத்துக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.கனடாவில்து ரதிஷ்டவசமாக பறிபோனது இரண்டு இளம்பெண்கள் உயிர்:
[Tuesday 2017-06-20 07:00]

ஒட்டாவாக்கு அருகில் உள்ள Stittsville என்ற நகரில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் Fernbank சாலையில் கார் ஒன்று பயணமாகியுள்ளது. இந்த காரில் 17 வயதான 3 இளம்பெண்கள் மற்றும் 18 வயதான ஒரு வாலிபர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் சாலையில் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரம் மீது மோதியதாக கூறப்படுகிறது. கார் மரம் மீது மோதிய வேகத்தில் பல மீற்றர் தூரத்திற்கு சாலையில் உருண்டு அருகில் உள்ள வனத்தில் விழுந்துள்ளது.லண்டன் தீ விபத்து: - பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரிப்பு
[Monday 2017-06-19 17:00]

லண்டன் தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளதாக பிரித்தானிய பொலிசார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.லண்டனில் உள்ள Grenfell Tower குடியிருப்பில் கடந்த புதன்கிழமை அன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்து விட்டதாக முதற்கட்டமாக தெரியவந்தது. பின்னர், நேற்று வெளியான தகவலில் பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.உலகில் அமைதியான நாடுகளில் முதல் இடத்தை பெற்ற ஐஸ்லாந்து!
[Monday 2017-06-19 17:00]

அவுஸ்திரேலியாவில் செயல்படும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் 2017ம் ஆண்டில் அமைதியான நாடுகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டது.மொத்தம் 163 நாடுகள் இடம் பெற்ற அந்த பட்டியலில் , அமைதியான நாடுகளில் முதல் இடத்தை ஐஸ்லாந்தும், இரண்டாமிடத்தை டென்மார்க்கும் மூன்றாவது இடத்தை ஆஸ்திரியாவும் பிடித்துள்ளன. ஆசிய நாடுகளான பூடான் 13வது இடத்திலும், இலங்கை 80வது இடத்திலும், வங்கதேசம் 84வது இடத்திலும் உள்ளது கவனிக்கத்தக்கது. இந்தியாவுக்கு 137வது இடம் கிடைத்துள்ளது.கொலம்பியாவில் குண்டு வெடிப்பு: 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு
[Monday 2017-06-19 08:00]

கொலம்பியா நாட்டின் தலைநகர் பக்கோட்டா. அங்குள்ள ஜோனா ரோசா பகுதியில் ஒரு வணிக வளாகம் உள்ளது. அந்த வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் ‘ஆன்டினோ ஷாப்பிங் சென்டர்’ என்ற கடையில் தந்தையர் தினத்துக்காக பரிசுப்பொருட்கள் வாங்குவதற்காக கூட்டம் அலைமோதியது.


Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா