Untitled Document
August 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ஐந்து வயது மகனை பிளாஸ்டிக் கயிறால் கட்டிப்போட்டு கொடுமைப்படுத்திய தாய்!
[Sunday 2017-03-19 17:00]


தாய்லாந்தில் 5 வயது மகனை பிளாஸ்டிக் கயிறால் கட்டிப்போட்டு கொடுமைப்படுத்திய தாயின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.தாய்லாந்தில் உள்ள பாங்காக் சாலையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
அதில் இளம் தாய் ஒருவர் சாலையில் உள்ள இரும்பு தூண் அருகே தன்னுடைய 5 வயது மகனின் தலையில் தன் காலை வைத்து அழுத்துகிறார்.

தாய்லாந்தில் 5 வயது மகனை பிளாஸ்டிக் கயிறால் கட்டிப்போட்டு கொடுமைப்படுத்திய தாயின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.தாய்லாந்தில் உள்ள பாங்காக் சாலையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதில் இளம் தாய் ஒருவர் சாலையில் உள்ள இரும்பு தூண் அருகே தன்னுடைய 5 வயது மகனின் தலையில் தன் காலை வைத்து அழுத்துகிறார்.

  

பின்னர் பிளாஸ்டிக் கயிறால் சிறுவனின் தலை, கைப்பகுதியை தூணுடன் இணைத்து கட்டுகிறார்.இந்த சமயத்தில், அழும் சிறுவன். என்னால் மூச்சு விடமுடியவில்லை என கதறுவது போல வீடியோவில் உள்ளது.இதை அருகிலிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் இதுவரை 2 மில்லியன் தடவைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.இந்த வீடியோவை பார்த்த பொலிசார், இரக்கமற்ற செயலை செய்த அந்த பெண்ணை தற்போது தேடி வருகிறார்கள்.

  
   Bookmark and Share Seithy.comஇங்கிலாந்தில் 153 கிலோ எடையில் ராட்சத சமோசா: - முஸ்லீம் தொண்டு நிறுவனம் உலக சாதனை
[Wednesday 2017-08-23 17:00]

இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உள்ள முஸ்லீம் தொண்டு நிறுவனம் ஒன்று உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டது. நேற்று லண்டனில் உள்ள ஒரு மசூதியில் பலர் இணைந்து உலகின் மிகப்பெரிய சமோசா செய்துள்ளனர்.அவர்கள் 153.1 கிலோ எடையுள்ள, ஆசியாவில் பிரபல திண்பண்டமான சமோசா செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.சாம்பியன் பட்டம் வென்ற பிரபல பொடி பில்டர் டல்லாஸ் மெக்கார்வர் 26 வயதில் மரணம்!
[Wednesday 2017-08-23 17:00]

சாம்பியன் பட்டம் வென்ற பிரபல பாடிபில்டர் டல்லாஸ் மெக்கார்வர் 26 வயதில் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த திங்கட்கிழமை அன்று அவர் உணவு குழாயில் உணவு அடைத்து மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார் என்று தகவல் தெரிவிக்கின்றன. டல்லாஸ் மெக்கார்வர் என்பவர் பிரபல WWE நட்சத்திரமான டானா புரூக் என்பவரின் காதலன் ஆவார்.ஹாங்காங் நகரை சுழற்றியடித்த ஹாட்டோ புயல்: - வெள்ளக் காடான தெற்கு சீனா
[Wednesday 2017-08-23 17:00]

ஆசியாவின் பொருளாதார மையம் என அழைக்கப்படும் ஹாங்காங் நகரை இன்று பத்தாம் எச்சரிக்கை எண் கொண்ட ஹாட்டோ புயல் தாக்கியது. மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த பெரும்புயலால் கடல் அலைகள் சீற்றத்துடன் நகர வீதிகளுக்குள் பாய்ந்து மோதின.உயிருக்கு போராடிய டயானா: - காப்பாற்றாமல் போட்டோ எடுத்த புகைப்படக் கலைஞர்கள்
[Wednesday 2017-08-23 17:00]

விபத்து நடந்த பின்னர் கார் உள்ளே உயிருக்கு போராடிய டயானாவை காப்பாற்றாமல் புகைப்படக் கலைஞர்கள் அவரை புகைப்படம் எடுத்தார்கள் என இளவரசர் ஹரி கூறியுள்ளார். பிரித்தானியா இளவரசி டயானா கடந்த 1997ல் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். காதலருடன் டயானா காரில் சென்று கொண்டிருக்கும் போது பின்னாடியே அவரை புகைப்படம் எடுக்க ஏராளமான புகைப்பட கலைஞர்கள் துரத்தி வந்தார்கள்.ஆபத்தான வெடிகுண்டுகளை அதிக அளவில் தயாரிக்குமாறு உத்தரவிட்ட வடகொரியா அதிபர்!
[Wednesday 2017-08-23 17:00]

குவாம் தீவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை அழித்து விடுவோம் என்று மிரட்டிவரும் வடகொரியாவுக்கு பதில் அளிக்கும் வகையில் அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னர் குறிப்பிட்டிருந்தார். எனினும், பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் ஏற்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.சாலையின் நடுவே நடனமாடிய 14 வயது சிறுவன் கைது!
[Wednesday 2017-08-23 07:00]

சவுதி அரேபியாவின் பரபரப்பான சாலையின் நடுவே மெக்ரீனா எனும் புகழ்பெற்ற பாடலுக்கு நடனமாடும் 14 வயது சிறுவனின் காணொளி ட்விட்டரில் வைரலாக பரவிய நிலையில், அச்சிறுவன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜெட்டா நகரின் முக்கிய சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தவறான பொது நடத்தையில் ஈடுபட்டதாக அச்சிறுவன் மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக ஒரு அறிக்கை கூறுகிறது.சீனாவில் செல்லப்பிராணிகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை: - மக்களிடையே அமோக வரவேற்பு
[Tuesday 2017-08-22 18:00]

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள விலங்குகள் சுகாதார மையம் ஒன்றில் செல்லப்பிராணிகளுக்கு அக்கு பஞ்சர் சிகிச்சை மூலம் பல நோய்கள் குணப்படுத்தப்படுகிறது.சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான அக்குபஞ்சர் முறை மூலம் நீளமான ஊசி உடலின் வலி உள்ள பகுதியில் குத்தப்படும். அதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு உடலில் ஏற்பட்ட வலி குணமாக்கப்படும். இது போன்று செல்லப்பிராணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.கணவனின் பேச்சைக் கேட்காமல் முன்னால் சென்றதால் மனைவிக்கு விவாகரத்து!
[Tuesday 2017-08-22 17:00]

சவூதியில் சிறிய காரணங்களுக்காக விவாகரத்து கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. அந்த வரிசையில் மனைவியின் சிறிய செயலுக்காக கணவன் விவாகரத்து கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.இளம்பெண்களை குறிவைத்து பாலியல் தாக்குதல் நடத்தும் மர்ம நபர்: - தகவல் கொடுத்தால் 10,000 பவுண்ட் பரிசு
[Tuesday 2017-08-22 17:00]

பிரித்தானிய நாட்டில் இளம்பெண்களை குறிவைத்து பாலியல் தாக்குதல் நடத்தி வரும் நபர் குறித்து தகவல் கொடுத்தால் 10,000 பவுண்ட் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு பொலிசார் அறிவித்துள்ளனர்.பிரித்தானிய தலைநகரான லண்டனில் கடந்த 2016-ம் ஆண்டில் மர்ம நபர் ஒருவர் இளம்பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார்.அமெரிக்காவில் கைதியை சுட்டுக்கொன்ற நீதிபதி: - பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
[Tuesday 2017-08-22 17:00]

அமெரிக்காவில் விசாரணைக்கு வந்த கைதி ஒருவர் தாக்குதலில் ஈடுப்பட்டதை தொடர்ந்து அவரை நீதிபதி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓஹியோ மாகாணத்தில் உள்ள Steubenville நகர் நீதிமன்றத்தில் தான் இத்துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.முழு சூரிய கிரகணம்: - தொலைநோக்கிகள் மூலம் பார்த்து மகிழ்ந்த அமெரிக்க மக்கள்
[Tuesday 2017-08-22 07:00]

பல ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள முழு சூரிய கிரகணத்தை அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் தொலைநோக்கிகள் மூலம் மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனை சந்திரன் மறைக்கும் தன்மைக்கு ஏற்ப, முழுமையாக மறைத்தால் முழு கிரகணம், பகுதியாக மறைத்தால் பகுதி கிரகணம், கங்கண கிரகணம், கலப்பு கிரகணம் எனப் பல வகை பெயர்களில் அழைக்கப்படுகின்றது.இத்தாலி இச்சியா தீவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: - பெண் ஒருவர் பலி
[Tuesday 2017-08-22 07:00]

இத்தாலியின் இச்சியா தீவில் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கதால் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அருகே நேப்லெஸ் கடலில் அந்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்சியா தீவு பிரபல சுற்றுலா தலமாக உள்ளது.ஸ்பெயினின் பார்சிலோனாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி சுட்டுக்கொலை: - பொலிசார் அதிரடி
[Tuesday 2017-08-22 07:00]

ஸ்பெயினின் பார்சிலோனாவில் 13 பேரின் உயிரை வாங்கிய தீவிரவாதி சரமாரியாக சுட்டு கொல்லப்பட்டான்.பார்சிலோனாவில் லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் இருக்கும் ப்லகா கடலுன்யா பிளாசா அருகே பொதுமக்கள் சாலையை கடந்து கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த வேன் ஒன்று பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதியது.1250 கிலோமீட்டர் தூரத்தை நான்கரை மணி நேரத்தில் கடக்கும் அதிவேக புல்லெட் ரயில்!
[Monday 2017-08-21 18:00]

உலகில் உள்ள அதிவேக ரெயில் சேவைகளில் 60 சதவீதம் வழித்தடங்கள் (22 ஆயிரம் கிலோமீட்டர்) சீனாவில் அமைந்துள்ளன. இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு சீனாவின் பீஜிங் - டியான்ஜின் நகரங்களுக்கு இடையிலான அதிவேக புல்லெட் ரெயில் சேவைகளின் அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கிலோமீட்டராக உயர்த்தப்பட்டது.கென்யாவிற்கு சுற்றுலா சென்ற சுவிஸ் தம்பதி படுகொலை: - பொலிஸ் அதிர்ச்சி தகவல்
[Monday 2017-08-21 18:00]

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த தம்பதி இருவர் சுற்றுலா சென்றபோது படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 70 வயதான Borner Paul மற்றும் Marriane Hornel என்ற தம்பதி ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவிற்கு கடந்த சனிக்கிழமை சுற்றுலா சென்றுள்ளனர்.புதிதாக பணியில் சேர்ந்த காவலரின் துப்பாக்கி வெடித்ததில் நிகழ்ந்த விபரீத சம்பவம்!
[Monday 2017-08-21 17:00]

ஜேர்மனி நாட்டில் உள்ள விமான நிலையத்தில் புதிதாக பணியில் சேர்ந்த காவலர் ஒருவர் தவறுதலாக தன்னுடைய துப்பாக்கியை சுட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மன் தலைநகரான பெர்லினில் உள்ள Tegel விமான நிலையத்தில் இருந்து Eurowings என்ற விமானம் புறப்பட தயாராக இருந்துள்ளது. ஜேர்மனியில் உள்ள Cologne விமான நிலையத்திற்கு இன்று காலை புறப்பட இருந்தபோது அந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துள்ளது.சட்டவிரோத மியான்மர் அகதிகள்: - சாட்டை சொடுக்கும் மனித உரிமை ஆணையம்!
[Monday 2017-08-21 17:00]

மியான்மர் நாட்டிலிருந்து புத்தமதவெறியர்களால் உயிர்பயத்துடன் தப்பி இந்தியா வந்த ரோகிங்யா இசுலாமியர்களை நாடுகடத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இது குறித்த செய்திகளை வைத்து, தேசிய மனித உரிமை ஆணையம் சுயவழக்காகப் பதிவுசெய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.இன்று தென்கொரியா அமெரிக்கா கூட்டு போர் பயிற்சி: -வடகொரியா எச்சரிக்கை!
[Monday 2017-08-21 09:00]

அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. தன்மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதிய பொருளாதார தடை விதிக்க காரணமான அமெரிக்காவின் குவாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா அதிரடியாக அறிவித்தது.உலகக் கோப்பைக்குத் தயாராகும் கட்டார்: - தொப்பி வடிவில் அமைக்கப்பட்ட மைதானம்
[Monday 2017-08-21 07:00]

2022-ம் ஆண்டு, பிஃபா உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் கத்தாரில் நடக்க இருக்கிறது. தீவிரவாதத்துக்கு கத்தார் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் கத்தார் உடனான உறவை முறித்துக்கொண்டுள்ளன. இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இது ஒரு புறமிருக்க, 2022-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்துத் தொடருக்கான முன்னேற்பாடுகளை கத்தார் நாடு தொடங்கியுள்ளது.அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதல்: - சிங்கப்பூர் கடலில் 10 வீரர்கள் மாயம்
[Monday 2017-08-21 07:00]

அமெரிக்காவின் ஜான் மெக்கெயின் என்ற நாசகாரி போர்க்கப்பல் சிங்கப்பூர் கடல் பகுதியில் இன்று சென்று கொண்டிருந்தது. அது மிகவும் அதி நவீன தொழில்நுட்ப வசதி கொண்டது. இதில் அதிக சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் உள்ளன.


SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா