Untitled Document
March 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
படையினரிடம் சரணடைந்ததை கண்டவர்கள் யாருமில்லை! - கோத்தா கூறுகிறார்
[Monday 2017-03-20 10:00]

போரின் இறு­திக் கட்­டத்­தில் படை­யி­ன­ரி­டம் சர­ணடை­ந்ததைப் பார்த்தவர்கள் எவரும் இல்லை என்று முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்­கி­ல பத்­தி­ரி­கைக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

போரின் இறு­திக் கட்­டத்­தில் படை­யி­ன­ரி­டம் சர­ணடை­ந்ததைப் பார்த்தவர்கள் எவரும் இல்லை என்று முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்­கி­ல பத்­தி­ரி­கைக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

  

இலங்கை அரசு உரு­வாக்­க­வுள்ள காணா­மற்­போ­னோர் அலு­வ­ல­கம் யதார்த்­த­பூர்­வ­மற்­றது. காணா­மற்­போ­ன­வர்­கள் குறித்து பல சம்­ப­வங்­கள் உள்­ளன. அதில் ஒரு விட­யத்­தையே நான் நவ­நீ­தம் பிள்­ளை­யி­டம் சுட்­டிக்­காட்­டி­னேன். போரில் தங்­கள் குடும்­பத்­த ­வர்­கள் உயி­ரி­ழந்­ததை ஏற்­ப­தற்கு எப்­படி பெற்­றோர்­கள் தயா­ரில்லை என்­ப­தை­யும் அவர்­கள் உயி­ரு­டன் இருக்­கின்­றார்­கள் என்று அவர்­கள் நம்­பு­வ­தை­யும் நான் சுட்­டிக்­காட்­டினேன்.

இளை­யோர் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தில் இணை­யும் போது அவர்­க­ளது பெற்­றோர்­கள் அங்கு இருப்­ப­தில்லை.தங்­கள் பிள்­ளை­கள் எங்­கி­ருக்­கின்­றார்­கள் என்­ப­தும் அவர்­க­ளுக்­குத் தெரி­யாது. இதன் கார­ண­மாக அவர்­கள் மோத­லில் கொல்­லப்­பட்­ட­தும், அவர்­கள் உடல்­கள் மீட்­கப்­ப­டாத போது, பெற்­றோர்­கள் தங்­கள் பிள்­ளை­கள் உயி­ரு­டன் இருப்­ப­தா­கக் கரு­து­கின்­ற­னர்.

இலங்­கை­யில் இர­க­சிய முகாம்­கள் என்று எவை­யும் இல்­லாத போதி­லும், இந்­தப் பெற்­றோர் தங்­கள் பிள்­ளை­கள் இர­க­சிய முகாம் களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று நம்­பு­கின்­ற­னர். நவ­நீ­தம் பிள்ளை வடக்­கில் மக்­களை சந்­தித்­த­வேளை, அவ­ரி­டம் பலர் தங்­கள் குடும்­பத்­த­வர்­கள் இர­க­சிய முகாம் க­ளில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று தெரி­வித்­தி­ருந்­த­னர். அவ­ரும் அதனை நம்­பி­னார். காணா­மற்­போ­ன­வர்­க­ளில் சிலர் வெளி­நா­டு­க­ளில் வாழ்­கின்­ற­னர்.

இதற்­கான உதா­ர­ணத்தை நான் நவ­நீ­தம்­பிள்­ளை­யி­டம் முன்­வைத்­தேன்.காணா­மற்­போ­ன­வர்­கள் விவ­கா­ரம் விசா­ரணை செய்­வ­தற்கு இல­கு­வான ஒன்­றல்ல. அது மிக­வும் குழப்­ப­க­ர­மா­னது. இரா­ணு­வத்­தி­டம் எவ­ரும் சர­ணை­டைந்­த­தற்­கான ஆதா­ரங்­கள் எது­வு­மில்லை. மக்­கள் பல வதந்­தி­களை அடிப்­ப­டை­யாக வைத்து பல கதை­களை முன்­வைத்­த­னர். அவர்­கள் சிலர் சொல்­வ­தா­கவே கதை­க­ளைச் சொல்­கின்­ற­னர். சர­ணை­டை­வ­தைப் பார்த்­த­வர்­கள் எவ­ரும் இல்லை. போரின் யதார்த்­தம் இதுவே. இவற்றை நம்ப முடி­யாது.

வடக்­கில் போர் இடம்­பெற்­ற­வேளை 5 ஆயி­ரம் படை­யி­னர் கொல்­லப்­பட்­ட­னர். வலு­வான இரா­ணு­வத்­தி­லேயே இத்­தனை பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­னர் என்­றால், விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தில் எத்­தனை பேர் கொல்­லப்­பட்­டி­ருப்­பர் என்­பதை நினைத்து பார்க்க வேண்­டும்.

கிரா­மத்­துத் தமி­ழர்­க­ளுக்கு நாட்­டின் அரச தலை­வர், தலைமை அமைச்­சர் ஆகி­யோ­ரின் பெயரே தெரி­யாது. இப்­ப­டி­யா­ன­வர்­கள், இரா­ணுவ அதி­கா­ரி­யைச் சுட்­டிக்­காட்டி, அவ­ரி­டமே தங்­க­ளின் குடும்­பத்­த­வர் கள் சர­ண­டைந்­த­னர் என்று எப்­ப­டித் தெரி­விக்க முடி­யும்> என்று கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.comகலப்பு நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தினார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்!
[Thursday 2017-03-23 07:00]

சர்வதேச நீதிபதிகள் அடங்கிய, கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, போர்க்குற்ற விசாரணை தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்த கருத்துக்களை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மீண்டும் வலியுறுத்தினார்.சிறிலங்காவுக்கு காலஅவகாசம் கடப்பாடுகளில் இருந்து தப்பிக்கவே உதவும்! - கஜேந்திரகுமார் Top News
[Thursday 2017-03-23 07:00]

மேலும் இரண்டு வருட கால அவகாசம் கொடுப்பதென்பது உண்மையில் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் தனது கடப்பாடுகளிலிருந்து தப்பித்துச்செல்லவே வழிவகுக்கக்கூடும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.தண்டனை வழங்கப்படாத நிலை தொடர்கிறது! - சர்வதேச மன்னிப்புச் சபை
[Thursday 2017-03-23 07:00]

மிகவும் முக்கியமான சம்பவங்களைத் துரிதமாக விசாரணைக்கு உட்படுத்தி, அச்சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படாத நிலை இலங்கையில் தொடர்ந்து கொண்டே செல்கின்றது என, சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம்சாட்டியுள்ளது.மேஜர் ஜெனரல் கல்லகே மீது போர்க்குற்றச்சாட்டு - வீசா மறுத்தது அவுஸ்ரேலியா!
[Thursday 2017-03-23 07:00]

போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு வீசா வழங்க அவுஸ்ரேலியா மறுத்துள்ளது. அவுஸ்ரேலிய குடியுரிமை பெற்றுள்ள தனது சகோதரரைப் பார்ப்பதற்காகவே, மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே ஒரு மாத கால அஸ்ரேலிய வீசாவுக்கு விண்ணப்பித்திருந்தார்.இலங்கை இன்னும் செய்ய வேண்டியது அதிகம்! - கனடா Top News
[Thursday 2017-03-23 07:00]

இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய விடயங்கள் இன்னமும் இருப்பதாக கனடா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடட போதே கனடா பிரதிநிதி இதனைத் தெரிவித்தார்.விரைவில் கைதாகிறார் ஜெனரல் அமல் கருணாசேகர!
[Thursday 2017-03-23 07:00]

இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படுவார் என்று பொலிஸ் தலைமையக தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை மற்றும் ஆட்கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல், மற்றும் தாக்குதல்களில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஜெனிவாவில் இந்தியா மௌனம்!
[Thursday 2017-03-23 07:00]

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நடந்த இலங்கை தொடர்பான விவாதத்தின் போது, இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்தது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பித்த அறிக்கை மீது ஜெனிவாவில் நேற்று விவாதம் இடம்பெற்றது.லசந்த கொலையின் பின்னணியில் ராஜபக்ஷக்கள்! - சுஜீவ சேனசிங்க
[Thursday 2017-03-23 07:00]

சண்டே லீடர் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் ராஜபக்ஷக்களே உள்ளனர். பன்றிகளை கொல்லும் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தியே அவரைக் கொன்றுள்ளனர் என சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, தெரிவித்துள்ளார்.விமல் வீரவன்சவின் உண்ணாவிரதத்தினால் மக்கள் சட்டத்தைக் கையில் எடுக்கும் நிலை ஏற்படுமாம்!
[Thursday 2017-03-23 07:00]

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச 71 நாட்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை. எனவே தனக்கான விடுதலை நீதிமன்றத்தினூடாக உறுதி செய்யப்படும் என்பதில் நம்பிக்கை இழந்துள்ளதனால் நேற்றுக் காலை முதல் அவர் உண்ணாவிரப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.சூடு பிடிக்கும் மார்க்கம் - தோர்ண்ஹில் தேர்தல் - ராகவனைப் பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள்! கனடிய எதிர்க்கட்சித் தலைவி றோணா அம்புறோஸ் Top News
[Wednesday 2017-03-22 20:00]

கடந்த ஞாயிற்றுக் கிழமை மார்க்கம் - தோர்ண்ஹில் தொகுதியில் அமைந்திருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் ராகவன் பரஞ்சோதி அவர்களின் தேர்தல் அலுவலகத்துக்கு றோணா அம்புறோஸ் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். றோணா அம்புறோஸ் கன்சர்வேட்டிவ் கட்சியின் இடைக்காலத் தலைவியாகவும் மத்திய அரசின் தற்காலிக எதிர்க்கட்சித் தலைவியாகவும் உள்ளார். மார்க்கம் - தோர்ண்ஹில் தொகுதியில் வாழும் பெருந்திரளான தமிழ் மக்களுடன் இதர பல்லின மக்களும் கூடி அவரை மகிழ்வோடு வரவேற்றனர். தேர்தல் அலுவலகத்தில் திரண்டிருந்து அவரை வரவேற்ற தொண்டர்கள், கலந்து சிறப்பித்த ஆதரவாளர்கள் மற்றும் 2018 இல் வரவிருக்கும் மானிலத் தேர்தலில் குதித்திருக்கும் அரசியல்வாதிகள் எனப் பலருடனும் உரையாடினார்.இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது! - யாழ்ப்பாணத்தில் போராட்டம் Top News
[Wednesday 2017-03-22 18:00]

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என்று கோரி இன்று யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் இன்று காலை மனித உரிமை ஆர்வலர்களால் யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கைக்கு வழங்கும் கால அவகாசமானது சாட்சியங்களை அழிப்பதற்கான செயற்பாடாக அமையும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.கொழும்பில் 551 பேரைப் படுகொலை செய்தார் கோத்தா! - மனோ கணேசன்
[Wednesday 2017-03-22 18:00]

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட 551 பேரை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச படுகொலை செய்தார் என்று அமைச்சர் மனோ கணேசன் குற்றம்சுமத்தியுள்ளார். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.சிறிலங்காவுக்கு இந்தியா ஆதரவளிக்க கூடாது: பிரதமர் வி.உருத்திரகுமாரன் சென்னையில் வேண்டுகோள் !! Top News
[Wednesday 2017-03-22 18:00]

ஐ.நா மனித உரிமைச்பையில் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்க கூடாது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சென்னையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமைச்சபை விவகாரம், மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்கானதும் நீதிக்குமான போராட்டம் குறித்த சமகால நிலைவரம் குறித்த செய்தியாளர் சந்திப்பொன்று சென்னையில் இடம்பெற்றிருந்தது.எட்டாவது நாளாக மருதங்கேணியில் தொடரும் போராட்டம்! Top News
[Wednesday 2017-03-22 18:00]

போரின் இறுதியில் சரணடைந்து மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலத்தின் முன்னால் இன்று 8ஆவது நாளாகவும், தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோரியும் இலங்கை அரசாங்கத்தக்கு கால அவகாசம் வழங்குவது தமக்கான தீர்வினை கிடைக்கச் செய்வதில் பெரும் சிக்கல் நிலை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தினர்.செபமாலை அடிகளாரின் அலுவலகத்தைச் சோதனையிட்ட புலனாய்வுப் பிரிவினர்!
[Wednesday 2017-03-22 18:00]

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமர்வுகளில் கலந்துகொண்டுள்ள மன்னார் சிவில் சமூக குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை அடிகளாரின் மன்னாரிலுள்ள அலுவலகம் புலனாய்வுப் பிரிவினரால் சோதனையிடப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக பல பிரதிநிதிகளும், சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் ஜெனீவா கூட்டத் தொடரிலும், அதுசார்ந்த உபக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு உரையாற்றி வருகின்றனர்.வித்தியா கொலை வழக்கு - 98 வீத விசாரணைகள் நிறைவு!
[Wednesday 2017-03-22 18:00]

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் 98 வீதம் நிறைவடைந்துள்ளது என, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால், இன்றுதெரிவித்தார். மாணவி, 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மட்டக்களப்பில் போராட்டம்! Top News
[Wednesday 2017-03-22 18:00]

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாட்சி அரசாங்கம் என கூறிக்கொள்ளும் மைத்திரி ரணில் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறவேண்டுமானால் காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என தாய் ஒருவர் கேட்டுக்கொண்டார்.மட்டக்களப்பில் மனித சங்கிலிப் போராட்டம்! Top News
[Wednesday 2017-03-22 18:00]

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கடந்த ஒருமாத காலமாக முன்னெடுத்து வந்த சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று முதல் மனித சங்கிலி போராட்டமாக மாற்றமடைந்துள்ளது. வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு இதுவரை எந்த தீர்வுகளும் எட்டப்படாத நிலையிலேயே போராட்ட வடிவத்தினை மாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.புதிய இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க!
[Wednesday 2017-03-22 18:00]

யாழ். மாவட்ட படைகளின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க, இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவுக்குப் பயணமாக முன்னர் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.சிறைக்குள் உண்ணாவிரதத்தில் குதித்தார் விமல் வீரவன்ச!
[Wednesday 2017-03-22 18:00]

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனார். விமல் வீரவன்சவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை கோரிய மனு நேற்று நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>11-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற United badminton League GTA நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா