Untitled Document
April 27, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
அஸ்வின் சுந்தர் கார் விபத்தில் சதி நடந்துள்ளதா? - ஆய்வு செய்ய பொலிசார் முடிவு
[Monday 2017-03-20 17:00]

அஸ்வின் சுந்தர் கார் விபத்தில் சதி நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் இரு தினங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் சொகுசு காரில் பயணிக்கும் போது கார் விபத்துக்குள்ளானதில் பலியானார்.
இது குறித்து விசாரித்து வரும் பொலிசருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.பொலிசார் கூறுகையில், அஸ்வின் கார் பந்தய வீரர் என்பதால் காரில் அதிவேகமாக போக உதவும் நைட்ரஸ் ஆக்சைடு பயன்படுத்தியிருப்பார் என எண்ணுகிறோம்.

அஸ்வின் சுந்தர் கார் விபத்தில் சதி நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் இரு தினங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் சொகுசு காரில் பயணிக்கும் போது கார் விபத்துக்குள்ளானதில் பலியானார். இது குறித்து விசாரித்து வரும் பொலிசருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.பொலிசார் கூறுகையில், அஸ்வின் கார் பந்தய வீரர் என்பதால் காரில் அதிவேகமாக போக உதவும் நைட்ரஸ் ஆக்சைடு பயன்படுத்தியிருப்பார் என எண்ணுகிறோம்.

  

ஒரு வாகனம் விபத்துக்குள்ளானால் தீப்படிக்கும், ஆனால் சில நொடியில் பயங்கர தீ பரவ வாய்ப்பில்லை.இது குறித்து அறிய விபத்தில் கருகிய சொகுசு காரை பிரத்யேக ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அஸ்வின் சுந்தர் சர்வதேச கார் பந்தய வீரர் என்பதால் விபத்தில் சதி ஏதேனும் நடந்திருக்கிறதா என்றும் விசாரத்து வருகிறோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.comஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்ட 84 ஐ.ஏ.எஸ் 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள்: - யோகி அதிரடி உத்தரவு
[Thursday 2017-04-27 08:00]

உத்தரப்பிரதேசத்தில் 84 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 138 உயர் அதிகாரிகள் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதில் இருந்து அன்றாடம் மாற்றங்களை சந்தித்து வருகிறது அம்மாநில அரசு நிர்வாகம்.அதிமுக-வைச்சேர்ந்த 28 எம்.எல்.ஏக்கள் புதிய கோஷ்டியாக உருவெடுப்பு: - அதிமுகவில் திடீர் பரபரப்பு
[Thursday 2017-04-27 07:00]

அதிமுக-வைச்சேர்ந்த 28 எம்.எல்.ஏக்கள் திடீரென புதிய கோஷ்டியாக உருவெடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுக கோஷ்டிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பேச்சுவார்த்தைக்கு தயாராகிவிட்டனர்.இருவரும் சசிகலா, தினகரன் இல்லாத அதிமுகவை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்கு தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்: -சீமான் வலியுறுத்தல்
[Wednesday 2017-04-26 18:00]

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் வைகோ அவர்கள் தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டு, 20 நாட்களுக்கு மேலாகச் சிறைப்பட்டிருப்பது மிகுந்த மனவருத்தத்தைத் தருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 15ந் தேதி சென்னை ராணிசீதை மகாலில் நடைபெற்ற ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்ற நூலின் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய அண்ணன் வைகோ அவர்கள் தமிழீழதில் அரங்கேறிய இனப்படுகொலையை பற்றி மிக உருக்கமாகவும் அதற்கு காரணமான அன்றைய சிங்கள இந்திய கூட்டு சதியை பற்றி மிக தெளிவாகவும் பேசினார்.டிடிவி.தினகரனுக்கு 7 நாள் போலீஸ் காவல்: - நீதிமன்றம் உத்தரவு
[Wednesday 2017-04-26 17:00]

டிடிவி.தினகரனுக்கு 7 நாள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டது டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம்.இரட்டை இலை சின்னம் பெற பேரம் பேசியதாக சுகேஷ் சந்திரசேகர் ஏப்ரல் 17ம் தேதி டெல்லியில் கைதானார். சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரனுக்கு டெல்லி போலீஸ் நேரில் சம்மன் அளித்தது. சம்மனை அடுத்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முன் தினகரன 4 நாட்கள் ஆஜரானார். இதையடுத்து, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக டிடிவி.தினகரன் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.தந்தைக்காக காத்திருந்த சிறுவனை பேயென்று நினைத்து அடித்தே கொலை செய்த நபர்!
[Wednesday 2017-04-26 17:00]

தந்தைக்காக காத்திருந்த சிறுவனை பேயென்று நினைத்து அடித்தே கொலை செய்த அதிர்ச்சி சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. இந்தியாவின் அசாம் மாநிலத்தில் சால்னா பகுதியில் தனது தந்தையின் வரவிற்காக வீதியின் ஓரமாக 3 வயது சிறுவன் ஒருவன் காத்திருந்துள்ளான்.அவ்வழியே பைக்கில் சென்ற லஹ்மன் தாகூர் என்னும் நபர் அந்த சிறுவனை பேயென்று நினைத்து பயந்து கொடூரமான முறையில் தாக்கியதில் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.இவர்தான் ஜனாதிபதி பதவிக்கு சரியானவர்: - சுப்பிரமணியன் சுவாமி தடாலடி!
[Wednesday 2017-04-26 14:00]

குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல்தான் ஜனாதிபதி பதவிக்கு சரியானவர்’ என பா.ஜ.க எம்பி., சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.இந்திய ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடையும் தருவாயில், அடுத்த ஜனாதிபதியாக வருவதற்குத் தகுதியானவர், ஆனந்திபென் படேல் எனக் கூறியுள்ளார் பா.ஜ.க எம்பி., சுப்பிரமணியன் சுவாமி.இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு: - ஓ.பி.எஸ் அணி 6,500 பக்க கூடுதல் ஆவணங்கள் தாக்கல்!
[Wednesday 2017-04-26 08:00]

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கில், தேர்தல் கமிஷனிடம் 6,500 பக்கங்கள்கொண்ட கூடுதல் ஆவணங்களை பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல்செய்துள்ளனர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா பொதுச் செயலாளர் ஆனார். பிறகு, அப்போது முதல்வர் பதவியில் இருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் மோதல் வெடித்தது. தொடர்ந்து, இரண்டு அணியாக உடைந்தது அ.தி.மு.க. சில எம்எல்ஏ-க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஓ.பி.எஸ் பக்கம் தாவ, எம்எல்ஏ தரப்பில் பலர் சசிகலா பக்கம் சென்றனர். இந்த நிலையில், சசிகலா சிறை, தினகரனுக்குப் பதவி என காட்சிகள் மாறின. தேர்தல் ஆணையத்தால் 'இரட்டை இலை' சின்னமும் முடக்கப்பட்டது.பெண் ஒருவர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஆச்சரியம்!
[Wednesday 2017-04-26 08:00]

பஞ்சாப்பைச் சேர்ந்த பெண் ஒருவர், மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.பஞ்சாப்பைச் சேர்ந்தவர் திருநம்பி. இவர் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர் என்று கூறப்படுகிறது. இவரின் தற்போதைய பெயர் மஞ்ஞித் கெளர்.பஞ்சாப் மத்திய சிறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் இவர், சமீபத்தில் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக கைது!
[Wednesday 2017-04-26 08:00]

அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, தினகரனிடம் டில்லி குற்றப்பிரிவு பொலிஸார் இன்று 4 வது நாளாக விசாரணை நடத்தினர். தினகரனிடம் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்த நிலையில் இன்று நள்ளிரவில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சுமுகமான சூழல் ஏற்பட்டுள்ளது: - ஓ.பன்னீர்செல்வம்
[Tuesday 2017-04-25 18:00]

அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சுமுகமான சூழல் ஏற்பட்டிருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை எதிர்த்த மத்திய அரசு மனுவை உடனே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
[Tuesday 2017-04-25 13:00]

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை எதிர்த்த மத்திய அரசு மனுவை உடனே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 26 வருடங்களாக சிறையில் உள்ளனர்.7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்ததை எதிர்த்து மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.மழை வேண்டி இறந்தவரின் பிணத்தை தோண்டி எடுத்து முடியையும் பற்களையும் தீவைத்து கொளுத்திய மக்கள்!
[Tuesday 2017-04-25 08:00]

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதனின் வாழ்க்கை முறை மாறி, இந்த உலகம் நவீனமயமாக்கப்பட்டாலும் ஆங்காங்கே சில விசித்திரமான மூடநம்பிக்கைவாதிகள் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்.அதற்கு உதாரணமான சம்பவம் தான் தற்போது கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.கர்நாடக மாநிலத்தில் நடப்பு ஆண்டில் கடும் வறட்சி நிலவி வருகிறது.ஐந்து ஆண்டுகளில் ஆறு லட்சம் லிட்டர் ரத்தம் வீண்: - அதிர்ச்சி தகவல்
[Tuesday 2017-04-25 08:00]

மனிதர்களுக்கு ரத்தம் எந்த அளவுக்கு முக்கியம் என்பது யாருக்கும் சொல்லித்தெரியவேண்டியதில்லை. ரத்தத்தினால்தான் உடலே இயங்கிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்த ரத்தத்தை எவ்வளவு அலட்சியப்படுத்தி வீணாக்கி இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சேட்டன் கோத்தாரி என்பவர் ரத்த தானம் பற்றிய கேள்வி ஒன்றை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்திருக்கும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவமனைகள் மற்றும் ரத்த வங்கிகள் இடையே முறையான தொடர்பு, போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணங்களினால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஆறு லட்சம் லிட்டர் ரத்தம் வீணாகியுள்ளது என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் சரியான பாதுகாப்பின்றி வைக்கப்படுவதால் 1000 முதல் 3000 வரை யூனிட்கள் வரை ரத்தம் வீணாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு விழாக்களில் மாமிச உணவுகளைத் தவிர்க்க வேண்டும்: - மோடிக்கு கோரிக்கை வைக்கும் பீட்டா!
[Tuesday 2017-04-25 08:00]

விலங்குகள் நல அமைப்பான 'பீட்டா இந்தியா' 'அரசு விழாக்களில் மாமிச உணவுகளைத் தவிர்க்க வேண்டும்' என பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்திருக்கிறது. மாறிவரும் பருவநிலை மாற்றத்தைக் கருத்தில்கொண்டு, அனைவரும் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதற்கு முன்னுதாரணமாக அரசு செயல்பட வேண்டும் என்றும் 'பீட்டா இந்தியா' அமைப்பு தெரிவித்துள்ளது. அரசு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில், அசைவ உணவுகளைத் தவிர்ப்பதிலிருந்தே அதைத் தொடங்கலாம் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளது.ஜெயாவின் அறையில் இருந்த மூன்று பெட்டிகளில் உள்ள பொருட்கள் மாயம்? - அதிர்ச்சி தகவல்கள்
[Tuesday 2017-04-25 07:00]

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறை கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் அங்கு காவலாளியாக பணிபுரிந்து வந்த ஓம்பகதூர் என்பவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.மற்றொரு காவலாளியான கிஷன் பகதூர் கட்டிப்போடப்பட்டிருந்தார்.அதன் பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் உள்ள அவரிடம் பொலிசார்தமிழ் ஒரு சிறந்த மொழி.. பிரதமர் மோடி புகழாரம்
[Monday 2017-04-24 21:00]

தமிழகத்தோடு மற்றொரு மாநிலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யட்டும், தமிழ் வாக்கியங்களை அந்த மாநிலங்கள் கற்கட்டும், தமிழ் எழுத்துக்களை அறிந்துகொள்ளட்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் மோடி. இந்தியாவின் பன்முகத்தன்மைதான் நாட்டின் பெருமை என புகழ்ந்துரைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மொழி இந்த செழுமிய கலாசாரத்தில் மிகப்பெரும் பங்காற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 'ஒரே இந்தியா, சிறந்த இந்தியா' என்ற கோஷத்தின்கீழ், மாநிலங்கள் இணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்த மோடி பேசும் சிறு வீடியோ காட்சி, அவரது டிவிட்டர் பக்கத்தில் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. மோடி பேசுகையில், வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் பலம் மற்றும் நாட்டின் மதிப்பும் அதில் அடங்கியுள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளார்.தேவையற்ற மொழித்திணிப்பு வேலைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்: - ஜி. ராமகிருஷ்ணன்
[Monday 2017-04-24 17:00]

மோடி அரசின் இந்த நடவடிக்கை இன்னொரு மொழிப் போருக்கு வழிகோலுவதாகவே உள்ளது என்று எச்சரித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மக்கள் பிரச்னைகளை திசைதிருப்பும் வகையில், தேவையற்ற மொழித்திணிப்பு வேலைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசு இந்தி மொழியை கட்டாயமாக திணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இந்திமொழியை எந்தெந்த வகையில் கூடுதலாக பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்றக்குழு 2011-ம் ஆண்டு பல்வேறு பரிந்துரைகளை தந்துள்ளது.அந்நிய செலாவணி மோசடி வழக்கு: - டிடிவி தினகரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
[Monday 2017-04-24 17:00]

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரனுக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.அந்நிய செலாவணி மோசடி செய்ததாக டிடிவி தினகரன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இதில் முதல் வழக்கில் ஏற்கனவே குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக தினகரன் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.பெங்களூரில் ஆறு வயது சிறுமியை கற்பழித்து எரித்து கொலை செய்த நிறுவன ஊழியர்!
[Monday 2017-04-24 17:00]

பெங்களூரில் 6 வயது சிறுமியை கற்பழித்து எரித்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.Gulbarga மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அணில் பணியாற்றி வருகிறார்.இவர் அப்பகுதியிலேயே, வீடு வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியில் வசித்து வந்த சிவக்குமார்- சரஸ்வதி தம்பதியினரின் மகள் கடந்த புதன்கிழமையன்று காணாமல் போயுள்ளார்.பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையில் அணிலின் வீட்டுக்குள் இருந்து எரிந்த வாடை வருவதை உணர்ந்த வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் சந்தேகமடைந்து பொலிசில் தகவல் அளித்துள்ளனர்.கடந்த 4 ஆண்டுகளில் கடும் வெயிலுக்கு 4,620 பேர் பலி!
[Monday 2017-04-24 09:00]

கடந்த 4 ஆண்டுகளில், அனல் காற்று மற்றும் கடும் வெயிலுக்கு 4 ஆயிரத்து 620 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பலியானோர் எண்ணிக்கை மட்டும் 4 ஆயிரத்து 246 ஆகும். மத்திய புவியியல் அமைச்சகம் இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2013-ம் ஆண்டில் ஆயிரத்து 443 பேரும், 2014-ம் ஆண்டில் 549 பேரும், 2015-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 71 பேரும், 2016-ம் ஆண்டில் 557 பேரும் பலியாகி உள்ளனர்.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<b>08-04-2017 அன்று  மார்க்கத்தில்  நடைபெற்ற IMHO DINNER NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>01-04-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற PRIMA DANCE NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-03-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற  பைரவி நுண்கலைக் கூட இசை அர்ப்பணம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா