Untitled Document
March 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
கணவருடன் சேர்த்து வைக்கோரி குழந்தைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை ரம்பா!
[Monday 2017-03-20 17:00]

 

கணவருடன் தன்னை சேர்த்து வைக்கோரி நடிகை ரம்பா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.அதில், இரண்டு பெண் குழந்தையுடன் தனியாக வாழ முடியவில்லை. குடும்ப வாழ்க்கையை தற்போது புரிந்துகொண்டுவிட்டேன். கருணை அடிப்படையில் தன் கணவருடன், தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

கணவருடன் தன்னை சேர்த்து வைக்கோரி நடிகை ரம்பா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.அதில், இரண்டு பெண் குழந்தையுடன் தனியாக வாழ முடியவில்லை. குடும்ப வாழ்க்கையை தற்போது புரிந்துகொண்டுவிட்டேன். கருணை அடிப்படையில் தன் கணவருடன், தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

  

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரம்பா தனது இரண்டு குழந்தைகளுடன் ஆஜரானார். அவரது கணவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

  
   Bookmark and Share Seithy.comஒவ்வொரு துளி தண்ணீரையும் சேமிக்க உறுதி ஏற்க வேண்டும்: - உலக தண்ணீர் தினத்தில் மோடி வேண்டுகோள்
[Wednesday 2017-03-22 17:00]

ஒவ்வொரு துளி தண்ணீரையும் சேமிக்க உறுதி ஏற்போம்: உலக தண்ணீர் தினத்தில் மோடி வேண்டுகோள் புதுடெல்லி:மனித குலத்திற்கு ஆதாரமாக விளங்கும் நீர்வளங்களை பாதுகாப்பதுடன், தண்ணீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு வறட்சிக்கு மத்தியில் உலக தண்ணீர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அரசியல் தலைவர்களும் தங்களின் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.மகளைக் கொன்று பிணத்தை காதலன் வீட்டு வாசலில் வீசிய தந்தை!
[Wednesday 2017-03-22 17:00]

உத்தர பிரதேச மாநிலம் சர்தாவல் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது மகளைக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் போலீசார் தந்தையைக் கைது செய்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயரதிகாரி ஷிவ்ராஜ் சிங் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட பெண் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை 15 வயது சிறுமி என்றும் பாராமல், தனது மகளின் கழுத்தை அறுத்து அவரைக் கொலை செய்துள்ளார். பின்னர் பிரேதத்தை எடுத்து சென்று அவளது காதலனின் வீட்டுக்கதவு முன்னால் போட்டுவிட்டு வந்துள்ளார்.தற்போது அந்த பெண்ணின் தந்தையைக் கைது செய்துள்ளோம். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டார். பிரேதத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்றார்.நடிகர் ரஜினிகாந்துக்கு சுற்றுலாத்துறை தூதர் பதவி: - மலேசியா அரசு முடிவு
[Wednesday 2017-03-22 17:00]

மலேசிய அரசு நடிகர் ரஜினிகாந்துக்கு மலேசியா சுற்றுலாத்துறை தூதர் பதவியை தரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மலேசியாவின் மலாக்கா சுற்றுலா துறை தூதராக பிரபல நடிகர் ஷாருக்கான் செயல்ப்பட்டு வருகிறார்.அவர் இந்திய சுற்றுலா பயணிகளை அதிகளவில் மலேசியாவுக்கு கொண்டு வர தவறிவிட்டதாக மலேசியா சுற்றுலா துறை நினைக்கிறது.இது தொடர்பாக மலேசியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று சுற்றுலா துறை அமைச்சர் டத்தோஷி மொகமட் நஸ்ரி அப்துல் தலைமையில் விவாதம் நடைப்பெற்றுள்ளது.வேலை பறிபோகக் காரணமான இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞன்: - அதிர்ச்சி சம்பவம்
[Wednesday 2017-03-22 16:00]

வேலை பறிபோகக் காரணம் எனக் கூறி இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிய இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.சென்னை தியாகராய நகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பொறி‌யாளராக சுசி ஸ்மித்தா என்பவர் பணியாற்றி வருகிறார்.இன்று காலை பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தபோது, ரகுநாத் என்ற இளைஞர் அவரைக் கத்தியால் 3 முறை குத்தியுள்ளார்.இடைத்தேர்தலிருந்து விலகும் டி.டி.வி தினகரன்?
[Wednesday 2017-03-22 16:00]

இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றால் ஆர்.கே நகர் போட்டியிலிருந்து டிடிவி தினகரன் விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12ஆம் திகதி நடைப்பெறவுள்ளது.அதிமுக சார்பில் அதன் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷ்ம் களத்தில் உள்ளனர்.தீபாவை சில தீய சக்திகள் இயக்குகின்றனர்: - தீபாவின் கணவர் மாதவன் பரபரப்பு குற்றசாட்டு
[Wednesday 2017-03-22 16:00]

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை சில தீய சக்திகள் சூழ்ந்துகொண்டு இயக்குவதாக அவரின் கணவர் மாதவன் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மாதவன் கூறியதாவது, தீபா பேரவையில் தற்போது ஒருவர்கூட இல்லை. காரணம் நிர்வாகம் சரியில்லை.தீபா பேரவை ஆரம்பிக்கும் முன்பும், ஆரம்பித்த பின்பும் தீபாவை முதலமைச்சராக்கி பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசை.

<


அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் யாருக்கு?
[Wednesday 2017-03-22 16:00]

அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலை சசிகலா அணிக்கா அல்லது ஓ.பி.எஸ் அணிக்கா என இன்று தெரியவரும் என செய்திகள் வெளியாகியுள்ளது.தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி என இரண்டாக உடைந்தது.இந்நிலையில், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை யாருக்கு போகும் என கேள்வி எழுந்தது. இது தொடர்பாக கடந்த வாரம் ஓ.பி.எஸ் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தார். பின்னர் இது தொடர்பாக விளக்கமளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனுக்கு இப்படி ஒரு நிலைமையா? - நீதிபதிகள் வருத்தம்
[Wednesday 2017-03-22 16:00]

பல சட்டங்கள் இருந்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனுக்கு நீதி கிடைக்காதது துரதிருஷ்டம் என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு தனது ஆறு மாதக் குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார்.அதன் பின்னர் ஊசிப்போட்ட இடத்தில் சிறிய ரத்தக்கட்டு உருவானது. இது நாளைடைவில் சரியாகி விடும் என்று அவர்கள் கருதியுள்ளனர்.தனுஷ் மரபணு சோதனைக்கு மறுப்பு? - வெளிச்சத்துக்கு வந்த உண்மை
[Wednesday 2017-03-22 16:00]

பணம் பறிக்கும் நோக்கத்திலேயே நடிகர் தனுஷ் மீது மேலூர் தம்பதி அபாண்டமாக வழக்கு தொடுத்துள்ளதாக வழக்கறிஞர் சாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.நடிகர் தனுஷிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்திலேயே மேலூர் தம்பதி வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், மருத்துவ அறிக்கை தனுஷுக்கு சாதகமாக இருப்பதாகவும் வழக்கறிஞர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி மேலூர் தம்பதி கதிரேசன் - மீனாட்சி குறிப்பிட்ட அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் இல்லை என குறிப்பிட்ட அவர்,ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குக்கு பத்தாயிரம்: - தினகரன் வியூகத்தை போட்டுடைத்த சீமான்
[Tuesday 2017-03-21 16:00]

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குக்கு பத்தாயிரம் என வாரியிறைத்து வெற்றியைக் கைப்பற்றத் திட்டமிட்டிருக்கிறார் அதிமுகவின் டி.டி.வி.தினகரன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் திகதி தேர்தல் நடக்க இருக்கிறது. நாளை மறுநாள் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைய இருக்கிறது.கமல்ஹாசன் மீது வழக்கு: - நீதிபதி அதிரடி அறிவிப்பு
[Tuesday 2017-03-21 16:00]

நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆதிநாதசுந்தரம் என்பவர் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில், மகாபாரதத்தை அவதூறாகப் பேசியதாகவும் இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.சினிமா படங்களை பார்த்து கர்ப்பமடைந்த மாணவி: - வாக்குமூலத்தால் வேதனையடைந்த நீதிபதி
[Tuesday 2017-03-21 16:00]

பள்ளி மாணவி ஒருவர் சினிமா படங்களை பார்த்து காதல் திருமணம் செய்து கர்ப்பமடைந்துள்ளதாக அளித்துள்ள வாக்குமூலத்தை கேட்டு நீதிபதி வேதனையடைந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு மயிலாடுதுறையைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி, திடீரென மாயமானார்.இதனையடுத்து அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி, மாணவியின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நாகமுத்து மற்றும் அனிதா சுமந்த் அகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரனைக்கு வந்தது.நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கையில் இருப்பது என்ன?
[Tuesday 2017-03-21 16:00]

நீதிமன்ற உத்தரவுப்படி பதிவாளர் அறையில், நடிகர் தனுஷின் அங்க அடையாளங்களைப் பதிவாளர் முன்னிலையில் தனியறையில் சரிபார்க்கப்பட்டுள்ளதுசவுதி அரேபியால் வீட்டு வேலைக்கு சென்ற குஜராத் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!
[Tuesday 2017-03-21 16:00]

சவுதி அரேபியால் வேலைக்கு சென்ற குஜராத் பெண் அங்கு பாலியல் அடிமையாக நடத்தப்பட்டுள்ளார்.ஒரு வருடத்திற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட பெண் வீட்டு வேலைக்காக துபாய்க்கு அனுப்பட்டு உள்ளார். அவருக்கு மாத சம்பளம் ரூ. 40 ஆயிரம் என ஆசைவார்த்தை கூறப்பட்டு உள்ளது.ஆனால் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள ஒருவனிடம் பெண் விற்பனை செய்யப்பட்டு உள்ளார்.பெற்ற மகளை நீரில் முழ்கடித்து கொலை செய்த தந்தை: - தப்பித்து ஓடிய மகன்
[Tuesday 2017-03-21 07:00]

தமிழகத்தில் பெற்ற மகளையே தந்தை நீரில் முழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் சிவகாசியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் அருணா என்பவரை திருமணம் செய்து வாழந்து வந்துள்ளார். இவர்களுக்கு அசோக் ராஜா(9) என்ற மகன் மற்றும் ஹரிஷ்மா(7) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அருணா மற்றும் முனியசாமிக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று தகராறு முற்றியுள்ளது, இதனால் மனைவி மீது ஏற்பட்ட கோபத்தால், அவர் தன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்துள்ளார்.நான் பாடுவேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்: - கங்கை அமரன் சவால்
[Tuesday 2017-03-21 07:00]

இளையராஜா-எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கள் இசையுலகில் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில் இசையமைப்பாளர் கங்கை அமரன் சவால் விடுத்துள்ளார்.எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தன் பாட்டை பாட கூடாது என இளையராஜா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த கங்கை அமரன் தற்போது மீண்டும் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.இளையராஜாவின் பாட்டை பாடிய கங்கை அமரன் கூறியதாவது, இளையராஜா தன் பாட்டை எந்த பாடகர்கள் பாடக் கூடாது என்ற மூர்க்கமான முடிவுக்கு வந்துள்ளார்.பேருந்தில் பயணிகளை முகம் சுழிக்க வைத்த இளம்ஜோடிகள்!
[Tuesday 2017-03-21 07:00]

ஈரோடு அருகே ஓடும் பேருந்தில் இளம்ஜோடி ஒன்று சிரித்துப் பேசியபடியே பலமுறை முத்தம் கொடுத்த சம்பவம் சக பயணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது.ஈரோடு, ராசிபுரத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்தில் தான் குறித்த சம்பவம் நடந்துள்ளது. ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து குறித்த பேருந்தில் ஏறிய அந்த ஜோடி இருவர் மட்டுமே அமரக்கூடிய இருக்கையில் அமர்ந்துள்ளது.பேருந்து அங்கிருந்து புறப்பட்டதில் இருந்தே இருவரும் விழுந்து விழுந்து சிரித்தபடி மகிழ்ச்சியுடன் வந்துள்ளனர். பேருந்தில் போதிய கூட்டம் இல்லை என்பதால் இருவரும் சத்தமிட்டே பேசிய படி வந்துள்ளனர்.நடிகர் தனுஷின் உடலில் எந்த அடையாளங்கள் அழிக்கப்பட்டன: - அடுத்து இந்த பரிசோதனை தான்
[Tuesday 2017-03-21 07:00]

பிரபல திரைப்பட நடிகரான தனுஷின் உடலில் எந்த அடையாளங்கள் அழிக்கப்பட்டன என்பது தொடர்பாக மருத்துவ அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.இது தொடர்பாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்கள் மகள் என்று மேலூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்த செய்யக்கோரி நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது உடலில் உள்ள அங்க அடையாளங்களை லேசர் சிகிச்சையின் மூலம் அழித்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கணவனை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் மறைத்து வைத்திருந்த மனைவி!
[Monday 2017-03-20 17:00]

இந்தியாவில் கணவனை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் மறைத்து வைத்திருந்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலியை சேர்ந்தவர் Ekam Singh Dhillon (40) இவர் மனைவி Seerat Kaur. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.Ekam Singh செய்து வந்த தொழில் சில மாதங்களாக கடும் சரிவை சந்தித்துள்ளது. இதை புரிந்து கொள்ளாத அவர் மனைவி Seerat கணவனிடம் அதிகம் பணம் சம்பாதியுங்கள்.மேலும், சமூகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என நச்சரித்துள்ளார். இது சம்மந்தமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்ப்பட்டுள்ளது.சிறையில் சுயசரிதை எழுதும் சசிகலா!
[Monday 2017-03-20 17:00]

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா தனது சுயசரிதையை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சிறைக்குள் போன சசிகலா தினமும் அதிகாலையிலேயே எழுந்துவிடுகிறாராம். பின்னர் சிறையிலேயே நடைபயிற்சி செய்யும் அவர் தியானமும் செய்கிறாராம்.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>11-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற United badminton League GTA நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா