Untitled Document
May 29, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 120 ஆவது இடம்!
[Monday 2017-03-20 19:00]

ஐ.நாவினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மகிழ்ச்சி தினம் இன்று கொண்டாடப்படுகின்ற நிலையில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது. இதில், இலங்கை இந்த வருடம் 120ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், இந்தியா 122ஆவது இடத்தையும் அமெரிக்கா 14 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த வருடம் நான்காவது இடத்தை பிடித்திருந்த நோர்வே இந்த வருடம் முதலாவது இடத்தை பிடித்துள்ளது. முதலாவது இடத்தில் இருந்த டென்மார்க் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

ஐ.நாவினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மகிழ்ச்சி தினம் இன்று கொண்டாடப்படுகின்ற நிலையில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இலங்கை இந்த வருடம் 120ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், இந்தியா 122ஆவது இடத்தையும் அமெரிக்கா 14 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த வருடம் நான்காவது இடத்தை பிடித்திருந்த நோர்வே இந்த வருடம் முதலாவது இடத்தை பிடித்துள்ளது. முதலாவது இடத்தில் இருந்த டென்மார்க் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

  

சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலாம் இடத்தை நோர்வே பிடித்துக் கொண்டது. முறையே, ஐஸ்லாந்து, சுவிட்ஸர்லாந்து, பின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் சுவீடன் ஆகியன 3-10ஆம் இடங்களை பிடித்துக் கொண்டுள்ளன.

  
   Bookmark and Share Seithy.comமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி காலமானார்!
[Sunday 2017-05-28 19:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை வினாயகமூர்த்தி இன்று பிற்பகல் 1 மணியளவில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும். அப்பாத்துரை வினாயகமூர்த்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவராகவும் முன்னர் செயற்பட்டிருந்தார்.வெள்ளம், நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு!
[Sunday 2017-05-28 19:00]

இலங்கையில் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 151ஆக அதிகரித்துள்ளது என, அனர்த்த முகாமைத்துவ நிலையம், இன்று மாலை அறிவித்துள்ளது. இந்த அனர்த்தங்களின் காரணமாகக் காயமடைந்தோரின் எண்ணிக்கை 95ஆக அதிகரித்துள்ளது என்றும், 111 பேரை, இன்னும் காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.100 வது நாளை எட்டும் கிளிநொச்சி போராட்டம்! - சர்வமதப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு
[Sunday 2017-05-28 19:00]

வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளின் தொடர் போராட்­டத்­தின் நூறா­வது நாளான நாளை­ம­று­தி­னம் கிளி­நொச்சி கந்­த­சுா­வமி ஆலய முன்­ற­லில் அனைத்­து­மத வழி­பா­டு­க­ளுக்கு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. இந்த வழி­பா­டு­க­ளில் அனைத்து மாவட்­டங்­க­ளின் உற­வு­க­ளும் கலந்­து ­கொள்ள வேண்­டும் இவ்­வாறு கிளி­நொச்சி மாவட்ட வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் சங்­கம் அழைப்­பு ­வி­டுத்­துள்­ளது.மீட்புக்காக வானத்தில் பறந்த படகுகள்! Top News
[Sunday 2017-05-28 19:00]

களுத்துறை மாவட்டத்தில், காற்று மற்றும் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, மீட்பதற்காக ஹெலிகொப்டர் மூலமாக படகுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளுக்கு தரைமார்க்கத்தின் ஊடாக சென்று, மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளமையினால் ஹெலிகொப்டர் மூலமாக படகுகள் அனுப்பப்பட்டுள்ளன. இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக இவ்வாறு ஹெலிகொப்டர்களின் ஊடாக படகுகள் வழங்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தையிட்டிக் கிணற்றில் பெருந்தொகை மோட்டார் குண்டுகள்! Top News
[Sunday 2017-05-28 19:00]

வலி­கா­மம் வடக்கு, தையிட்­டிப்­ப­கு­தி­யில் கிணற்­றில் இருந்து 60க்கும் மேற்­பட்ட மோட்­டார்க் குண்­டு­கள், 8 பரா ரக குண்­டு­கள், 21 கைக்­குண்­டு­கள் உள்­ளிட்ட ஏரா­ள­மான வெடி­பொ­ருள்­கள் நேற்று மீட்­கப்­பட்­டன. இரா­ணு­வத்­தி­ன­ரின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த காங்­கே­சன்­து­றைப் பிர­தே­சத்­தின் ஒரு தொகுதி காணி­கள் அண்­மை­யில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தன. அந்­தக் காணி­களை உரி­மை­யா­ளர்­கள் துப்­பு­ரவு செய்து வரு­கின்­ற­னர்.புத்தூரில் மயானப் பிரச்சினையால் பெரும் பதற்றம்! - வெட்டிச்சாய்க்கப்பட்ட வாழைகள் Top News
[Sunday 2017-05-28 19:00]

புத்தூர் மேற்கில் அமைந்துள்ள மயானம் தொடர்பிலான பிரச்சினை பொலிசாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மயானத்தை அகற்ற கோரி மயானத்தை சூழவுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் அண்மைக் காலமாக போராட்டங்களை நடாத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பரந்தன் விபத்தில் முதியவர் பலி! Top News
[Sunday 2017-05-28 19:00]

கிளிநொச்சி- பரந்தனில் நேற்று இடம்பெற்ற விபத்த்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். விஸ்வமடு புன்னைநீராவிப் பகுதியைச் சேர்ந்த 63 வயதான சுப்ரமணியம் கந்தசாமி என்பவரே உயிரிழந்தவராவார். முல்லைத்தீவு ஏ-35 வீதியின் முரசுமோட்டை சதா சகாயமாதா ஆலயத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதிலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.இந்தியாவின் உதவிப் பொருட்களுடன் இரண்டாவது கப்பலும் கொழும்பு வந்து சேர்ந்தது! Top News
[Sunday 2017-05-28 19:00]

இலங்கையில் வௌ்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக நிவாரணப்பொருட்களை வழங்குவதற்காக, இந்தியாவின் இரண்டாவது கப்பலான ஐ.என்.எஸ் ஷார்துல் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்தது. இந்தக் கப்பல், மேலதிக படகுகள், இலங்கை அதிகாரிகளால் கோரப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, அதிகளவான நிவாரணப்பொருட்களுடன் வந்தடைந்துள்ளது.சூறாவளியாக மாறும் ஆபத்து!
[Sunday 2017-05-28 19:00]

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள புயல்காற்று உயர் அமுக்கத்தின் விளைவாக வடக்கு திசை நோக்கி பயணித்தால் மணிக்கு 80 வீதமாக காற்றின் வேகம் அதிகரித்து சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.ஆர். ஜயசேகர தெரிவித்தார்.விஸ்வமடு சந்தியில் பெண்களுடன் சேட்டை விட்ட நால்வர் கைது!
[Sunday 2017-05-28 19:00]

விஸ்வமடு சந்தியில் மாலையில் வேலை முடிந்து செல்கிற பெண்களுடன் சேட்டை மற்றும் நக்கல் செய்வதாக தொடர்ந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைவாக நேற்று மாலை குறித்த பகுதிக்குச் சென்ற தர்மபுரம் பொலிஸ் குழுவினர் இவ்விடத்தில் குறித்த குற்றச்சாட்டுக்கு காரணமானவர்கள் எனும் சந்தேகத்தின் பெயரில் நான்கு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.அனர்த்தங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள்- புடின் கவலை!
[Sunday 2017-05-28 19:00]

இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தம் தொடர்பில் ரஸ்யா கவலை வெளியிட்டுள்ளது. சீரற்ற காலநிலையினால் இலங்கையில் 122 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 97 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர். இந்த அனர்த்த நிலைமைகள் குறித்து ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டீன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றின் முன்னாள் நீதிபதி இலங்கைக்குப் பயணம்!
[Sunday 2017-05-28 09:00]

சர்வதேச நீதிமன்றம் மற்றும் கம்போஜியாவின் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றின் நீதிபதியாக கடமையாற்றிய மொடோ னு கூச் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் கூச் இலங்கைக்கு வரவுள்ளார்.பலியானோர் எண்ணிக்கை 127 ஆக அதிகரிப்பு! Top News
[Sunday 2017-05-28 09:00]

இலங்கையின் தென்பகுதியில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தம் காரணமாக இதுவரையில் 127 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை, மேலும் 150 பேர் காணாமல் போயுள்ளனர். இந்த அனர்த்தம் காரணமாக 105956 குடும்பங்களைச் சேர்ந்த 415618 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.வித்தியா கொலை வழக்கு - நாளை நீதிபதிகள் ஆலோசனை!
[Sunday 2017-05-28 09:00]

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நாளை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 3 நீதிபதிகள் தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் நடத்த தலைமை நீதியரசர் பிரியசாத் டெப் பரிந்துரை வழங்கினார்.அரசியலமைப்பு உருவாக்க கூட்டத்தில் அமைச்சர் நிமாலினால் கடுப்பான சம்பந்தன்!
[Sunday 2017-05-28 09:00]

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கருத்தினால் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடும் கோபமடையும் நிலை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வியாழக்கிழமை அரசியலமைப்பு மீளமைப்புக்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய அரசியலமைப்பு வரைவில் unitary என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாக, அகீயா என்ற சிங்களப் பதமும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தினார்.புத்தூர் மோதலில் 3 பொலிசார் காயம்- நால்வர் கைது!
[Sunday 2017-05-28 09:00]

யாழ்ப்பாணம், புத்தூரில் நேற்று மாலை பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. இந்தச் சம்பவத்தில் நான்கு பொலிசார் காயமடைந்தனர். பொதுமக்களை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.உலக சுகாதார நிறுவனம் 1.5 மில்லியன் டொலர் உதவி!
[Sunday 2017-05-28 09:00]

இலங்கையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒரு இலட்சத்து ஐம்பாதாயிரம் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக சுகாதார நிறுவனம் உறுதியளித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். கல்பான, இரத்தினபுரி, தெனியாய மொரவக்க மற்றும் கம்புறுபிட்டிய ஆகிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.வன்னேரிக்குளத்தில் சுற்றுலா மையம் திறப்பு! Top News
[Sunday 2017-05-28 09:00]

கிளிநொச்சி - வன்னேரிக்குளத்தில் வடக்கு மாகாணசபையின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட சுற்றுலா மையத்தை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நேற்று திறந்து வைத்தார். இயற்கை அழகுகொண்ட அதிகளவான சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய இடமாக காணப்படுகின்ற வன்னேரிக்குளம் பகுதியில், ஆறு மில்லியன் ரூபா நிதியில், மேற்படி சுற்றுலா மையம் கரைச்சி பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்டது.வெளிநாடுகளிடம் உதவி கோருகிறது அரசாங்கம்!
[Sunday 2017-05-28 09:00]

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பில் அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியை நாடியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு மட்டுமன்றி ஏனைய நாடுகளிடமிருந்தும் இவ்வாறு உதவி கோரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்கும் நோக்கில் வெளிவிவகார அமைச்சினால் 24 மணி நேர விசேட பிரிவு ஒன்ற உருவாக்கப்பட்டுள்ளது.வவுனியா முருகனூர் சித்தி விநாயகர் ஆலயம் வசந்த மண்டபத்திற்கான அடிகக்கல் நாட்டல் நிகழ்வு! Top News
[Sunday 2017-05-28 09:00]

வவுனியா முருகனூர் சித்தி விநாயகர் ஆலயம் வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு 26.05.2016 நண்பகல் 12.00 மணியளவில் ஸ்ரீ சிதம்பர லக்ஷ்மி திவாகரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது.​ இந் நிகழ்வில் சந்திரகுலசிங்கம் மோகன் (உபநகர பிதா), சிதம்பரபுரம் பொலிஸ் அதிகாரி, வவுனியா மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் , அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b>06-05-2017 அன்று கனடா- ரொரன்டோவில் அபிநயாலயா நாடியாலயம் நடாத்திய 20வது ஆண்டுவிழா நிகழ்வின் படத்தொகுப்பு. </b> படங்கள் - குணா
<b>30-04-2017 அன்று கனடா- ரொரன்டோவில்  நடைபெற்ற சங்கீத சங்கமம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா