Untitled Document
July 28, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
சரணடைந்தவர்களை பேருந்தில் ஏற்றிச் சென்றதை நான் கண்டேன்! - கோத்தாவுக்கு முன்னாள் போராளியின் மனைவி பதில் Top News
[Monday 2017-03-20 19:00]

விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இந்த பலரை எனது கணவருடன் சேர்த்து அரச பேருந்தில் ஏற்றிச் சென்றார்கள். அதை நான் கண்டேன், தற்போது அவர்கள் எங்கே? என நிர்வாகத்துறை துணை பொறுப்பாளர் இளஞ்சேரனின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்று 29ஆம் நாளாக தொடர்கின்றது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிர்வாகத்துறை துணை பொறுப்பாளர் இளஞ்சேரனின் மனைவி ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார்.

விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இந்த பலரை எனது கணவருடன் சேர்த்து அரச பேருந்தில் ஏற்றிச் சென்றார்கள். அதை நான் கண்டேன், தற்போது அவர்கள் எங்கே? என நிர்வாகத்துறை துணை பொறுப்பாளர் இளஞ்சேரனின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்று 29ஆம் நாளாக தொடர்கின்றது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிர்வாகத்துறை துணை பொறுப்பாளர் இளஞ்சேரனின் மனைவி ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார்.

  

“இறுதி யுத்தத்தில் எனது கணவர் இராணுவத்தினரிடம் சரணடைந்தார். அவருடன் பல விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களும் இராணுவத்தினரிடம் குடும்பம் குடும்பமாகவும் சரணடைந்தனர். அரசியல்துறை துணை பொறுப்பாளர் தங்கன், யாழ் அரசியல்துறை பொறுப்பாளர் இளம்பருதி, மலரவன், கரிகாலன் உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் குடும்பம் குடும்பமாக சரணடைந்தனர். அவர்கள் அரச பேருந்தில் ஏற்றப்பட்டு அழைத்து செல்லப்பட்டதை நான் அவதானித்தேன்.

அனைவரும் பாதர் ஒருவருடன் சரணடைந்தவர்கள், அவர்கள் குறித்து இன்றுவரை எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் வருவார்கள் என நானும் காத்திருக்கின்றேன். எனது கணவர் செல்லம்போது ஒரு விடயத்தினை குறிப்பிட்டார். “நான் அவர்களுடன் போகின்றேன். நீரும் பிள்ளைகளும் என்னுடன் வந்தால் அனைவருக்கும் ஏதும் நடந்து விடும். எம்மை தேட யாரும் இருக்கமாட்டார்கள். அதனால் என்னையும் பிள்ளைகளையும் தனியே செல்லுமாறு குறிப்பிட்டார்”. அதனால் நானும் பிள்ளைகளும் அவருடன் செல்லவில்லை. அவ்வாறு சென்றிருந்தால் நானும் காணாமல் போயிருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



ஓசன் லேடி கப்பல் விவகாரம் - 4 தமிழர்களை விடுவித்தது கனடிய உச்சநீதிமன்றம்!
[Friday 2017-07-28 09:00]

இலங்கை தமிழ் அகதிகளை ஓசன் லேடி கப்பலில் கனடாவுக்கு கடத்தி வந்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த நான்கு தமிழர்களை பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது. பிரான்சிஸ் அந்தோனிமுத்து அப்புலோனப்பு, கமல்ராஜ் கந்தசாமி, ஜெயச்சந்திரன் கனகராஜ், விக்னராஜா தேவராஜ் ஆகிய நால்வரே ஆட்கடத்தல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.



கொழும்பில் மகிந்த அரசு பறிமுதல் செய்த தமிழரின் வீட்டை ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
[Friday 2017-07-28 09:00]

விடுதலை புலிகளின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி, வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள தமிழர் ஒருவருக்கு சொந்தமான வீட்டை பறிமுதல் செய்ய, அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்துள்ளது.



அரசியல் தலையீடு- பொருத்து வீடுகளால் வவுனியா மக்களிடையே பதற்றம்! Top News
[Friday 2017-07-28 09:00]

வவுனியாவில் பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்சி சார்ந்த ரீதியில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக நேற்று மாலை 4 மணியளவில் பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் ஒன்றிணைந்த அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர்.



டுபாய் வங்கியில் 272 பில்லியன் ரூபாவை வைப்பிலிட்டுள்ள அரசியல் வாரிசு!
[Friday 2017-07-28 09:00]

கடந்த அரசாங்கத்தின் மிக முக்கிய பிரமுகர் ஒருவரின் மகன் டுபாய் வங்கி ஒன்றில் 272 பில்லியன் ரூபா பணத்தை வைப்பிலிட்டுள்ளார் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இவ்வளவு பாரிய தொகைப் பணம் டுபாய் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.



தளம் அனுமதிக்க சீனாவுக்கு இடமளியோம்! - இந்தியாவுக்கு இலங்கை அரசு உறுதி
[Friday 2017-07-28 09:00]

கடற்படைத் தளம் அமைப்பதற்கு சீனாவிற்கு அனுமதியளிக்கப்படாது என இந்தியாவிடம் இலங்கை தெரிவித்துள்ளது. வர்த்தக நடவடிக்கைகளுக்காகவே இலங்கையில் சீனாவிற்கு இடமளிக்கப்பட்டது எனவும் இலங்கை தெரிவித்துள்ளது.



இலங்கையை அதிகம் விரும்பும் பெண் சுற்றுலாப் பயணிகள்!
[Friday 2017-07-28 09:00]

கடந்த ஆண்டு 2.05 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு பயணம் செய்துள்ளனர். இவர்களில் 54.7 சதவீதமானோர் அல்லது 1.12 மில்லியன் பேர் பெண் சுற்றுலாப் பயணிகள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்திலும் பார்க்க, கூடுதலான பெண் சுற்றுலாப்பயணிகள் இவ்வருடம் இலங்கைக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



புலோலி இளைஞனுக்கு கலட்டிச் சந்தியில் வாள்வெட்டு! - துண்டானது விரல்
[Friday 2017-07-28 09:00]

யாழ்ப்பாணம், கலட்டிப் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி விரல் துண்டிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புலோலி பகுதியைச் சேர்ந்த தினேஸ்குமார் சலோஜிதன் (வயது 18) என்ற இளைஞனே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



அமெரிக்கத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் ஆலோசனை!
[Friday 2017-07-28 09:00]

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப். கேர்ணல் டக்ளஸ் ஹெஸ் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவை சந்தித்து கலந்துரையாடினார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இருவருக்குமிடையில் இருதரப்பு விடயங்கள் தொடர்பாக சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.



நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறும் ஜனாதிபதி முறை அவசியம்! - ரணில்
[Friday 2017-07-28 09:00]

நாடாளுமன்றிற்கு பொறுப்புக்கூறும் ஜனாதிபதி முறைமை அவசியம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று டட்லி சேனநாயக்க நினைவுப் பேருரையை ஆற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு தசாப்த காலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை வலுப்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றிற்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.



தாஜூடின் கொலை வழக்கை துரிதப்படுத்துமாறு நீதிவான் உத்தரவு!
[Friday 2017-07-28 09:00]

வசிம் தாஜூடினின் கொலை தொடர்பான விசாரணைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு, கொழும்பு மேலதிக நீதிவான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தாஜூடினின் பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்த சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர கவனயீனமாக செயற்பட்டதாக, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தீர்மானத்திற்கு வந்துள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, சுட்டிக்காட்டியுள்ளார்.



ரவிராஜ் கொலை வழக்கு - கடற்படை அதிகாரிக்கு பிடியாணை!
[Thursday 2017-07-27 18:00]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் கடற்படை அதிகாரியை கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ரவிராஜின் கொலை வழக்கை மீள விசாரிக்குமாறு கோரி, அவரது மனைவி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.



புலிகள் மீதான தடைநீக்கம் தமிழ் மக்களின் அரசியலுக்கான சர்வதேச அங்கீகாரம்! - அருட்தந்தை மா.சக்திவேல்
[Thursday 2017-07-27 18:00]

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டதானது, தமிழ் மக்களின் அரசியலை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளதை வெளிப்படுத்துகின்றது என்று அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். தடை நீக்கம் தொடர்பாக கிளிநொச்சியில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



முல்லைத்தீவில் மினி சூறாவளியால் மரங்கள் முறிந்தன! - கூரைகள் பறந்தன Top News
[Thursday 2017-07-27 18:00]

முல்லைத்தீவு- முள்ளியவளையில் இன்று வீசிய மினி சூறாவளியினால் மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், வீடுகள், பாடசாலைகளின் கூரைகளும் தூக்கி வீசப்பட்டன. முள்ளியவளை கலைமகள் பாடசாலையின் நூலகத்தின் கூரைத்தகடுகள், வர்த்தக நிலையங்கள், மின்சார கம்பிகள் என்பனவும் சேதமடைந்தன.



இலங்கை - இந்திய ஒப்பந்தம் 30 ஆண்டு: - தோற்றது ஒப்பந்தமா? இந்தியாவின் பாதுகாப்பா? Top News
[Thursday 2017-07-27 18:00]

இந்திய - இலங்கை ஒப்பந்தம் 30 ஆண்டினை இன்று யுலை27 எட்டியிருக்கும் நிலையில், தோற்றது ஒப்பந்தமா அல்லது இந்தியாவின் பாதுகாப்பா என்ற பேசு பொருளில் கருத்தரங்கம் ஒன்று தமிழகத்தில் இடம்பெற இருக்கின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் மாலை 4 மணிக்கு இடம்பெற இருக்கின்றது.



மக்கள் ஆணைக்கு மாறாக ஆட்சியை கவிழ்க்க துடிக்கும் கூட்டு எதிரணிக்கு ஒத்துழையோம்! - இரா.சம்பந்தன்
[Thursday 2017-07-27 18:00]

மக்களின் ஆணைக்கு மாறாக, ஆட்சியைக் கவிழ்க்கத் துடிக்கும் கூட்டு எதிரணியின் முயற்சிக்கு ஒரு போதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறித்தல் தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம் பெற்றது.



காணாமல் போனவர்களின் உறவுகள் நீதிபதிக்கு ஆதரவு கோரி போராட்டம்! Top News
[Thursday 2017-07-27 18:00]

கிளிநொச்சியில் காணாமல் போனவர்களின் உறவுகள் நீதிபதி இளஞ்செழியனுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் பல்வேறு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.



நீ பொலிஸா என்று கேட்டு தாக்கினர்! - காயமடைந்த சப்இன்ஸ்பெக்டர் தெரிவிப்பு
[Thursday 2017-07-27 18:00]

நீ பொலிஸா என்று கேட்டு, தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, வரணியில் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் சப்இன்ஸ்பெக்டர் எஸ். சிந்துராஜ் தெரிவித்தார். கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இவர் மீது, இனந்தெரியாத மர்மக்கும்பல் ஒன்று, நேற்று இரவு வரணி வீதி யாக்கரு பகுதியில் வைத்துத் தாக்குதலை மேற்கொண்டது. இதன்போது படுகாயங்களுக்கு உள்ளான அவர், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



விசாரணைக்கு வரவில்லை ஷிரந்தி!
[Thursday 2017-07-27 18:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். எனினும், இன்று தம்மால் சமூகமளிக்க முடியாது என அவரது சட்டத்தரணிகள் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செஞ்சிலுவைச் சங்கத்தினால், சிறிலிய சவிய அறக்கட்டளை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஜீப் வண்டியை யோஷித ராஜபக்ஷ பயன்படுத்தியமை தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காகவே இவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



வடக்கு மாகாணசபையில் இருந்து விலகினார் மயூரன்!
[Thursday 2017-07-27 18:00]

வட மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் இன்றைய அமர்வுடன் சபையிலிருந்து வெளியேறினார். வடமாகாண சபையின் 100 ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில், இன்று இடம்பெற்றது. இதன்போது, “இன்றுடன் நான் சபையில் இருந்து வெளியேறினாலும், வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண அமைச்சர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என மயூரன் தெரிவித்தார்.



தனிக் கூண்டில் சந்தேகநபர்! - இரண்டாவது மனைவி மட்டும் சந்திப்பு
[Thursday 2017-07-27 18:00]

நல்­லூ­ரில் கடந்த சனிக்கிழமை மாலை நடந்த துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வம் தொடர்­பில் சர­ண­டைந்த சந்­தே­க­ந­பர், யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­லை­யில் தனிக் கூண்­டில் அடைக்­கப்­பட்­டுள்­ளார். நல்­லூ­ரில் நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யனை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டின் முதன்­மைச் சந்­தேக நப­ராக பொலி­ஸா­ரால் தேடப்­பட்டு வந்­த­வர், யாழ்ப்­பா­ணப் பொலிஸ் நிலை­யத்­தில் நேற்று முன்­தி­னம் காலை சர­ண­டைந்­தி­ருந்­தார். அவ­ரி­டம் வாக்­கு­மூ­லம் பெறப்­பட்­டது.


Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா