Untitled Document
January 17, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
இளையராஜா - SPB இடையே நடந்தது என்ன?
[Monday 2017-03-20 20:00]

இளையராஜா- எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையேயான மோதலுக்கான காரணம் என்ன? தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த கூட்டணியாக மறக்க முடியாத பாடல்களை கொடுத்த இளையராஜாவும்,  எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் 40 ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்தனர்.2500-க்கும் அதிகமான பாடல்களை இளைய ராஜா வும், எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் சேர்ந்து வெளியிட்டுள்ளனர்.ஏ.ஆர்.ரகுமானுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தாலும் தனக்கு பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா தான்  என்று எஸ்.பி.பால சுப்பிரமணியம் பல மேடை களில் கூறியுள்ளார்.

இளையராஜா- எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையேயான மோதலுக்கான காரணம் என்ன? தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த கூட்டணியாக மறக்க முடியாத பாடல்களை கொடுத்த இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் 40 ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்தனர்.2500-க்கும் அதிகமான பாடல்களை இளைய ராஜா வும், எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் சேர்ந்து வெளியிட்டுள்ளனர்.ஏ.ஆர்.ரகுமானுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தாலும் தனக்கு பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா தான் என்று எஸ்.பி.பால சுப்பிரமணியம் பல மேடை களில் கூறியுள்ளார்.

  

இந்த நிலையில் இளையராஜா கடந்த பல ஆண்டுகளாக தன்னுடைய பாடல்களின் காப்புரிமை பிரச்சினைக்காக போராடி வருகிறார். இது தொடர்பாக கோர்ட்டிலும் அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ‘இளையராஜாவின் பாடல்களை காப்புரிமை பெறாமல் வெளியிடக் கூடாது’ என்று ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதற்கிடையே கடந்த வருடம் அமெரிக்காவில் இளையராஜாவின் இசைக் கச்சேரி நடந்தது. அதுவரை இளையராஜா நடத்தும் கச்சேரிகளில் பாட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ரூ.7 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அமெரிக்கா கச்சேரி யில் பாட எஸ்.பி. பால சுப்பிரமணியம் இளைய ராஜாவிடம் ரூ.20 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் கொடுக்க மறுத்ததால் அந்த கச்சேரியையே எஸ்.பி. பாலசுப்பிரமணியம் புறக் கணித்து அமெரிக்கா செல்ல வில்லையாம். ஆனால் இது பற்றி இளையராஜா இது வரை யாரிடமும் சொல்ல வில்லை.

இப்போது அமெரிக்காவில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் இளையராஜா தான் இசை யமைத்த பாடல்களை பாடக் கூடாது என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதன் மூலம் இளையராஜா - எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இடையேயான 40 ஆண்டு கால நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



இந்த கதாபாத்திரத்திற்கு சத்தியராஜை விட பொருத்தமான நடிகர் யாரும் இல்லை: - பிரபல இயக்குனர்
[Tuesday 2018-01-16 18:00]

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை திறமையாக நடித்து முடிக்கும் சத்யராஜ், அடுத்ததாக திகிலான ரேடியோ ரூமில் இருந்து நடிக்க இருக்கிறார்.தென்னிந்திய சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் அசத்தக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே. 'பாகுபலி' படத்தில் 'கட்டப்பா' கதாபாத்திரத்தின் மூலம் இந்தியா முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தை ஈர்த்தவர். இவர் தற்பொழுது ஒரு முழு நீள திகில் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். இந்த படத்தை 'கள்ளப்படம்' புகழ் வேல் இயக்கவுள்ளார்.



நாடோடியாக மாறிய அஞ்சலி!
[Tuesday 2018-01-16 18:00]

சமுத்திரக்கனி - சசிகுமார் இணையும் 'நாடோடிகள் 2' படத்தின் நாயகிகளாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.2009-ம் ஆண்டு சமுத்திரக்கனி - சசிகுமார் இணைப்பில் வெளியான படம் 'நாடோடிகள்'. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் 2-ம் பாகம் உருவாக இருக்கிறது. இதில் மீண்டும் சமுத்திரக்கனியும் சசிகுமாரும் இணைந்து பணிபுரியவுள்ளார்கள்.



அனைவரையும் அசர வைத்த விஜய் சேதுபதி: - பிரபல இயக்குனர் வாழ்த்து
[Tuesday 2018-01-16 18:00]

விஜய் சேதுபதி தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படங்களின் மூலமும் வித்தியாசப்பட்டு தெரிகிறார் . இதுவே அவரின் திறமைக்கான தனி அடையாளமாக அமைந்து வருகிறது. சொல்லப்போனால் அவரின் படங்களுக்கு வரவேற்பு கூடிவருகிறது. கடந்த எட்டு வருடங்களில் ஒரு ஹீரோவாக நடித்து தற்போது 25 வது படத்தில் வந்து நிற்கிறார். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசை பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தது.



அஜித் கூறிய கருத்துக்கு ஜெயம் ரவி பதில்!
[Tuesday 2018-01-16 18:00]

2018ம் ஆண்டு தமிழ் சினிமா ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியோடு தொடங்கியுள்ளது. நட்சத்திர விழா 2018 கடந்த 6ம் தேதி தொடங்கி அமோகமாக நடந்தது.இந்நிகழ்ச்சி ஒருபக்கம் நன்றாக நடந்தாலும் பல பிரச்சனைகளும் வந்தது. பிரபலங்கள் பலர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. நடிகர் அஜித் ரசிகர்களிடம் பணம் வாங்குவதற்கு பதிலாக நாமே செலவு செய்யலாம் என்று நட்சத்திர விழா குறித்து கூறியதாக பிரபல நடிகர் கூறியிருந்தார்.



ஆண்டாள் கோவிலில் விழுந்து வணங்க வேண்டும்: - வைரமுத்துவுக்கு பதிலடி கொடுத்த எஸ்.வி.சேகர்!
[Tuesday 2018-01-16 09:00]

பாடலாசிரியர் வைரமுத்து தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் நடந்த விழாவில் பெண் கடவுள் ஆண்டாள் பற்றி அவர் மேற்கோள் காட்டிய விசயத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.இதற்காக பல இடங்களில் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று சென்னை மெரினா கடற்கரை அருகே போராட்டம் நடந்தது. இந்நிலையில் இயக்குனர் விசு, எஸ்.வி.சேகர், குட்டி பத்மினி ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.



ஓவியாவுடன் எனக்கு திருமணமா? - சிம்பு விளக்கம்
[Monday 2018-01-15 16:00]

சமீபத்தில் நடிகை ஓவியாவுடன் திருமணம் நடந்ததாக வந்த புகைப்படத்திற்கு நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பிறகு மிகவும் பிரபலமானவர் ஓவியா. சமீபத்தில் புத்தாண்டு தினத்தை யொட்டி, சிம்பு எழுதி இசை அமைத்து பாடிய ‘மரண மட்டை’ இசை ஆல்பத்தில் ஓவியாவும் சிம்புவுடன் சேர்ந்து பாடி இருந்தார்.



கரப்பான் பூச்சி கவிதை கூறி அனைவரையும் கவர்ந்த கீர்த்தி சுரேஷ்!
[Monday 2018-01-15 16:00]

சென்னையில் நடைபெற்ற புத்தக் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ், கரப்பான் பூச்சி கவிதை கூறி வந்திருந்தவர்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.இயக்குநர் லிங்குசாமியின் "லிங்கூ-ஹைக்கூ" புத்தக வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் - நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், நடிகை கீர்த்தி சுரேஷ், பேராசிரியர் ஞான சம்பந்தம், இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், கவிஞர் பிருந்தா சாரதி, நடன இயக்குநர் ராஜு சுந்தரம், எழுத்தாளர் எஸ்.ராம கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



கார்த்தி நடிக்கும் சிங்கம்!
[Monday 2018-01-15 16:00]

சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படம் சூப்பர் ஹிட்டானது போல், கார்த்தி நடிப்பில் உருவாகும் படத்திற்கு சிங்கம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாயின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் தென்காசி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களை வாய் பிளக்க விஜய் சேதுபதி!
[Monday 2018-01-15 15:00]

தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைக்க இருக்கிறார். விஜய் சேதுபதி தற்போது பல படங்கள் பிசியாக நடித்து வருகிறார். இதில் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீதக்காதி’ திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் விஜய் சேதுபதியின் 25வது படமாகும். இதில் அவரின் கதாபாத்திரம் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும்.



எனக்கு ஊசி என்றால் மிகவும் பயம்: - விக்ரம்
[Monday 2018-01-15 08:00]

விக்ரம் தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த நடிகர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்கெட்ச் படம் விக்ரமிற்கு கமர்ஷியலாக நல்ல வெற்றியை கொடுத்துள்ளது.இந்நிலையில் விக்ரம் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.இதில் ‘எனக்கு ஊசி என்றால் மிகவும் பயம், ஊசியை காட்டினாலே ஓடியே விடுவேன்.



என் பேவரட் அஜித்தான்? - நயன்தாராவின் அதிரடி பதில்கள்
[Sunday 2018-01-14 17:00]

நயன்தாரா தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை என அடித்து சொல்லலாம். ஒரு ஹீரோவிற்கு நிகராக இவருடைய படங்களுக்கு ஓப்பனிங் கிடைத்து வருகின்றது.இந்நிலையில் அறம் படத்திற்காக பிரபல பத்திரிகை கொடுத்த சிறந்த நடிகை விருதை வாங்க நேற்று இவர் விழாவில் கலந்துக்கொண்டார்.



ஏன் இப்படி வதந்திகளை கிளப்புகிறீர்கள்: - ஓவியா
[Sunday 2018-01-14 17:00]

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா மிகப்பிரபலம் ஆகிவிட்டார். இவர் பல கலை நிகழ்ச்சிகளில் தற்போது கலந்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் சிம்புவிற்கும் திருமணம் ஆகிவிட்டதாக வதந்திகள் பரவி வந்தது, இவை வதந்தி தான் என சிம்பு ஓவியா பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் போன் செய்து பேசி முற்றுப்புள்ளி வைத்தார்.



விஜய் சேதுபதியுடன் இணைந்த இணைந்த பிரபல நடிகை!
[Sunday 2018-01-14 17:00]

விஜய் சேதுபதியின் நடிப்பில் அடுத்ததாக ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயாராகிவருகிறது. தற்போது அவர் ஜுங்கா படத்தை தொடர்ந்து 96 படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தியாகராஜன் குமாரராஜா படத்தில் முன்பே இணைந்திருந்தார். இப்படத்தில் சமந்தா, ஃபகத் ஃபாசில், காயத்திரி, மிஸ்கின் என பலர் கமிட்டாகியிருந்தனர்.



நான் தல ரசிகன்: - சொன்னது யார் தெரியுமா?
[Sunday 2018-01-14 17:00]

அஜித்திற்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை சமூக வலைதளங்கள் இப்போதெல்லாம் பளிச்சென்று படம் போட்டு காட்டுகிறது. அவரிடம் பணியாற்றிவர்கள் பலர்.ஆனால் அஜித்தே நாம் சேர்ந்து படம் பண்ணுவோம் என சொல்லுமளவுக்கு இடம் பிடித்தவர் ராம் சத்யா. இவர் வேறு யாருமல்ல தற்போதைய பிரபலம் நடிகர் சிங்கம் புலி. இப்போது பிரபல காமெடி நடிகர்.



மீண்டும் தன் தம்பியுடன் இணையும் மோகன்ராஜா!
[Sunday 2018-01-14 17:00]

தனி ஒருவன் படத்திற்கு பிறகு மோகன்ராஜாவின் பொறுப்புக்கள் அதிகமாகிவிட்டது. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வந்த வேலைக்காரன் கூட பலராலும் பாராட்டப்பட்டது.இந்நிலையில் மோகன்ராஜா எப்போது மீண்டும் தன் தம்பியுடன் இணைவார் என்று பலரும் கேட்டு வருகின்றனர்.



இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கும் வித்யாபாலன்!
[Friday 2018-01-12 18:00]

அம்பேத்கர், காமராஜர் வாழ்க்கை சரித்திர படங்கள் ஏற்கனவே உருவாகி திரைக்கு வந்திருக்கிறது. தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்க்கை படம் தமிழில் உருவாகிறது. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்று இன்று வரை சரித்திரத்தை தக்க வைத்துக்கொண்டிருப்பவர் மறைந்த இந்திரா காந்தி. அவரது வாழ்க்கை சரித்திரம் திரைப் படமாக உள்ளது. அதற்கான உரிமையை நடிகை வித்யாபாலன் வாங்கியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’சாகரிகா கோஷ் எழுதிய “இந்திரா” வாழ்க்கை சரித்திர புத்தக உரிமையை திரைப்படமாக்க நான் வாங்கியிருக்கிறேன். இந்திரா வேடத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. இது திரைப்படமாக உருவாகப்போகிறதா? வெப் சீரியலாக உருவாகுமா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அதுபற்றி முடிவு செய்ய இன்னும் சில காலம் ஆகும்’ என்றார் வித்யாபாலன்.



டீக்கடைக்கு சூர்யா நைட் விசிட்!
[Friday 2018-01-12 16:00]

கோலிவுட்டில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்திய காலம் இயக்குனர் பாரதிராஜா என்ட்ரிக்கு பிறகு மாறியிருந்தது. தற்போது மீண்டும் செட் அமைத்து படப்பிடிப்புகள் நடக்கின்றன. அதேகாலகட்டத்தில் டி.ராஜேந்தர் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்புகள் நடத்தினார். சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்துக்கு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு அரங்கு அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தற்போது ஜெயம் ரவி நடிக்கும் ‘டிக் டிக் டிக்’ படத்துக்கு விண்வெளி அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடக்கிறது. ஆனால் சில படங்கள் யதார்த்தத்தையும் அரவணைக்க தவறவில்லை.



ஜெய்யால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை: - பிரபல இயக்குனர்
[Friday 2018-01-12 15:00]

சமீபத்தில் பலூன் படம் வெளியான போது அப்பட இயக்குனர் சினிஷ், ஜெய் அவர்கள் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என கூறியிருந்தார். இதனால் பெரிய பிரச்சனையாக இவ்விஷயம் பேசப்பட்டது. இந்த நிலையில் நேற்று கலகலப்பு 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுந்தர் சி பேசும்போது, இந்த படத்தில் ஜெய்யால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சொல்லப்போனால் 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45 மணிக்கே தயாராகிவிடுவார்.



சிம்புவுடன் ஓவியாவுக்கு திருமணமா...?
[Friday 2018-01-12 15:00]

நடிகர்களில் பலர் திருமண வயதில் இருக்கின்றனர். அவர்களுக்கு எப்போது திருமணம் நடக்கும், யாருடன் செய்து கொள்வார்கள் என்பதையெல்லாம் அரிய ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.அந்த லிஸ்டில் இருப்பது சிம்பு தான், இவருக்கு எப்போது திருமணம் என்று நிறைய கேள்விகள் வந்துவிட்டது. இதற்கு நடுவில் ஓவியா-சிம்பு காதல் என்றும் வதந்திகள் வந்தன.



டபுள் ஹீரோயின் டபுள் ஹீரோவால் பிரச்னையா? -இயக்குனர் சுந்தர்.சி விளக்கம்
[Friday 2018-01-12 15:00]

டபுள் ஹீரோ, டபுள் ஹீரோயின் நடிக்கும் படங்களில் அவ்வப்போது சர்ச்சை எழுவதுண்டு. சில சமயம் படப்பிடிப்பு பாதித்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் திரைக்கு வந்த ‘பலூன்’ படப்பிடிப்பில் ஹீரோ ஜெய் ஒத்துழைப்பு தராததால் நஷ்டம் ஏற்பட்டதாக அவர் மீது அப்பட தயாரிப்பாளர் புகார் கூறினார். இயக்குனர் சுந்தர்.சி தற்போது கலகலப்பு 2ம் பாகம் இயக்குகிறார். இதில் ஜீவா, ஜெய், கேத்ரின் தெரசா, நிக்கிகல்ராணி என டபுள் ஹீரோ, டபுள் ஹீரோயின்கள் நடிக்கின்றனர். குஷ்பு தயாரிப்பு. ஹிப் ஆப் தமிழா இசை. கலகலப்பு 2ம் பாகத்தில் ஜெய்யால் பிரச்னையா என்றதற்கு சுந்தர்.சி அளித்த விளக்கம்:


Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா